Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் விவகாரம்: தென்னாபிரிக்காவின் இன்னொரு பக்கம்-பரா பிரபா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விவரங்கள்  உருவாக்கப்பட்டது: 24 ஜனவரி 2014

southafricaeelam.jpgஒரு பேப்பர் - இதழ் 207 இல் ‘சர்வதேச விசாரணையைத் தடுக்க உதவும் தென்னாபிரிக்காவும், சில தமிழரமைப்புக்களும்’ என்ற தலைப்பில் கோபி எழுதிய பத்தியின் தொடர்ச்சியாகவே இப்பத்தி அமைகிறது.

சில தமிழர் அமைப்புக்களும், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களும் தென்னாபிரிக்காவின் ‘உண்மையைக் கண்டறிதலும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு’ (TRC – Truth and Reconciliation Commission) தொடர்பாக தமிழ் மக்களை தவறாக வழிநடத்த முனைவதாகத் தெரிவதால், இது பற்றிய மேலதிக தகவல்களை எழுதுதல் இங்கு அவசியமாகின்றது. 

ஆர்ஜன்ரீனா, சிலி, பெரு, சியராலியோன் மற்றும் பஹ்ரெயின் போன்ற நாடுகளில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட இவ்வாறான ஆணைக்குழுக்களின் மாதிரி தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்பதற்கு சிலி தவிர ஏனைய நாடுகளில் இந்த ஆணைக்குழு உண்மைத்தன்மையை இழந்தமையே காரணமாகும். தென்னாபிரிக்காவின் ஆணைக்குழு பற்றி சர்வதேசமட்டத்தில் பெரிதாகப் பேசிக்கொண்டாலும், அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்திருந்தன. இவர்களில் தமிழர் பிரச்சனைக்காக அவ்வப்பொழுது குரல் கொடுக்கும் தென்னாபிரிக்கப் பேராயர் டெஸ்மனட் ருற்ருவும் (Tutu) அடங்குகின்றார். 

சிறுபான்மை வெள்ளையின இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் கறுப்பினத்தவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னரே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இதில் விடுதலைப் போராளிகளான ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் (ANC) புரிந்த மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தி தண்டனை பெற்றுத் தருவோம் என தேசியக் கட்சி அச்சுறுத்தியதால் தேசிய கட்சி புரிந்த போர்க்குற்றங்களும் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த ஆணைக்குழு. தமிழ் மக்களைப் பொறுத்தளவில் ஆட்சி கையளிக்கப்படவுமில்லை, தீர்வு எட்டப்படவுமில்லை, தவிர இன அழிப்பை மேற்கொண்டவர்கள், மேற்கொண்டு வருபவர்களை தமிழ் மக்கள் மன்னிக்க தயாராகவும் இல்லை. இது ஒரு காரணமே போதும் இந்த ஆணைக்குழுவைப் புறக்கணிப்பதற்கு. சரி அப்படியென்றால் சிறீலங்கா அரசாங்கம் ஏன் இதில் அக்கறை காட்டுகின்றது. தமிழ் தலைவர்கள் சிலர் ஏன் இது பற்றிப் பேசுகிறார்கள். 

பொதுநலவாய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெற்றதும், அங்கு தென்னாபிரிக்க அரச அதிபர் ஜேக்கப் சூமா சென்றதன் பின்னணியில் தென்னாரிக்க ஆணைக்குழு பற்றிய பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்தன. இதன் முன்னேற்றமாக சிறீலங்கா அரச தரப்பில் ஒரு குழு இந்த மாதம் தென்னாபிரிக்கா சென்று குறித்த ஆணைக்குழுவை இலங்கையில் உருவாக்குவது பற்றி ஆராய இருக்கின்றது. 

அண்மைக்காலத்தில் சிறிலங்கா உருவாக்கிய ஆணைக்குழுக்களுக்கு ஒரு சோகமான வரலாறு உண்டு. 1995ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசாங்கத்தினால் கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது, 2001இல் இனப்பிரச்சினை பற்றி ஆராய மற்றொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்திய முன்னாள் தலைமை நீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழு சிறீலங்கா அரசாங்கத்தைக் கண்டித்து, தமது விசாரணைகளை இடையில் விட்டு நாட்டைவிட்டுப் புறப்பட்டது. இதற்கு முன்னரும் இவ்வாறு பல ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு செயலிழந்தமையை தமிழ் மக்கள் நன்கறிவர்;. 2010இல் ‘கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை’ மகிந்த தலைமையிலான அரசாங்கம் நியமித்தது. தமது குற்றங்களை தாமே விசாரணை செய்யப்போவதாகக் கூறிய மகிந்த அரசாங்கத்தின் கருத்தை மேற்குலகும் ஏற்றுக்கொண்டு ஒரு வருட அவகாசமும் கொடுத்தது. அந்த அவகாசம் முடிவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. 

இந்தப் பின்புலத்தில் சிறீலங்கா அரசாங்கம் மற்றொரு நாடகத்திற்குத் தயாராகிவிட்டது. கடந்த கூட்டத்தொடரின்போது வேண்டுமென்றே தமது ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடாது இழுத்தடித்த மகிந்த அரசாங்கம் மேடையேற்றும் மற்றொரு நாடகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்போ, புலம்பெயர் தமிழர் அமைப்புக்களோ துணைபோக முடியாது. தவிர தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின்’ பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தென்னாபிரிக்க முறைமையை தாம் நோக்குவதாகவும், ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதியாளர் சி.ஜி.வீரமந்திரி, அல்லது உடலகம தலைமையில் தமது ஆணைக்குழு நியமிக்கப்படும் எனவும், ‘கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவில் அங்கம் வகித்த கலாநிதி றொஹான் பெரேரா, எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹகார போன்றவர்களும் இதில் உள்ளடங்குவதாக ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க கூறியிருக்கின்றார்.  

மார்ச் மாதம் நடைபெறவுள்ள 25வது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ளதாக கருதப்படும்; சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணையை கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் முன்னின்று வரவேற்கும், அல்லது முன்மொழியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் இரண்டு தடவைகள் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானங்கள் தோற்றுப்போனதற்கு, இந்திய ஆதரவு நாடுகளும், அமெரிக்க எதிர்ப்பு நாடுகளும் காரணமாகின. பொதுநலவாய மாநாட்டை இந்தியப் பிரதமர் புறக்கணித்திருந்தாலும், ஈழத்தமிழருக்கான தீர்வு, மற்றும் சிறீலங்கா அரசாங்கம் பற்றிய இந்தியாவின் கொள்கை என்பன புரியாத புதிராக இருந்து வருகின்றது. இவ்வாறான பிராந்திய பலப்போட்டியின் பின்புலத்தில் தென்னாபிரிக்க அரசாங்கம் களமிறக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், மனித உரிமைகள் பேரவையில் தமக்கான எதிர்ப்பைக் குறைக்கும் என்றும் ஒரு கல்லில் குறி வைக்கின்றது சிறீலங்கா அரசாங்கம். 

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தென்னாபிரிக்காவையும், இந்தியாவையும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா நினைப்பதை தென்னாபிரிக்கா முடித்து வைக்கும் என்பதனை எமது அனுபவத்தினூடு அறிந்துள்ளோம். 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாபிரிக்க பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதன்போது அழைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களில் நானும் இடம்பெற்றிருந்தேன். இக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் பல நாடுகளில் இருந்து அங்கு பிரதிநிதிகள் வந்திருந்தனர். தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் தென்னாபிரிக்க அரசாங்கத்துடன் பல கட்ட சந்திப்புக்கள் இடம்பெற்றன. இவ்வாறு தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் நானும் கலந்துகொண்டிருந்தேன். இதன்போது வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதால், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து அவசரமான கோரிக்கைகள் மக்கள் இழப்பைச் சுட்டிக்காட்டி முன்வைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் கோபமடைந்த வெளிவிவகார அமைச்சர் கையை நீட்டி ‘நீங்கள் பேசிக்கொண்டிருப்பது தென்னாபிரிக்க அரசாங்கத்துடன், ஏ.என்.சியுடன் அல்ல’ எனக் கூறினார். தம்மைப்போன்று விடுதலைப் போரில் ஈடுபட்டவர்கள் ஏ.என்.சி என்ற எண்ணத்தில் பேசிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் ஆடிப்போனார்கள். இந்தத் தகவல் உடனடியாக வன்னிக்குப் பரிமாறப்பட்டது. தமக்காக ஐ.நாவில் தென்னாபிரிக்கா குரல்கொடுக்கும் என எண்ணியிருந்த விடுதலைப் புலிகளின் எதிர்பார்ப்பு அன்றுடன் நொருங்கிப்போனது. 

தேர்தலில் வெற்றிபெற்ற ஏ.என்.சி மீண்டும் ஜேக்கப் சூமா தலைமையில் ஆட்சியமைக்க இருக்கின்றது என்ற உறுதியான செய்தியுடன் தேர்தல் வெற்றிவிழா இடம்பெற்றது. ஜேக்கப் சூமாவும் கலந்துகொண்ட இந்த விழாவிற்கு  நாமும் அழைக்கப்பட்டிருந்தோம். ஜேக்கப் சூமாவைச் சந்திப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது. இந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை வெளியே தனியாக அழைத்துச் சென்ற ஏ.என்.சியின் பிரதான பதவியில் இருக்கும் ஒருவர், நீங்கள் எமது அரசாங்கத்தை அணுக முன்னர் இந்தியாவின் மனதை வெல்ல முயற்சி செய்யுங்கள் எனக்கூறினார். இந்தியாவை மீறி தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே யதார்த்தம் என அந்த முன்னாள் போராளி வெம்பினார். 

இதே காலப்பகுதியில் மற்றொரு சம்பவமும் இடம்பெற்றது. நானும் அவுஸ்திரேலிய ஊடகர் ஒருவரும் மறைந்த முன்னாள் துணை அமைச்சர் ராதாகிருஸ்ணா படையாச்சி (Radhakrishna Padayachie), மற்றும் நெல்சன் மண்டேலிவிற்கு நெருக்கமாக இருந்த முன்னாள் போராளி சீசா இன்ஜிகிலானா (Sisa Njikelana) போன்றவர்களைச் சந்தித்து செவ்வி கண்டிருந்தோம். தமிழ் மக்களின் விடுதலைக்கும், தனியாட்சிக்கும் ஆதரவாக ‘தமிழ்நெட்’ இணையத்தில் வெளியிடப்பட்ட இச்செவ்வியால் கலவரம் அடைந்த தென்னாபிரிக்க அரசாங்கம், வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது, அதன் பிரதிகளை மேசையில் போட்டு, இவ்வாறான செவ்வியில் தமது நட்பு நாடுகள் மத்தியில் பிரச்சினையை உருவாக்குவதாகவும், செவ்வியை வெளியிடுவது விடுதலைக்கான ஆதரவைத் தடுக்கும் என்ற கோணத்தில் பேசப்பட்டது. இதன்போது தற்பொழுது உலகத் தமிழர் பேரவையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் தென்னாபிரிக்காவில் இருந்த எம்மைத் தொடர்புகொண்டு ஏன் இந்தச் செவ்வியை வெளியிட்டீர்கள், தென்னாபிரிக்க அரசாங்கத்தின் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரை சொல்ல முயன்றார். நாங்கள் எதையோ சொல்லாததை எழுதி வெளியிட்ட பாணியில் பேச்சு நீண்டது. எங்களிடம் ஒலிப்பதிவுகள் இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு உச்சக் கட்டத்தில் இருந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த, தமிழ் மக்களின் அழிவைத் தடுக்கத் தவறிய தென்னாபிரிக்க அரசாங்கம் இப்பொழுது ‘மறக்கவும், மன்னிக்கவும்’ உதவ முன்வந்துள்ளதன் உள்ளார்ந்த அர்த்தம் புரியவில்லை. இந்த இடத்தில் சிறீலங்கா அரசாங்கம் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஏ.என்.சி வெளியிட்ட அறிக்கையை, தென்னாபிரிக்க அரசாங்கம் வெளியிட்டதாக மகிழ்ந்த தமிழ் தலைவர்களும், தமிழ் ஊடகங்களும் விடுதலைப் போரை நடத்திய ஏ.என்.சி வேறு, தற்பொழுது பொருண்மிய, பிராந்திய நலனுடன் ஊழல் நிறைந்த ஆட்சி நடத்தும் தென்னாபிரிக்க அரசாங்கம் வேறு என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். போர் இடம்பெற்ற வேளையிலும், போரின் பின்னரும், போர்க்குற்றம் இழைக்கப்படவில்லை எனவும், மக்கள் உயிரிழப்பு எதுவும் இடம்பெறவில்லை என சிறீலங்கா அரசாங்கம் கூறி வருகின்றது. இவ்வாறான சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து தென்னாபிரிக்க அரசாங்கம் மேடையேற்றும் கால இழுத்தடிப்பு நாடகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்போ, உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்களோ துணைபோக முடியாது. தமிழினம் மீதான இனவழிப்பை நிறுவ, நிறுத்த - சிறீலங்கா அரசாங்கம், மற்றும் அதன் படைகள் மீதான அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை அவசியம் 

நன்றி - ஒரு பேப்பர் 

நன்றி - ஈழதேசம்

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பேப்பர் - இதழ் 207 இல் ‘சர்வதேச விசாரணையைத் தடுக்க உதவும் தென்னாபிரிக்காவும், சில தமிழரமைப்புக்களும்’ என்ற தலைப்பில் கோபி எழுதிய பத்தியின் தொடர்ச்சியாகவே இப்பத்தி அமைகிறது.

நன்றி இனைப்பிற்க்கு நொச்சி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகை நம்புவதைவிடத் தமிழர்கள் தம்மை நம்பவேண்டும். ஒற்றுமைப்பட வேண்டும். இடதுசாரிநாடுகள் போராடி வென்ற இனங்கள் அல்லது நாடுகளோடு நாம் ஒரு கட்டத்திற்குமேல் எமது விடயங்களைக் கொண்டுபோக முடியாது.இடதுசாரிநாடான கியூபா உட்பட சீனாவரை சிங்களத்தோடு நிற்கிறார்கள். இது ஒரு பொருண்மியத் தளத்தில் தமது நலனை மையப்படுத்தி நகரும் உலகென்பது தமிழர் அறிந்ததே. எனவே நாமே எமக்காக எல்லா வழிகளிலும் போராட வேண்டுமே தவிர யாரையும் நம்புவதில் பலனில்லை. எம்மை நம்புவோம். அறிவுசார்ந்த அரசியல் இராசதந்திர நகர்வுகளே இன்றைய தேவை. அதற்காக நாம் ஒன்றிணைந்து செயலாற்றலும் மொழியாற்றலும் கொண்டோரையும் எமது நிலையை ஏற்றுச் செயற்படும் சிங்களப்புத்ஜீவிகள் மற்றும் மேற்குநாட்டவர் போன்றோரையும் ஒருங்கிணைத்து நகரவேண்டியதே பொருத்தமாகும்.  

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மறைந்த நெல்சன்மண்டேலாவின் நினைவாக சபா நாவலன் அவர்கள் மண்டேலா துக்கிலிடப்பட்டார் எனும் தலைப்பில் ஒரு கட்டுரை யாழில் இணைக்கப்பட்டிருந்தது. தென்னாபிரிக்காவின் தற்போதைய நிலையை ஓரளவு புரிந்துகொள்வதாக இருந்தது. எமது விடுதலைக்கான போராட்டத்தை நாம் மட்டுமே முன்னின்று செய்திடல்வேண்டும், யாராவது எமக்கான ஆதரவைத் தருகிறார்களெனில் அன்புடன் அதேவேளை மிகவும் நிதானத்துடன் ஏற்றுக்கொள்ளலாம், அது எமது விடுதலையை விரைவுபடுத்துவதாக இருந்தால் மட்டுமே, சிக்கலுக்கு உள்ளாக்குவதாகவிருந்தால் எவ்வித தயக்கமும் இன்றி வெட்டித்தூர வீசிடல்வேண்டும். அது எந்தக்கொம்பனாக இருந்தாலும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.