Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே  சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீன் பிடித்தல் தொடர்பாக சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இந்திய - இலங்கை மீனவப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

 
இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை மீனவளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் துறை தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி தலைமையிலான குழு நேற்று சென்னை வந்தது.
 
தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
இலங்கை அரசின் சார்பிலும், மீனவப் பிரதிநிதிகள் சார்பிலும் மொத்தம் 15 பேர் கலந்து கொண்டனர்.
 
தமிழகத்தைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 17க்கும் மேற்பட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
 
மத்திய அரசு சார்பாக வெளியுறவு துறை இணைச் செயலர் சுசித்ரா துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
இந்த பேச்சுவார்த்தையில், பாக் ஜல சந்தி பகுதியில் பாரபட்சமின்றி இருதரப்பும் மீன்பிடிப்பதற்கான உரிமை, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் கொடுமையான தாக்குதல்களையும், சிறைப்பிடிப்பதையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகள் தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டன.
 
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய - இலங்கை மீனவப்பிரதிநிதிகள், "பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடந்தது. பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  மீன்பிடிப்பது தொடர்பாக இருநாட்டு மீனவர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களும்  இருநாட்டு அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே உடன்பாடு செய்ல்படுத்தப்படும்" என்று   தெரிவித்தனர்.
 

இணைப்பு02 - சென்னையில் ஆரம்பமாகியுள்ளது மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை :

04:22am
 
இலங்கை  மற்றும் தமிழக மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று முற்பகல் ஆரம்பமாகியுள்ளது.

மீன்பிடி உரிமை மற்றும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை, இந்திய கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்  வகையில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது

தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் கே ஏ ஜெயபாலுடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் சுசித்ரா துரை, இலங்கை கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியராச்சி ஆகியோர்  இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியா சார்பாக 24 மீனவர்களும், இலங்கை சார்பாக 18 மீனவர்களும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது

சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் பிரதி உயர்ஸ்தானிர் சபரூல்லா கானும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.

இதனிடையே, இந்தப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு தமிழக அதிகாரிகள் ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக ஆழ்கடலில் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை கைது செய்கின்றமை, தடுத்துவைக்கின்றமை மற்றும் அவர்களது படகுகள் மற்றும் உடமைகளை கைப்பற்றுகின்றமை போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கச்சதீவு தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை இந்தப் பேச்சுவார்த்தையின்போதும் கடைப்பிடிப்பதாக தமிழக அதிகாரிகள், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

கச்சதீவை அண்மித்த பகுதியில் மீன்படிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு சார்பில் அண்மையில் விளக்கமளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
 

தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று

01:39am


இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடைபெறவுள்ளது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று முற்பகல்  10 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.

இந்திய மத்திய அரசுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மற்றும்  இலங்கை இந்திய இராஜதந்திர கடற்றொழில் குழுவில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சென்னையில் இன்றைய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அரச தரப்பில் இருந்து கடற்றொழில் திணைக்களம் மற்றும் சட்டமாஅதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் உட்பட ஐவர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம் மற்றும் தென் பகுதி மீனவர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  10 பேரும் இலங்கை குழுவில் அங்கம் வகிக்கின்றனர்

இதேவேளை, தமிழகம் சார்பில் நாகப்பட்டினம். தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், புதுச்சேரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 12  மீனவர் சங்கப் பிரதிநிதிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கடற்றொழில் அமைச்சர் கே.ஏஜெயபால் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவுள்ளது.

இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை இந்திய மத்திய அரசின் வெளியுறவுத்துறை இணை செயலாளர் சுசித்ரா துரை, துணை செயலாளர் மயங்க் ஜோஷி, இலங்கைக்கான இந்திய தூதரக உயர் அதிகாரி ஷிவ் தர்ஷன் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இந்தப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு தமிழக அதிகாரிகள் ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக ஆழ்கடலில் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை கைது செய்கின்றமை, தடுதுவைக்கின்றமை மற்றும் அவர்களது படகுகள் மற்றும் உடமைகளை கைப்பற்றுகின்றமை போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கச்சதீவு தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை இந்தப் பேச்சுவார்த்தையின்போதும் கடைப்பிடிப்பதாக தமிழக அதிகாரிகள், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

கச்சதீவை அண்மித்த பகுதியில் மீன்படிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு சார்பில் அண்மையில் விளக்கமளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, இன்றைய பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என ஏற்கனவே இணக்கம் காணப்பட்டிருந்தது.

இதற்கமைய இலங்கை சிறைகளில் இருந்த 295 தமிழக மீனவர்களும், தமிழக சிறைகளில் இருந்த 138 இலங்கை மீனவர்களும் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102265/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.