Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவைன் fப்ளூ (இன்புளுவென்ஸா) எனும் பன்றிக் காய்ச்சலும் தடுப்பு மருந்தும்

Featured Replies

250px-Symptoms_of_swine_flu.svg.png

 

உயிர்க்கொல்லி நோயான பன்றி காய்ச்சல் “சுவைன் fப்ளூ” (Swine Flu) என்பது, H1N1 என்ற ஒரு வகை வைரஸால் பரவுகிறது.  இது (Orthomyxoviridae) “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது.  “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன.  இதில் H1N1; H1N2; H3 N2 போன்ற வைரஸ் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சில பிரதேசங்களில் இன்புளுவென்ஸா நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளதகவும் மக்களை விளிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

 

 

இது உயிர் கொல்லி நோயாகும். இந்நோய் இன்புளுவென்சா- A, இன்புளுவென்சா- B, மற்றும் இன்புளுவென்சா- C என்னும் மூன்று வகையான வைரஸஸினால் ஏற்படுகிறது.  இதில் இன்புலியன்சா A யினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது.  இந்நோயை பரப்பும் வைரஸ் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்கள்.  பன்றிக் காய்ச்சல் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு ஆர்த்தோமிக்சோவிரிடே குடும்பத்தை சேர்ந்த வைரஸினால் பரவுகிறது.

 

 

பன்றிக் காய்ச்சலின் தீவிரத்தை ஆறு கட்டங்களாக உலக சுகாதார நிறுவனம் பிரித்துள்ளது.  தற்பொழுது மூன்றாவது கட்டத்திலிருந்து நான்காவது கட்டத்திற்கு இந்நோய் தீவிரமடைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மெக்சிகோவிலும்,  அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்களில், பன்றி, பறவைகள் மற்றும் மனிதர்களுக்கான ஜீன்கள் ஒருசேர அமைந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வைரஸ் அமைப்பு இதுவரை உலகில் எங்குமே இல்லை.  இந்த புதிய வைரஸ் மனிதர்களிடம் அதிவேகமாக பரவி தாக்கி வருகிறது.

 

 

பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகைத் (வைரஸ்) தீநுண்மம், 1918இல் பரவி ஏறக்குறைய 50 மில்லியன் மனித உயிர்கள் இறப்பதற்குக் காரணமாயிருந்தது., எசுப்பானிய ஃப்ளூ என்றழைக்கப்படும் கொள்ளை நோயின் பரம்பரையில் வரும் ஒரு வகைத் தீநுண்மமே ஆகும்.  ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய எச்1என்1 தீநுண்மம் ஆகும்.. இது இன்ஃப்ளுயென்சா ஏ வகைத் தீநுண்மத்தின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுறுக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது.

 

உயிர்க்கொல்லி நோயான பன்றிக்காய்ச்சல் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உலக மக்கள் தொகை 660 கோடியில்; H1N1 வைரஸினால் பாதிக்க பட்டவர்கள் 1,77,457 பேர் எனவும். இன்நோயினால் 06.08.09 அன்று வரை இறந்தவர்கள் 1462 எனவும்உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

 

 

பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள்

 

வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும்.  உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, இருமல், தலைவலி, சோர்வு, களைப்பு, பசியின்மை போன்றவை வரும்.  முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும்.  பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.

 

 

இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.

 

 

நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும்.  நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும்.  எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.

 

 

இந்நோய் தொற்றியதும்  உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடுவதால் நோய் வேகமாக பரவ வாய்ப்பு உண்டாகின்றது.  அத்துடன் நீரழிவு, கசம் போன்ற நுரையீரல் சப்பந்தப்பட்ட நோயாளர்கள் பெரிதும் பாதிப்புக்குளாகின்றனர்.  

 

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, உலக நாடுகளை கடும் பீதிக்குள்ளாக்கிய பறவைக் காய்ச்சல் நோய் போன்று, தற்போது பன்றிக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது.  இந்நோய், பன்றிகள் மூலமாக பரவுவதால் பன்றிக் காய்ச்சல் (ஸ்வைன் ப்ளூ) என்றும் அழைக்கப்படுகிறது.

 

 

தடுப்பூசி:

 

இந்நோய் பன்றிக்கு வராது தடுப்பதற்கு தடுப்பூசி பாவனையில் இருந்துள்ளது.  ஆனால் மனிதர்களுக்கு இந்நோயை தடுக்கும் தடுப்பூசி( நொவெம்பர்-2009) இப்பொழுதுதான் முதன்முறையாக பாவனைக்கு வருகின்றது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் இந்த நோய் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.

 

 

புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு:

 

பன்றிக்காய்ச்சல் வந்தவர்களுக்கு அதை கட்டுப்படுத்த தமிபுளு மாத்திரைகளை உலகம் முழுவதும் டாக்டர்கள் வழங்கி வருகிறார்கள். தமிபுளு மாத்திரை அதிகப்படியான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால், டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் அந்த மாத்திரையை சாப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடந்த தொடர் ஆராய்ச்சி காரணமாக எச்1 என்1 வைரசை ஒழிக்கும் நவீன தடுப்பு ஊசி மருந்தை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். ஆனால் பல பக்கவிளைவுகள் ஏற்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இம் மருந்தில் கோழி முட்டையின் ஒரு பகுதி சேர்க்கப் பட்டிருப்பதால் கோழி முட்டை ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேக்கப்பெற்றுள்ளனர். (People with severe or life-threatening allergies to chicken eggs, or to any other substance in the vaccine, should not be vaccinated-FDA)

 

அத்துடன் 6-மாதங்களிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இத் தடுப்பூசி வழங்கப்படமாட்டாது. அதனால் அக் குழந்தைகளை பராமரிப்போர் கட்டாயம் தடுப்பூசி பெற்றவர்களாகவும் நோய் தாக்கப்பட்டவர்களிடம் இருந்து பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

பன்றிக்காய்ச்சல் 3 வகையாக உலகில் பரவி உள்ளது. இதை வேகமாக பரப்பி வரும் இன்புளுயன்சியா எச்1 என்1 வைரஸ் தனது ஆர்.என்.ஏ. என்ற உருவ அமைப்பை அடிக்கடி மாற்றியபடி இருந்தது.

 

 

நோய் பரவாது தடுக்கும் முறை:

 

நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது நுகர்மூடி அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்ளது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

1. உங்கள் கைகளை அடிக்கடி சவர்க்காரம், இளஞ்சுடுநீர் கொண்டு 15 முதல் 20 நொடிகள் வரை கழுவவும் அல்லது மதுசாரம் மிகுந்த கை-பூசி கொண்டு சுத்தப்படுத்தவும்.

 

2. உங்கள் கண், மூக்கு, வாய் என்பவற்றைத் கைகழுவாது தொடுவதைத் தவிர்க்கவும். 

 

3.  மென்தாள் கொண்டு இருமவும் அல்லது தும்மவும். அதன் பின்னர் உங்கள் கைகளைக்  கழுவவும் அல்லது கிருமிபோக்கி கொண்டு சுத்தப்படுத்தவும்.

 

4.  உங்களிடம் மென்தாள் இல்லாவிட்டால், உங்கள் சட்டைக் கை அல்லது புயம் கொண்டு இருமவும் அல்லது தும்மவும் - கை கொண்டு இருமவோ, தும்மவோ கூடாது.

 

5.சளிக்காய்ச்சல் நுணங்கி தொற்றக்கூடிய பாத்திரங்கள், குவளைகள், இசைக்கருவிகளின் வாய்முனைகள், தண்ணீர்ப் புட்டிகள் முதலிய பொருட்களைப் பகிரக் கூடாது.

 

6. காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி போன்ற சளிக்காய்சலுக்குரிய அறிகுறிகள் போன்றவை, மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடிய அறிகுறிகள் போன்றவை தென்படுகின்றனவா என்று உற்றுநோக்கவும். தென்பட்டால், வீட்டிலேயே தங்கியிருக்கவும்.

 

7.நோய்வாய்ப்பட்டால், வீட்டிலேயே தங்கியிருக்கவும்.

 

8.நன்கு ஆறுதல் எடுத்து, உடற்செயல் புரியவும், பானங்கள் நிறையப் பருகவும், சத்துணவு உண்ணவும்.

 

 

ஆயுள்வேத வைத்திய முறை: 

 

பன்றிக் காய்ச்சலுக்கு காரணமான ஸ்வைன் ப்ளு வைரஸ் (எச்1என்1) மட்டுமின்றி, எந்தவொரு வைரஸ் பாதிப்பையும் கட்டுப்படுத்தும் - தடுக்கும் ஆற்றல் துளசிக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பெற்றுள்ளது.

 

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் துளசியை எந்த வகையிலாவது மருந்தாக எடுத்து உட்கொள்ளும்போது, அது விரைவாக செயல்பட்டு அந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அத்துடன், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்கிறது.

 

"பன்றிக்காய்ச்சல்" பாதிப்பு உள்ளவர்கள் துளசியை ஜுஸ் ஆகவோ அல்லது பேஸ்ட் போன்றோ எடுத்துக்கொண்டால், அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடலாம். இதற்கு, ஒரு நாளைக்கு இரண்டு முறை இவ்வாறு துளசியை உட்கொண்டு வரவேண்டும். பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தொண்டைவலி, உடல் வலி, தலைவலி, மூக்கில் இருந்து நீர்வடிதல், அளவுக்கு அதிகமான களைப்பு போன்ற பாதிப்புகள் உள்ளவர்களும் துளசியை மருந்தாக எடுத்து பயன்பெறலாம் என்று குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழக ஆய்வகத்தில் நடந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

பறவைகள் மூலம்:

 

மெக்சிகேதவில் பன்றிகளுக்கு இது எப்படி பரவியது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. ஆனாலும், ஐரோப்பாவிலிருந்து பறவைகள் மூலம் இந்த வைரஸ் வட அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும். அங்கு மெக்சிகேதவில் பன்றிகளில் புகுந்து உருமாறி மனிதனுக்குப் பரவியிருக்க வேண்டும் என்கிறார்கள்.

 

இந்த வைரசின் ஆர்என்ஏவை சோதனையிட்டதில் வட அமெரிக்க பன்றிகளில் காணப்படும் வைரசில் உள்ள சில ரசாயனங்களும், அதே நேரத்தில் ஐரோப்பிய பன்றிகளில் காணப்படும் வைரசின் சில வேதிப் பெதருட்களும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் இந்த வைரஸ் ஐரோப்பாவிலிருந்து தான் மெக்சிகோவிற்கும், மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

 

மனிதனுக்குள் நுழைந்துவிட்டால் அவர்களது உடலில் பல்கிப் பெருகி சுவாசம் மூலம் அடுத்தவருக்குப் பரவும் திறன் கொண்டது இந்த வைரஸ். இப்போது பரவிக் கொண்டிருக்கும் வைரசுக்கு H5N1 என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

 

இவ்வாறு மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் இந்த பன்றிசுக் காய்ச்சல் , பன்றியின் மாமிசத்தை உண்பதால் பரவாது என்கிறார்கள். காரணம், 75 டிகிரி அளவுக்கு மாமிசம் சூடாகும்போதே இந்த வைரஸ் அழிந்துவிடும்.

 

இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குளிர் காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனிக்காமல் விட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

 

இந்த வைரஸை கட்டுப்படுத்த amantadine, rimantadine, Tamiflu (oseltamivir) and Relenza (zanamivir) உள்பட சில மருந்துகள் உள்ளன. ஆனால், முன் கூட்டியே தடுக்கும் வாக்சீன்கள் தற்பொழுதுதான் பாவனைக்கு வந்துள்ளது. இந்த மருத்துகளையும் மருத்துவர் ஆலோசனைப்படியே பயனபடுத்த வேண்டும்.

 

(இதில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தபோது இந்த வைரஸ் amantadine and rimantadine ஆகியவற்றுக்குக் கட்டுப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது)

 

அதே நேரத்தில் கொஞ்சம் தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது, நோய் தாக்கப்பட்டவர்கள் இருந்தால் அங்கு நடமாடும்போது மூக்கையும் வாயையும் மூடும் பில்டர்களை அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, நோய் தாக்குதல் உள்ள பகுதிகளுக்குப் போய்விட்டு வந்தால் வாய், கண், மூக்கில் கைகளை வைப்பதை தவிர்ப்பது, வீட்டில் குப்பை சேராமல் தவிர்ப்பது போன்றவை அதில் சில.

 

நோய் தாக்கப்பட்டவர் இருமல் வந்தால் துணியை வைத்து வாயை மூடிக் கொண்டு இருமினால் அடுத்தவருக்குப் பரவாது.

 

பன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.

 

 

Protect Yourself and Others

 

Wash your hands often with soap and warm water for at least 20 seconds. Alternatively, if your hands are not visibly dirty you can also clean them with a hand sanitizer with an alcohol content of at least 60-90%.

 

Cough and sneeze in your arm, not your hand.

 

Know the symptoms of the flu.

 

Stay home if you have symptoms of the flu until you are symptom-free and are feeling well and able to participate in your normal daily activities. If you have a fever you should stay home until you are fever-free without the use of fever-reducing medication such as acetaminophen (Tylenol) or ASA (Aspirin).

 

Check with your health care provider about getting immunized with the H1N1 flu vaccine and the seasonal flu vaccine. The seasonal flu vaccine will not protect against the H1N1 flu vaccine because it was already in production when the H1N1 flu virus appeared. Because of this, there is a separate H1N1 flu vaccine.

 

If you are on medication for your chronic medical condition, talk to your health care provider about having a two-week supply of medication on hand in case you get sick and cannot leave your home.

Also, if you are on medication for your condition, keep on taking that medication if you develop the flu unless your health care provider says not to.

 

Take caution in crowds where you will have little control over personal contact. Be vigilant about hand washing and carry a hand sanitizer to reduce the risk of picking up a virus in these types of settings.

 

If you require ongoing medical care for your condition such as chemotherapy or dialysis, talk to your health care provider about how you can, or if you should, access these treatments if you have the flu or develop flu symptoms.

 

For more information about the H1N1 flu and the seasonal flu, such as information about how to take care of someone at home with the flu, please visit www.fightflu.ca or call 1-800 O CANADA, TTY 1-800-926-9105.

 

 

H1N1 Flu Vaccine

 

Getting an H1N1 flu vaccine is the single best way to protect yourself from the H1N1 flu virus. A vaccine produces immunity to a disease by stimulating the production of antibodies (proteins in our bodies that fight diseases).

 

This year, there will be two flu vaccines – the regular seasonal flu vaccine and the H1N1 flu vaccine. Talk to your health care provider to help you decide which flu vaccine you should get - the seasonal flu vaccine, the H1N1 flu vaccine or both vaccines. For more information, please see our backgrounder on vaccine recommendations.

Antivirals for Treatment of the Flu

 

If you develop the flu, your health care provider may prescribe antivirals for treatment of the flu.

 

Antivirals are prescription medications used to treat the flu. While they do not make you immune to the virus, if taken shortly after getting sick (only within the first 48 hours), they can reduce flu symptoms, shorten the length of illness and may reduce serious complications.

 

Antivirals may not be suitable for everyone.  You should talk to your health care provider about treatment options. If you are on medication for your condition, keep on taking that medication if you develop the flu unless your health care provider says not to.

 

கனடாவில் வசிப்போருக்கான அறிவித்தல்:

 

Health officials urge only those in high risk to go for vaccine:

 

Those deemed to be at high risk are pregnant women, children over six months but under five years of age, health-care workers, caregivers for those who are vulnerable and unable to get the vaccine, people under 65 with pre-existing health conditions, and those who live in remote or isolated communities.

 

In Ontario, where the recent deaths of children who caught the H1N1 virus spurred those who might not otherwise have wanted the vaccine into getting the shot, health officials plan to double the number of flu clinics to meet swelling demand.

 

The province's chief medical officer, Dr. Arlene King, said Sunday she expects the vaccine rollout to run more smoothly this week when hundreds of family doctors begin administering shots.

 

But King said people to whom the H1N1 virus poses the least risk will not be vaccinated "for some time" after a production problem at the manufacturer's plant significantly reduced the amount of vaccine doled out to the provinces.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.