Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவை இலக்கு வைத்த கோத்தாபயவின் இராணுவ நகர்வும் புலனாய்வு யுத்தமும் தமிழமுதனின் கடத்தலும் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துலங்காத உண்மைகளும். குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

GTN%20Flash%20News_CI.jpg

வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் சூரியகுமாரனின் மகன் தமிழமுதன் கடத்தப்பட்டதும் அதனைத் தொடர்ந்து இன்று பொலிசார் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கைகளும் பல சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளன.

இந்த நிலையில் சூரிய குமாரனின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள குளோபல் தமிழ்ச் செய்திகள் பல முயற்சிகளை எடுத்தது. முடியவில்லை. அனைவரது தொலைபேசிகளும் செயலிழந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து எமது செய்தியாளர்களுடன் இது குறித்து பேச முற்பட்ட வேளை தமக்கு எதுவுமே தெரியாது என அவர்கள் மௌனித்து விட்டனர்.

முதலில் கடத்தல் தொடர்பான செய்தியை வெளிக்கொணர்ந்த ஊடகம் என்ற வகையில் குறிப்பாக அவர் காணாமல் போய் சில மணிநேரங்களிலேயே குளோபல் தமிழ்ச் செய்திகளில் செய்தி பதிவாகியது என்ற அடிப்படையில் விடா முயற்சியில் இறங்கினோம்.

அதன் அடிப்படையில் பல தகவல்கள் வெளியாகி இருந்தன. சுனாமி நினைவு நாள் அன்று தமிழமுதன் அவரது சகோதரி ஒருவர் வீட்டில் இருந்தே காணாமல் போயுள்ளார். சுனாமி நினைவு தின நிகழ்வுகளில் கலந்துகொள்ள வீட்டார் சென்ற வேளை தனிமையில் இருந்த இவர் கடத்தப்பட்டு உள்ளார்.

கடத்தியவர்கள் இவரை முல்லைத் தீவுக்கே கொண்டு சென்றுள்ளனர். அங்கே விடுதலைப் புலிகளின் கடற்புலித் தளங்கள் இரண்டை காண்பித்து அங்கே ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டதா? அந்த தளங்களை தெரியுமா? என கேள்விகளை எழுப்பி உள்ளனர். தொடர்ந்து வன்னியில் முன்பு சூரியகுமாரன் இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர்கள் அந்த வீட்டில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டனவா என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். அழைத்துச் செல்லப்பட்ட தமிழமுதனுக்கு எவையுமே தெரியாத நிலையில் பிரயோசனம் இல்லாதவர் என்ற வகையில் முல்லைத்தீவில் இறக்கிவிடப்பட்டு உள்ளார். அங்கே அவரது உறவினர் ஒருவரது வீட்டைச் சென்றடைந்த அவரை பின் தொடர்ந்த பொலிசார் கைது செய்து ஏற்கனவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதையை வெளியிட்டுள்ளனர்.

சூரியகுமாரன் விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்து வடக்கு கடற்றொழிலாளர் சமாஜத்தின் செயலாளரகத் தொழிற்படுகின்றார். யுத்த காலத்தில் வன்னியில் இருந்த ஒவ்வாருவரும் போராட்டத்தோடும் புலிகளோடும் விரும்பியோ விரும்பாமலோ இருந்தமை போன்றே சூரிய குமாரனின் குடும்பமும் செயற்பட்டது. அவர் ஒரு மகன் கடற்புலியாக இருந்து இறுதியுத்தத்தில் காணாமல் போனவர். அவரைத் தேடி சூரியகுமாரனின் குடும்பம் அலையாத இடம் இல்லை.

மே 19ன் பின்னரும் மீனவர் உரிமைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி வந்த அவர் கடந்த காலம் காரணமாக நிகழ்கால செயற்பாடுகளில் பாதுகாப்பு தரப்பின் கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்ட போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கே.பீ என்ற செல்வராஜா பத்மநாதன் முதலானவர்களுடன் நல்லுறவையும் பேணிவந்தவர்.

இந்த நிலையில் சூரிய குமாரனின் மகன் கடன் காரணமாக தலைமறைவாகினார், அவுஸ்ரேலியா செல்வதற்காக காணாமல் போனதாக நாடகம் ஆடினார் அவரைக் கைது செய்துள்ளோம் எனக் காவற்துறையினர் தெரிவித்திருப்பது மிகவும் வேடிக்கையானது என பாதுகாப்பு தரப்போடு தொடர்புடைய தரப்புக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்தன.

தனது மகன் காணாமல் போயுள்ளார், அவரை புலனாய்வுப் பிரிவினரே கடத்திச் சென்றுள்ளனர் என பிரதேச பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றவேளை நிலையத்தின் பொறுப்பதிகாரி முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளார். பல மணிநேரங்கள் சென்ற பின்னும் தாமே தயாரித்த முறைப்பாட்டை பொலிஸ் நிலையத்தில் கொடுத்த போதும் அதற்கு எந்த விதமான முறைப்பாட்டு பற்றுச் சீட்டுக்களும் கொடுக்கப்படவில்லை. அந்த முறைப்பாட்டு கடிதத்தோடு யாழ் மனித உரிமை ஆணைக் குழு அலுவலகத்திற்குச் சென்ற சூரிய குமாரன் அங்கு கொடுத்த முறைப்பாட்டை அடுத்து மனித உரிமைகள் அலுவலகம் கொடுத்த அழுத்தத்தினால் முறைப்பாட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முறைப்படி ஏற்றுக்கொண்டார்.

பொலிஸ் நிலையத்தில் இருந்த அந்த வேளையில் கடத்தியவர்களின் தொலைபேசியூடாக, தமிழமுதன் தந்தைக்கு தொலைபேசி எடுத்து பேசியிருக்கிறார். அந்தத் தொலைபேசியை பொலிஸ் நிலையத்தில் கொடுத்த போது கடமையில் இருந்த அதிகாரி பேச முற்பட்டுள்ளார் உடனே தொலைபேசி துண்டிக்கப்பட்டு விட்டது.

பின்னர் சகோதரியுடன் பேச அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடத்தியவர்களுடன் தமிழர் ஒருவரும் இருந்திருக்கிறார். இவையாவும் முடிவுற்ற நிலையிலேயே அவர் முல்லைத் தீவில் இறக்கி விடப்பட்டு உள்ளார்.

இந்க் கடத்தில் தொடர்பில் சர்வதேச ஊடகங்களுக்கும் சூரிய குமாரன் நேரடி செவ்வி வழங்கினார். சமூகத்தில் நன்கு அறியப்பட்ட சூரிய குமாரன் இப்படி ஒரு நாடகத்தை அதுவும் இலங்கையின் புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்புடன் அரங்கேற்றும் நிலையில் இருப்பாரா என்பதனை சிந்திக்க முடியும் என அவரை நன்கறிந்த பலரும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்.

இந்தக் கடத்தல் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கேபீ ஆகியோருடனும் சூரியகுமாரன் முறையிட்டு இருக்கிறார். அவர்களும் இந்த விடயம் குறித்து அழுத்தங்களை கொடுத்ததாக தெரிய வருகிறது.

எனினும் இவை எல்லாவற்றையும் மீறி முல்லைத் தீவில் இறக்கிவிடப்பட்ட தமிழமுதனை பின்தொடர்ந்து சென்ற பொலிசார் அவரைக் கைது செய்து இப்போ தமது நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர் என தெரிய வருகிறது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல கடத்தல்கள் காணாமல் போதல்களை கண்டுபிடிக்க முடியாத பொலிசார் முல்லைத் தீவு வரை பின்தொடர்ந்து தமிழமுதனை மீட்டு இருப்பது அதிசயமே என அங்கு உள்ளவர்கள் கேலி செய்யும் அளவிற்கு இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்பு நிறுவனங்களும் தரம் தாழ்ந்து போயுள்ளன.

இந்தத் தகவல்கள் உண்மையில் பொலிஸ் காவலில் உள்ள சூரியகுமாரன் மற்றும் தமிழமுதனுக்கு நெருக்குதல்களை கொடுக்கும் என்பதனை பொறுப்புடன் குளோபல் தமிழ்ச் செய்திகள் விளங்கிக் கொள்கிறது. இதனால் அவரது குடும்பத்தினருக்கு நெருக்குதல்கள் ஏற்படும் என்பதனை குளோபல் தமிழ்ச் செய்திகள புரிந்து கொள்கிறது. ஆயினும் அவற்றையும் மீறி எங்கள் ஊடகப் பொறுப்பையும் சமூகப் பொறுப்பையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் என்பதனால் இந்தத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளோம். அதற்கு அப்பாலும் இலங்கைப் பொலிசாரும் பாதுகாப்புத் தரப்பும் ஊடகங்களுக்கு  விடுத்துள்ள சவால், ஊடகங்களை பொய்ப்பிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சி, முன்னர் இடம்பெற்ற கடத்தல்கள் காணாமல் போதல்களும் இப்படித்தான் என நிரூபிக்க எடுக்கும் முயற்சி, பிரகீத் என்ற பத்திரிகையாளரும் வெளிநாடு தப்பிச் சென்று பிரான்சில் வேறு பெயரில் வசிக்கிறார் எனக் கூறுவது போன்ற அனைத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய கடப்பாடும் உண்டு என்பதனால் பொறுப்புணர்வோடு தகவல்களை வெளியிட்டு இருக்கிறோம்.

 

இவை முழுக்க முழுக்க தவறானவை எனக் கூறி உண்மையில் தனது மகன் நாடம் ஆடினார் என சூழ்நிலையின் காரணமாக மறுப்பறிக்கை வெளியிட்டாலும் அதனையும் குளோபல் தமிழ்ச் செய்திகள் வெளியிடும்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101006/language/ta-IN/article.aspx

 

அரசின் நாடகம் என்று மற்றத்திரியில் எழுத நினைத்தேன். நீக்கப்படும் என்பதால் எழுதவில்லை. அதே கதையை நான் சூசையின் தமையனின் இறப்புக்கு எழுதிய போதும் நடந்தது. எனவே மற்றும் ஒரு கதை கட்டாயம் வெளிவரும் என பொறுமையாக இருந்தேன்.

 

அரசே இல்லாத செய்தி இலங்கைக்கு வெளியில் வந்தால்தான் ஆச்சரியம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.