Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் செய்தி இணையம் பார்க்கமுடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
seithy-logo2012-seithycom250.jpg

கடந்த 1ம் திகதி 2014 முதல் இலங்கையிலுள்ளவர்கள் பார்வையிட முடியாதவாறு செய்தி இணையத்தளம் தடைப்படுத்தப்பட்டுள்ளது.. நடுநிலமைச் செய்திகளை படித்துவந்த பல செய்தி இணைய தமிழுறவுகள் பெரிதும் சிரமப்பட்டுள்ளதோடு - தமது கவலைகளையும் தெரிவித்துள்ளனர்.. போர் ஓய்து ஒரு சாதாரண நிலை காணப்படும் காலத்தில் செய்தி இணையமானது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கான புலம் பெயா் உறவுகளது உதவிகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் பெற்று (அமைப்புகள் கழகங்கள் வர்க்கவேறுபாடுகளின்றி ) மக்கள் மத்தியில் பிரசுரித்து ஊக்குவித்து வந்தது..

  

அத்தோடு செய்தி இணையம் சார்பிலும் ஆரவாரமின்றி பேர் புகழ் மற்றும் பரப்புரைகளை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களிற் பலருக்கு தனித்துவமான உதவிகளை செய்து வருகிறது - இதை பல வாசகர்களும் பயனர்களும் மடடுமே அறிவார்கள்.. எமது பணி தொடரும்..

அரசியற் காழ்ப்புணர்வுகள் பிரிவினைகள் பேதங்கள் மற்றும் மொழி சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு மனங்களையும் மனித உணர்வுகளையும் மதித்து அனைவரும் பாராட்டும் வண்ணம் செய்தி இணையம் தனது சேவையை கடந்த 4 வருடங்களாக ஆற்றிவருகிறது.

இருந்தும் எமது இணையத்தை இலங்கைவாழ் தமிழ் உறவுகள் பார்வையிட முடியாத படி முன்னறிவித்தலோ அல்லது எம்மீது ஏதாவது குற்றச்சாட்டுக்களோ தெரிவிக்காது தடைப்படுத்தப்ட்டுள்ளது.

இலங்கையில் ஜனநாயகமறுப்பிற்கும் ஊடக சுதந்திரம் மற்றும் தனி மனித சுதந்திரத்திற்கும் போதிய உத்தரவாதம் இருப்பதாக கூறிவரும் அரச இயந்திரம் - பல தொலைத் தொட்ர்பு நிறுவனங்களுக்கும் அறிவித்து செய்தி இணையதளம் உள்ளிட்ட 4 இணையத்தளங்களை தடைப்படுத்தியுள்ளதை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சில எமக்கு தெரியப்படுத்தியுள்ள.

தற்போது இலங்கைவாழ் வாசகர்கள் http://www.hidemyass.com/ என்ற முகவரி ஊடாக செய்தி இணையத்தை படித்துவருகிறார்கள்... கடந்த பல மாதங்களாக அனாம தேய மின்னஞ்சல்கள் ஊடாக எமக்கு பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தன - இலங்கையில் செய்தி தடை செய்யப்படும் எனவும் - அதை தவிர்ப்பதற்காக சில முகமூடிப் பேரம் பேசுதல்களும் சில நிபந்தனைகளும் போட்ப்பட்டு மின்னஞ்சல்வளி அனாமதேசிகளால் எம்முடன் முகமூடிக் கருத்துப்பரிமாற்றம் மேற்க்கொள்ளப்பட்டுவந்தன.

குறித்த அந்த அனாமதேசிகளை கனடாவிலும் இலண்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஏதாவது ஒரு நாட்டில் எமது செய்திப்பரிவினரோடு சந்திக்கவருமாறும் கேட்டிருந்தோம் .. ஆனால் பதில் ஏதும் இல்லை... இது பற்றிய மேலும் விரிவான செய்தியை விரைவில் எமது வாசகர்களுக்கு தெரியத்தருவோம்..

நாம் நாமக உள்ளவரை தடைகளைக்கண்டு துவண்டுவிடப் போவதில்லை!

நமது ஊடகப் பயணம் பல வளிகளில் தொடரும் என்பதை செய்தி இணைய வாககா்களுக்கு அறியத்தருகிறோம்.

நன்றி

செய்தி இணையம்

நிர்வாக குழு.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100715&category=TamilNews&language=tamil

இதற்கு தீர்வு சிறி லங்கா மாற்று கருத்தாளருக்கு தான் தெரியும்.

5% ஊடக சுதந்திரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.