Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசுடன் இப்போதைக்கு பேச்சுக்கு சாத்தியமில்லை; கூட்டமைப்பு நேற்று வவுனியாவில் தீர்க்கமான முடிவு நாடாளுமன்ற, மாகாண உறுப்பினர்கள் ஏகோபித்த ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tna.jpeg

இலங்கை அரசுடன் இப்போதைக்கு பேச்சு நடத்துவதற்கு தாம் தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளனர். 

அத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவையும் நிராகரிப்பதாக இதன்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, 'ஜனாதிபதியைச் சந்திப்பது குறித்தும் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களே கூடி முடிவெடுப்பர்' என்று நேற்றைய கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடைபெற்றது.
 
நேற்றைய சந்திப்பின் போது, "வரவு - செலவுத் திட்ட இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை பேச்சுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டது.
 
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு முன்னர்  ஜனாதிபதியை சந்தித்து பேசுவது குறித்து சக உறுப்பினர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.
 
இதன் போது ஒரு சில உறுப்பினர்கள் மாத்திரமே பேச்சுக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் முன்பாக பேச்சுக்கு செல்லக் கூடாது என்றும், சர்வதேச மத்தியஸ்தம் இல்லாமல் பேச்சுக்குச் செல்லக் கூடாது என்றும் ஒரு தொகுதி உறுப் பினர்களும் தெரிவித்தனர்.
 
இறுதியில் இப்போதைக்கு பேச்சுக்கு செல்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரை மீளவும் கூட்டி கலந்துரையாடல் நடத்தி அதில் பேச்சுக்குச் செல்வதென்று முடிவெடுக்கப்பட்டால் மாத்திரமே பேச்சுகளில் கலந்துகொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 
 
மேலும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ள போதும், அதில் இணைந்துகொள்ளவதில்லை என்றும் தெரிவுக்குழுவை நிராகரிப்பதாகவும் இதன்போது முடிவு எட்டப்பட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/News_More.php?id=320072534325360062

இது 2009 க்கு பிறகு பாதுகாப்பு தேடி இந்தியாவுக்கு ஓட வேண்டியிருந்த காலமல்ல என்பதை கூட்டமைப்பினர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல முடிவு.

மகிந்தாவும், பேச அழைத்தால் உடனே வருவார்கள் என்று நம்பி அழைப்பு விடுத்தவருமல்ல. அவரும் இதற்கு தனது திட்டங்களையும் வைத்திருப்பார். முதாலாவதாக வெளிநாட்டு தூதரகங்களுக்கு " கூட்டமைப்பு தீர்வை தட்டிக்கழிகிறது' என்பது. கூட்டமைப்பும் தனது திட்டாங்களுடன் இருக்க வேண்டும்.

வெறுமனே நாலு பேர் முடிவேடுப்பதுக்கு பதிலா கலந்தாலோசித்து முடிவெடுப்பது நன்று! நல்லதொரு ஆரம்பம்! அரசின் கண் துடைப்பு நாடகங்களுக்குள் தங்களை மறந்துபோகாமல் மக்களின் அபிலாஷைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது 2009 க்கு பிறகு பாதுகாப்பு தேடி இந்தியாவுக்கு ஓட வேண்டியிருந்த காலமல்ல என்பதை கூட்டமைப்பினர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல முடிவு.

மகிந்தாவும், பேச அழைத்தால் உடனே வருவார்கள் என்று நம்பி அழைப்பு விடுத்தவருமல்ல. அவரும் இதற்கு தனது திட்டங்களையும் வைத்திருப்பார். முதாலாவதாக வெளிநாட்டு தூதரகங்களுக்கு " கூட்டமைப்பு தீர்வை தட்டிக்கழிகிறது' என்பது. கூட்டமைப்பும் தனது திட்டாங்களுடன் இருக்க வேண்டும்.

டெல்லியில் இருந்து தீர்வு பொதி இன்னுமா கிடைக்கலை சம்மந்தனுக்கு ? :D

டெல்லியில் இருந்து தீர்வு பொதி இன்னுமா கிடைக்கலை சம்மந்தனுக்கு ? :D

இதைவிட உங்களால் என்னத்தை செய்ய முடியும் ? :D

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட உங்களால் என்னத்தை செய்ய முடியும் ? :D

இப்படியொரு படுமொக்கையான கருத்தாடல் அறிவுகளை சம்மந்தனின் அடிபொடிகளுக்கு குடுத்து ஏன் இறைவா தமிழர்களை வஞ்சிக்கிறாய்? :icon_mrgreen:

டெல்லியில் இருந்து தீர்வு பொதி இன்னுமா கிடைக்கலை சம்மந்தனுக்கு ? :D

கமருனே வந்து போனது சம்பந்தரிடம்.

பொதுநலவாய மகாநாடுகள் நேரம் செய்திகளை வாசிக்க தவறிவிட்டீர்கள் என்பதை பார்க்க பாவமாக இருக்கு. 

கனக்க தனக்குள்தன்னை பெரிதாக நினைத்து புளுகப்படுவத்தால் அவர்கள் மகாநாட்டில் எடுத்த முடிவை விளங்கிக்கொள்ள முடியாமல்,முட்டாள்தனமான  விடு பேக்கதை மட்டும்தான் எழுத முடிகிறது. சம்ப்ந்தர் எடுத்திருக்கும் முடிவினை அறிய கொஞ்சம் ஆழநீளம் தெரிய வேண்டும்.

நிலத்தில் ஊரும் எறும்பு யானையின் கால்களுள் மிதிபடாமல் தப்பிவிட்டால்  நினைப்பதுண்டு அதன் தலையில் ஏறி கடித்து யானையை விழுத்திவிடுவேன் என்று. <_<

Edited by மல்லையூரான்

இப்படியொரு படுமொக்கையான கருத்தாடல் அறிவுகளை சம்மந்தனின் அடிபொடிகளுக்கு குடுத்து ஏன் இறைவா தமிழர்களை வஞ்சிக்கிறாய்? :icon_mrgreen:

உங்களின் கருத்தில் என்ன பெரிய அறிவாக எழுதி இருக்கிறீங்கள் ,மொக்கையாக கருத்து எழுதுபவர்களுக்கு அப்படித்தான் எழுத வேண்டும் . :icon_mrgreen: அவனவன் அறிவுக்கு ஏற்ற மாதிரித்தான் நான் கருத்து எழுதுகிறனான் .

Edited by Gari

12(658).jpg

அரசியல் நடவடிக்கைகள்தான் பெருமாளுக்கு விளங்கவில்லை என்றால் இப்போது பார்க்க திகதி தடுமாற்றமும் இருக்கு போலிருக்கு. 

இன்றைய நாள் கிறிமஸ்-நத்தார் தினம். 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கருத்தில் என்ன பெரிய அறிவாக எழுதி இருக்கிறீங்கள் ,மொக்கையாக கருத்து எழுதுபவர்களுக்கு அப்படித்தான் எழுத வேண்டும் . :icon_mrgreen: அவனவன் அறிவுக்கு ஏற்ற மாதிரித்தான் நான் கருத்து எழுதுகிறனான் .

ஒன்றும் வேண்டாம் யாழில் சம்மந்தன் கூட்டம் செய்யும் அரசியல் சரியானதா? பிழையானதா? ஓட்டெடுத்து பார்த்தால் முடிஞ்சுது சோழி  :D

ஒன்றும் வேண்டாம் யாழில் சம்மந்தன் கூட்டம் செய்யும் அரசியல் சரியானதா? பிழையானதா? ஓட்டெடுத்து பார்த்தால் முடிஞ்சுது சோழி  :D

சோலி அங்கே முடியாது. 

புலம் பெயர் மக்களும் தாயக மக்களும் ஒன்றென்பதுதான் எல்லோருடைய விவாதமும்.

அதன் பொருள் விளங்கவில்லை என்றால், உங்கள் வாக்கெடுப்பை, தேர்தல்கள் வரும் நேரம் புலம் பெயர் தமிழரை தாயகம் அழைத்துக்கொண்டு போய் தேர்தலில் நிற்கும் கட்சிகளில் ஒன்றை தெரிந்து வாக்களிக்கும் படி கேட்டால்தான்  சோலி முடியும். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கமருனே வந்து போனது சம்பந்தரிடம்.

பொதுநலவாய மகாநாடுகள் நேரம் செய்திகளை வாசிக்க தவறிவிட்டீர்கள் என்பதை பார்க்க பாவமாக இருக்கு. 

கனக்க தனக்குள்தன்னை பெரிதாக நினைத்து புளுகப்படுவத்தால் அவர்கள் மகாநாட்டில் எடுத்த முடிவை விளங்கிக்கொள்ள முடியாமல்,முட்டாள்தனமான  விடு பேக்கதை மட்டும்தான் எழுத முடிகிறது. சம்ப்ந்தர் எடுத்திருக்கும் முடிவினை அறிய கொஞ்சம் ஆழநீளம் தெரிய வேண்டும்.

நிலத்தில் ஊரும் எறும்பு யானையின் கால்களுள் மிதிபடாமல் தப்பிவிட்டால்  நினைப்பதுண்டு அதன் தலையில் ஏறி கடித்து யானையை விழுத்திவிடுவேன் என்று. <_<

யாழிற்க்கு பல்லாயிரம் வாசகர்கள் விருந்தினராக வருவதுண்டு உங்கள் எழுத்து நடை பலபேருக்கு விளங்குவதில்லை தயவு செய்து பொழிப்புரைப்பாளராக மயில்சாமி போன்றவர்களை வைத்திருந்து பதில்களை எழுதவும்.

ஒன்றும் வேண்டாம் யாழில் சம்மந்தன் கூட்டம் செய்யும் அரசியல் சரியானதா? பிழையானதா? ஓட்டெடுத்து பார்த்தால் முடிஞ்சுது சோழி  :D

யாழில் என்றால் ,யாழ்ப்பானத்திலா அல்லது யாழ் இணையத்திலா ?நீங்கள் பல Id இல் வந்து வாக்கு போடுவீர்கள் .யாழ் இணையத்தில் ஓட்டெடுத்து என்னத்தை சாதித்திருக்கின்றீர்கள் .

2010இல் சம்பந்தரையும் ,மாவையையும் தோற்கடிக்க புலத்திலும் தளத்திலும் பலவழிகளிலும் முயன்று கடைசியாக கடுக்காசையும் இழந்தது தான் மிச்சம் .

அடுத்த தேர்தலில் சம்பந்தன் திருமலையிலும் ,சுமந்திரன் யாழ்ப்பாணத்திலும் தேர்தலில் போட்டியிடுவார்கள் ,முந்தால் உங்களுடைய குதிரை கூட்டங்களை போட்டியிட வைத்து வென்று காட்டுங்கள் .இது தான் வீரனுக்கு அழகு .

  • கருத்துக்கள உறவுகள்

குதிரைகளோ,கழுதைகளோ மக்களுக்கு சுமை இழுப்பம் என்று சொல்லியே வென்றவர்கள் சுமை இழுக்காமல் வேறு வேலைகள் செய்கின்றன .

யாழிற்க்கு பல்லாயிரம் வாசகர்கள் விருந்தினராக வருவதுண்டு உங்கள் எழுத்து நடை பலபேருக்கு விளங்குவதில்லை தயவு செய்து பொழிப்புரைப்பாளராக மயில்சாமி போன்றவர்களை வைத்திருந்து பதில்களை எழுதவும்.

ஒருதடவை சில மீனவப் பெண்கள் தமது மீன்களை விற்றுவிட்டு வீடுதிரும்ப இருட்டிவிட்டதாம். அப்போது வழியில் இருந்த காட்டில் ஒரு இடத்தை தேடி படுத்து துங்க ஆரம்பித்தார்களாம். பூத்துக்குகுலுங்கிய காட்டு மல்லிகைகளின் சுகந்தம் அந்த பெண்களின் மூக்குகளை வலிக்க வைத்தாம். அப்போ அவர்களில் புத்திசாலியான இளைஞி ஒருத்து அருகில் அடுக்கி வைத்திருந்த மீன் கூடைகளை எடுத்து வந்து பிரித்து ஒவ்வொரொரு பெண்ணின் தலையின் கீழும் ஒரு கூடையை அணையாக போட்டாளாம். அப்போது அந்த மீனவ பெண்கள் எல்லோரும் அமைதியாக படுத்து தூங்கினார்களாம்.

உங்களுக்கு விளங்கும் அந்த பக்கதிலேயே நீங்கள் நின்றிருந்தால் உங்களுக்கு இலகுவாக இருந்திருக்கும் போலிருக்கு. 

இளவலாக இருந்தால் பல்லால் நாரை உரித்து வழுக்கலை சாப்பிடும். சிரட்டை கடினமாது என்றால் என்றால் நாய்க்கேன் போர் தேங்காய். 

உங்களுக்கு அந்த வகை நகைச்சுவத்தான் இலகு போல படுகிறது.

உவமானம் உவமேயம் காட்டுவதில் கூட குழப்பநிலையான கருத்துகளை விதைப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மல்லை. :D  :D

குதிரைகளோ,கழுதைகளோ மக்களுக்கு சுமை இழுப்பம் என்று சொல்லியே வென்றவர்கள் சுமை இழுக்காமல் வேறு வேலைகள் செய்கின்றன .

சம்பந்தர் தான் அரசுடன் பேச விரும்பவில்லை என்றால் மாடு சுமை இழுக்கவில்லை என்று அர்த்தப்படுத்துகிறீர்கள்.  மாட்டுக்கு தெரிகிறது இது புதையப் போகும் பாதை என்று. அது சேற்றில் இறங்க மறுக்கிறது. "இந்தியாவிடம் தீர்வுப் பொதி இல்லையா" என்று கேட்போர் ராஜபக்ஷாவிடம் தீர்வு இல்லை என்று மாடு சொல்லும் போது அதை ஏற்காமல்  மாட்டை சேற்றில் இறங்கி வண்டியை புதைக்கவில்லை என்பது விள்ங்கித்தான் பேசுகிறார்களா என்று நம்பமுடியவில்லை. 

Edited by மல்லையூரான்

உவமானம் உவமேயம் காட்டுவதில் கூட குழப்பநிலையான கருத்துகளை விதைப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மல்லை. :D  :D

இதற்கே இவ்வளவுக்கு குழம்புகிறீர்களே.

குழப்பம் உங்களுடன் கூட பிறந்த அண்ணன் தம்பியாக இருக்க வேண்டும். அதுதான் நீங்கள் தொடர்ந்து அரசியல் செய்திகள் வரும் போது குழம்புகிறீர்கள்.

[qote name="பெருமாள்" post="970481" timestamp="1387978999"]
குதிரைகளோ,கழுதைகளோ மக்களுக்கு சுமை இழுப்பம் என்று சொல்லியே வென்றவர்கள் சுமை இழுக்காமல் வேறு வேலைகள் செய்கின்றன .
[/quo

எல்லோருக்கும் நாமம் போடுகின்ற பெருமாள் தனக்கு தானே நாமம் போட்டதுதான் மிச்சம் .நான் எழுதின பதிலுக்கு பதில் தராமல் ?பெருமாளுக்கே கருத்துக்கு பஞ்சம்

வென்றவர்கள் என்ன செய்யவேண்டும் ,என்ன செய்யவில்லை என்று விபரமாக ஆதாரமாக தரமுடியுமா ?
விவாதிக்கலாம் சும்மா குற்றம் சொல்ல்வதால் எதையும் சாதிக்கமுடியாது

விடுதலைப்புலிகள் பலமாக இருந்த போதே சிலவற்றை பேச்சுவார்த்தைஇன்போது சாதிக்கமுடியவில்லை இதற்கு பல ஆதாரங்களையும் தரமுடியும் பல விடயங்களில் அவர்களுடன் இணைந்து பணியற்றினனான் .
இன்றைக்கு TNA ஆல் என்ன பெரிதாக சாதிக்க முடியும் .இன்றைக்கு TNA யின் பலம் மக்களின் வாக்கு ,சர்வதேச அழுத்தம் ,புலம்பெயர்தமிழர் எல்லோரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும் .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தான் அரசுடன் பேச விருமவில்லை என்றால் மாடு சுமை இழுக்கவில்லை என்று அர்தப்படுத்துகிறீர்கள்.  மாட்டுக்கு தெரிகிறது இது புதையப் போகும் பாதை என்று. அது சேற்றில் இறங்க மறுக்கிறது. "இந்தியாவிடம் தீர்வுப் பொதி இல்லையா" என்று கேட்போர் ராஜபக்ஷாவிடம் தீர்வு இல்லை மாடு சொல்லும் போது ஏற்காமல்  மாட்டை சேற்றில் இறங்கி வண்டியை புதைக்கவில்லை என்பது விள்ங்கித்தான் பேசுகிறார்களா என்று நம்பமுடியவில்லை. 

வாழ்த்துக்கள் மல்லை நான் அறிய களத்தில் முதன்முதலாக இலகு நடையில் எழுதியதற்க்கு என்ன தீர்வு பொதி உங்களிடம் தற்பொழுது உள்ளது வெளியுலகம் கேட்க்கமுன்னம் நான் கேட்க்கிறேன் ? :icon_idea:

இருக்கா? இல்லையா? என்று மட்டும்  

Edited by பெருமாள்

நம்பகமாகப் பேச முன்வந்தால் பேசத் தயார் – சிறிலங்கா அதிபருக்கு சம்பந்தன் பதில்

[ ஞாயிற்றுக்கிழமை, 22 டிசெம்பர் 2013, 00:06 GMT ] [ கார்வண்ணன் ]

சிறிலங்கா அரசாங்கம் நம்பகமாகச் செயற்படத் தயாராக இருந்தால், அதனுடன் பேச்சுக்களை நடத்த தாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காண முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம், மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாம் எப்போதுமே பேச்சுக்களுக்கு தயாரில்லை என்று கூறவில்லை.

அர்த்தமுள்ள வகையில் சிறிலங்கா அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு.

சிறிலங்கா அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருதொகுதி யோசனைகளை முன்வைத்திருந்தது.

அதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் பதிலளிக்கவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக, பேசுவதற்கு 2012 ஜனவரி 17, 18, 19ம் நாள்களில் இணக்கம் காணப்பட்டது.

ஆனால் குறித்த நாட்களில் சிறிலங்கா அரச பிரதிநிதிகள் பேச்சுக்கு வரவில்லை.

இந்தப் பேச்சுக்கள் முறிவடைந்தமைக்கு சிறிலங்கா அரசாங்கமே முழுப் பொறுப்பு.

தமிழர் பிரச்சினை விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு வித்தியாசமானது.

அவர்கள், ஏனைய பல்வேறு விடயங்களிலும் கரிசனை கொண்டுள்ளனர்.

எனினும் எமது பிரச்சினையில் அர்த்தமுள்ள தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில், அவர்கள் கரிசனை கொண்டுள்ளனர்.

அனைத்துலக சமூகத்தின் பங்கு தொடர்பாக நாம் குழப்பமடையக் கூடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கள் மல்லை நான் அறிய களத்தில் முதன்முதலாக இலகு நடையில் எழுதியதற்க்கு என்ன தீர்வு பொதி உங்களிடம் தற்பொழுது உள்ளது வெளியுலகம் கேட்க்கமுன்னம் நான் கேட்க்கிறேன் ? :icon_idea:

இருக்கா? இல்லையா? என்று மட்டும்  

கூட்டமைப்பிடம் தீர்வுப்பொதி உள்ளது 

வாழ்த்துக்கள் மல்லை நான் அறிய களத்தில் முதன்முதலாக இலகு நடையில் எழுதியதற்க்கு என்ன தீர்வு பொதி உங்களிடம் தற்பொழுது உள்ளது வெளியுலகம் கேட்க்கமுன்னம் நான் கேட்க்கிறேன் ? :icon_idea:

இருக்கா? இல்லையா? என்று மட்டும்  

கொஞ்சம் நடக்கும் அரசியலை வாசியுங்கள். இவ்வளவு கத்துக்குட்யாக இருந்துவிடாதீர்கள்.

சம்பந்தரின் இன்றைய நிலைப்பாடு அவரிடம் பொதியும் இல்லை மூட்டையும்.  அரசு என்ன தர போகிறது என்றதைக் கேட்க 2012  ஜனவறி மாதம் ஆண்டு 17,18,19 திகதிகளில் நடக்க இருந்த பேச்சுவார்த்தைகளுக்கு அவர் போக அங்கு அரச பிரதிநிதிகள் பிரசன்னமாக இருக்கவில்லை.  சம்பந்தர் அரசுக்கு தீர்வில் என்ன அடங்க வேண்டும் சில விடையங்களை விளக்கி முதல் ஓரிரு பேச்சுவாத்தைகளில் எழுத்தில் கொடுத்துவிட்டதாக சொல்கிறார். அதை அரசு பரிசீலிக்கிறதா இல்லையா என்பது சம்பந்தருக்கு தெரியாது. 

சம்பந்தருக்கு வாங்கத்தான் முடியுமே தவிர  யாருக்கும் பொதி கொடுக்க முடியாது என்றதை புரிந்து கொண்டு பொதி இருக்கா என்ற கேள்வியை கேளூங்கள். தீர்வுப் பொதி என்றால் என்ன என்றதையும் முதலில் தெரிந்துவைத்துகொண்டு தீர்வுப்பொதி இருக்கா என்று கேளுங்கள்.  தங்களுக்கு என்ன வேண்டும் என்றதை கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டு இருக்கு. அரசு அதற்கு இணங்கினால் பேச்சுவார்தைகளில் இறங்கி தீர்வை எட்ட முடியும்.  மட்டுப்படுத்தபட்ட சுய நிர்ணய உரிமை பற்றி சொல்லியிருக்கிறார்கள். அதை பற்றி நீங்கள்தான் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

Edited by மல்லையூரான்

மற்றவர்களும் இந்த கேள்வியை முன் வைக்கமுதல் நீங்கள் வைக்க விரும்புவத்தாக எழுதியிருந்தீர்கள். இதனால் இன்றைய இக்கட்டை சரியாக புரியாதவர்கள், உங்களின் கேள்விகளையே தாங்க்களும் வைக்க விரும்பினால் :  

அரசு கொடுக்கிற மனத்துடன் இருந்தால் தீர்வுப் பொதி ஒன்றை தாயாரித்து கொடுக்கலாம். இங்கிலாந்து இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்க தயாரானபோது சோல்பரி இலங்கைக்கு ஒரு அரசியல் அமைப்பை எழுதினார். அதை அடிப்படையாக வைத்து இலங்கையிடம் சிலவற்றை கேட்டு வாங்கிகொண்டு இல்ங்கிலாந்து இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்தது. அந்த நிலை இலங்கையில் இல்லை. குறந்தது 3 ஒப்பந்தங்கள் தோற்றுவிட்டன. நாங்காவது என்று ஒன்று இல்லை என்று மகிந்தா சொல்லிவிட்டார். பேச்சுவார்த்தையை அரசு 2012 ஆரம்பத்திலேயே முறித்துவிட்டது.  இதில் தீர்வுப்பொதி என்றால் என்ன?, யாரால் யருக்கு அது கொடுக்கப்படும்? என்பது எல்லமே ஆகாயதில்.

தீர்வு வரபோவத்தில்லை என்ற பின்னர், கூட்டமைப்பு, இந்திய, மேற்குலக நாடுகளின் உதவியை கேட்கிறது. அவர்களுக்கு, கட்சிகளை அழுத்தி  பேச்சுவார்த்தையை திரும்ப தொடக்குவித்தால் அது தொடர்வது எவ்வளவு கடுமையானத்தாக இருக்கப் போகிறது என்றதும், அதனால் வரத்தக்க பலங்கள் என்ன என்பதும் தெரியும். என்வேதான் அவர்கள் கூட்டமைப்பை ஒரு நிலைப்பாட்டை(தீர்வுப்பொதியை) எடுத்து கொண்டு பேச்சுவார்த்தைக்கு போகாமால், இணங்கி போகத்தக்க மன நிலையுடன் போகும் படி அழுத்துகிறார்கள். இதில் கூட்டமைப்பு தான் விரும்பும் ஒரு பொதியை கொடுத்து அதை நடைமுறைப்படுத்தும் வாக்கை அரசிடம் பெற்தக்க சந்தர்ப்பம் எனற் சொல்லே இல்லை. அதனால் கூட்டமைப்பிடம் பொதி இல்லை. அவர்களிடம் தங்களுக்கு என்ன வேண்டும் என்ற கோரிக்கைத்தான் இருக்கு.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.