Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது - ஆளுநர் சந்திரசிறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
chandrasiri_seithy-20121010-150.jpg

வடக்கு மாகாண சபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், சில புதிய திணைக்களங்களை உருவாக்க முயன்றுள்ளதாகவும், இது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், நாட்டின் அரசியலமைப்பையும், தேசிய கொள்கையையும் மதித்து செயற்பட வேண்டும். வடக்கு மாகாணசபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் புதிய திணைக்களங்களை உருவாக்கும் திட்டங்களை முன்மொழிந்துள்ளமை அரசியலமைப்புக்கு எதிரானது. வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு நான் ஒப்புதல் வழங்கியிருந்தேன். அத்துடன், அரசியலமைப்புக்கு இணங்கவே மாகாணசபையால் அதிகாரசபைகளை உருவாக்க முடியும் என்ற குறிப்பையும் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன்.

  

அவர்கள் வீடமைப்பு திணைக்களம் மற்றும் போக்குவரத்து திணைக்களம் என்பனவற்றை உருவாக்க முயற்சிக்கின்றனர். அரசியலமைப்பின் படியும், உறுப்பினர்களுக்கான தேசிய கொள்கைப்படியும் செயற்படும்படி அவர்கள் எதிர்பார்க்கப்படுவதாக அவர்களுக்கு கூறிக் கொள்ள வேண்டியுள்ளது. வடக்கு மாகாணசபை திணைக்களங்களை உருவாக்க முயற்சிக்கும் போது அரசியலமைப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். சில நிர்வாக அலகுகள், கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அதிபரின், மாகாண ஆளுநரின், மாகாண முதல்வரின் அனுமதி தேவை.

அவர்களால் மட்டுமே, போக்குவரத்து, வீடமைப்பு அதிகார சபைகளை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளேன். அவர்களின் வரவு செலவுத்திட்ட விவாதம் முழுவதும் வடக்கு மாகாணசபைக்கு ஒரு சிவிலியன் ஆளுநர் தேவை என்பதை மையப்படுத்தியதாகவே இருந்தது. ஒரு இராணுவ பின்னணி கொண்ட ஆளுநர் தேவையில்லை என்கின்றனர். இராணுவ அல்லது சிவில் ஆளுனர் எவராயினும் அரசியலமைப்பு படியே செயற்பட முடியும்.

அவர்கள் சொல்வதற்கு ஆமாம் என்று தலையாட்டக் கூடிய, மாகாண சபை பற்றிய எந்த அறிவுமில்லாத ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டால் தான் அவர்கள் மகிழ்ச்சி கொள்வார்கள் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98890&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
ஜோவ் கம்மனாட்டி,  :o
 
அதே அரசியலமைப்பு சொல்லுது, மாகாண சபைக்கு போலீஸ், காணி அதிகாரம் இருக்குது என்னு. 
 
அதைப் பத்தி பேசாத! உப்புச் சப்பு இல்லாத விசயத்தை தூக்கிப் பிடி!
 
நம்மாளு சுப்புரீம் கோட்டு ஜட்ஜ் ஐயா. கொஞ்சம் அடக்கி வாசி தலீவா!
 
இத நம்மூர்ல, 'தடியை கொடுக்கிறார், அதால அடி வாங்கப் போறார்' எண்டு சொல்லுவினம்.  :icon_mrgreen:
 
சொல்லிப் புட்டேன், ஆ..!  :D
 
இதுக்குத்தான் படிச்ச, சிவில் ஆக்களை போடுங்க எண்டு கேக்கினம். :rolleyes:
 
 
 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.