Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியத் தமிழர் பேரவை - நாளை கனடியத் தமிழ் ஊடகங்களுடன் ஊடகச் சந்திப்பு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடியத் தமிழர் பேரவை - நாளை கனடியத் தமிழ் ஊடகங்களுடன் ஊடகச் சந்திப்பு: 

[Tuesday, 2014-02-18 21:39:19]
CTC%20logo%20seithycom.jpg

மிகப்பெரிய கனடியத் தமிழர் அமைப்புக்களில் ஒன்றான கனடியத் தமிழர் பேரவை நாளை கனடியத் தமிழ் ஊடகங்களுடன் ஊடகச் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. தங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று கனடியத் தமிழ் ஊடகங்களை கூட்டி வைத்து பெருமையை பறை சாற்றவே இந்த ஊடகச் சந்திப்பு. இந்த விடயத்தை பற்றி விமர்சிக்கும் முன்னர் இது தொடர்பில் முன், பின் நடந்தவைகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 2011 இல் பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச புகழ்பெற்ற நிபுணரும் பேராசிரியருமான Rohan Gunaratna கனடாவில் இயங்கி வரும் கனடியத் தமிழர் பேரவை [ CTC ] மீது புகாரொன்றினை Lakbima News என்ற செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.

  

கனடியத் தமிழர் பேரவை கனடாவில் இயங்கி வரும் ஒரு விடுதலைப்புலிகள் அமைப்பு என்பதே சிங்கப்பூர் நாங்யங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத ஆராய்ச்சித் துறைத் தலைவர் Rohan Gunaratna அந்த செய்தி நிறுவனத்தில் பகிரங்கமாக முன் வைத்த குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டின் பின்னர் கனடியத் தமிழர் பேரவை மேற்படி Rohan Gunaratna மீது தங்கள் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் கனடியத் தமிழ் மக்களுக்காக இயங்கி வரும் ஒரு அமைப்பு மீது Rohan Gunaratna அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக வழக்குத் தொடுத்திருந்தது.

கடந்த மூன்றாண்டு காலமாக நடந்து வந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்து கனடியத் தமிழர் பேரவைக்கு ஆதரவாக அதாவது CTC விடுதலைப்புலிகளுக்கு சார்பான இயக்கமில்லை என்ற தீர்ப்பும் கிடைத்து விட்டது. அதனால் தற்போது இந்த வழக்கில் தங்கள் வெற்றியினைக் கொண்டாடும் முகமாக நாளை கனடியத் தமிழ் ஊடகச் சந்திப்பு ஒன்றிற்கு CTC ஏற்பாடு செய்துள்ளது.

சரி Rohan Gunaratna உங்கள் மீது அவதூறு குற்றஞ்சாட்டினார். வழக்கும் தொடர்ந்தீர்கள். அதில் வெற்றியும் கிடைத்து விட்டது. சில அரசியல் நகர்வுக்காக இது சரி என்பதை யாரும் மருப்பதுக்கில்லை . ஆனால் இந்த விடயத்தை இதோடு விட்டு விட வேண்டியது தானே. கனடியத் தமிழ் ஊடகங்களை அழைத்து கேள்வி நேரம் என்ற பெயரில் ஒன்றுக்கும் பெறாத ஒரு ஊடகச் சந்திப்பினை ஏற்பாடு செய்து எங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் கனடியத் தமிழ் மக்களுக்காக ஓடி வந்து உதவும் ஒரு பொது அமைப்பு என மார் தட்டிக் கொள்வதில் என்ன இருக்கிறது,

இங்கே எமக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த கனடிய மக்களுக்கும் சில கேள்விகள் எழுகிறது. கண்டிப்பாக இந்தக் கேள்விகளை எல்லாம் நீங்கள் நடத்தும் ஊடகச் சந்திப்பிற்கு உங்கள் அழைப்பின் பேரில் வரும் எந்த கனடியத் தமிழ் ஊடகமும் கேட்கப் போவதில்லை என்பதால் நாம் கேட்கிறோம் . பதிலை பகிரங்கமாக அறிவியுங்கள் பார்ப்போம்.

1. எங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நாங்கள் கனடியத் தமிழ் மக்களுக்கான அமைப்பு எனச் சொல்கிறீர்களே. பிரமாண்டமாக விழாக்களையும், நடைப்பயணங்களையும் , இரவு விருந்துகளையும் நடத்துவதை தவிர அரசியல் நகர்வாகவோ அல்லது கனடியத் தமிழ் மக்களுக்காக CTC ஆற்றிய தொண்டு என்னவென்று கூற முடியுமா.

2. தொழிலதிபர்களும் , கனடியத் தமிழ் பணப் புள்ளிகள் சிலரும் சேர்ந்து கொண்டு உங்கள் அரசியல் சுய லாபங்களுக்காக அமைப்பினை அபகரித்துக் கொண்டு , அதன் மூலம் இரவு விருந்து என்ற பெயரில் பிரமாண்டமாக பொழுதை போக்காட்டி விட்டு இறுதியில் எங்களுக்கும் தமிழீழத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால் நாங்கள் கனடியத் தமிழர்களுக்கான அமைப்பு எனப் பெருமையாக பறை சாற்றுவது அசிங்கமாக இல்லையா.

3. கனடாவில் தமிழர்களின் இருப்பே மாவீரர்கள் தியாகத்தில் உருவானது தான் என்பதை மக்கள் நன்கறிவார்கள். இன்று இங்கு இருக்கும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் எத்தனை பேர் தங்களை தமிழீழக் கனவிற்காக தியாகம் செய்துள்ளார்கள் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்த்திருந்தால் இப்படியொரு ஊடகச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருப்பீர்களா.

4. சரி அதெல்லாம் இருக்கட்டும். யார் காதில் பூச்சுற்றப் பார்க்கிறீர்கள். இந்த மார்தட்டல்கள் எதற்காக? CTC எப்படி உருவானது. இதில் முதலில் உறுப்பினராக இருந்தவர்கள் யார். அவர்களுக்கும் தமிழீழ விடுதலிப் புலிகளுக்கும் என்ன தொடர்பு என்பதும் மக்களுக்கு தெரியும். சமீப காலமாகவே சுய அரசியல் லாபத்திற்காக தடம் புரண்டு CTC சென்று கொண்டிருப்பதையும் கனடியத் தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.

5. கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் நூறில் 90 பேரின் கனவு இன்னமும் தமிழீழமாகவும், தேசியத் தலைவரை தங்கள் நாயகனாகவும் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது , அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சொல்லி விட்டு நாங்கள் தமிழர்களுக்கான அமைப்பு எனக் கூறுகிறீர்களே இது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமில்லையா.

விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிரை கொடுத்து போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழர்களுக்கு சர்வதேச அளவில் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த இயக்கமாக உலக நாடுகள் பார்க்கும் நேரத்தில் ஏன் CTC இப்படி விளையாடுகிறதென்பது தெரியவில்லை ?.

நன்றி,

தமிழ் இனம் வாழ்க. ..தமிழன் வாழ்க..

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103933&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.