Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை அனுமதிக்காது - தெற்கு சுற்றுலாப்பயணிகளிற்கு திறக்கப்பட்ட சுண்டுக்குளத்தில் விடுதி திறப்பு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Sundikulam_CI.jpg

மக்கள் மீளக்குடியமரவும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள சுண்டிக்குளம் பகுதியில்; நேற்று சுற்றுலாவிடுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் வனவள பாதுகாப்பு அமைச்சின் நிதி ஏற்பாட்டில் சுமார் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. சுண்டிக்குளம் கடற்கரை மற்றும்  பறவைகள் சரணாலயம் ஆகியவற்றுடன் கூடிய பரந்த இயற்கை வனப்பு மிகு பிரதேசத்திலேயே இவ்விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சி மாவட்டதில் பிரசித்தி பெற்ற கடற்பிராந்தியமாகக் கருதப்படும் சுண்டிக்குளம் இப்பிரதேசத்தில் முதன் முறையாக இவ்வாறான சுற்றுலா வீதி அமைக்கப்பெற்றுள்ள நிலையில் நேற்;று குறித்த விடுதியினை இலங்கையின் வனவள பாதுகாப்பு அமைச்சர் காமினிவிஜித விஜயமுனிசொய்சா மற்றும்; வடக்கு மாகாணசபையின் ஈபிடிபி உறுப்பினர் வை.தவநாதன் ஆகியோர்; திறந்துவைத்திருந்தனர்.

வடமராட்சி கிழக்கின் கடைசிப்புள்ளியான சுண்டிக்குளத்தில் தற்போது இலங்கை இராணுவமும் கடற்படையினரும் மட்டுமே நிலை கொண்டுள்ளனர்.அங்கிருந்து வெளியேற்றப்பட்ட குடு;ம்பங்கள் இது வரை மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைதீவுள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு ஆண்டிலும் பங்குனி முதல் மற்றும் ஜப்பசி வரை வருகை தந்து தொழிலில் ஈடுபடுவதும் வழமையாகும்.

தற்போது தெற்கு சுற்றுலாப்பயணிகளிற்கு திறக்கப்பட்டுள்ள சுண்டுக்குளம் தொடர்ந்தும் தமிழ் மக்களிற்கு அனுமதிக்கப்படாத பகுதியாகவே இருந்து வருகின்றது.  

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100719/language/ta-IN/article.aspx

 

இயற்கை சூழலையும் இயற்கை பறவைகள் விலங்குகள் சரணாலயத்தினையும் கொண்ட சுண்டிக்குளத்தில் நேற்று சுற்றுலாவிடுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது,

வனவள பாதுகாப்பு அமைச்சின் நிதியீட்டத்தில் சுமார் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டடுள்ள இக்கட்டடமானது சுண்டிக்குளம் கடற்கரை மற்றும் பறவைகள் சரணாலயம் ஆகியவற்றுடன் கூடிய பரந்த இயற்கை வனப்பு மிகு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தின் இயற்கை அழகை ரசிப்பதற்கென வரும் சுற்றுலாப்பயணிகளுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அதேவேளை குறித்த பிரதேசத்தில் காணப்படும் இயற்கைச்சூழலை மேலும் வளப்படுத்தி பாதுகாக்கும் நோக்குடன்.; அனைத்து வசதிகளுடனும் கூடிய இப்பிரமாண்டமான அரண்மனை அமைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டதில் பிரசித்தி பெற்ற கடற்பிராந்தியமாகக் கருதப்படும் சுண்டிக்குளம் இப்பிரதேசத்தில் முதன் முறையாக இவ்வாறான சுற்றுலா வீதி அமைக்கப்பெற்றுள்ள நிலையில் இன்று 12.00மணியளவில் குறித்த விடுதியினை. வனவள பாதுகாப்பு அமைச்சர் காமினிவிஜித விஜயமுனிசொய்சா அவர்களும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் வை.தவநாதன் அவர்களும் திறந்துவைத்தனர். தொடந்து இவ்விடுதி மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

hotel-600x398.gif

hotel-2-600x398.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.