Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா: கண்ணிவெடிகளை முற்றாக அகற்ற இன்னமும் நீண்ட நாட்களாகலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mines-SL.jpg

போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளை முற்றாக அகற்றுவதற்கு இன்னமும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும் என சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

"நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு மிகக் கடினமான பிரதேசங்கள் தற்போது எஞ்சியுள்ளன. இவற்றை அகற்றுவதற்கு சிறப்புத் தேர்ச்சியும் காலமும் தேவைப்படுகின்றன. இவை ஆபத்து மிக்கதாகக் காணப்படுவதால் இந்த நிலக்கண்ணிகளை அகற்றுவதற்கு மிகக் குறைந்தளவு இயந்திரங்களைப் பயன்படுத்தி அதிகளவான மனிதவலுக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்" என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 

"மக்களை மீள்குடியேற்றுவதற்கு அனுசரணை வழங்குவதுடன், வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வெட்டுதல் போன்றன எமது இரு முதன்மையான பணிகளாகும். நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவது தற்போது அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன்பிறகு மக்கள் முழுமையான இயல்புவாழ்வை அனுபவிக்க முடியும்" என சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு சிறிலங்கா இராணுவத்தினர் போர் வெற்றியைப் பிரகடனப்படுத்தியதிலிருந்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இயந்திரங்களும் குறிப்பாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நாய்களும், கண்ணிவெடியகற்றும் குழுக்களும் பயன்படுத்தப்படுகின்றன. 

"மே 2009ல் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த போது சிறிலங்காவின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டடிருந்தன. இத்துடன் இங்கே வெடிக்காத எறிகணைகள் மற்றும் குண்டுகள் போன்றன காணப்பட்டன. இதனால் இந்த இடத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர்" என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் Mines Advisory Group என்கின்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 

2010ல் மேற்கொள்ளப்பட்ட தொழினுட்ப சாரா ஆய்வுகளின் அடிப்படையில், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை மற்றும் அனுராதபுரம் போன்ற 10 மாவட்டங்களை உள்ளடக்கிய 6269 சதுரகிலோ மீற்றர் பரப்புளவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடியகற்றும் பணி மூலம் பல நூறாயிரக்கணக்கான கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத எறிகணைகள் போன்றன அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. 

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அமைப்புக்களின் உதவியுடன் சிறிலங்கா இராணுவத்தினரால் நிலக்கண்ணிவெடிகள் பெருமளவில் அகற்றப்பட்டன. மக்கள் மீள்குடியேறக் கூடிய ஆபத்தில்லாத பிரதேசங்களில் 2012ல் முற்றாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன. ஆனால் மக்கள் பயிர்செய்கின்ற சில பிரதேசங்களில் தற்போதும் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படாதுள்ளன. 

"இந்தப் பிரதேசங்களின் தரைத்தோற்றம், அதாவது இந்தப் பிரதேசங்களில் புதர்கள், காடுகள் போன்றன காணப்படுவதால் இங்கு புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது மிகக் கடினமான பணியாகக் காணப்படுகிறது. இவை மனிதவலுக்களைப் பயன்படுத்தி மட்டுமே அகற்றப்பட முடியும். நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதென்பது 100 சதவீதமும் பாதுகாப்பானதல்ல. இங்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவது மிகக் கடினமானதாகும். இதனால் இந்த நடவடிக்கையானது மிக மெதுவாகவே மேற்கொள்ளப்படுகிறது" என வணிகசூரிய மேலும் தெரிவித்துள்ளார். 

2013ன் இறுதியில், வடக்கில் கிட்டத்தட்ட 84 சதுரகிலோ மீற்றர் பரப்பளவான காடுகள் மற்றும் புதர்கள் அடங்கிய பிரதேசங்கள் நிலக்கண்ணிவெடி அகற்றப்படாது காணப்பட்டதாக 'தேசிய நிலக்கண்ணிவெடி செயற்பாட்டு மையத்தின்' புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"இது எவ்வளவு காலம் எடுக்கும் என்றோ அல்லது எவ்வளவு கண்ணிவெடிகளை அகற்ற முடியும் என்பதையோ எதிர்வுகூறமுடியாது. மனித வலு அதிகம் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இக்கண்ணிவெடியகற்றும் செயற்பாடானது அங்குலம் அங்குலமாகவே மேற்கொள்ளப்பட முடிகிறது" என வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார். 

வடக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்கள் அதாவது முல்லைத்தீவு (18 சதுரகிலோமீற்றர்) கிளிநொச்சி (18.5 சதுர கி.மீ) மன்னார் (16.5 சதுர கி.மீ) போன்றவற்றில் மிக அதிகமான நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் இவற்றுள் வவுனியாவில் 5 சதுர கி.மீ மற்றும் யாழ்ப்பாணத்தில் 4.5 சதுர கி.மீ ஆகியன உள்ளடங்களாக மொத்தம் 62.5 சதுர கி.மீற்றர் பரப்பளவில் நிலக்கண்ணிவெடி இன்னமும் அகற்றப்படவுள்ளதாகவும் தேசிய நிலக்கண்ணிவெடி செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. 

இதேபோன்று சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் 6.4 சதுர கி.மீ, மட்டக்களப்பில் 4.4 சதுர கி.மீ மற்றும் அம்பாறையில் 7.3 சதுர கி.மீ போன்ற உள்ளடங்களாக மொத்தம் 18.1 சதுர கி.மீற்றர் பரப்பளவில் நிலக்கண்ணிவெடிகள் இன்னமும் அகற்றப்படவில்லை. 

சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரத்தில் 3.5 சதுர கி.மீற்றர், பொலநறுவையில் 0.035 சதுர கி.மீற்றர் போன்றன உள்ளடங்களாக மொத்தம் 3.54 சதுர கி.மீற்றர் பரப்பளவில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். 

"அடர்ந்த காட்டுப் பகுதி மற்றும் பற்றைகள், புதர்கள் உள்ள பிரதேசங்களில் மட்டும் மனிதவலுவைப் பயன்படுத்தி நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த போதிலும் இது மெதுவாக மேற்கொள்ளப்படுகிறது" என சிறிலங்காவில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணியில் ஈடுபடும் 'சர்வத்ரா' என்கின்ற இந்தியக் குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜெய்தீப் சிங் தெரிவித்துள்ளார். 

வடக்கில் நிலக்கண்ணிவெடிகள் அதிகம் புதைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் தனது கைகளால் அதாவது எவ்வித உபகரணங்களையும் பயன்படுத்தாது பிரியத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடுகிறார். கைகளால் கண்ணிவெடிகளை அகற்றுவதென்பது மிகவும் ஆபத்தானதாகும். இதனால் இவர் மிகமெதுவாக அங்குலம் அங்குலமாக மண்ணைத் துப்பரவாக்கி மிகக் கவனமாக கண்ணிவெடிகளை அகற்றுகிறார். இவர் உலோகத்தைக் கண்டறியும் கருவியை மட்டுமே பயன்படுத்துகிறார். 

"இது மிகவும் களைப்பை ஏற்படுத்துகின்ற பணியாகும். நாங்கள் எமது பாதுகாப்பை மிக அதிகளவில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. நாங்கள் தலைக்கவசம் மற்றும் மேலங்கி போன்ற பாதுகாப்பான உடைகளை அணிகிறோம். ஆனால் முழங்காலுக்குக் கீழே நாங்கள் காயப்படக் கூடிய சாத்தியப்பாடு அதிகமாக உள்ளது" என்கிறார் பிரியத். 

"ஆபத்துமிக்க பகுதிகளில் காலை ஆறு மணிக்கு கண்ணிவெடி அகற்றும் பணி ஆரம்பிக்கப்படுகிறது. 25 மீற்றர் பிரதேசத்தை இரண்டு பேரைக் கொண்ட அணிகள் துப்பரவாக்குகின்றன. ஆனால் அங்கு புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளின் அளவிலேயே இவர்கள் எவ்வளவு தூரத்தை துப்பரவாக்குகின்றனர் என்பது தங்கியுள்ளது. இதன் வெற்றியானது மேலும் மண்ணின் தன்மை மற்றும் வானிலை போன்றவற்றில் அதிகம் தங்கியுள்ளது" என வணிகசூரிய மேலும் குறிப்பிட்டார். 

கடந்த நான்கு ஆண்டுகளில் 593 பொதுமக்கள் நிலக்கண்ணிவெடிகளால் காயமடைந்துள்ளதாகவும் ஆனால் எவரும் மரணிக்கவில்லை எனவும் சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவிக்கின்ற போதிலும், நிலக்கண்ணிவெடிகள் வெடித்ததால் 2012ல் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக 'நிலக்கண்ணிவெடிகளைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரும் அனைத்துலக அமைப்பு' தனது ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது. 

செய்தி வழிமூலம் : IRIN 

மொழியாக்கம் : நித்தியபாரதி

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140207109917

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.