Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனும், அனந்தியும் ஜெனீவாவுக்குப் பயணம்! - தனித்தனியாகவே செயற்படுவர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சுமந்திரனும், அனந்தியும் ஜெனீவாவுக்குப் பயணம்! - தனித்தனியாகவே செயற்படுவர். 
[Wednesday, 2014-03-12 07:55:13]
un-human-rights-council-120314-150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு மீண்டும் ஜெனீவா பயணமானார். இதேசமயம் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் மீண்டும் ஜெனீவா சென்றிருக்கின்றார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெனீவா புறப்பட்டார் என்று கூறப்படுகின்றது. ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது அமர்வின் போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் அட்டூழியங்களுக்கு நீதி கேட்கும் ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதியாக சுமந்திரன் எம்.பி. அங்கு சென்றிருக்கின்றார்.

இதேசமயம், வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பு தனது பிரதிநிதியாக அனந்தி சசிதரன் ஜெனீவா செல்வார் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.கடந்த மாத முற்பகுதியில் ஜெனீவா சென்றிருந்த சுமந்திரன் எம்.பி.யும், அனந்தி சசிதரனும் அங்கு ஒன்றாகப் பல நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கைத் தமிழர் தரப்புக் கருத்துக்களை வலிமையாக முன் வைத்திருந்தனர்.தாங்கள் கூட்டாகப் பல நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்தமை குறித்து நாடு திரும்பியதும் பத்திரிகைகளுக்கு சிலாகித்து அனந்தி சசிதரன் பேட்டியளித்திருந்தார்.

எனினும், கடந்த வாரம் மீண்டும் ஊடகவியலாளரைச் சந்தித்த அனந்தி சசிதரன், மேற்படி வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தமது கருத்தை வெளியிட சுமந்திரன் எம்.பி. தம்மை அனுமதிக்கவில்லை என்ற சாரப்பட பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் இப்போது இருவருமே தனித்தனியாக ஜெனீவாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர். இருவரும் தத்தமது தனித்தனி நிகழ்ச்சித் திட்டத்தின் படி அங்கு தமது பணிகளை முன்னெடுப்பர் என்று கூறப்பட்டது.

http://www.seithy.com/breifNews.php?newsID=105481&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் வீண் செலவு.  ஒரே தரத்தில விசயத்தைச் சரியாச் செய்திருக்கலாம்.  இப்ப குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் வருகுது எண்டவுடன யு ரேண் எடுத்திருக்கினம் போல.  சும்மா தேள்வையில்லாத  அரசியல் மேதாவித்தனங்களைக் காட்ட வெளிக்கிட்டு மூக்குடைபட்டுப்போய் சுதாரிச்சுக்கொண்டு திரும்பி ஓடினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரனும், அனந்தியும் ஜெனீவாவுக்குப் பயணம்! - தனித்தனியாகவே செயற்படுவர். 

[Wednesday, 2014-03-12 07:55:13]
un-human-rights-council-120314-150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு மீண்டும் ஜெனீவா பயணமானார். இதேசமயம் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் மீண்டும் ஜெனீவா சென்றிருக்கின்றார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெனீவா புறப்பட்டார் என்று கூறப்படுகின்றது. ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது அமர்வின் போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் அட்டூழியங்களுக்கு நீதி கேட்கும் ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதியாக சுமந்திரன் எம்.பி. அங்கு சென்றிருக்கின்றார்.

இதேசமயம், வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பு தனது பிரதிநிதியாக அனந்தி சசிதரன் ஜெனீவா செல்வார் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.கடந்த மாத முற்பகுதியில் ஜெனீவா சென்றிருந்த சுமந்திரன் எம்.பி.யும், அனந்தி சசிதரனும் அங்கு ஒன்றாகப் பல நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கைத் தமிழர் தரப்புக் கருத்துக்களை வலிமையாக முன் வைத்திருந்தனர்.தாங்கள் கூட்டாகப் பல நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்தமை குறித்து நாடு திரும்பியதும் பத்திரிகைகளுக்கு சிலாகித்து அனந்தி சசிதரன் பேட்டியளித்திருந்தார்.

எனினும், கடந்த வாரம் மீண்டும் ஊடகவியலாளரைச் சந்தித்த அனந்தி சசிதரன், மேற்படி வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தமது கருத்தை வெளியிட சுமந்திரன் எம்.பி. தம்மை அனுமதிக்கவில்லை என்ற சாரப்பட பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் இப்போது இருவருமே தனித்தனியாக ஜெனீவாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர். இருவரும் தத்தமது தனித்தனி நிகழ்ச்சித் திட்டத்தின் படி அங்கு தமது பணிகளை முன்னெடுப்பர் என்று கூறப்பட்டது.

http://www.seithy.com/breifNews.php?newsID=105481&category=TamilNews&language=tamil

இந்த செய்தி முதலில் உதயனில் வந்தது ...படித்து பார்ப்பவர்களுக்கு அங்கே நடக்கிற விடயங்கள் சொல்லாமலே விளங்கும் ...

தமிழக காங்கிரஸ் நிலை TNAக்கு  வராமல் விட்டால் சரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.