Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களும் அனைத்துலக சமுகமும் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் அனைத்துலக சமுகமும் - நிலாந்தன்

12 ஜனவரி 2014

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்'

தமிழர்கள் எப்பொழுதும், பெருமையோடு நினைவு கூரக்கூடிய ஒரு வாக்கியம். அது யுகங்களைக் கடந்தும் நிலைத்து நிற்கும்.

கணியன் பூங்குன்றனாரின் அந்த வாசகம் ஒரு தீர்க்க தரிசனமும் கூட. ஈழத்தமிழர்கள், யாதும் ஊராகப்போய்விட்டார்கள். ஏறக்குறைய, நாலில் ஒரு; ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து விட்டார். அதாவது, தமிழர்கள் யாதும் ஊராகப் போய்விட்ட்டார்கள். ஆனால், யாவரும் கேளிரா? இல்லை. அங்கே தான் பிழைக்கிறது. தமிழர்கள் யாதும் ஊராகப் போனதுவரை கணியன் பூங்குன்றனாரின், தீர்க்க தரிசனம் பாதியளவில் சரி. ஆனால், யாவரும், தமிழர்களுக்கு கேளிர் அல்ல. அதாவது நண்பர்கள் அல்ல. எல்லாரும் தமிழர்களுக்கு நண்பர்களாக இருந்திருந்தால், இரண்டு நீர்க்கரைகளுக்கிடையில், கைவிடப்பட்ட ஒரு நிலை வந்திருக்காது. தமிழர்களுக்கு எல்லாரும் நண்பர்கள் இல்லை. எதிரிகள் தான் கூட, யாவரும் கேளிர் அல்ல என்ற இந்த நிலமை எப்படி வந்தது? இதற்கு தமிழர்கள் காரணமா? அல்லது வெளித்தரப்புகள் காரணமா,? தமிழர்களின் ஒரு தரப்பினர் சொல்லுகிறார்கள், நாங்கள் நீதியாகத்தான் இருந்தோம். ஆனால், அனைததுலகம் நீதியாக இல்லை, அது போராடும் இனக்களிற்கு எதிராக இருக்கிறது என்று. இது சரியா?

நீதியின் பேரில் தான் தீர்வு கிடைக்குமென்றால், அது தமிழர்களுக்கும் முன், செச்ச்னியர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். பலஸ்தீனர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். குர்திஷ்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். காஷ்மீரிகளுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கிடைக்கவில்லை. விடுதலைப்புலிகளிடமிருந்த காவல்துறையை விடவும் குறைந்த படையணிகளைக் கொண்டிருந்தது, கிழக்கு திமோர் ஆனால் அதற்கு விடுதலை கிடைத்தது. மொன்டிநிக்ரோ, கொசோவோ இவையெல்லாம் பெற்ற வெற்றிகள் எல்லாமே அநேகமாக போராடிப்பெற்ற வெற்றிகள் அல்ல, கெடுபிடிப்போர் முடிவடைந்ததையடுத்து, நேட்டோ விரிவாக்கத்தின் போது, மேற்கு நாடுகள் அவற்றிற்கு விடுதலை பெற்றுக்கொடுத்தன, அவைமுழுநிறைவான விடுதலை அல்ல கொசோவாவின் விடுதலைப் பிரகடனத்தை படித்தால் தெரியும் நேட்டோப் படைகள் என்றென்றூம் இருக்கலாம், ஐரோப்பிய யூனியனிக்குள் எப்போதும், கொசொவா இருக்கும் என இருக்கிறது. கிட்டத் தட்ட அது ஒரு பாதி சரணடைதல் தான், நேட்டோப்படையின் இருப்பை ஏற்றுக்கொண்டு, ஐரோப்பிய யூனியனின் போருளாதார வலயத்திற்குள் வருவோம் எமன்பதையும் ஏற்றுக்கொண்டுதான் கொசொவா விடுதலை அடைந்தது. எனவே முழுமையான பொருளில் சொன்னால் அது முழுநிறைவான விடுதலை அல்ல.

எனவே நீதியின் பாற்பட்டு கதைக்க முடியாது. விடுதலை அடைந்த இனங்கள் எல்லாம் நீதியின் பாற்பட்டு விடுதலை அடைந்தன என்பதை விடவும், அந்தந்த பிராந்திய அரசியலிற்கேற்ப அவறிற்கு விடுதலை கிடைத்தது என்பதே உண்மை, பிரச்சினை என்னவென்றால், ஒரு போராட்டம் நீதியானதா? இல்லையா? என்பதல்ல இங்கு முக்கியம். அந்த நீதியை யார் அவரகள் சார்பாக அனைத்துலக அரங்கில்; முன்னெடுத்துச் செல்ல்கிறார்கள் என்பது தான். இது முழுக்க முழுக்க ஒரு நலன் சார் விவகாரம்.இதில் நீதியைவிட, நலன்களுக்கே பெறுமதி அதிகம்.அதாவது அனைத்துலக நீதி என்பது அனைத்துலக அரசியல்தான். அனைத்துலக அரசியல் என்பது அனைத்துலக வர்த்தகம் தான்.

ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள், ஏதோ தாங்கள் மட்டும் தான் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக, அது சரியல்ல. தோர்கடிக்கப்பட்டது தமிழர்களின் போராட்டம் மட்டுமல்ல.

அது ஒரு பூகோள யதார்த்தம் கெடுபிடிப்போரின் வீழ்ச்சியை அடுத்து உலகம் மாறிவிட்டது. நான்கு விவகாரங்கள் உலகை மாற்றி விட்டன.

1- கம்யூனிசத்தின் வீழ்ச்சி

2 - தகவல் தொழிநுட்பத்தின் எழுச்சி

3- நிதி மூலதனத்தின் படர்ச்சி

4- ஒசாமா பின் லேடன் கொண்டு வந்த சவாலும் அதற்கெதிராக உலகின் சக்திமிக்க நாடுகள் அனைத்தும் ஓராணியில் திரண்டதும்.

இந்த நான்கும் சேர்ந்து , விடுதலைப்புலிகளை மட்டுமல்ல, அந்த இயக்கத்தின் பஜ்மேட்ஸ் என்று சொல்லக்கூடிய அநேகமாக எல்லா இயக்கங்களையுமே அழித்து விட்டது அல்லது முடக்கிவிட்டது அல்லது நீர்த்துப்போகச் செய்துவிட்டது.

கெடுபிடிப் போரின் முடிவைத் தொடர்ந்து பெருவிலே, ஒளிரும் பாதை என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் தலைவர் பிடிக்கப்பட்டார்.. அது ஒரு குட்டி இயக்கமாக இருந்தாலும் கூட, தீவிரமாக, சாகசமாகப் போராடிய இயக்கம். அதன் பின் கொலம்பியாவில் போராடிய இயக்கத்தை சமாதனத்தால்; கரைக்க முயன்றார்கள். அது முடியவில்லை. திரும்பவும் போராட்டம் தொடங்கியது. ஆனால், இம்முறை கொலம்பிய இராணுவம் மிகப் பலமாக இருந்தது. எனவே, அந்த போராட்ட இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவர் ஒரு எல்லையில் வைத்து கொல்லப்பட்டார். அவரது, லப்ரொப்பில் இருந்து பெற்றுக்கோன்ட தகவல்கள் மூலம், ஏனைய சில இயக்கங்களின், ஆய்தக்கடத்தல் வழிகளையும் கண்டு பிடித்தார்கள். அடுத்ததாக செச்ச்னியாவின் போராட்டத் தலைவர் டுடையோ. அவர், பதுங்கு குழி வாசலில் இருந்து பி.பி.சிக்கு சற்றலைற் தொலைபேசி மூலம், பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த போது, பதுங்கு குழி வாசலில் வைத்து ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது போலவே குர்திஸ் போராட்டததலைவரான ஒஜாலான், பிடிக்கப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார். இவற்றின் தொடர்ச்சியாக நந்திக்கடற்கரையில், தமிழ் இயக்கமும் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்;, கொலம்பிய இயக்கத்தின் தலைவர் சுற்றிவளைக்கப்பட்டு கொல்லப்பட்டார். முடிவில் ஒசாமா பின் லேடனும் கொல்லப்பட்டார்.

இது ஏன் நடந்தது? முன் சொன்ன நான்கு காரணங்களும் தான். அதாவது, கெடுபிடிப்போர் இருக்கும் போது, ஒருதரப்பு அரசாங்கத்தை ஆதரித்தால், மறுதரப்பு, விடுதலை இயக்கத்தை ஆதரிக்கும்.எனவே விடுதலை இயக்கத்திற்கு ஒளிய இடம் இருக்கும், வழங்கலிற்கு வழி இருக்கும். ஒன்றிற்கொண்டு எதிரான விசைகள் இருக்கும்போது, போராட்டங்கள் வளர முடிந்தது.,கெடுபிடிபோரில், இரு துருவங்களிற்குமிடையில் சுழித்துக்கொண்டு போராட்டங்கள் வளர முடிந்தது,

ஆனால் கெடுபிடிப்போர் வீழ்ழ்ச்சியுற்ற போது ஒரு துருவம் வந்து விட்டது.இதில் போர் புரிந்தாலும் அந்த ஒரு துருவத்தோடு தான், சமாதானம் செய்தாலும் அந்த ஒரு துருவத்தோடு தான் என்ற நிலை வந்து விட்டது. இது முதலாவது.

இரண்டாவது, நிதி மூலதனப் படர்ச்சி, அதாவது கோப்பரேற் உலகம், அது விற்பவன் வாங்குபவன் என இந்த பூமியை தட்டையாக்க முற்படுகிறது. அதற்கு இன மொழி முரன்பாடுகள் இருக்ககூடாது.,அது இந்த பூமி முழுவதையும் தனக்கு வரமளிக்கப்பட்ட சந்தையாகப் பார்க்கிறது.அது தனது சந்தைக்கு இடைஞ்சலாக இருந்த எல்லாவற்றையும் அகற்றுகிறது.

மூன்றாவது, தகவல் தொழில்நுட்பத்தின் எழுச்சி. தகவல் தொழிநுட்பம் போராடும் இனக்களிற்கு சேவகனுமாயிருக்கிறது, ஒற்றனுமாக இருக்கிறது.தகவல் தொழிநுட்பம் தான் மேற்சொன்ன அநேகமான விடுதலை இயக்கங்களும் தொற்கடிக்கப்படக் காரணம். தகவல் தொழில்நுட்பமும், ஜி.பி.எஸ். தொழில்நுட்பமும் உலகை நிர்வாணமாக்கிவிட்டன. தொழிநுட்பம் போராடும் இனக்களுக்கெதிராக மாறிவிட்டது.

;தகவல் தொழிநுட்பமும் அதிகாரத்திற்கு சேவ்கம் செவதாகத்தன் இருக்கிறது.ஒரு விடுதலை இயக்கம் வளர்வதாக இருந்தால் தொலைத்தொடர்பு அவசியம்.ஆனால் அதுவே, சேவகன், அதுவே ஒற்றன்.தொலைத்தொடட்ர்பு இல்லை என்றால் ஒரு விடுதலை இயக்கம், அடுத்த கட்டத்திற்கு வளர முடியாது.எனவே ஆயுதப்போராட்டங்களிற்கு எதிராக ஒருதொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இது மூன்றாவது.

நான்காவது பின் லேடன் கொண்டுவந்த சவால்.

அதற்கு முன்னிருந்த அநேகமாக எல்லா விடுதலை இய்க்காங்களும் தங்கள் தேசிய எல்லைகளுக்குள் நின்றே சண்டை செய்தன. ஆனால், பின் லேடன், சண்டையை பூகோள மயப்படுத்தி விட்டார். அதனால், எதிர்ப்பும் பூகோள மயப்பட்டது. சக்திமிக்க நாடுகளின் முறியடிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உலக அளவில் ஒன்று குவிக்கப்பட்டன.

புலனாய்வு நடவடிக்கைகள், முறியடிப்பு நடவடிக்கைகள் எல்லாமே ஒருங்கிணைக்கப்பட்டபோது, உருவாகிய பூகோள அளவிலான முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு முன் சிறிய தேசிய அளவிலான இயக்கங்கள் நின்றுபிடிக்க முடியவில்லை. இதில் தகவல் தொழிநுட்பம் பெரிய பங்களிப்பை செய்தது.இன்று வரைக்கும், கோலியாத்தின் கையில் இருக்கும் ஆயுதமாகத்தான், தகவ்ல் தொழிநுட்பம் இருக்கிறது. விக்கிலீக்ஸ் மற்றும் ஸ்னோடோனின் வருகைக்குப்பின் வெளிப்படுத்தல் அதாவது, revelation என்ற வார்த்தைக்கு வேறொரு விளக்கமும் கூறப்படுகிறது. வெளிப்படுத்தல் என்பதோடு அது பேரழிவையும் குறிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வார்த்தையின் கிரேக்க மூலத்தின்படி அதற்கு அப்படியொரு அர்த்தம் உண்டு. அதாவது, உண்மை வெளிப்படுத்தப்படும் போது, அது அதிகாரத்திற்கு அழிவாக மாறும். ஆனால், இப்போது நடந்திருக்கின்ற வெளிப்படுத்தல்கள் சிறிய அளவிலானவை. எனினும், தாவீதுகள் தகவலை ஆயுதமாக எடுக்கத்தொடங்கி விட்டார்கள். தாவீதுகள் தகவலை ஆயுதமாக எடுக்கும் போது மட்டூம் தான் கோலியாத்தை தோற்கடிக்க முடியும்.

ஆனால், அப்படி தகவலை ஒரு ஆயுதமாக் எடுக்காத ஒரு காலகட்டத்திற்குள், கெடுபிடிப்போரின் குழநதைகளாக இருந்த பெரும்பாலான ஆயுதப்போராட்ட இயக்கங்கள் அழிக்கப்பட்டு விட்டன. அல்லது முடக்கப்பட்டுவிட்டன. எனவே கோலியாத்திடம் இருக்கும் அந்த தொழிநுட்பத்தை தாவீதுகள் தங்களுடையாதாக்கிக் கொள்ளாத வரையிலும், இந்த பிரச்சினை தொடர்ந்தும் இருக்கும்.இதனால் தான், சில விமர்சகர்கள் சொல்கிறார்கள், ஆயுதப்போராட்டங்களின் காலம் முடிந்து விட்டது என்று.

இப்போது நடந்து கொண்டிருக்கும் பெரும்பாலான ஆயுதப்போராட்டங்கள், சக்தி மிக்க நாடுகளால் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது ஊக்குவிக்கப்பட்ட அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயுதப் போராட்டங்கள் தான்.

எனவே, தமிழர்கள் நினைப்பது போல, தமிழர்களது போராட்டம் மட்டும் நசுக்கப்படவில்லை. இது ஒரு பூகோளா யதார்த்தம். இந்தப் பூகோள யத்தார்த்தத்தை உள்வாங்கினால் மட்டும் தான் தமிழர்கள் அனைவரையும் கேளிராக்கலாம்.

இந்த இடத்தில் ஒன்றை அழுத்திக் கூறவேண்டும். கேளீர் என்ற பதம் அதன் இலக்கியச் சுவை கருதியே பயன்படுத்தப்படுகிறது. ராஜிய உறவுகளில் மெய்யான பொருளில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. பகைவர்களும் கிடையாது. நிரந்தரமான நலன்கள் மட்டுமே உண்டு. எனவே, நலன்கள் சார்ந்து அனைத்துலக சமூகத்தைக் கையாளும் பொழுது தமிழர்கள் தங்களை முதலில் சுய விசாரiணை செய்து கொள்ளவேண்டும்.

ஏனெனில், சராசரித் தமிழ் மனம் எனப்படுவது, எப்பொழுதும் பக்தி மனம்தான். தமிழ் மொழியின் உச்சக்கட்டம், பக்தி இலக்கியம் என்று சொல்வார்கள், சாராசரித் தமிழ் மனம் எதையும் வகிடு பிரித்தே பார்க்கும். ஆண்டவன்-சாத்தான் தேவன் - அசுரன் கதாநாயகன் - வில்லன் என்று எதையுமே கறுப்பு வெள்ளையாகத் தான் பார்க்கும். ஆனால், கறுப்பு வெள்ளையாக சிந்தித்தால் அது ராஜதந்திரம் கிடையாது. ராஜதந்திரம் எனப்படுவது அதன் கிரேக்க வேர் சொல்லின்படி மடிப்புக்களை உடையது என்று பொருள் படும். மடிப்புக்கள் என்றால் அங்கே பல அடுக்குகள் இருக்கும். பல பரிமாணங்கள் இருக்கும். கறுப்பு வெள்ளை மட்டும் இருக்காது. இரண்டும் கலந்த சாம்பலும் இருக்கும். நவீன இராஜதந்திரத்தை Engagement என்று அழைக்கிறார்கள். அதாவது பங்குபற்றல். எவ்வளவுக்கெவ்வளவு சாம்பல் பரப்பு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு என்கேஜ்மென்ரும் அதிகரிக்கும். எவ்வளவுக் கெவ்வளவு கறுப்பு வெள்ளையாகப் பார்க்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு என்கேஜ்மென்ரும் குறையும்.

தமிழர்கள் கறுப்பு வெள்ளையாகச் சிந்தித்தால் இந்தப்பூமியில் எங்குமே வாழ முடியாது. ஏனென்றால் அநேகமாக எல்லா நாடுகளும் சேர்ந்துதான் நந்திக்கடற்கரையில் ஆயுதப் போராட்டத்தைத் தோற்கடித்தன. இரண்டு ஆண்டுகளிற்கு முன் 2012 இல், ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அங்கிருந்த கியூபாவின் பிரதிநிதி, மேற்கத்தைய நாடுகளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார், 60 வீதமான ஆயுதங்களை வழங்கியது, நீங்கள். அந்த 60 வீதமான ஆயுதங்களை வைத்துக் தான் அவர்கள் இதனைச் செய்தார்கள். இப்பொழுது நீங்களே அதற்கெதிராக தீர்மானம் கொண்டுவருகிறீர்கள் என்று.. விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்த எந்தவொரு நாடும் அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆனபின்னரும் அதன் மீதான தடையை இன்று வரையிலும் நீக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். எனவே, கறுப்பு வெள்ளையாகச் சிந்தித்தால் தமிழர்கள் இந்த பூமியில் எங்குமே வாழ முடியாது.ஏனெனில் பெரும்பாலான நாடுகள் ஒரு கட்டத்த்தில், தமிழர்களுக்கு எதிராக் நின்றவை தான். ஆனால், 2009 அம் ஆண்டு 60 வீதமான ஆயுதங்களை வழங்கிய அதே நாடுகள், 2012 ம் ஆண்டு ஜெனிவாவில் தீர்மானத்தைக் கொண்டு வருகின்றன என்றால், அது ஒரு மாற்றம்.தமிழர்கள் அந்த மாற்றத்தைப் பற்றிப் பிடிக்க வேண்டியது தான்.

ஆனால் தமிழர்களுடைய கறுப்பு வெள்ளைச் சிந்தனை அனைத்துலக சமுகத்துடனான என்கேஜ்மென்ருக்குத் தடையானது.அதைத்தாண்டிவரும்போதுதான். தமிழ் ராஜதந்திரம், அனைத்துல சமூகத்தை வெற்றிகரமாகக் கையாள முடியும்.அவர்களது நோக்கம், சீனாவை அகற்றுவது அல்லது சீனவிற்கு இந்;த நாட்டிலிருக்கும் செல்வாக்கை குறைப்பது.இந்த அரசாங்கம், சீனாவைக்க் கைவிட்டால் இந்த உலகம், தமிழர்களை தூக்கி இந்து சமுத்திரத்தில் எறிந்து விடும்.இது தான் உண்மை.

அவரவர் தமது நலன்சார்ந்து தான் தமிழர்களோடு உறவைப் பேணுகிறார்கள். ஜெனிவாவில் நடப்பது, தமிழர்களின் உரிமைகளுகான போராட்டம் அல்ல.அது சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான கயிறுழுத்தல் போட்டி,ஆனால், அதில் தமிழர்களுக்கு நன்மை உண்டு,தமிழர்களின் நலன்களும் அங்கே சம்பந்தப்படுகின்றன. எனவே தமிழர்கள் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இங்கு தமது நலன் சர்ந்து தான், ஒவ்வொருவரும் தமிழர் பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள்.

ஆனால், நலன் சாராது தமிழர் பிரச்சினையை, தமிழர் பிரச்சினையாகவே பார்க்கும் இரண்டு தரப்புகள் உண்டு.ஒன்று தமிழ்நாடு, இரண்டாவது தமிழ் புலம்பெயர் சமுகம்.,புலம் பெயர் தமிழர்களும், தமிழ் நாடும் தான் உண்மையான இரத்த உறவுகள்.இவை இரண்டும் நலன் சாரா தூய உறவுகள். தமிழகத்தில் உள்ள ஒரு கட்சி, தமிழர் பிரச்சினையை எடுத்தால், அதில் ஒரு கட்சி வியூகம் இருக்கும், ஆனால், தமிழ் நாட்டில் ஒருவர் இங்கிருப்பவர்களிற்காக தீக்குளிக்கிறார் என்றால், அது தூய்மையானது, புனிதமானது,

ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் தமிழ் புலம்பெயர் சமூகத்திற்குமான உறவு தூயது, கலப்பற்றது,இந்த இரண்டு தரப்பையும்; வைத்துக்கொண்டு தான் தமிழர்கள் முழு உலகையும் , கையாள வேண்டி இருக்கிறது. தமிழ் நாடு நொதித்தால் டெல்லியும் தளம்பும். கடந்த ஆண்டு அது நிரூபிக்கப்பட்டு விட்;டது.டெல்லி நொதித்தால் முழு உலகமும் நொதிக்கும். ஏனெனில், ஈழத்தமிழர்களுக்கு அனைத்துலக சமூகம் என்பது இந்தியா தான். எனவே தமிழ் நாட்டை நொதிக்கச்செய்வதில் தான் தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலே தங்கி இருக்கிறது.அப்படிபார்த்தால் , தமிழ் லொபி என்பது பிரதானமாக தமிழ் நாட்டைக் கையாள்வதை நோக்கியே ஒருங்கு குவிக்கப்பட வேண்டும் ஆனால் அப்படி இல்லை.உண்மையில் தமிழ் லொபி தலை கீழாகத்தான் இருக்கிறது.தமிழ் நாட்டைக் கையாண்டு அதன் மூலம் டெல்லியைக் கையாண்டு அதனூடு அனைத்துலக சமுகத்ததைக் கையாள்வதாக இருக்க வேண்டும்,.மாறாக, மேற்கைக் கையாண்டு, அதனூடு டெல்லியைக் கையாள முயலும் ஒரு நிலமை தான் காணப்படுகிறது, அதாவது, தமிழ் லொபி தலை கீழாக இருக்கிறது.

குறிப்பாக தமிழ் நாட்டைக்கையாள்வதில் கூட தவறுகள் உண்டு, அங்கு காலத்துக்குக் காலம் ஏதோ ஒரு கட்சி ஈழத்தமிழர் பிரச்சினையை தத்தெடுக்கிறது. அது தமிழ் நாட்டின் உள்வீட்டு அரசியலுக்குள் ஈழத்தமிழ் அரசியலை சிக்குப்பட வைக்கிறது. இதற்குப் பதிலாக தமிழ் நாட்டின் கட்சி அரசியலுக்கு அப்பால் ஈழத்தமிழர் நோக்கு நிலையிலிருந்து தமிழ் நாட்டைக் கையாள்வதற்குரிய கொள்கைத் திட்ட வரைவு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டை வெற்றிகரமாக கையாண்டால்தான் ஈழத்தமிழ் லொபியானது அதன் இறுதி வெற்றியைப் பெற முடியும்.

அப்பொழுதுதான், தகவலை யுகத்தின் கோலியாத்துக்களுக்கு எதிராக. தாவீதுகள் எழ முடியும். ஏனெனில் , வரலாற்றில் தாவீதுகள் தான் இறுதி வெற்றியைப் பெறுகிறார்கள்,

(05.01.2013அன்று வவுனியாவில் ஆற்றப்பட்ட அமரர் குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரையின் சுருக்கப்பட்ட வடிவம்.)

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101587/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
இரு துருவங்களிற்குமிடையில் சுழித்துக்கொண்டு போராட்டங்கள் வளர முடிந்தது,
எல்லொரும் சுழியன்களாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறார்..... :D

நிலாந்தனின் அரசியல் ஆய்வு எப்போதும் நடைமுறை மெய்மை என்பதை (reality) தொட்டு செல்வதாக இருப்பதுடன் எவரையும் துதி பாடுவதாகவோ வக்காலத்து வாங்குவதாகவோ இருக்காத்தோடு மட்டுமல்ல எவர்மீதும் வசைமாரி பொழிவதாகவும் சகட்டு மேனிக்கு தூற்றுவதாகவும் இருக்காது என்பது சிறப்பம்சம் ஆகும். தன்னை ஒரு மேதாவியாக கற்பனை செய்து ஆய்வுகளை வைக்கும் ஜதீந்திரா போன்றவர்கள் போல் அல்லாது நடுநிலைமையாக நடைமுறை யதார்த்தத்தை மக்களுக்கு உணர்த்துவதாக தனது ஆய்வுகளை வைக்கும் திரு நிலாந்தன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அத்துடன் இதை இங்கு இணைத்த கிருபனுக்கும் எனது நன்றிகள்.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.