Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினத்தின் எதிர்காலம் சிறப்பாக வழிகாட்டியின் வழிகாட்டல்கள்

Featured Replies

எம்மினத்தின் நிரந்தரவிடுதலை இனி மிக அறிவுக்கு வேலை கொடுத்து காய்நகர்த்த வேண்டும்....

வழி 1

வெளினாடுகளை(அரசு, எதிர்கட்சிகள்) எமது பலவிதமான அணுகுமுறை மூலம், சிறந்த புரிந்துணர்வுகளை எற்படுத்துதல்.
பல இலட்சம் தமிழ்வாக்குகள் காரியமாக்கும்.
இதுதற்போதைய எமதுபலம். சில நாடுகளில் நம்மக்கள் செயலில் காட்டியுள்ளார்கள்..உதாரணம்
கனடா, இங்கிலாந்து... எமது வாழ்த்துக்கள்..
மற்றைய  நாடுகளில்  விரைவாக
செயல்படவேண்டும் உ+ம் அவுஸ்ரெலியா, நியூஸ்லாந்து..மற்றும் ஐரோப்ப நாடுகள்...

 

வழி 2
உடனடியாக
இலங்கையின் அரச பயங்கரவாதங்களுக்கு,இனவாத
நடவடிக்கைகளுக்கு, மனிதவுரிமைகளுக்கு எதிரான
நடவடிக்கைகளுக்கு இதுவரை குரல் கொடுத்துள்ள
தாபனங்கள், தனி நபர்கள், தனிஅமைப்புகள்,
சர்வதேச நிருவனகங்கள்,பாரளுமன்ற உறுப்பினர்கள்,அரசுக்கள், தொண்டர் அமைப்புகள்...
ஒரு இடத்தில் கூடவைத்து அவர்கள் ஊடாக பலவிடையங்களை நகர்த்தலாம்
. இரண்டாவது
1948 முன்னர் வரலாறு, பின்னர் அகிம்சை
போரட்டங்கள்...தேர்தல்கள்...அரச இனவாத
பயங்கரவாதங்கள் 1956 இன அழிப்பு பின்னர் தற்காப்பு தீவிரவாதம் ஆரம்பம்.....என்பன நன்கு
ஒழுங்குபடுத்தப்பட்ட விளக்கங்கள் கொடுக்கப்படல்
வேண்டும்...

இவற்றின் மூலம் அவர்கள் கூடுதல் அக்கரையாக
எம்மினத்தின் விடுதலைக்கு செயலாற்றுவார்கள்..

 

வழி 3
நீங்கள் வாழும் முக்கிய நகரங்களில் தமிழர் தகவல்
மையங்களை
ஏற்கனவே இல்லாவிடில்
உருவாக்குங்கள்...
அங்கு முழுவதும் ஆங்கில மொழிபெயர்ப்புடன்
கூடிய முழுதகவல்களும் இலகுவில் புரியும் படியாக பலவிதமான வடிவில்(புத்தகமாக,
குறுந்தட்டாக, படங்களாக, ஒளிப்படங்களாக,
இணையங்களாக உ+ம் tamilnet, tamilguardian
பார்வையிடும் வசதிகள் வீடியோக்கள் பார்க்கும் வசதிகள், பிரதிகள் தேவைப்பட்டால் கொடுக்கும்
 வசதிகள், நல்ல விளக்கங்கள் கொடுக்கும்
 திறமையானவர்கள்.. நல்ல உபசரிப்பு...

முக்கியமாக கவனிக்க வேண்டும்...
எங்களின் மேல் உயர்மதிப்பு , நாங்கள் சொல்லும்
விடையங்களை இலகிவில் புரிந்துணர்வை
உண்டாக்கும்...   
                                                           மேலும் உங்கள் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன...
யார் குற்றினாலும் அரிசியானால் சரி.. எமக்கு
தேவை சரியான பலன் . எனது சிற்றவிற்கு
வழிகாட்டுகிறேன் இனி உங்கள் கைகளில்...
தொடரும்.......

 

 

வழி 4

தமிழ்கலாச்சார நிகழ்ச்சிகளை அடிக்கடி நிகழ்த்துங்கள்
அழைப்பு விடுக்கப்பட வேண்டியவர்கள் அந்த நாட்டுமீடியாக்கள் எனப்படும்
பத்திரிகைகள்,தொலைகாட்சி நிருவனங்கள் ,
அரசியல் மற்றும்  உயர்பதவிகளில் இருக்கும் நகர
மேயர்கள்,நாடாளுமன்றஉறுப்பினர்கள்......
... எம்மக்களில் இனப்பற்றுள்ள விடுதலை
வரலாறு ஆழ்ந்த அறிவுள்ள   நீங்கள் வாழும்
நாடுகளின் மொழியறிவுள்ளவர்கள் மூலம்

வழி 3 இன்  வழியில் முழுத்தகவல்களும் கொடுக்கப்படல் வேண்டும்.

நிகழ்ச்சிகள் முடிவடைந்து, தேனீர் விருந்து
அல்லது எமது தமிழ்கலாசார விருந்தோம்பலின்
பின் கலாச்சார உரையாடல் நிகழ்சியாக நல்ல தொடர்பாடல்களை ஏற்படுத்துங்கள்... அன்பை வளர்ப்பதன் மூலம்..
கலாச்சாரமான இனத்தின் நிர்கதியை...

 

வழி 5

நீங்கள் வாழும் நாடுகளில் அதிகமாக பார்க்கபடும் ஊடங்கங்களில் உங்கள் நாடுகளில் நடக்கும் இலங்கை சம்பந்தமான ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்களின் செய்திகள் வரும்படி பார்த்துக்கொள்ளுங்கள்...
முன்பாக ஒவ்வொரு ஊடங்களுக்கும் விளக்கமான அறிவித்தல் கடிதங்களை இலத்திறன்(ஈ-மெயில்)
மூலமாக இலகுவாக,அல்லது தபால் மூலம் அனுப்பி பின்னர் தொலைபேசி மூலம் உரையாடி
 அவர்களின் வருகைகளை உறுதிப்படுத்துங்கள்.
வரும் செய்தி நிருபர்களுக்கும் நல்ல விளக்கங்கள்
கொடுக்கப்படல் வேண்டும்.. இதனை முக்கியமாக
கவனிக்கப்பட வேண்டும்..

இவற்றை செய்து பாருங்கள் நாளடைவில் அந்த நாடுகளின் எல்லாமக்களுக்கும், அரசு,எல்லா அரசியற்கட்சிகளுக்கும் இலகுவில் செய்திகள்
சென்றடையும்...
 ஊர்வலங்கள் நடக்கும் போது
எதற்காக இது  என்பது துண்டுப்பிரசுரங்கள் மூலம்
தெரியப்படுத்தல் வேண்டும் அல்லது முயற்சிகள்
வீண்விரையமாகும்..

 

வழி 6
நீங்கள் இதுவரையில் வழி1இல் வழி5 வரை செயல்பட்டுக்கொண்டு இருந்தால் நன்றி.. இல்லை எனில்
உங்களுக்கு இடையூறாக இருக்கும் காரணிகளை
ஆராயுங்கள்..

அமைப்பாக செயல்படும்போது
தலைமையாக செயல்படுவர்கள் ஊக்கமின்றி
 பெயருக்கு செயல்படுவராக இருந்தால் அவரை மாற்ற முயற்சி செய்யவும் இல்லை என்றால்
 பதவியால் அகற்றவும்.

ஏற்கனவே முயற்சி செய்த்தால் பாராட்டி
ஊக்கிவிக்கவும்..
இது காலத்தின் கடமை....
பங்குனி முன் பல பணிகள் ...

 

வழி 7

 

 

நீங்கள் வாழும் இடஙகளில் நல்ல மதிப்பு பெறுவது முக்கியமானது.

 

இந்த நல் மதிப்பை பெறுவதற்கு நீங்கள் ஒரு தமிழ் அமைப்பாக சமூக சேவைகள் குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் நிகழும் போது நகரசபைகள், தொண்டர்கள் நிருவனங்கள் ஊடாக சேவைகள் செய்து பாராட்டுக்களை பெறுதல்..

 

பொருள், பணவுதவிகள், சரிர என உதவிகள் செய்து நல்ல மதிப்பு,

 

பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வரும் இச்செய்திகளால் நீங்கள் சமூகங்களில் உள்வாங்கப்பட்டு யார் இவர்கள் என்னும் கேள்விகள் எல்லா மட்டங்களிலும் பிரபலமாகி உங்களின் பிரச்சாரங்கள் சனல் 4 போன்று பரவும்..

 

எல்லோரும் விரும்புவர்களாக மாறுவீர்கள்..

வழி 8

 

வழி 7  இன் படி சமூகசேவைகளில் நீங்கள் ஈடுபடும் போது ஏற்படும் அனுபவங்கள் தொடர்புகளால் ஏற்படும் தன்னம்பிக்கை உஙகளை உள்ளூர் அரசியல் கட்சிகளில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.(எந்தக்கட்சி என்பதை நீஙகளே தெரிவுசெய்யுங்கள்.ஆளும் கட்சி அல்லது எதிர்கட்சி)

 

எல்லோரும் ஒரு கட்சியில் சேராமல் மாற்றுக்கட்சிகள் ஆட்சி வரும் போதும் எமக்கு ஆதரவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்..

 

எப்போதும் தூரப்பார்வையாகவும் எமது இன நலனில் கொள்கையாகவும் எமது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி காய்கள் நகர்த்துங்கள்.. உங்களால் முடியும் என நினையுங்கள் எல்லாம் முடியும்.. தொடரும்...

 

 

 

 

வழி 9

 

உங்கள் வெளி நாட்டு மக்கள் பிரச்சாரங்களில் மேல் வரும் 15 விதமான தமிழர்களின் மீதான தற்போதைய இலங்கையரசின் அடக்கும் பொறிமுறைகளை ஆதரங்களுடன் புரியபடுத்துங்கள். ஸ்ரீலங்கா இனவெறி அரசு தமிழின அழிப்பை நிறைவேற்றக் கையாளும் கட்டமைக்கப்பட்ட செயல்முறைகள்:-

 

1.   தமிழரை மதரீதியாக, பிரதேச வாரியாகப் பிரித்தாளும் தந்திரம்.தமிழருக்குள் பிரிவினைகளைத் தூண்டி பிரித்துத் துண்டாடி மோதவிடுதல்.

 

2.    சலுகைகளையும் அரசஉதவிகளையும் காட்டி அல்லது மிரட்டி முடிந்தளவு தமிழரை தம்பக்கம் இழுத்தல்.

 

3.  அபிவிருத்திக்கென்றும் படையினர் தேவைக்கென்றும் மத்திய அரசின் தொழிற் சாலைகளுக் கென்றும் இராணுவக் குடியிருப்புக் கென்றும் பாரிய அளவில் தமிழர் நிலங்களைக் கொள்ளை அடித்து அங்கு சிங்களவர்களைக் குடியேற்றி அவர்களுக்கே அபிவிருத்தி அனைத்தையும் செய்து கொடுத்தல். நிலத்தை அபகரித்து அங்கு சிங்களவரைக் குடியேற்றுவதன் மூலம் தமிழருக் கென்று தாயகபூமி இருப்பதை இல்லாமற் செய்தல்.

 

4.  தமிழர் பகுதியில் உள்ள வளங்களை, வளமான நிலங்களை தமிழர் அனுபவிக்க விடாமல் அவற்றை பறித்து சிங்களவருக்கு கொடுத்தல்,

 

5.  பவுத்தமதத் திணிப்பு சிங்கள மொழி கலாச்சாரத் திணிப்பு மேலும் அவற்றுக்கான பெரும் ஊக்குவிப்பு மூலம் தமிழரின் மதம் தனித்துவமானமொழி பண்பாடு கலாச் சாரங்களை அழித்து அல்லது கலப்புச் செய்து சிதைத்து அப்படி ஒரு தனித்துவமான இனம் இல்லை என்று காட்டுதல்.

 

6. தமிழர் சுய பொருளாதார அபிவிருத்தி அடைய விடாமல் தடுத்து அவர்களை சிங்கள ஆட்சியின் தயவில் தங்கி வாழும் இனமாக வைத்திருத்தல், தமிழர் பிரதேச அபிவிருத்திகளை வேண்டுமென்றே புறக்கணித்தல்

 

7. படுகொலை செய்தல், வெளிநாடுகளுக்குத் துரத்தல், கருத்தடை செய்தல் பசி நோயால் இறந்துபோக அனுமதித்தல் போன்றவற்றால் தமிழர் தொகையை மேலும் குறைத்தல்.

 

8. தாம் தமிழருக்குச் செய்யும் அநீதிகளுக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சி செய்ய முடியாதவாறு பிரகடனப் படுத்தாத இராணுவ ஆட்சியைத் தொடருதல்.

 

9. தமிழருக்கு எந்த அரசியல் உரிமைகளையும் கொடுக்காமல் அடிமைப்படுத்தி வைத்திருத்தல்.

 

10. பேச்சுச்சுதந்திரம் ஊடகசுதந்திரம் மற்றும் மனிதசுதந்திரம் போன்ற அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு அடக்குதல்.

11. சர்வதேச ஆதரவு தமிழருக்குக் கிடைக்காமல் தமக்குச் சார்பாக இருப்பதற்கான சகல தந்திரங்களையும் கையாளுதல்.

12.  ஈழத்தமிழருக்கு ஆதரவான தமிழ்நாட்டு எதிர்ப்பலைகளையும் புலம்பெயர் தமிழரின் போராட்டங்களையும் நிர்மூலமாக்கல்.

13. மதுபானங்களையும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களையும் நீலஆபாசப் படங்களையும் தமிழர் பகுதிகளில் மிகத் தாராளமாக வழங்கி மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தைப் பாழடிப்பதோடு தமிழினத்தை ஒரு குற்றச்செயல் மலிந்த தீவிரவாதத் தன்மைகொண்ட கல்வியில் பின்தங்கிய காட்டுமிராண்டி இனமாகக் காட்டுதல்.

 

14. முழு இலங்கையுமே சர்வதேசக் கடனில் மூழ்குவதையோ வல்லரசுகளின் பிடியில் சிக்குவதையோ கூடக் கருத்தில் கொள்ளாமல் தமக்கு உதவும் சுயநல நாடுகளோடு கைகோர்த்து தமிழின அழிப்பை நிறைவேற்றல்.

 

15.  தாமே ஒருசில புல்லுரிவிகளை வைத்து உருவாக்கும் குழுவை, புலிப்படை என்று காட்டி அவர்கள் மூலம் தாம் விரும்பாத தமிழ் அரசியல் தலைவர்களை கொலை செய்தல்.

 

Posted 18 January 2014 - 10:24 AM

வழி 9 உங்கள் வெளி நாட்டு மக்கள் பிரச்சாரங்களில் மேல் வரும் 15 விதமான தமிழர்களின் மீதான தற்போதைய இலங்கையரசின் அடக்கும் பொறிமுறைகளை ஆதரங்களுடன் புரியபடுத்துங்கள்..

 

வழி 10 உங்கள் வருங்காலச்சந்ததிகள் மீடியாக்கள் எனும் தகவல் துறைகளில் கல்வியில் படிப்புகளை மேற்கொள்ள ஊக்கிவியுங்கள்...

பிரித்தானியாவில் நிவாரண உதவிகள் செய்து தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்...இவ்வாறன உதவிகள் ஒவ்வொரு நாடுகளிலும் தொடர்ந்து எம்மக்கள் விடுதலைக்கு தகுதியான இனமாக உலகம் இனம் காணவைக்க வேண்டும்.. பிரித்தானியாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்த காலநிலை அனர்த்தத்தால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கான நிவாரண உதவிகளை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று வழங்கினர். http://www.sankathi2.../d,fullart.aspx

 

 

 

 

Edited by வழிகாட்டி

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

தமிழ்மக்களின் தற்போதைய உடன் தேவை இலங்கையின் இனவாத போர்குற்ற நடவடிக்கைகளை நன்கு உணர்ந்து குரல் கொடுக்கும் நாடுகள் அமைப்புக்கள் நிருவனங்களை உடனடியாக ஒரு பெயரில் இணைக்க வேண்டும். இலங்கை தமிழ்மக்கள் பாதுகாப்பு அமைப்பு என்னும் பெயாரில் உதாரணம்.. இலங்கையில் நடக்கும் தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளும்...ஆதாரங்களுடன் இந்த அமைப்பிற்கூடாக உலகிற்கு அறிவிக்கப்படவேண்டும்.. இப்படியான செயப்பாட்டின் மூலம் மேலும் எங்கள் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்கலாம். இலங்கையரசு தன் செயற்பாடுகள் வெளி உலகு அறிவதை அறிந்து தனது வேகத்தை குறைக்க முயற்சிக்கும்.. இலங்கைக்கு முட்டு கொடுக்கும் நாடுகளால் தான் இலங்கையை எவ்விதத்திலும் வழிக்கு கொண்டுவர முடியாத இருக்கிறது. இலங்கை திமிராக தொடர்ந்தும் செயல்படுகிறது. இந்த முட்டு கொடுக்கும் நாடுகளை இவ்வமைப்பின் மூலம் அணுகி இலஙகைக்கு அழுத்தங்கள் கொடுத்து உதவி இல்லாமல் செய்தால் ஒரு முடிவிற்கு கொண்டுவரலாம்.. நாங்கள் பின்னின்று இயக்க வேண்டும்.. ஜெனிவா மகானாடு முடிந்தாலும் இது தொடர்ந்து ஒரு மையமாக இயங்கவேண்டும்.. சனல் 4 கெலம் மக்ரே போன்றவர்களை வைத்து செயற்படுத்தலாம்..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இலங்கை தன்னை திருத்திகொள்ள உலகும், தமிழர்களும் கொடுக்கும் சந்தர்ப்பங்களை உபயோகிகாமல் மேலும் தன்னை ஒரு மோசமான நாடாக காட்டி சிக்கலில் மாட்டுகிறது. எல்லாம் எம் நன்மைக்கே.. கெடு குடி சொற் கேளாது.. உண்மையில் இலங்கைக்கு பதிலடியாக புலம்பெயர்தமிழ் அமைப்புகள் மேலும் தங்கள் வாழும் நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து இலங்கையின் 1956 முதல் இன்றுவரை இனவாத அரசியல்களை ஆதரங்களுடன் புட்டுவைத்து எம்மினத்திற்கு அவர்கள் மூலம் தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இலங்கை அரசு தான் ஏன் இவர்களை தடைசெய்தோம் என வருந்த வைக்க மேலும் வேகமாக செயல்பட்டு எல்லா நாடுகளின் அங்கீகாரம் பெற்று எம்மினத்திற்கு விடுதலையும், இலங்கைக்கு தண்டணையும் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தன்னை திருத்திகொள்ள உலகும், தமிழர்களும் கொடுக்கும் சந்தர்ப்பங்களை உபயோகிகாமல் மேலும் தன்னை ஒரு மோசமான நாடாக காட்டி சிக்கலில் மாட்டுகிறது. எல்லாம் எம் நன்மைக்கே.. கெடு குடி சொற் கேளாது.. உண்மையில் இலங்கைக்கு பதிலடியாக புலம்பெயர்தமிழ் அமைப்புகள் மேலும் தங்கள் வாழும் நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து இலங்கையின் 1956 முதல் இன்றுவரை இனவாத அரசியல்களை ஆதரங்களுடன் புட்டுவைத்து எம்மினத்திற்கு அவர்கள் மூலம் தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இலங்கை அரசு தான் ஏன் இவர்களை தடைசெய்தோம் என வருந்த வைக்க மேலும் வேகமாக செயல்பட்டு எல்லா நாடுகளின் அங்கீகாரம் பெற்று எம்மினத்திற்கு விடுதலையும், இலங்கைக்கு தண்டணையும் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

 

 

உண்மை

 

அதற்காக  எமது இளைய  சந்ததியினரைப்பயன்படுத்திக்கொள்ளணும்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.