Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் 12 ஆயிரம் படையினர் தான் நிலை கொண்டுள்ளனராம் – விக்னேஸ்வரனுக்கு மகிந்த அளித்த பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-thellipalai.jpg

போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் நிலை கொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை 12 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

தெல்லிப்பளையில் நேற்று புற்றுநோய் மருத்துவமனை திறப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் படைகளைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 

இதற்குப் பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், 

“போர்க்காலத்தில் 60 ஆயிரம் தொடக்கம் 75 ஆயிரம் வரையான படையினர் வடக்கில் நிலை கொண்டிருந்தனர். 

தற்போது இங்கு 12 ஆயிரம் படையினர் மட்டுமே நிலை கொண்டுள்ளனர். 

போரின் போது ஏராளமாக இருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு தற்போது 10இற்கு குறைவான படைமுகாம்களே இருக்கின்றன. 

எல்லா சமூகங்களையும் அரசாங்கம் சம்மாகவே நடத்தும். 

சிறிலங்காவில் ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்க முடியாது. அத்தகைய முயற்சிகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. 

எமது இரத்தமும் ஒரே மாதிரியானது தான். எமது இரத்தம் பச்சையோ, மஞ்சளோ, கறுப்போ கிடையாது. 

போர் முடிவுக்கு வந்த பின்னர் குறுகிய காலத்தில் வடக்கில் பல பிரச்சினைகளைத் தீர்த்துள்ளது. 

மூன்று இலட்சம் மக்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். போரால் அழிவுற்ற இடங்கள் மீளக்கட்டியெழுப்பப்பட்டுள்ளன. 

உள்ளூராட்சி , மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

hospital-open1.jpg

hospital-open2.jpg

hospital-open3.jpg

hospital-open4.jpg

hospital-open5.jpg

hospital-open6.jpg

முன்னதாக தெல்லிப்பளையில், பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நிதி மூலம் 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனையை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திறந்து வைத்தார். 

பின்னர், புற்றுநோய் மருத்துவமனையின் இரண்டாவது கட்ட கட்டுமானப் பணிக்கான அடிக்கல்லை வடக்கு மாகாண முதல்வரும், சிறிலங்கா சுகாதார அமைச்சரும் இணைந்து நாட்டியிருந்தனர். 

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடக்கு மாகாண கடற்றொழில் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், தவநாதன் மற்றும் சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உள்ளிட்ட ஆளும்கட்சி, எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140120109808

என்றாலும் வெண்தாடி வேந்தர் மற்றவருடைய படத்துக்குள் தனது முகத்தை புகுத்துவதில் வல்லவர்.

Sri Lankan photo bomb Minister!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.