Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான: அமெரிக்கா வெளியிட்ட தீர்மான வரைவும், அனைத்துலகத்தமிழர்களின் அவநம்பிக்கைகளும்?

Featured Replies

fragezeike_20090901.jpg

 அமெரிக்கா வெளியிட்ட தீர்மான வரைவும், அனைத்துலகத்தமிழர்களின் அவநம்பிக்கைகளும்?

  • ஜெனிவா களத்தில் ஒரு பெரும் ஆட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்த தமிழர்கள் பலருக்கும், ஆரம்பத்திலேயே ஏமாற்றம் ஏற்பட்டு விட்டது. ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளன்று, அமெரிக்கா வெளியிட்ட தீர்மான வரைவு, தான் அதற்குக் காரணம். இந்த தீர்மான வரைவு, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தவில்லை என்றும், அது கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் போன்றே, அரசாங்கத்துக்கு காலஅவகாசத்தை வழங்குவதாக உள்ளது என்றும், தமிழர் தரப்பில் பலரும் குறைபட்டுக் கொள்வதை காணமுடிகிறது. nam_namakkaaka_2009.jpgகடந்தவாரம் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவு இன்னமும், இறுதி செய்யப்படவில்லை. அது இதே வடிவத்துடன் தான் நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்குள், தமிழர் தரப்பில் இருந்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் அறிக்கைகள், கண்டனங்கள் எல்லாமே குவியத் தொடங்கி விட்டன. அமெரிக்கா ஏமாற்றி விட்டதாகவும், மேற்கு நாடுகள் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டதாகவும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் காலை வாரி விட்டதாகவும், ஊடகங்கள் பலவும், எழுதித் தள்ளுகின்றன. குறிப்பாக இணைய ஊடகங்களில் தான், இதனைப் பெரியதொரு ஏமாற்றமாக காட்டும் முயற்சிகள் நடப்பதை அவதானிக்கலாம். இந்தளவுக்கும், அமெரிக்கத் தீர்மான வரைவு, ஒன்றும் முற்றுமுழுதாக, சர்வதேச விசாரணையை வலியுறுத்தவில்லை என்று கூறமுடியாது.   சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை இந்த வரைவு முழுமையாக வரவேற்றுள்ளது.  அதுபோலவே, போரின் போது நடந்த குற்றங்கள் தொடர்பாக, நவநீதம்பிள்ளை தலைமையிலான ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும், உள்நாட்டு விசாரணை செயல்முறைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் இந்த வரைவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும், இந்த தீர்மான வரைவு, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை - அதற்கான வழிமுறையை வலியுறுத்தவில்லை என்பதே, பலரதும் ஆதங்கமாகத் தெரிகிறது. அதற்காக, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் தலைமையில் நடத்தக் கோரும் விசாரணையை, சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான அழைப்பாக கருத முடியாது என்ற வாதம், அபத்தமானது. 

    போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாகி விட்ட நிலையிலும், இந்தப் போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்ற ஆதங்கமும், வருத்தமும் தமிழர்களிடம் இருப்பது உண்மையே. உண்மையைச் சொல்லப் போனால், இப்போது இத்தகைய ஆதங்கமும் கவலையும் தமிழர்களை விட, தமிழரல்லாதவர்களிடம் அதிகமாக உள்ளது என்று கூடச் சொல்லலாம்.  குறிப்பாக, இலங்கை அரசாங்கம் உள்நாட்டு விசாரணையை செய்யும் என்று தாம் நம்பவில்லை என்றும், சர்வதேச விசாரணையே ஒரே வழி என்றும், இலங்கையில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் கூட குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இது போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டுவோருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பலம். இத்தகைய நிலையில், போர்க்குற்றங்கள் குறித்து இன்றே சர்வதேச விசாரணையை நடத்தி, நாளையே தீர்ப்பை வழங்கி, அதையும் உடனடியாகவே நிறைவேற்றி விடவேண்டும் என்ற அவசரம், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள சில தமிழர்களிடமும் அமைப்புகளிடமும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. இந்த அவசரம், உலகளாவிய நடவடிக்கை ஒன்றின் போது, நடைமுறைக்கு ஒத்துவராதது. அதைப் புரிந்து கொள்ளாததாலும், இந்தமுறை தீர்மானத்தில் எப்படியும் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்படும் என்ற மிகையான நம்பிக்கையூட்டலும் தான், பலரை ஏமாற்றத்துக்குள் தள்ளியுள்ளது.  

    ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை என்பதைக் கூட, ஒரு சர்வதேச விசாரணையாக ஏற்றுக் கொள்ள முடியாதளவுக்கு, தமிழர்களிடம் இந்த மாயத்திரை உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஓய்வுபெறப் போகிறார். இதனால், 27வது கூட்டத்தொடரில், வாய்மொழி அறிக்கையைக் கூட அவரால் கொடுக்க முடியாது போகும். இந்தநிலையில், இந்த தீர்மான வரைவின் படி, 28வது கூட்டத்தொடரில், முழுமையான விசாரணை நடத்தி அளிக்கப்படும் அறிக்கை சுதந்திரமாக அமையுமா என்ற சந்தேகம், ஏற்படுத்தப்பட்டிருப்பது கூட, துரதிஸ்டமானதே.  ஏனென்றால், நவநீதம்பிள்ளை ஒரு தமிழராக இருப்பதால் தான், இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது, ஐ.நா மனிதஉரிமை ஆணைக்குழு அக்கறையும், அனுதாபமும் காட்டுகிறது என்ற கருத்து உருவாக்கப்படுவது மிகவும் தவறானது. 

    இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்ததும், அவற்றுக்கான சாட்சியங்களும், தனியே, ஐ.நா மனிதஉமை ஆணையாளர் பணியகத்தை மட்டும், நியாயம் கேட்கச் செய்யவில்லை. இந்த நியாயத்தின் குரல், ஜெனிவாவைத் தாண்டி - நியூயோர்க்கிலும் எதிரொலிப்பதை மறந்து விடக் கூடாது. எனவே, நவநீதம்பிள்ளை இல்லாத ஒரு சூழலில், நியாயமான விசாரணைகள் நடத்தப்படுமா என்ற கேள்வியை எழுப்புவது, நவநீதம்பிள்ளையின் நடுநிலையின் மீது கேள்வி எழுப்புவதற்கே வசதியாகி விடும்.  குற்றங்கள் நிகழ்ந்தது உண்மையென்றான நிலையில், அதை எவரும், மறைக்கவோ - மறுக்கவோ முடியாது. அண்மையில், அளித்திருந்த பேட்டி ஒன்றில், எத்தகைய சர்வதேச விசாரணை நடத்தப்பட்டாலும் அது இலங்கைக்கு எதிரானதாகவே இருக்கும் என்றும், அத்தகைய விசாரணைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார் அமைச்சர் மகிந்த சமரசிங்க. அதாவது, அரசாங்கத்துக்கே, போரில் குற்றங்கள் நிகழ்ந்தது உண்மை என்பது நன்றாகவே தெரியும். அதனால் தான், எந்தவொரு சர்வதேச விசாரணையினது முடிவும் தமக்குச் சாதகமாக வராது என்று அரசாங்கத்தினால் அறுதியாக கூற முடிகிறது. இத்தகைய நிலையில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால் முன்னெடுக்கப்படக் கூடிய விசாரணைகளின் மீது இப்போதே சந்தேகம் கிளப்ப முனைவது தமிழர் தரப்பிடம் அவநம்பிக்கைகளையே வளர்த்து விடக் கூடியது. 

    ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டுமே, அமெரிக்கத் தீர்மான வரைவு சுட்டிக்காட்டுகிறதேயன்றி, அதற்கான வழிமுறைகள் எதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டவில்லை. இதனால் தான், இந்த தீர்மான வரைவு உண்மையில் எதனைக் கூற வருகிறது என்ற குழப்பம் ஆரம்பத்தில் ஏற்பட்டது. எவ்வாறாயினும், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கப் போவதை, இந்த வரைவு உறுதிப்படுத்துகிறது. இது இப்படியே நிறைவேற்றப்பட்டால் கூட, இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாததாகி விடும். ஏனென்றால், அதற்குரிய ஆணையை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துக்கு, இந்த தீர்மானம், கொடுத்து விடும். அவ்வாறாயின், போர்க்குற்ற விசாரணையை நவநீதம்பிள்ளையின் பணியகம் எவ்வாறு முன்னெடுக்கும் '? எப்போது முன்னெடுக்கும் என்ற கேள்வி உருவாகிறது. 

    ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இந்த தீர்மான விரைவு இப்படியே நிறைவேற்றப்பட்டால், எந்த நேரத்திலும், நவநீதம்பிள்ளையால் இத்தகைய விசாரணைக்கு உத்தரவிட முடியும் என்றே தெரிகிறது. அடுத்த ஆண்டு வரை, இலங்கை அரசாங்கத்தின் செயல்முறை குறித்து எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. 

    ஐ.நா மனிதஉரிமை ஆணையமே இந்த விசாரணைகளை முன்னெடுப்பதானால், அதற்கு மூன்று தெரிவுகள் உள்ளன. 

    பொதுவாகவே, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம், இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை, சிறப்பு விசாரணை அறிக்கையாளர் ஒருவரின் மூலம் அல்லது, விசாரணைக் குழு ஒன்றை நியமிப்பதன் மூலம், அல்லது சுதந்திரமான நிபுணர் குழுவொன்றை நியமிப்பதன் மூலம் மேற்கொள்ளலாம்.இதில், சுதந்திரமான நிபுணர் குழுவொன்றை நியமிக்க முடிவெடுத்தால், ஐ.நாவுக்கு வெளியில் இருந்தே அதற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். ஏனைய இரண்டு சந்தர்ப்பங்களிலும், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொள்வர். தற்போதுள்ள வரைவுத் தீர்மானத்தில், எந்த விசாரணைப் பொறிமுறை குறித்தும் முன்மொழியப்படாத நிலையில், நவநீதம்பிள்ளையால், நிபுணர் குழுவொன்றை அமைப்பதற்கும் தடையில்லை. அத்தகைய நிபுணர் குழு, தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாகவும் இருக்கக் கூடும். அத்தகையதொரு நிபுணர் குழுவின் முடிவு, சுயாதீனமானதாகவே இருக்குமேயன்றி, அது அடுத்து வரப்போகும், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் கருத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறானது. அதேவேளை, பொருளாதாரத் தடையை கொண்டு வரும் யோசனை தீர்மான வரைவில் இடம்பெறும் என்று நம்பியவர்களுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. ஆனால், பொருளாதாரத் தடையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையால் கொண்டு வரவோ நடைமுறைப்படுத்தவோ முடியாது என்பதே உண்மை. 

    ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் விசாரணை அறிக்கையை அடுத்து, வேண்டுமானால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். ஆனாலும், அதை பாதுகாப்புச் சபை மூலமே மேற்கொள்ள முடியும். ரஷ்யாவும் சீனாவும் அதற்கு இடமளிக்காது. அமெரிக்காவும், மேற்குலகும் வேண்டுமானால், அத்தகைய தடைகளை தன்னிச்சையாகவோ தமக்கள் ஒன்றிணைந்தோ கொண்டு வரமுடியும். அதுகூட இப்போதைக்குச் சாத்தியமில்லை. அதற்காக, அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்வதாகவோ, தமிழரை ஏமாற்றி விட்டதாகவோ கருத முடியாது. படிப்படியான நகர்வுகள் மூலம் தான், சர்வதேச சமூகம் எதையும் செய்யும். அதற்குப் பொறுமையும் புத்திசாலித்தனமான நகர்வுகளும் தான் அவசியம். அதனை தமிழர் தரப்பு தொடர்ந்து கடைப்பிடித்தால் தான், பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அடைய நினைக்கும் இலக்கை எட்டமுடியும். 

தொல்காப்பியன்.தாய்நாடு .

 

  • கருத்துக்கள உறவுகள்

"Welcoming and acknowleding the progress made by the Government of Sri Lanka..."

 

"Welcoming the successful Provincial Council election..."

 

"Expressing appreciation for the efforts of the Government of Sri Lanka..."

 

"Expressing deep concern..."

 

"Expressing serious conern..."

 

"Taking note of the report of the LLRC..."

 

 

USA ignores requests of Mannaar Bishop on UNHRC Resolution
http://tamilnet.com/art.html?catid=13&artid=37083

 

1622039_757421757602370_1915192988_n.jpg

 

1891234_10203529713307488_1837517530_n.j

Edited by செங்கொடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.