Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் மனித எச்சங்கள் மீட்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதன.

மன்னார் திருக்கேதிஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதிஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த பகுதியில் குடி நீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் பள்ளம் தோண்டிய போது குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முதலில் இரண்டு மண்டையோடுகளும்,ஏனைய பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

உடனடியாக அருகில் உள்ள இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவம் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை உற்பட பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

-இதன் போது வடமாகாண அமைச்சர் சட்டத்தரணி பா.டெணிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிறிமூஸ் சிறாய்வா, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அந்தோனி சகாயம் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று மனித எச்சங்க பார்வையிட்டனர்.

தற்போது தோண்டப்பட்ட பள்ளத்தினுள் மேலதிகமான எழும்புக்கூடுகள் காணப்பட்டதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

-ஏனைய பகுதி நாளை சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.

குறித்த பகுதி கடந்த காலங்களில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டதோடு தற்போது குறித்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சற்று தொலைவில் பண்சலை ஒன்றும் காணப்படுகின்றது.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை குறித்த இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய பத்திரிக்கையாளர்களையும்,அவர்களது ஊடக அடையாள அட்டையினையும் இராணுவத்தினர் புகைப்படம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100625/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DSC03950.JPG
-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், திருக்கேதிஸ்வரம் பகுதியில் மண்டையோடுகள் மற்றும் மனித எலும்புகளின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார், திருக்கேதிஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதிஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவிலேயே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த பகுதியில் குடிநீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் பள்ளம் தோண்டிய போது குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முதலில் இரண்டு மண்டையோடுகளும்,ஏனைய பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து உடனடியாக அருகில் உள்ள இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதனைதொடர்ந்து மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை உட்பட பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அத்துடன் வடமாகாண அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிறிமூஸ் சிறாய்வா,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அந்தோனி சகாயம் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து மனித எச்சங்களை பார்வையிட்டனர்.

தற்போது தோண்டப்பட்ட பள்ளத்தினுள் மேலதிகமான எழும்புக்கூடுகள் இருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதனால் ஏனைய பகுதிகளை நாளை சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் தோண்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் அவ்விடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
DSC03913.JPG
DSC03921.JPG
DSC03936(2).JPG\
DSC03952.JPG

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/93972-2013-12-20-14-49-41.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வரத்தில் மனித எச்சங்கள் மீட்ட இடம் 'தொல் பொருள் ஆராய்ச்சி இடமாம்'
DSC03980.JPG

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதை அடுத்து அவ்விடத்தில் தோண்டும் பணிகள் இன்று சனிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையிலேயே அவ்விடத்தில் தோண்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார், திருக்கேதீஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் சுமார் 75 மீற்றர் தொலைவிலேயே சடலங்களின் எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டன.

குடி நீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில்  பள்ளம் தோண்டிய போதே மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மூன்று மனித மண்டையோடுகளும்,ஏனைய  பாகங்களுக்கான எலும்புகளும் நேற்று மீட்கப்பட்டன. 

இதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதன்பின்னர் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை உட்பட பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மன்னார் நீதவானின் கவனத்திற்கு மன்னார் பொலிஸார் கொண்டு வந்தனர்.

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தை மன்னார் நீதவான்  ஆனந்தி கனகரட்னம் இன்றுக்காலை பார்வையிட்டார். அதன்பின்னர் மன்னார்  நீதவான் மற்றும்; சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் போது மேலும் சிதைவடைந்த நிலையில் துண்டு துண்டுகளாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

மனித எச்சங்கள் மீட்கப்பட்டும் இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிரிமூஸ்  சிறாய்வா சென்று பார்வையிட்டார்.

இது இவ்வாறிருக்க மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள பகுதியில் 'தொல் பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கான இடமாகும்' என குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

DSC04010.JPG

DSC03985(2).JPG

DSC03988(1).JPG

DSC03995.JPG

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
manthai-221213-150.jpg

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் நேற்றும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் நேற்றுமுன்தினம் மாலை 3 மணியளவில் குடி நீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் பள்ளம் தோண்டிய போது மூன்று மனித மண்டையோடுகளும், எலும்புகளும் மீட்கப்பட்டன. இதுகுறித்து மன்னார் பொலிஸார் மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

  

இந்த நிலையில் நேற்றுக் காலை 10 மணியளவில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின் மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தோண்டப்பட்டன. இதன் போது மேலும் சிதைவடைந்த நிலையில் துண்டு துண்டுகளாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99615&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.