Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா ஆணைக்குழுவிடம் இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராகக் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IPKF-memorial-jaffna.jpg

25 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவில் இந்திய அமைதி காக்கும் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை உரிமை மீறல் சம்பவம் என உள்நாட்டுப் போரில் காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது. 

சிறிலங்காவின் வடக்கில் இவ்வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆணைக்குழுவின் விசாரணையின் போதே இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக என தனது பெயரை வெளிப்பட விரும்பாத, இந்த ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

"இந்த முறைப்படானது ஆணைக்குழுவால் விசாரணை செய்யப்படும் காலப்பகுதிக்கு அப்பாற்பட்டது" என குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்திய அமைதி காக்கும் படையால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக மேலதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றால், இந்தப் படைகள் சிறிலங்காவில் செயற்பட்ட காலப்பகுதி தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்வது பற்றி ஆணைக்குழு பரிசீலிக்கும் என மூத்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். 

1987ல் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தானவால் இந்தியாவுடன் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையின் விளைவாக சிறிலங்காவுக்கு இந்திய அமைதி காக்கும் படையினர் வரவழைக்கப்பட்டனர். 

ஆரம்பத்தில் இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 40,000 பேர் சிறிலங்காவின் முன்னாள் போர் வலயத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், 1990 மார்ச்சில் சிறிலங்காவை விட்டு இவர்கள் வெளியேறிய போது இந்த எண்ணிக்கை 70,000 ஆக அதிகரித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்ட போது இந்திய அமைதி காக்கும் படையினர் கண்காணிப்பளராகச் செயற்பட்ட போதிலும் புலிகள் அமைப்புடனான யுத்தத்தில் கிட்டத்தட்ட 1200 இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட காணாமற் போனோர் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆணைக்குழுவானது 1990, யூன் 10 தொடக்கம் 2009 மே 19 வரையான காலப்பகுதியில் காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. 

அடுத்த மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவானது தன்மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் மீளிணக்கப்பாட்டை உருவாக்காமை போன்றவற்றை எதிர்த்து மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கு முன்னர் சிறிலங்காவுக்கு எதிராக பேரவையில் முன்வைக்கப்பட்ட இரு தீர்மானங்களையும் இந்தியா ஆதரித்திருந்தது. 

பேரவையில் அடுத்த மாதம் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தின் மூலம் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு போர்க் கால மீறல்கள் தொடர்பாக சுயாதீன அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்படலாம் என சிறிலங்கா அரசாங்கம் அச்சம் கொள்கிறது. 

1972 தொடக்கம் 2009 வரை இடம்பெற்ற இனப்போரின் விளைவாக 100,000 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்படுகிறது. 

செய்தி வழிமூலம் : Press Trust of India

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140222110009

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முடிவோடதான் இருக்கிறாங்கள்.. பாவம் சோனியா காங்கிரஸ்..

 

IPKF-memorial-jaffna.jpg

[size=4]

புலிகள் அமைப்புடனான யுத்தத்தில் கிட்டத்தட்ட 1200 இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

யுத்தம் செய்தீர்கள் என்று சொளுரிங்களே அங்கே இறந்தது மாத்திரம் படுகொலையா தெரிகிறதா? எவன்டா உங்களை பத்திரிகை எழுத பணம் கொடுத்தது?

யுத்தமே செய்யாத அப்பாவி தமிழர்களை இந்திய இராணுவம் கொன்றது என்ன?

இவ்வளவு காலமும் நாங்களும் மறப்போம் மன்னிப்போம் என்றுதான் இருந்தோம் அனாலும் எங்கள் தொப்புள் கொடி உறவையும் தாண்டி இந்திய விஷ விருட்சம் தமிழினத்தை அழிக்க நினைக்கும்போது எதிர்த்து போரிடுவதை தவிர வேறு தெரிவில்லை.

பார்ப்பனிய சாதித்துவதா ஊழல் அரசினால் உங்களுக்கு சிங்களவனும் எதிரி தமிழனும் எதிரி.

Edited by Sooravali

அது லலித் வீரதுங்க்கா எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்ட்.

 

நான் எழுதிக்கொடுத்தலில் முள்ளிவாய்க்காலில் இந்தியன் கப்பல்கள் கரையை நோக்கி இடம் பெயர்ந்த மக்களைச்  சுட்டது வரைக்கும் தான் இருந்தது. 

 

நான் அப்பவே வீரதுங்காவிடம் சொன்னான் உது காலம் கூடி போகுடும் என்று. அதுக்கு அவர் "முள்ளி வாய்க்கால் மட்டும் வரைக்கும் என்றால் ரோ எங்களில் மட்டும் திருப்பிவிட்டு விட்டு தப்பிவிடும்" என்று வாதாடுகிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.