Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. அதிகாரிகள் மக்களை நேரில் சந்திக்க வேண்டும்:அனந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ஐக்கிய நாடுகள் உதவிச் செயலாளர் நாயகம் சிவில் அமைப்புகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்திப்பதன் மூலமே உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும். அவரை சந்திப்பதற்கு தாங்கள் காத்துக்கொண்டிருப்பதாக வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

 

இன்று ஞாயிற்றுக்கிழமை ஐ.நா. சபையின் உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ இலங்கை வருகிறார். அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள சிவில் அமைப்புகளின் பிரதி நிதிகளையும் சந்தித்து உரையாட இருப்பதுடன் வாழ்வாதாரம் அளிக்கப்பட்ட வேலைத் திட்டங்களையும் பார்வையிடுவார் என்ற தகவலின் அடிப்படையிலேயே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

 

அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 89 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் வாழ்வாதாரம் இன்றி வறுமையாலும் பல்வேறு பிரச்சினைகளினாலும் மிகுந்த நெருக்கடிகளை எதர்நோக்கியுள்ளனர். அத்துடன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் தற்கொலை முயற்சிக்கு போகுமளவுக்கு விரக்தி அடைந்து காணப்படுகிறார்கள். அதுவுமின்றி சமூக நெருக்கடிகளையும் சுய பாதுகாப்பு நெருக்கடிகளையும் தினந்தோறும் அனுபவித்து வருகிறார்கள்.

 

ஆனால் அரசாங்கமோ இவர்களுக்கான வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து விட்டோமென உலகத்துக்கு பொய் கூறி வருகிறது. ஜெனிவாவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக வருகின்ற ராஜதந்திரிகளுக்கு எதை எதையோ காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை நிலை அறியப்பட வேண்டுமானால் வரும் பிரதிநிதிகளும் ராஜதந்திரிகளும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திப்பதன் மூலமும் மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டறிவதன் மூலமுமே உண்மைகளைக் கண்டறிய முடியும். வரவிருக்கின்ற ஐ.நா. சபையின் உதவிச் செயலாளர் அதை செய்வார் என பூரணமாக நம்புகின்றோம்.

 

இன்று வடகிழக்கிலுள்ள பெருந்தொகையான மக்கள் யுத்தத்துக்குப் பின் தமது பாரம்பரிய தொழில்களையோ பிரதேச தொழில்களையோ செய்ய முடியாமல் திட்டமிட்ட முறையில் கிராமங்களை விட்டு கலைக்கப்படுகிறார்கள். விவசாயம் செய்யவோ மீன்பிடிக்கவோ முடியவில்லை. தமது பிரதேசங்களிலுள்ள மூலவள தொழில்களைக் கூட செய் ய முடியவில்லை.

 

இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபையினாலும் கைவிடப்பட்ட இனமாக தமிழ் இனம் ஆக்கப்பட்டது. இந்தத் தவறின் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை நாம் இழந்துள்ளோம்.

 

இந்த விதமான தவறு ஒன்று உலகில் எந்த நாட்டிலும் இனிவருங்காலங்களில் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் ஐக்கிய நாட்டின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திப்பதன் மூலமே தமது தவறுகளை உணர்ந்து கொள்ள முடியும்.

 

போரின் பின் அரசாங்கத்திடம் சரணடைந்து காணாமல் போனோர் சம்மந்தமான உண்மையான நிலைவரங்கள் இன்னும் வெளிக்கொண்டு வரப்படவில்லை. இதைக் கண்டறிவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவும் உண்மைகளை நடுத்தன்மையுடன் நின்று வெளிக்கொண்டு வருவார்கள் என்று எமக்கு நம்பிக்கையில்லை. மிக நீண்டகாலமாகவே சிறையில் வாடும் தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதை சர்வதேசத்துக்கு நாம் தெரியப்படுத்திக் கொண்டிருந்தாலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை காணுவதென்பது கஷ்டமாகவேயுள்ளது.

 

வாரா வாரம் வருகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் ராஜதந்திரிகளையும் நாம் சந்தித்து நிலைமைகளை விளக்கி வருகின்ற போதும் எவ்வித பயனுமில்லை. அரசாங்கம் காலம் கடத்துவதிலும் கால அவகாசம் கேட்பதிலும் காட்டுகின்ற அக்கறையில் அரசியல் தீர்வைத்தர முயற்சிக்குமானால் நாடு நல்லிணக்கத்தை இதுவரை கண்டிருக்கும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரும் விடயமாக இல்லாத போதும் அதைக்கூட நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் காட்டுகிற அசமந்தப் போக்கை உலகமறியும்.

 

எனவே தான் இவையெல்லாவற்றுக்குமான முடிவாக இருக்கக் கூடிய சர்வதேச விசாரணையொன்றைக் கொண்டுவர உலக நாடுகள் தீவிர முயற்சி காட்ட வேண்டும் என அனந்தி குறிப்பிட்டார்.

 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.