Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வாதிகாரிகளான முபாரக்,சதாம்,முஷரப் போன்றோருக்கு நடந்ததை மஹிந்தவும் உணர்ந்துகொள்ள வேண்டும். விக்கி­னேஸ்­வரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ssss846.jpg
சர்வாதிகாரிகளான முபாரக் , சதாம் , முஷரப் போன்றோருக்கு நடந்ததை மஹிந்தவும்
உணர்ந்துகொள்ள வேண்டும் . அரசியல் பிரச்சினைகளால் எமது மக்கள் பெருவாரியாக பிறநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் . இதனால் இங்கு வசிக்கின்றவர்களிடம் திடீரெனப் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது . எமது மக்களிடம் புதிய கலாசாரம் புகுந்துள்ளது . இதனால் எமது மக்களிடையே இருந்து வந்த கடின உழைப்பு முறையும் சிக்கன மற்றும் பண்பாட்டு முறைகளும் ஆட்டம் கண்டுள்ளன என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார் .
 
தென்மராட்சி பிரதேசத்திலுள்ள வரணி மத்திய கல்லூரியின் அறுபதாவது ஆண்டு விழா பூர்த்தி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இக் கல்லூரி மண்டபத்தில் நேற்றுக்காலை 9 மணிக்கு நடைபெற்றபொழுது நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
 
அவர் அங்கு உரையாற்றுகையில் , அண்மைக் காலங்களில் நீங்கள் பலசிரமங்களை எதிர்நோக்கி வந்து தற்போது ஓரளவு அமைதியான சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது . போர் அனர்த்தங்கள் , இடம்பெயர்வுகள் போன்றன உங்களைப் பல சிரமங்களுக்கு முகம் கொடுக்கவைத்தன . எனினும் உங்கள் கல்லூரி முன்னேறிச் செல்லும் அந்த உத்வேகத்தை இவற்றால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறும் அதே நேரத்தில் முன்குறிப்பிட்ட நிகழ்வுகளும் , சூழலும் அத்துடன் அவற்றிற்கு முன்னர் இங்கு நடந்தேறிய சம்பவங்களும் உங்களிடையே சில பல பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது .
 
வறுமை கூட எமக்கு வலிதான மனப்பாங்கையும் வெற்றியீட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தையும் தரவல்லன . எனது பிள்ளைப் பராயத்தில் பலர் மலேஷியா சென்று வந்ததை நானறிவேன் . ஆனால் இரண்டாம் உலக மகாயுத்தம் அவர்களைப் பல விதங்களில் பாதிப்படைய வைத்தது . சிலர் மலேஷியாவில் தங்கிவிட்டார்கள் . பலர் போரினால் பாதிக்கப்பட்டு எமது நாட்டிற்குத் திரும்பினார்கள் . இதனால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய மாற்றமெதுவும் எமது வடமாகாண மக்களுக்கு ஏற்படவில்லை .
 
ஆனால் அண்மைக்கால அரசியல் பிரச்சினைகள் எமது மக்களிடையே ஒரு புதிய கலாசாரத்தையே புகுத்தியுள்ளது . எம் மக்கள் பெருவாரியாகப் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள் . ஆனால் அவர்களின் உறவினர்கள் பலர் இங்கு தொடர்ந்து தங்கியிருந்தார்கள் . தங்கியிருந்த அவர்களுக்கு வெளிநாட்டுப் பணம் படிப்படியாக வரத் தொடங்கியது . நான் இங்கு மாவட்ட நீதிபதியாக 1980 இலிருந்து 1981 முடிவு வரையில் இருந்த போதே இந்தப் புதிய கலாசாரம் நடைமுறைக்கு வந்தது .
 
இந்தத் திடீரென ஏற்பட்ட புதிய பணப்புழக்கம் , எமது மக்களிடையே இருந்து வந்த கடின உழைப்பு முறை , சிக்கன முறை , பண்பாட்டு முறைகளையெல்லாம் ஆட்டம் காண வைத்தது .
 
இது காலக்கிரமத்தில் கல்வியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது . முன்னர் எல்லாம் படித்தாலேயே முன்னேற முடியும் , படித்தால் அரசாங்க உத்தியோகம் பெற முடியும் . அதனால் எம் மாணவ மாணவியர் படிக்க வேண்டும் . முன்னேற வேண்டும் என்ற ஒரு வித உத்வேகத்துடன் , அவாவுடன் , வெறியுடன் படித்தார்கள் .
 
இந் நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த அந்நியச் செலாவணி அதையெல்லாம் மழுங்கடைய வைத்தது எந்தச் சிறிய வேலை பார்க்கும் ஒருவரது உறவினரின் அந்நியச் செலாவணிக் கொடை கூட இங்கு வந்ததும் பல மடங்காக மாறி விடுகின்றது . அதைக் கொண்டு செலவு செய்வதால் இங்குள்ளவர்களுக்குக் கல்வியில் சிறக்க வேண்டும் என்ற எண்ணம் மறைந்து எப்படியாவது வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கத் தொடங்கியது .
 
படித்துப் பணம் உழைக்க வேண்டும் , படித்துப் பல்தொழில்களிலும் ஈடுபட வேண்டும் , அரசாங்க உத்தியோகங்கள் எமக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் மலையேறத் தொடங்கிவிட்டன . அதுமட்டுமல்ல வாழ்க்கைத்தரம் மாற்றமடைந்தது . எல்லோர் கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் புழக்கத்திற்கு வந்தன . சைக்கிள்கள் போய் மோட்டார் சைக்கிள்களும் , மோட்டார் வண்டிகளும் உள்நாட்டில் அவற்றின் இடங்களை நிரப்பின . வீடுகளில் கணனிகள் , தொலைக்காட்சிப் பெட்டிகள் , புதிய புதிய சுவிஸ் மணிக்கூடுகள் என்று பாவனைப் பொருட்கள் அதிகரிக்கத் தொடங்கின . தமது தகுதிக்கு அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கி பொருளாதாரத் தகுதியை பல ஊதாரிச் செலவுகளுக்காகத் தவணை அடிப்படையில் குளிர்ப்பெட்டிகள் , தையல் மெஷின்கள் , மோட்டார் சைக்கிள்கள் , போன்ற பலதையும் வாங்கத் தலைப்பட்டனர் . பணம் வருவது சற்றுத் தளர்ந்தால் தவணைப் பணம் கட்ட முடியாமல் போய்ப் பல பாதிப்புக்களுக்கு உள்ளானார்கள் எம்மில் உள்ளனர் .
 
இவையெல்லாம் கல்வி வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது . வெளிநாடுகளில் எந்தளவுக்குத் தொலைக்காட்சி , கணனி என்பன அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததோ அந்த அளவுக்கு அவை எம்மவரின் கல்வி வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தன . படங்கள் பார்ப்பது அதுவும் பாலியல் , நகைச்சுவை , வன்முறை போன்ற கருக்களைக் கொண்டவற்றை விரும்பிப் பார்ப்பது , கையடக்கத் தொலைபேசிகளில் காதல் பேச்சுப் பரிமாற்றங்களில் ஈடுபடுவது என்று இளைஞர் , யுவதிகள் மனங்கள் கல்வியின் பால் செல்லாமல் வேறு புலன்களைப் பூர்த்திப்படுத்தும் திசைகளில் செல்ல இந்த புதிய பொருளாதார வளர்ச்சி இடமளித்துள்ளது .
 
இதனால் எமது பாரம்பரிய விழுமியங்கள் பல காற்றில் விடப்பட்டு வருகின்றன . களியாட்டங்களில் மனம் போவதால் மாணவர் மத்தியில் புகைத்தல் , மது அருந்துதல் , போதைப் பொருள் பாவித்தல் , பெண்களை வருத்துஞ் சேஷ்டைகளில் ஈடுபடுதல் , கோஷ்டிகளில் சென்று சண்டைகளில் ஈடுபடல் , விருந்துபசாரங்களில் பெண்களையும் இப்பேர்ப்பட்ட பழக்கங்களுக்கு அடிமையாக்கல் போன்றவை உள்ளடக்கப்பட்டு எமது பாரம்பரியம் பிறழ்ந்து போவதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது . மாலை நேரங்களில் இளைஞர் கூட்டம் நாற்சந்திகளில் கூடி மது அருந்துவதைப் பல இடங்களில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது .
 
வசதியாகப் பணம் வந்து கொண்டிருப்பதனால் காசினால் எதைத்தான் சாதிக்க முடியாது என்ற மனோநிலை இளைஞர் யுவதிகளிடையே பரவி வருவதையும் பார்க்கக் கூடியதாக உள்ளது . விபத்துக்கள் நடந்தால் பொலிஸார் கையில் பெருந் தொகைப் பணத்தைத் திணித்து தப்பிக்கப் பார்க்கின்றார்கள் . இதை எனக்கு பொலிஸார் சிலரே கூறிக் குறைபட்டுக் கொண்டார்கள் .
 
மேலும் குடும்பங்களில் பாச உணர்ச்சிகளுக்குப் பதில் பண உணர்ச்சியே மேலோங்கி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது . பாரம்பரியமாக வயது முதிர்ந்தோர்களுக்கு மரியாதை செலுத்தும் எம் பண்பு எம் இளைஞர்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்வதாகவே உணர்கின்றேன் என்றார் .
 
யாழ் நிருபர் .
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.