Jump to content

சரியானவர்களை உங்கள் உதவிகள் சென்றடைய வேண்டுமா ? இச்செய்தியை படியுங்கள்.


Recommended Posts

பதியப்பட்டது

சரியானவர்களை உங்கள் உதவிகள் சென்றடைய வேண்டுமா ? இச்செய்தியை படியுங்கள்.

 

எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் கற்பித்தலில் பயனடைந்து சிறப்பான புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 10மாணவர்களை இவ்வருட எமது உதவித்திட்டத்தின் கீழ் உள்வாங்கியுள்ளோம்.

இம்மாணவர்கள் அனைவரும் விஞ்ஞான , இயந்திரவியல் பீடங்களுக்குத் தெரியவாகியுள்ளார்கள். எமது கல்வித்திட்டத்தில் மருத்துவ , இயந்திரவியல் துறைகளுக்கான தமிழ் மாணவர்களை அதிகரிக்கும் வகையில் கடந்த வருடம் (2013)முதல் உதவி வருகிறோம்.

கடந்த வருடம் அதிகளவிலான மாணவர்களுக்கு உதவ வேண்டியிருந்தும் 11மாணவர்களுக்கு மட்டுமே எமது உதவித்திட்டத்தின் கீழ் உதவ முடிந்தது. காரணம் அதிகளவிலான உதவிகள் கிடைக்காமையால் அதிகளவான மாணவர்களை உள்வாங்க முடியாது போனது. இப்பதினொரு மாணவர்களுக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் உதவி வருகிறார்.

எமது கல்வித்திட்டத்தின் கீழ் உதவி பெறும் இவர்கள் எம்மால் வழங்கப்படும் பிரதேசங்களுக்கான கல்விச் செயற்பாடுகளுக்கு எதுவித சிறப்பான கொடுப்பனவுகளும் இல்லாமல் இலவசமாக தங்கள் ஆற்றலை வழங்கி வருகிறார்கள்.

போரால் பாதிக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக தங்களது ஆற்றலையும் நேரத்தையும் தரும் இம்மாணவர்களின் பல்கலைக்கழகப் படிப்பை முடிப்பதற்கான உதவிகளை புலம்பெயர் தமிழ் உறவுகளிடம் வேண்டுகிறோம். ஒரு பல்கலைக்கழக மாணவரை படிப்பித்து விடுவதன் மூலம் திறமையான தமிழ் மாணவர்கள் பலநூறு பேரை உருவாக்கித் தருவார்கள்.

ஒரு மாணவருக்கு அல்லது மாணவிக்கு மாதாந்தம் 5ஆயிரம் ரூபா (அண்ணளவாக 30€) தேவைப்படுகிறது. இவ்வுதவியை வழங்கி இம்மாணவர்களின் வாழ்வை மாற்றுவதன் மூலம் எங்கள் இளைய சந்ததியின் கல்வியையும் முன்;னேற்ற முடியும்.

ஏற்கனவே 2010 – 2012 வரையில் 60வரையான மாணவர்களுக்கு நேசக்கரம் மூலம் பல்கலைக்கழக உதவியிருந்தோம். இவர்களில் அதிகளவிலான மாணவர்கள் வன்னிமாணவர்கள் , மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை , செஞ்சோலையில் வளர்ந்தவர்களும் அடங்கியிருந்தனர். கொழும்பு ,யாழ் பல்கலைக் கழகங்களிலேயே இவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு மாணவரையும் ஒவ்வொருவர் பொறுப்பேற்று உதவிகளையும் உரிய மாணவர்களுக்கே நேரடியாக வழங்கியிருந்தார்கள். சிலர் நம்மால் குறித்த தொகையைவிடவும் அதிகளவில் மாணவர்களின் நன்மை கருதி உதவியிருந்தார்கள். மாணவர்களுடனான நேரடி தொடர்புகளையும் சிலர் நேரில் தாயகம் சென்று சந்தித்தும் தொடர்புகளை பேணி வந்தார்கள். இங்கிருந்து உதவிய சிலர் தவறான முறையில் சில மாணவர்களை அணுகி அவர்களை வருத்தியிருந்ததையும் இங்கு குறிப்பிடுவதில் வருந்துகிறோம்.

ஆனால் சில மாணவர்கள் அதிகளவில் கிடைத்த உதவிகளை தவறான முறைகளில் பயன்படுத்தியவையும் நடந்திருந்தது. உதவிய பலர் நாங்கள் குறித்த மாணவர்களின் கல்வி முன்னேற்றம் வளர்ச்சியை அவதானிப்பதையும் விரும்பாமல் எம்மிடமிருந்து நிரந்தரமாக மாணவர்களின் தொடர்புகளையும் நிறுத்தத் செய்திருந்தார்கள். அதிகளவிலான ஆசையினால் சில மாணவர்கள் பாதியில் தங்கள் படிப்பை தொடர முடியா நிலமைக்கும் ஆளானார்கள்.

இந்நடவடிக்கைகளால் தொடர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவிகளை ஒழுங்குபடுத்துவதையும் நிறுத்தியிருந்தோம். காரணம் உதவியவாகள் சிலரும் மாணவர்கள் சிலரும் செய்த ஏமாற்றுக்களால் பல்கலைக்கழக மாணவர்களின் உதவி தொடர்பில் ஒதுங்கியே இருந்தது நேசக்கரம்.

எமது உதவியில் படித்து முடித்தவர்களில் 15வரையான மாணவர்கள் மட்டுமே இன்றும் தொடர்போடு இருக்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த உதவியை சரியாக பயன்படுத்தியதையும் எமக்கு தொடர்ந்து அறியத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் பாதிக்கப்பட்ட உதவி தேவைப்படும் பல மாணவர்களின் கல்வி கூட உதவிகள் கிடைக்காமல் இடைநின்று போனதை உரிய மாணவர்கள் எமக்கு அறிவித்துத் தம்மைப் போன்ற ஏழை மாணவர்களை இனங்கண்டு உதவுமாறு கேட்டிருந்தார்கள். சிலருடைய தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தை கைவிடக்கூடாதென்ற நோக்கில் தான் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தை உருவாக்கினோம்.அதிலும் உதவிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் சமூகப்பொறுப்பு உள்ளவர்களாகவும் தனது கல்வியை அடுத்த சந்ததிக்கு எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வழங்கக்கூடியவர்களையுமே தேர்ந்தெடுக்கிறோம்.

வழங்கப்படும் உதவிக்குப் பதிலாக உரிய மாணவர்கள் தங்கள் ஆற்றலை ஏழைக்கிராமங்கள் , ஏழை மாணவர்களுக்கு கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தந்துதவ வேண்டுமெனும் நிபந்தனையின் அடிப்படையில் மீண்டும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளோம்.

வழங்கப்படும் உதவியையும் உதவுவோர் எமக்குத் தெரியப்படுத்தும் அதேவேளை எம்மால் நிர்ணயிக்கப்படும் தொகையிலிருந்து ஒரு சதம் கூட அதிகமாக வழங்கக்கூடாதென்ற நிபந்தனையை உதவிகளை வழங்குவோருக்கும் தெரிவித்துள்ளோம்.

மாணவர்களுடனான தொடர்புகளை உதவுவோர் பேணிக்கொள்ளலாம். ஊருக்கு சென்று வரும்போது மாணவர்களை சந்திக்கலாம் போன்ற அனைத்து தொடர்புகளையும் பேணிக்கொள்ளலாம். அனைத்து விடயங்களும் எமக்குத் தெரியப்படுத்தி தொடர்பாடலை பேணுவதனையே விரும்புகிறோம்.

காரணம் அதிகளவிலான பெருந்தொகை உதவிகள் குறித்த மாணவர்களைத் தடம்மாற்றி அவர்களது எதிர்காலத்தை சிதைத்துவிடக்கூடாதென்ற நல்லெண்ண நோக்கில் உண்மையான நிலைப்பாடுகளை இங்கு உதவும் புலம்பெயர் தமிழ் கருணையாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் குளிர் தேசங்களிலிருந்து மிகுந்த சிரமங்களோடு உழைத்து வழங்கும் ஒவ்வொரு சதமும் சரியான முறையில் பயன்பட வேண்டும். அதேவேளை உங்கள் உதவியை பெறும் மாணவர் தன்போன்ற மாணவர்களுக்கு சமூக அக்கறையோடு உதவவும் வேண்டும். அதுவே உங்கள் உழைப்பை நீங்கள் வழங்கியமைக்கான பயனாக முடியும்.

இவ்வருடத்திற்கான தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கும் மேமாதம் முதலாம் திகதியிலிருந்து உதவிகளை வழங்க வேண்டும். உதவக்கூடிய கருணையாளர்கள் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உதவிகளுக்காக காத்திருக்கிறோம்.

உதவி தேவைப்படும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் விபரங்கள் வடிவில் :-

help for students2014

உதவி தேவைப்படும் மாணவர்களின் விபரங்களை பார்வையிட மேலுள்ள இணைப்பில் அழுத்தி பாருங்கள். உதவ விரும்புவோருக்கு மாணவர்களின் பெயர் விபரங்கள் அனைத்தும் தரப்படும்.

உதவுவதற்கு:-

Telephone:  Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

Paypal Account – nesakkaram@gmail.com

http://nesakkaram.org/ta/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக விரைவில் உங்களோடு இது பற்றி கதைக்கிறன் அக்கா.

Posted

மிக்க நன்றிகள் யாயினி.

Posted
இலக்கம் 5 மாணவருக்கு நோர்வேயிலிருந்து சிறி என்ற உறவு உதவ முன்வந்துள்ளார். இலக்கம் 3 யாயினி உதவ முன்வந்துள்ளார்.
 
மீதி 8மாணவர்களையும் ஒவ்வொருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் உதவியாக இருக்கும். உங்கள் உதவியைப் பெறும் இவர்கள் போரால் பாதிப்புற்ற பின் தங்கிய பிரதேச மாணவர்களின் வளர்ச்சியில் தங்கள் கல்வியை பயன்படுத்துவார்கள். ஒரு மாணவரை நீங்கள் படிப்பித்து விடுகிற சமநேரம் அவர்கள் மேலும் பலரை உருவாக்கித் தருவார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாந்தி கல்வி என்பது ஒரு பிள்ளையின் எதிர்காலம்...

உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

Posted

சாந்தி கல்வி என்பது ஒரு பிள்ளையின் எதிர்காலம்...

உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

மிக்க நன்றிகள் சகாரா உங்கள் ஆதரவுக்கு. உங்களுக்கு விரும்பிய ஒரு பிள்ளையை தெரிவு செய்து சொல்லுங்கள் விபரங்களை மடலிடுகிறேன்.

 

இலக்கம் 1இற்கான மாணவனை பெயர் குறிப்பிட விரும்பாத தம்பியொருவர் உதவ முன்வந்துள்ளார். இதுவரை 4பிள்ளைகளுக்கான உதவிக்கு 4பேர் முன்வந்துள்ளார்கள். இன்னும் 6மாணவர்கள் இவர்களுக்கான ஆதரவினையும் உறவுகள் வழங்கி அவர்களத கல்விக்கு ஒளியேற்றுவீர்கள் என நம்புகிறோம்.

Posted

4வது இலக்கத்துக்குரிய பெண் பிள்ளையை சகாரா பொறுப்பேற்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

காலத்தால் அழியாத தங்களின் சேவைக்கு நன்றி.  :)

Posted

காலத்தால் அழியாத தங்களின் சேவைக்கு நன்றி.  :)

இப்பயணத்தில் நீங்களும் இணையுங்கள்.கருத்துக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.