Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னைக் கொல்ல முயற்சித்தது இந்திய "றோ" தான்- புலிகள் அல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கொல்ல முயற்சித்தது இந்திய "றோ" தான்- புலிகள் அல்ல: பாகிஸ்தான் முன்னாள் தூதுவர் பசிர் வலி மொகமெட்

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் என்னைக் கொல்ல இந்தியாவின் புலனாய்வு அமைப்பான "றோ" தான் முயற்சித்தது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றும் சிறிலங்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் பசிர் வலி மொகமெட் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவுக்கான தூதுவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பாகிஸ்தான் திரும்பிய பசிர் வலி மொகமெட் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்திலிருந்து வெளியாகும் "த போஸ்ட்" இதழுக்கு அளித்த முதல் நேர்காணலில் கூறியுள்ளதாவது:

கொழும்பில் என்னைக் கொல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கவில்லை. ஒரு மூன்றாம் நாட்டில் எம்முடனான நிழல் போரை இந்தியாவின் "றோ" தொடங்கியுள்ளது.

சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்குமான இருதரப்பு உறவுகள் அதிகரித்து வருவது குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கவலை கொண்டிருந்தார். என்னை சிறிலங்காவுக்கான தூதுவராக நியமித்தது தொடக்கம் இந்தியா கடும் அதிருப்தியில்தான் இருந்தது.

இந்தியாவின் "றோ" எனக்கு எதிரான தனது அசிங்கமான விளையாட்டுகளை நடத்தி வருகிறது. கொழும்புக்கு 2004 ஆம் ஆண்டு யூன் மாதம் வருவதற்கு முன்பாகவே இந்திய "றோ"வின் முன்னாள் அதிகாரி பி. ராமன் என்னைப் பற்றி பல கட்டுரைகள் எழுதினார். என்னை தூதுவராக சிறிலங்கா அரசாங்கம் ஏற்கக் கூடாது என்று சிறிலங்கா ஊடகங்களில் கட்டுரைகளை எழுதி வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த எனது இரண்டாண்டு பணிக்காலத்தில் பாகிஸ்தான் - சிறிலங்கா உறவுகள் உன்னத நிலையை அடைந்ததால் இந்திய அரசாங்கம் கடுமையான அதிருப்திக்குள்ளானது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாகிஸ்தானிலிருந்து சிறிலங்காவுக்கு ஆயுதக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுவதை நிராகரிக்கிறேன். என் மீதான தாக்குதல் விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்குத் தொடர்பில்லை என்பதை தெளிவாக மறுத்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் குண்டுவெடிப்பு நடந்த போது நானும் எனது மனைவி மற்றும் மகளும் வாகனத்தில் இருந்தோம். முதலில் ஒரு குண்டுவெடிப்பில் நான் சிக்கிக் கொண்டதாக கருதப்பட்டது. ஆனால் பின்னர் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அது என்னை இலக்கு வைத்ததாக இருந்தது. சிறிலங்கா அரசாங்கமானது எனது பாதுகாப்புக்காக 7 கொமாண்டோக்களை நியமித்திருந்தது. கொள்ளுப்பிட்டி குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த போது எனக்கு முதலில் பேசியது சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சதான் என்றார் பசிர் வலி மொகமெட்.

ஆனால் பசிர் வலி மொகமெட்டின் இக் குற்றச்சாட்டுக்களை கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் நிராகரித்துள்ளார்.

இத்தகைய குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரிய அறிவற்றவை என்றும் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் முழு அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும் இந்தியத் தூதுவர் பதிலளித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த சில நிமிடங்களிலெயே பசிர் வலி மொகமெட்டைத் தொடர்பு கொண்டு அது குறித்து விசாரித்தோம் என்று இந்திய தூதரகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

பசிர் வலி மொகமெட்டின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சு செயலாளர் ரியா மொகமெட்கான், கொழும்பு குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குக் காரணம் யார் என்று தற்போது சொல்வதானது முன்கூட்டிய கருத்தாக அமையும். சிறிலங்காவின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு முடிவுக்கு வர இயலாது. இது தொடர்பிலான அறிக்கையை சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளோம் என்றார்.

சிறிலங்காவின் ஒட்டுமொத்த சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அனைத்துமே தாக்குதல் சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டி செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதிவந்த நிலையில் இச்சம்பவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பசிர் வலி மொகமெட் அதனை நிராகரித்துவிட்டார்.

சிறிலங்கா-பாகிஸ்தான் இடையேயான நெருக்கமான உறவின் மூலமாக இருதரப்புக்கும் இடையேயான "நிழல்" போரை நடத்தும் தளமாக சிறிலங்காவை மகிந்த ராஜபக்ச உருவாக்கிக் கொடுத்துள்ளமையை உறுதிப்படுத்தும் விதமாக பசிர் வலி மொகமெட்டின் நேர்காணல் அமைந்துள்ளதாக இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

-புதினம்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

றோவின் முன்னாள் அதிகாரியான ராமன் எனச் சொல்லப்பட்டிருக்கும் நபர், சமீபத்திய இந்தியச் சஞ்சிகை ஒன்றில், இந்தக் கொலை முயற்சி பற்றிச் சொல்லும்போது, இது ஒரு மனித தற்கொலைத் தாக்குதல் என்றே சொல்லியிருந்தார். சொல்லப் போனால் இது முழுமையான பொய் என்று அனைவருக்கும் தெரியும். ஆட்டோ ஒன்றில் பொருத்தி வைக்கப்பட்ட குண்டே வெடித்தது என்று இலங்கையரசே சொல்லியிருக்கின்றது.

அப்படி என்றால் ஏன் இவர் இப்படித் திரித்தார் என்றால், பாகிஸ்தான் மீதான றோவின் தாக்குதலாக, அடையாளப்பட்டு விடும் என்பதால், தற்கொலைத் தாக்குதல் என்று சொல்வதன் மூலம், புலிகள் மீது பழியைப் போடும் எண்ணமே ஆகும். இலங்கையைப் பொறுத்தவரைக்கும், இது வரை புலிகளே அவ்வாறான பலத்தைக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆக தெரிந்து கொண்டே ஒரு பொய்யைச் சொல்லும் இப்படிப்பட்டவர்கள் எப்படியானவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவர்களின் பொய்கள் தான், இன்று வரைக்கும் தமிழினத்தை சிதறடித்து வைக்க உதவியிருக்கின்றது. ஆனால் இந்தப் பொய்கள் இந்தியாவிற்கு வெளியால் எடுபடப் போவதில்லை

இது றேவிற்கு சகஜமப்பா.இன்றா நேற்றா

man201.jpg

POLICE AFTER RELEASING the identification foto (see at left) of the suspect wanted in connection with LTTE’s attempted murder of former Pakistan’s High Commissioner in Colombo- 3 seeks public assistance to trace the whereabouts of the suspect, who is also the owner of the three-wheeler used for the explosion.

This person is wanted for questioning in relation to the incident which took place on 14.08.2006 at Ananda Coomaraswamy Mawatha, Kollupitiya, Colombo-3 where an attempt was made to assassinate the High Commissioner for Pakistan in Sri Lanka by exploding a remote-controlled bomb, fitted into a blue Bajaj three-wheeler (No WPJX 9328). Explosion killed four Army personnel providing security to the High Commissioner’s convoy. Details of the wanted man are as follows:

The Criminal Investigation Department (CID) is seeking any useful information relevant to the person in this picture. The public is most welcome to provide any information on his whereabouts or movements. Any information could be given to the under-mentioned telephone numbers 011-2320141-5 & 011-2-440157, 011-2422176 (Fax). Informants who provide any useful information will be rewarded and the confidentiality of the information and informants are assured.

Name : Balasundaram Manokaran

Address : 1. No 157/2

Murusumute.

Paranthan

2. Balagaraj

No 109.

Kandy Road

Kilinochchi

NIC No : 712391421 V

Date of Issue: 2005.09.26

http://army.lk/morenews.php?id=2196

எது உண்மை தூதுவர் சொல்வதா அல்லது இவர்கள் சொல்லுவதா :?: :?: :?: :?: :?: :shock: :shock:

யார் இந்த அப்பாவிகள் :?: :?: :!:

இத்தாக்குதல் நடத்துவதற்கு தானே றோவின் வளர்ப்புப் பிள்ளைகளுக்கு அலுவலகம் திறந்து கொடுக்கப்பட்டது. வர்களுடைய பெயரைத்தான் குண்டு வைத்தவர்களுடன் தொடர்பு படுத்தியிருக்கிறார் இந்தியர்..........???????????? 8) :D

"றோ" இலங்கையில் செய்த்து எண்டு சொன்னால் இல்லை எண்டுதான் சொல்லவேண்டும் யாரையாவது கொல்லச்சொல்லி பணம் கொடுத்து இருக்கலாம்.... வளமையான பாணியாக இருக்க வேண்டி ஈழத்தமிழ் தமிழ் ஆசாமியாக பயன் படுத்தி இருக்கலாம்... அப்படி அவர்கள் பயன் படுத்தாமல் நேரடியாக சம்பந்தப்பட்டுக்கொள்ள அவர்கள் ஒண்றும் இலங்கையின் NIB (புலநாய்வுத்துறை) கிடையாது... எல்லாம் பழுத்த பழங்கள்... விளைவுகளை அறிந்தே செய்து இருப்பார்கள்...!

அதை விட நாங்கள் கவலை கொள்ளும் அளவுக்கு பாக்கிஸ்தான் தூதுவர் ஒண்றும் புனிதரும் கிடையாது.... அவர் பாக்கிஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த ஆயுத கப்பல்களை பார்வையிட்டுவிட்டு வரும்போதுதான் தாக்கப்பட்டு இருக்கிறார்...!

கருணா குழுவும் மட்டக்களப்பில போனமாதம் "தற்கொலைத்தாக்குதல்" நடத்தியது என்று புலி எதிர்ப்புக்காரர் பரபரத்தவை. Janes சர்வதேச பாதுகாப்பு சஞ்சிகையின் நிருபரும் "புகழ்பெற்ற" ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தனது நம்பிக்கையான மூலங்கள் மூலம் அதை உறுதி செய்யக் கூடியதாக இருந்தது என்று அவரது வாராந்த சண்டேரைம்ஸ் பாதுகாப்பு அறிக்கையில் எழுதியிருந்தார். புலிகளின் முக்கியஸ்தரை இலக்கு வைத்து நடத்தப்பட்டது என்று புலிகளிற்கு பாரிய இழப்புகள் என்றும் இந்த கருணா குழுவின் முதலாவது தற்கொலைத்தாக்குதல் ஒரு "turning point" என்று உணர்ச்சி வயப்பட்டு எழுதினவர். இப்ப அடுத்த "புகழ்பெற்ற" ஆய்வாளர் இராமன் பாக்கிஸ்தான் தூதுவர் மீது ஆட்டோவை வைத்து செய்தது தற்கொலை தாக்குதல் என்று தனது புலநாய்வு திறமைகள் தொடர்புகளை வைத்து விளக்கம் தந்திருக்கிறார். இலக்கு வைக்கப்பட்ட பாக்கிஸ்தான் முன்னார் தூதுவரோ புலிகள் தற்கொலைத்தாக்குதல் நடத்தவில்லை என்று சொல்லலுகிறார். மூன்றும் நல்லா பொருந்தி வருகுது. கருணா குழு பயிற்சித்து பாத்திருக்கு அவர்களுடைய ஆட்டோ தற்கொலைத்தாக்குதலை முறையை புலிகள் மீது. பிறகு கொழும்பில் பாவித்திருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள். இந்த விடயங்களுக்குள் உள்ள, ஒற்றுமையைப் பார்த்தாலே, அவ்வாறன முயற்சிக்கு பின்னணி யார் என்று தெரியும்!

தல, இந்தப் பாகிஸ்தான், நபர் புனிதர் கிடையாது. அவர் மரணித்தால் கூட, எவ்வித அனுதாபமும் ஏற்படப் போவதும் இல்லை. ஆனால், தமிழன் இழிச்சவாயன் மாதிரி, றோவின், பழைய, தற்போதைய உறுப்பினர்கள் கதை விடுவதைத் தான் சுட்டிக் காட்டினேன்.

இப்படி எம்மை ஏமாற்ற முடியாது. ஆனால் அப்பாவித் தமிழக மக்களையும், இந்திய மக்களையும் ஏமாற்றும் ராமன் போன்றவர்களின் கபடத்தைப் பற்றித் தான் சொல்கின்றேன்.

இவர்கள் தான் எமக்கிடையிலான உறவினை முறிக்க முயலும், முக்கியமான சதிக்காரர்கள்!

அட போங்கப்பா அந்தாள் சாகாமல் விட்டானே எண்டு கவலையா இருக்கன் (இந்தியா செய்திருந்தால் ஒரு வாழ்த்தும் அனுப்பி இருப்பன்)

தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரித்தாச்சு எண்டு வைத்துக்கொள்ளுங்கோ....! அதுக்கு காரணம் இந்த பாக்கிஸ்தானின் முன்னாள் SAS அதிகாரிதான்.... இந்திய புடவை வியாபாரிகள் மூதூரிலும் கழுவாஞ்சிக்குடியிலும் காணாமல் போனதுக்கும் உவந்தான் காரணமாம்....!

தமிழீழம் தனிநாடானால் சிங்கள எல்லைகடந்து பயங்கரவாதம் இப்போது போலவே ஏற்றுமதியாக இப்போதே அடி போட்டு விட்டான் பாதகன் ... இதுதான் என்னுடைய கோபத்துக்கு காரணம்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.