Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நெருக்கடியை முகங்கொடுக்க முடியாமையினாலேயே கூட்டமைப்பினரை பேச அழைக்கின்றார்கள் - பொன்.செல்வராசா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
selavaraja-seithy-20131228-150.jpg

ஜெனீவாவிலே நடக்கவிருக்கும் கூட்டத்தொடரின்போது நவநீதன்பிள்ளை உட்பட அனைத்து சர்வதேச நாடுகளும் கொண்டுவரவிருக்கும் நெருக்கடியான பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாமையினாலே தற்போது த.தே.கூட்டமைப்பினரை பேச அழைக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா கூறினார். நேற்று பெரியகல்லாறு வாசகர் வட்டத்தின் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வானது பெரிய கல்லாறு பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஞா.அற்புதராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வாரசா, சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராசா மற்றும் ஆலயங்களின் பிரதம கர்த்தாக்கள், உயர் அதிகாரிகள், கிராம மக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

ஜெனிவாவிலே இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் நவநீதம்பிள்ளை எழுத்து மூல அறிக்கையொன்றினை சமர்ப்பிக்க இருக்கின்றார். அத்தோடு பொதுநலவாய மாநாட்டிற்கு வருகை தந்த டேவிட் கமரூன் இலங்கையிலே தற்போது என்ன நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது என்பதனை ஆதார பூர்வமாக எடுத்தியம்ப இருக்கின்றார். இதே போன்றுதான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு எதிரான ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றன.

இதனை சமாளிப்பதற்காகவேதான் தற்போதய அரசாங்கம் தெரிவுக்குழுவொன்றினை அமைத்து அதன்மூலம் எங்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்து நிற்கின்றது. இதில் நாங்கள் கலந்து கொண்டால் என்ன தீர்வினை பெற்றுக்கொள் முடியும்? எமது இனத்திற்கான எந்தத்தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே மீண்டும் ஒரு முறை எமது கட்சியினூடாக எம்மினத்தினை ஏமாற்றி சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு சதித்திட்டமே இதுவாகும்.

அவர்களுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதுதான் அவர்களினது போக்கு இதனொரு பகுதியாகவே முன்பு அரசாங்கத்துடன் 18 தடவைகள் பேசியிருக்கின்றோம். இறுதியில் எழுத்து மூலமும் எங்களது பிரச்சினைகளை தெரியப்படுத்தியும் இருக்கின்றோம். அப்போது எந்தவித முன்னறிவித்தலும் இல்லாமல் பேச்சுவார்த்தையை முடித்தார்கள் ஆனால் இப்போது சர்வதேசத்தை ஏமாற்றும் இன்னுமொரு திட்டமே இப்போதைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எங்களை அழைக்கின்றார்கள்.

இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவிலே இருப்பவர்கள் யார் முழுக்க முழுக்க பேரினவாதக்கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்ற இனவாதத்தினை கக்கிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் அங்கு இருக்கும் வரைக்கும் எதை நாங்கள் கேட்டுத் தரப்போகின்றார்கள் மாறாக அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் வரும் வரைக்கும் பேச்சுவார்த்தை என்ற பதத்தினை வைத்துக்கொண்டு முழு உலகத்தையும், எம்மையும் எம்மினத்தையும் ஏமாற்ற எடுக்கும் சதித்திட்டமே இவர்கள் தற்போதைக்கு கையில் எடுத்திருக்கும் ஆயுதமாகும்.

பேரினவாதக்கட்சிகளுடன் எந்தப் பேச்சுவார்த்தை செய்தாலும் பயனில்லை. ஆகவே நிபந்தனை அற்ற எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் இனிமேல் கலந்து கொள்வதில்லை என்று அனைத்துக்கட்சிகளும் ஏகமனதாக முடிவெடுத்து அரசாங்கம் எமக்குத்தந்த அழைப்பினை நிராகரித்து இருக்கின்றோம்.

தற்போத இந்த நாட்டிலே உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டங்கள் தோல்வியடைந்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது. இதற்கு காரணம் கட்சிக்குள் உள்ள முரண்பாடுகளேயாகும். எந்தவொரு கட்சியாக இருந்தாலும் இங்கு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, ஒத்துழைப்பு, கட்டியணைக்கும் தன்மை என்பன காணப்படவேண்டும்.

வடக்கிலே மூன்று பிரதேச சபைகள், கிழக்கில் வெருகல், நாவிதன்வெளி, காரைதீவு போன்ற பிரதேசசபைகளின் அடுத்தாண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் தோல்விடைந்திருக்கின்றது. ஒரு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்படுமாயின் தவிசாளர் உள்ளுராட்சி மன்றச்சட்டத்தின் மூலம் தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இது எமது கட்சிக்கு மாத்திரமல்ல இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசாங்கக்கட்சியின் 25 பிரதேச சபைகளின் வரவு செலவுத்திட்டம் தோல்விகண்டு இருக்கின்றது. எமது கட்சியில் உள்ள சில பிரதேச சபைகளின் பிரச்சினைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வினையும் கண்டிருக்கின்றோம் என்றார்.

selavaraja-seithy-20131228-1.jpg

selavaraja-seithy-20131228-2.jpg

selavaraja-seithy-20131228-3-800.jpg

selavaraja-seithy-20131228-4.jpg

selavaraja-seithy-20131228-5-800.jpg

selavaraja-seithy-20131228-6.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=100091&category=TamilNews&language=tamil

ஜெனிவாவிலே இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் நவநீதம்பிள்ளை எழுத்து மூல அறிக்கையொன்றினை சமர்ப்பிக்க இருக்கின்றார். அத்தோடு பொதுநலவாய மாநாட்டிற்கு வருகை தந்த டேவிட் கமரூன் இலங்கையிலே தற்போது என்ன நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது என்பதனை ஆதார பூர்வமாக எடுத்தியம்ப இருக்கின்றார். இதே போன்றுதான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு எதிரான ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றன.

இதனை சமாளிப்பதற்காகவேதான் தற்போதய அரசாங்கம் தெரிவுக்குழுவொன்றினை அமைத்து அதன்மூலம் எங்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்து நிற்கின்றது. இதில் நாங்கள் கலந்து கொண்டால் என்ன தீர்வினை பெற்றுக்கொள் முடியும்? எமது இனத்திற்கான எந்தத்தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே மீண்டும் ஒரு முறை எமது கட்சியினூடாக எம்மினத்தினை ஏமாற்றி சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு சதித்திட்டமே இதுவாகும்.

அவர்களுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதுதான் அவர்களினது போக்கு இதனொரு பகுதியாகவே முன்பு அரசாங்கத்துடன் 18 தடவைகள் பேசியிருக்கின்றோம். இறுதியில் எழுத்து மூலமும் எங்களது பிரச்சினைகளை தெரியப்படுத்தியும் இருக்கின்றோம். அப்போது எந்தவித முன்னறிவித்தலும் இல்லாமல் பேச்சுவார்த்தையை முடித்தார்கள் ஆனால் இப்போது சர்வதேசத்தை ஏமாற்றும் இன்னுமொரு திட்டமே இப்போதைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எங்களை அழைக்கின்றார்கள்.

இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவிலே இருப்பவர்கள் யார் முழுக்க முழுக்க பேரினவாதக்கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்ற இனவாதத்தினை கக்கிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் அங்கு இருக்கும் வரைக்கும் எதை நாங்கள் கேட்டுத் தரப்போகின்றார்கள் மாறாக அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் வரும் வரைக்கும் பேச்சுவார்த்தை என்ற பதத்தினை வைத்துக்கொண்டு முழு உலகத்தையும், எம்மையும் எம்மினத்தையும் ஏமாற்ற எடுக்கும் சதித்திட்டமே இவர்கள் தற்போதைக்கு கையில் எடுத்திருக்கும் ஆயுதமாகும்.

பேரினவாதக்கட்சிகளுடன் எந்தப் பேச்சுவார்த்தை செய்தாலும் பயனில்லை. ஆகவே நிபந்தனை அற்ற எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் இனிமேல் கலந்து கொள்வதில்லை என்று அனைத்துக்கட்சிகளும் ஏகமனதாக முடிவெடுத்து அரசாங்கம் எமக்குத்தந்த அழைப்பினை நிராகரித்து இருக்கின்றோம்.

ஐயா மிக்க நன்றி...
இதனை இறுக்கமாக கடைபிடியுங்கள்..
நேற்று ஒரு செய்தியில் சம்பந்தர் பேச்சுக்களில் மிக
ஆவலாக இருப்பதாக அறிந்தேன்..
சம்பந்தர், சுமந்த்திரன் இழுத்து செல்லமுயற்சித்தால்
 நல்ல ஆப்பாக அடியுங்கள்... ஏன் எனில் எம்மினத்திற்கு இது கடைசி சந்தர்ப்பம் பங்குனி மகானாடு.......... சுயனல வாத
அரசியல்(சிங்ககொடி தூக்கி, பதவிகள்,
சொகுசுகளுக்கு முழுஇனத்தையும் அடைவு
வைக்கும்) வாதிகளின் நடவடிக்கைகள்
இனி இடமில்லை.....எதாவது எமாற்ற முயன்றால்
இவர்களை கட்சியிலிருந்து
எல்லோரும் சேர்ந்து  அகற்றுங்கள்..
:o:(

Edited by vazikaadi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.