Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மஹிந்த வழங்கிய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை: த.தே.கூ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண சபையின் சீரான நிர்வாகத்துக்கு உதவுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கினார். ஆனாலும், அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதியால் சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, முதற்கட்டமாக வடக்கு மாகாண பிரதம செயலாளரை  மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக கே.திருவாகரனை நியமிப்பதாக வாக்குறுதியளித்தார். ஆனாலும், அந்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறப்பு கவனம் செலுத்தி வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில் ஆளுநரின் இடையூறுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் மாகாண சபையின் செயற்பாடுகள் தடைப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.