Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட எண்ணெய் சேகரிப்புக் குதங்களை மீளப்பெறும் முயற்சியில் சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Lanka%20IOC.jpg

2002ல் இந்திய எண்ணெய் வள நிறுவனத்தின் சிறிலங்காவில் இயங்கும் Lanka IOC [the Indian Oil Company's local unit Lanka IOC] இடம் வழங்கப்பட்ட சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தின் துறைமுக மாவட்டமான திருகோணமலையில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க 99 எண்ணெய் சேகரிப்புக் குதங்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் இந்த எண்ணெய் சேகரிப்புக் குதங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இக்கட்சியின் மீது குற்றம் சுமத்தியுள்ள அதேவேளையில், இந்த எண்ணெய் சேகரிப்புக் குதங்களை மீண்டும் இந்திய நிறுவனத்திடமிருந்து மீட்டெடுத்து சிறிலங்கா அரச சொத்தாக மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளில் தனது அரசாங்கம் ஈடுபடுவதாகவும் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். 

"திருகோணமலையில் அமைந்துள்ள எமது எண்ணெய் சேகரிப்புக் குதங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான பேச்சுக்களில் நாம் ஈடுபட்டுள்ளோம்" என 2014க்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நிதி அமைச்சர் என்ற வகையில் உரையாற்றிய போதே அதிபர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தற்போதைய சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவால் 2002ல் சிறிலங்கா அரசாங்கம் தலைமை தாங்கப்பட்ட போது திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் சேகரிப்புக் குதங்கள் இந்திய நிறுவனத்திடம் குத்தகைக்கு வழங்கப்பட்டன. 

திருகோணமலையிலுள்ள எண்ணெய் சேகரிப்புக் குதங்கள் 35 ஆண்டுகால குத்தகையுடன் ஆண்டுதோறும் 100,000 அமெரிக்க டொலர்கள் குத்தகைக் கட்டணத்துடன் சிறிலங்கா அரசின் 'இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால்' இந்தியாவின் Lanka IOC நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டு 2002ல் குத்தகைக்கு வழங்கப்பட்டது. 

Lanka IOC நிறுவனத்தால் பயன்படுத்தப்படாத குதங்களை மீளப்பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக கடந்த மார்ச்சில் சிறிலங்கா அறிவித்திருந்தது. கடந்த மார்ச்சில் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவானது வாக்களித்த கையோடு இந்த அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. 

"இந்திய நிறுவனமானது இந்த எண்ணெய் சேகரிப்புக் குதங்களைப் பயன்படுத்தாவிட்டால் நாங்கள் அவற்றைப் பயன்படுத்த முடியும்" என கடந்த மார்ச்சில் சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெகலிய றம்புக்வெல அறிவித்திருந்தார். 

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்திற்கும் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என கெகலிய றம்புக்வெல தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு இடம்பெற்ற போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இதனைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுநிலையில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

செய்தி வழிமூலம் : DNA India

 

http://www.puthinappalakai.com/view.php?20131222109669

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.