Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகதாசன் நினைவு நாள் பிப் 12ல் ஐநா அலுவலகம் முற்றுகை: - மே 17 இயக்கம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாசன் நினைவு நாள் பிப் 12ல் ஐநா அலுவலகம் முற்றுகை: - மே 17 இயக்கம் அறிவிப்பு photo.png 

[Monday, 2014-02-10 20:33:10]
Murukathasan-may-17-222-100214-150.jpg

மக்களை காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஐநா சபையானது அதன் அதிகாரிகளான பான்–கீ–மூன்,விஜய் நம்பியார் மற்றும் ஜான் ஹோம்ஸ் போன்றவர்களின் சுயநலத்தால் தமிழீழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாயினர்.இதனை ஐநாவின் அதிகாரியான சார்லஸ் பெட்ரி தனது உள்ளக ஆய்வறிக்கையிலேயே தெளிவாக 2012 நவம்பரில் சொல்லியிருந்தார்.

  

இந்த பெட்ரி அறிக்கையை மறைக்க நடந்த பல்வேறு சதிகளை உடைத்தெறிந்து கடந்த வருடம் இதனை சர்வதேச அரங்கில் கொண்டுவந்தோம்.அதனடிப்படையில் ஐ.நா அதிகாரிகளின் இந்த துரோகத்தினை கண்டித்து உலகமெங்கும் உள்ள ஐநாவின் அலுவலகங்களை முற்றுகையும் இட்டோம்.

இதனை தொடர்ந்து கூடிய ஐநா சபையானது இலங்கை விவாகரத்தில் ஐ.நா சபையின் செயல்பாடுகள் ”தோல்வி” அடைந்துவிட்டது என்று பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளனர்.

ஆனாலும் ஒரு லட்சம் பேரை இழந்து நிற்க்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இன்று வரை ஐநா சபையானது எந்தவொரு நீதியும் வழங்காமல் இன்னும் இலங்கைக்கு சாதகமாகவே நடந்துகொள்கிறது.

சமீபத்தில் ஜெர்மனியில் பல்வேறு நாட்டினை சேர்ந்த உயர் பொறுப்புகளிலிருந்த அதிகாரிகள் கொண்ட ’நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ வழங்கிய தீர்ப்பில் 2009ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தது ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலைதான் என்றும் அது இன்றும் தொடர்கிறது எனவும் அதாரத்துடன் சொல்லியிருக்கின்றனர்.

இந்த இனப்படுகொலையில் பெரும் பங்காற்றியவர்கள் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தான் என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் அவர்களுக்கான இறையாண்மையையும் காக்க இந்த சர்வதேசம் உடனடியாக முன்வர வேண்டும் என்றும் மிக முக்கியமான தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.

இப்படிப்பட்ட முக்கியமான சமயத்தில் இருக்கும் நாம் இனப்படுகொலையாளன் இராசபக்சேவுக்கு உடந்தையாக இருக்கும் ஐநாவின் அதிகாரிகளை தண்டிக்கவும் அவர்களின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியான:

· இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையையும்

· தமீழீழத்திற்க்கான பொதுவாக்கெடுப்பினையும் உடனே நடத்தக்கோரியும்

ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனத்திற்க்காகவும் ஐநாவின் வாயிலில் தீக்குளித்து வீரமரணமடைந்த முருகதாசனின் நினைவுநாளான பிப்12ல் நீதி கேட்டு தமிழகம் உட்பட இந்தியாவின் பல நகரங்களிலும் உலகமெங்கும் உள்ள ஐநாவின் அலுவலகங்களை முற்றுகையிடுவோம்.

2009ல் தடுக்கத்தவறிய இனப்படுகொலைக்கு இன்றாவது நீதி கேட்டு ஒன்றுகூடுவோம் வாருங்கள் தமிழர்களே..

முற்றுகை நடைபெறும் இடங்கள்:

1.சென்னை:

இடம்:கஸ்தூரிபாய் நகர், அம்பிகா அப்பளம் அருகில்.மத்திய கைலாசம் இரயில் நிறுத்தம் அருகில்,அடையார். காலை 10மணி ஒருங்கிணைப்பு :மே 17 இயக்கம்

2.பெங்களுர்:

இடம் :டவுன் ஹால்,பெங்களூர் ஒருங்கிணைப்பு :மே 17 இயக்கம்

3.புதுடெல்லி

இடம்:73லோடி எஸ்டேட்,புதுடெல்லி ஒருங்கிணைப்பு:மே 17 இயக்கம்

4.மும்பை:

இடம்:பார்சி பஞ்சாயத் ரோடு,அந்திரி கிழக்கு,மும்பை ஒருங்கிணைப்பு:மும்பை விழித்தெழு இயக்கம்

5.நியுயார்க்:

இடம்:3ஐநா அலுவலகம் எதிரில்,நியுயார்க். ஒருங்கிணைப்பு:மே 17 இயக்கம்

6.ஆஸ்திரேலியா:

இடம்:ஐநா அலுவலகம் எதிரில்,66கிங் தெரு,சிட்னி ஒருங்கிணைப்பு:மே 17 இயக்கம்

 

Murukathasan-may-17-222-100214-002.jpg

 

 

Murukathasan-may-17-285-100214-003.jpg

 

 

Murukathasan-may-17-287-100214-001.jpg

 

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103382&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.