Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் மஹிந்தவின் குடும்ப ஆட்சி: பிரதமரை கைது செய்ய வேண்டும் - தேரர்கள் ஆக்குரோசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

154695057monk.jpg

நாட்டில் மஹிந்தவின் குடும்ப ஆட்சி: பிரதமரை கைது செய்ய வேண்டும் - தேரர்கள் ஆக்குரோசம்
 
 
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாகியுள்ளதாக ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. 

வரவு - செலவுத் திட்டத்தில் அவர்களுக்கு 856 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் தீனியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்கும் செயற்பாடுகளில் சஜித் பிரேமதாஸ ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். 

முன்னாள் பிரதம நீதியரசர்களான சரத் என் சில்வா மற்றும் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோர் வழங்கிய தீர்ப்பால் உறுப்பினர்கள் கட்சி மாறுவதாகவும் அதனால் கட்சிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இலங்கையில் இன்று குடும்ப ஆட்சி நடப்பதாகவும் தாய்லாந்தில் அவ்வாறு நடந்ததால் மக்கள் போராட்டத்தால் அதன் பிரதமர் வெளிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையில் அவ்வாறான ஒன்றை காண முடியவில்லை எனவும் தீனியாவல பாலித தேரர் குறிப்பிட்டார். 

அண்மையில் மீட்கப்பட்ட ஹெரோயின் தொகையில் குறைவு ஏற்பட்டு வருவதாகவும் சாதாரண நபர்கள் ஹெரோயின் வைத்திருந்தால் அவர் சிறையிலும் அதிகாரம் படைத்தவர்கள் ஹெரோயின் வைத்திருந்தால் சுதந்திரமாக திரிவர் என தேரர் தெரிவித்தார். 

இதேவேளை, பிரதமர் டி.எம். ஜயரட்னவைக் கைது செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

பிரதமர் ஜயரட்ன பதவியை துறக்க வேண்டும் அல்லது கைது செய்யப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். 

ஒருகொடவத்த சுங்கப் பிரிவில் அண்மையில் மீட்கப்பட்ட 260 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் அடங்கிய கொள்கலனை விடுவிப்பதற்கு பிரதமர் அலுவலகத்தினால் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கடிதத்தை எழுதிய நபர்கள் பற்றிய தகவல்களை பிரதமர் வெளியிடத் தவறினால் அவரை கைது செய்ய வேண்டுமென சோபித தேரர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பௌத்த மதத்தை அழிக்கும் பிரதான மையமாக பௌத்த சாசன அமைச்சு செயற்பட்டுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

குற்றவாளிகளை பாதுகாக்க பிரதமர் முயற்சிக்கக் கூடாது எனவும் பிரதமர் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சித்தால் அவரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆளும் கட்சியின் கூட்டுக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். 

 

கொழும்பு தியத்த உயன பூங்கா அமைக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி ஆகி உள்ளது. இப்பூங்காவோடு சேர்ந்ததாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமைக்கப்பட்ட குட் மார்க்கெற் சந்தைத் தொகுதிக்கு பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ விஜயம் செய்தார். இவருக்கு சிறுவர்கள் வரவேற்பு வழங்கினார்கள். இவர் இத்தொகுதியில் உள்ள கடைகளை சுற்றி பார்வையிட்டார். குறிப்பாக இங்கு அமைக்கப்பட்டு இருந்த மாம்பழக் கடை ஒன்றில் தரித்து நின்று விபரங்கள் கேட்டார்.gota_colombo-600x399.jpg gota_colombo1-600x399.jpg gota_colombo2-600x399.jpg gota_colombo3-600x399.jpg gota_colombo4-600x399.jpg gota_colombo5-600x399.jpg gota_colombo6-600x399.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.