Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபைக்கு நேரடியாக நிதி வழங்க வேண்டாம் - சட்டத்தில் இடம் இல்லை – மத்திய வங்கியே தீர்மானிக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

 

வடமாகாண சபைக்கு நேரடியாக நிதி வழங்க வேண்டாம் என இலங்கை அரசாங்கம் உதவி வழங்கும் நிறுவனங்களுக்கு அறிவித்திருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

அரசிலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு நிதி வழங்குவதானால் இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் மாகாணங்களுக்கான நிதியை மத்திய வங்கிதான் தீர்மானிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருக்கக்கூடிய சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசணைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்றும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை சர்வதேச நிதி நிறுவனங்களிடம் நேரடியாக உதவி கோர முடியாது என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஜனாதிபதி சந்தித்த போது கூறியதாகவும் அரசாங்க தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார திட்டமிடல்கள் மற்றும் அபிவிருத்தி முகாமைத்துவ பொறிமுறைகளில் உதவி வழங்கும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு திருப்தியில்லை எனவும் இதனால்  இலங்கை அரசாங்கத்துக்கான நிதி வழங்கலில் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் 2014ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிரப்ப அரசாங்கம் பாரிய நிதிப்பிரச்சினை ஒன்றை எதிர்கொள்ளலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101783/language/ta-IN/article.aspx

 

 

வடமாகாணம் தான் சிறி லங்காவிற்கு கூட வரியும், வெளிநாட்டு செலவாணியும் ஈட்டி தருவது.

அடிமை தேசம் என்பதால் பொத்திக்கொண்டு அடுத்த இராணுவ முதலாளிக்கு களியாட்ட விழா எடுக்க வேண்டியது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.