Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிவிவகாரச் செயலர் அமுனுகமவின் பதவி பறிபோனதற்கு காரணமான ஸ்டீபன் ராப்!

Featured Replies

இலங்கை வெளிவிவகாரச் செயலராக இருந்த கருணாதிலக அமுனுகம பதவி இழந்ததற்கு அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பும் ஒரு காரணம் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 

இலங்கை  வெளிவிவகாரச் செயலராக இருந்த கருணாதிலக அமுனுகம கடந்த புதன்கிழமை 60 வயதை எட்டியதை அடுத்து, சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.

அவருக்குப் பதிலாக வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலராக இருந்த சேனுகா செனிவிரத்ன, புதிய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டார்.

இவரை இந்தப் பதவிக்கு கொண்டு வருவதில் வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவே செல்வாக்குச் செலுத்தியிருந்தார்.

 

முன்னதாக, இவர் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாகவே கூறப்பட்டது. அவரும் அதனை விரும்பியிருந்தார்.

அதேவேளை, கருணாதிலக அமுனுகம 60 வயதுக்குப் பின்னர் சேவை நீடிப்பு வழங்க கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், இவரது பதவிக்காலத்தில் பல பின்னடைவுகளை ஏற்பட்டது தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து, கருணாதிலக அமுனுகமவின் சேவை நீடிப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

 

ஸ்டீபன் ராப்பின் பயணத்தை அவர் கையாண்ட விதம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சக்திவாய்ந்த தலைவர்களுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், கருணாதிலக அமுனுகமவுக்கு மீண்டும் ஒரு இராஜதந்திரப் பதவி வழங்கப்படுவதற்கான சாத்தியங்களை நிராகரிப்பதற்கில்லை.

ஓய்வுபெற்றதை அடுத்து, இவர் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

http://tamil24news.com/news/archives/130274

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.