Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவம் தமக்கு எதிரானவர்களுடன் தான் போரிட்டனர் தமிழ் மக்களுக்கு எதிராக போரிடவில்லை:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தை விட்டகல்கிறார் ஹத்துருசிங்க:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Hathru1_CI.JPG

கடந்த காலங்களில் இராணுவம் தமக்கு எதிரானவர்களுடன் தான் போரிட்டனர். ஆனால் தமிழ் மக்கள் இராணுவம் தமக்கெதிராக போராடியதாகவே நினைக்கின்றனர். என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழில் கடந்த 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் யாழ் கட்டளைத்தளபதியாக கடமையாற்றிவந்த ஹத்துருசிங்க தற்போது கொழும்பு இராணுவ தலைமையகத்திற்கு மாற்றமாகி எதிர்வரும் 6ம் திகதி செல்கின்றார். அதனை முன்னிட்டு வசாவிளானில் நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்விலையே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்.

தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் எனக்கு தெரியும் அதற்கு தீர்வு தேவை என்பதும் எனக்கு தெரியும். அதற்காக கடந்த கால யுத்த நிலைமையினை மீண்டும் ஏற்படுத்தி கொள்ளாது நாட்டின் அபிவிருத்திக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவம் பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றது. மிதிவெடி அகற்றல், சிறுவர் நல வேலைத்திட்டங்கள், வறியவர்களின் மருத்துவ சிக்கிச்சைக்கு உதவுதல், மற்றும் மாதாந்தம் 200 இராணுவத்தினர் இரத்த தானம் மேற்கொள்ளால் போன்ற சமூக நல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது 

முன்னர் இருந்ததை விட தற்போது இராணுவ எண்ணிக்கை நாளந்தம் குறைக்கப்பட்டு வந்துள்ளது. அடுத்து வரும் வாரங்களில் வரணியில் உள்ள 52 படைபிரிவு நிலை கொண்ட்டுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

2009 க்கு முந்திய காலப்பகுதியில் குற்றங்கள் நிறைந்து காணப்பட்டன.ஆனால் தற்போது நீதி நிர்வாக சேவைகள் தேவையான அளவு முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாமெல்லாம் ஒரே நாடு ஒரே மக்கள் இந்த நாட்டில் ஒற்றுமையுடன் வாழவேண்டும். கடந்த காலத்தை போல மீண்டுமொரு காலத்தை ஏற்படுத்த கூடாது.

தர்க்க ரீதியாக பேசி சாதகமற்ற ரீதியில் செல்லாது நீங்கள் உங்கள் தேவைகளை பெற்று கொள்ள வேண்டும்.நாம் ஐக்கியமாக எமது பணியை முன்னெடுப்போம் என மேலும் தெரிவித்தார்   

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101260/language/ta-IN/article.aspx

 

தர்க்க ரீதியாக பேசி சாதகமற்ற ரீதியில் செல்லாது நீங்கள் உங்கள் தேவைகளை பெற்று கொள்ள வேண்டும்.நாம் ஐக்கியமாக எமது பணியை முன்னெடுப்போம் என மேலும் தெரிவித்தார்

 

வெளிப்படையாக சொல்கிறார், நாங்கள் அடிக்க நீங்கள் அடிவேண்டுவதுதான் உங்களுக்கு லாயக்கு என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.