Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் ஒலிக்குமா அரசாங்க ஆதரவுடனான போதைப்பொருள் வியாபாரம்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சட்டங்களுக்கு மாறாக இலங்கை போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு?

 

சர்வதேச வர்த்தக சட்டங்களுக்கு மாறாக இலங்கை அரசாங்கம் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக அமெரிக்கா நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனி உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் என கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.


ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதற்கு கொழும்பை தளமாக பயன்படுத்த இலங்கை அரசாங்கம்  அனுமதித்துள்ளது என்றும் அரச உயர் அதிகாரிகள் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை இராஜதந்திரிகள் கூட இதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.


கொழும்புக்கு விஜயம் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராயும் அமெரிக்காவின் விசேட தூதுவர் இது குறித்து வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் கடும் ஆட்சேபணை வெளியிட்டார் என்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக தகவல்கள் மூலம் குளோபல் தமிழச் செய்திகளிற்கு தெரியவருகின்றது.


போதைப்பொருள் வியாபாரத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.


ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது என்றும் அதற்கான ஆதரங்கள் இல்லை என கூறியுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.


எவ்வாறியினும் இலங்கை அரசாங்கத்தின் போதைப் பொருள் வாத்தகம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளினால் ஜெனீவாவில் பிரஸ்தாபிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.


இதேவேளை அண்மையில் ஐக்கியதேசியக் கட்சி ஒரு விடயத்தை சுட்டிக் காட்டியிருந்தது. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை அதன் முன்னாள் தொடர்பாளர்கள் மூலம் இலங்கை அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல்களுக்கு பயன்படுத்துகிறது என தெரிவித்திருந்தது.


குறிப்பாக விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் ஆயுதங்களை இலங்கைக்கு கடத்துவதற்கான பலமான சர்வதேச வலைப்பின்னலை கொண்டிருந்தனர். அந்த வலைப்பின்னலை நேரடியாகவோ ஏனையவர்கள் ஊடாக இயக்கிய பலர் இப்போ இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திப பல்வேறு விதமான கடத்தல் வியாபார நடவடிக்கைகளுக்கு ஆளும் தரப்பின் முக்கிய புள்ளிகளுக்கு உதவுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையின் பிரபல அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளுராட்சி அமைப்பிக்களின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்டவர்கள் இந்த போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் இருந்து வருவது பல தடவைகள் நிரூபிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


குறிப்பாக தேர்தலிகாலங்களில் மக்களுக்கு கொடுக்கப்படும் இலவசங்கள், உதவிகள், தேர்தல் செலவுகள என பல மில்லியன் ரூபாய்கள் கொட்டப்படுவது, இந்த போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்திற்கு ஊடாக பெறப்படும் வருமானமே என அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்தும் அவை அனுமதிக்கப்படுகிறது.


இந்த கடத்தில்களின் இன்னொரு வடிவமே அரசாங்க அதிகாரிகள், படையினர், மற்றும் அமைச்சர்களின் ஆதரவுடன் உதவியுடன் படகுகளில் ஆட்களை அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு அனுப்புவது எனவும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இப்போ அறிந்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101663/language/ta-IN/article.aspx

"புலிகளின் வலை அமைப்பு" என்று கூறி ஐ.தே.க. தமிழரை போட்டுக்கொடுக்கும். தேவை இல்லாத கடன் அட்டை சேட்டைகளை நிறுத்திப்போட்டு தங்களின் தொழிலை ஒழுங்காக பார்க்க வேண்டும். அப்போது அரசாங்கம் இலகுவாத தனது களவுகளுக்கு மாட்டும். இல்லை என்றால் ஆப்பிடுபவர்களை எல்லாம் மேற்கு நாடுகள் திருப்பி அனுப்பி உண்மையான அகதிகளுக்கும் இடைஞ்சல் கொடுக்கும். 

இலங்கையரசு ஒரு சர்வதேச குற்றங்களை செய்யும் ,சிறுபாண்மை மக்களை இன அழிப்பு செய்யும் பயங்கரவாத நாடக பிரகடனப்படுத்தி ஐக்கிய நாடுகள் இலங்கையை கைப்பற்றி சிறுபாண்மை இனத்திற்கு உரிய உரிமைகளை வழங்கி.. பெரும்பாண்மை இனத்தினை குற்றமற்ற அரசியல் வாதிகளிடம் ஆள ஒப்படைக்கவேண்டும். அல்லது இலங்கை விரைவில் உலகின் மோசமான கட்டுப்படுத்த முடியாத குற்றம் செய்யும் நாடாக மாறும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.