Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் இந்திய தூதரகங்களுக்கு ஆபத்து – பாதுகாப்பை பலப்படுத்துமாறு புதுடெல்லி கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

indian-HC-colombo.jpg

இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதால், சிறிலங்காவில் உள்ள தமது தூதரகங்கள் மற்றும் இராஜதந்திர மையங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த 26ம் நாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் இதுதொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பங்களாதேசின் இஸ்லாமிய அரசியல் அமைப்பான ஜமாயத் இஸ்லாமி அமைப்பின் தலைவரான அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும், ஏனைய பகுதிகளில் உள்ள தூதரகப் பணியகங்கள் மீது இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இந்தியா அச்சம் வெளியிட்டுள்ளது. 

சிறிலங்கா தவிர, மேலும் பல தெற்காசிய நாடுகளிலுள்ள இந்தியத் தூதரக நிலைகளும் தாக்கப்படும் ஆபத்து இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. 

இதுபற்றிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்தே, சிறிலங்கா உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு, தமது தூதரகங்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சிறிலங்காவில், கொழும்பில் தூதரகத்தைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை என் மூன்று இடங்களில் துணைத் தூதரகங்கள் இருக்கின்றன. 

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் பணியாளர்களுக்கும் போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளனர். 

சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு ஒரு தொகை பாதுகாப்பு அதிகாரிகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

1971ம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் நடத்தப்பட்ட பங்களாதேஸ் விடுதலைப் போரின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்ட அப்துல் காதர் முல்லா உள்ளிட்ட பல இஸ்லாமிய தலைவர்கள், போர்க்குற்றங்களைப் புரிந்தது நிரூபிக்கப்பட்டதையடுத்து, பங்களாதேசின் அனைத்துலக விசாரணைத் தீர்ப்பாயம் தண்டனைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20131230109696

மற்றும் அமெரிக்காவோடு முரண்டு பிடித்து அமெரிக்க தூதரக பாதுகாப்பை தூக்கி படம் காட்டியதும் காரணம்.

அமெரிக்க உளவு துறை வேறு இனி உதவாது. எதுக்கும் இருக்கட்டும் என்று எச்சரிக்கை விடுறார்.

மற்றும் ஆப்கானிலும், பலோகிச்தானிலும் காந்தீய செயல்கள் நிறையவே செய்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.