Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 36 எழும்புக்கூடுகள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC05129.JPG

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், திருக்கேதிஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி ஏழாவது தடவையாக மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை தோண்டப்பட்டபோது மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 36 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன என அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்திய ரெட்ண தெரிவித்தார்.

கடந்த டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் கடந்த  7ஆம் திகதி வரை ஆறு தடவைகள் மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த மனித புதை குழி தோண்டப்பட்டன.

அவற்றில் சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டன. இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் 7ஆவது தடவையாக மனித புதை குழி தோண்டப்பட்டது.

இதன்போது புதிதாக 4 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்ட எழும்புக்கூடுகளில் ஒரு மண்டையோட்டின் வாய் முழுமையாக திறந்திருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது. குறித்த மண்டையோட்டின் வாய்ப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள அடையாளங்களும் காணப்பட்டன. மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை புதைகுழி தோண்டும் பணி இடம்பெறவுள்ளது 

இதேவேளை இன்று மதியம் குறித்த மனித புதைகுழி காணப்படுகின்ற இடத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்த வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி என்.குணசீலன் அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC05163.JPG

 

இந்திய கொங்கிரஸ் இராணுவமும், ஒட்டுக்குழுக்களும் ஒரு ஊர் முகாமில் இருந்து வெளியேறிய பின் பல எலும்புக்கூடுகள் மலசல கூட குழிகளுக்காள் எடுத்தார்கள்.

எனது பக்கத்துவீட்டு அன்டியுடன் சென்று அவரின் 17 வயது செகிட்டு மகனின் எலும்புகூட்டை தேடினோம். மனைவிகளும், தாய்மாரும், குழந்தைகளும் ஒப்பாரி வைத்துக்கொண்டே எலும்புகளை துளாவியது ஞாபகம் வருது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

0%60.jpg

மன்னார், திருக்கேதிஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி ஏழாவது தடவையாக மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை தோண்டப்பட்டது. (படங்கள்: ரொமேஷ் மதுசங்க, றொசேரியன் லெம்பட்)

02(754).jpg

03(557).jpg

04(390).jpg

05(285).jpg

06(205).jpg

07(143).jpg

08(114).jpg

09(99).jpg

10(1474).jpg

11(928).jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.