Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தூதுவர் யாழ். அரச அதிபரை சந்திப்பு; அபிவிருத்திக்கு உதவுவதாகவும் உறுதியளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1cffaf224da238b8c8ed2050fd45dda2.jpg

இலங்கைக்கான கனடா தூதுவர் யாழ்.மாவட்ட அரச அதிபரைச் சந்தித்து கலந்துரையாடினார். 

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான கனடா தூதுவர் ஷலீ வைற் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை  சந்தித்து அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார். 

சந்திப்பினையடுத்து அரச அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாவது,

வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமானவர்கள் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். எனவே அவர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்று தூதுவர் என்னிடம் வினவியிருந்தார்.

அவ்வாறான முயற்சிகள் எவையும் இதுவரை இடம்பெறவில்லை. எனினும் நீங்கள் உங்கள் நாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் பேசுங்கள். அவர்கள் முதலீடுகளை செய்வதற்கு முன்வருவார்கள் ஆனால் நாமும் அதற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் என பதில் வழங்கினேன்.

மேலும் போருக்கு பின்னர் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேலும் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த உதவிகளை கனடா வழங்கும் என்றும் என்னிடம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் உலக உணவு திட்டத்தினை யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைளில் மேலும் பல பாடசாலைகளுக்கு வழங்குமாறு நான் தூதுவரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கான நடவடிக்கையினை தமது நாட்டுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதன் பின்னர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கும் பெண் தலைமைக்குடும்பங்களுக்கும் அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டு உதவித்திட்டங்களை வழங்குமாறும் அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளேன்.

எனினும் இதுகுறித்து தாம் விரைவில் பதில் தருவதாகவும் என்னிடம் உறுதியளித்தார்.மேலும் மீள்குடியேற்றம் உயர்பாதுகாப்பு வலையம் குறித்தும் தூதுவர் கேள்வி எழுப்பி இருந்தார் எனினும் தற்போது குறித்த விடயங்கள் தொடர்பில் அதிகாரிகள் கலந்துரையாடி வருவதனால் பதில் எதுவும் தற்போது வழங்க முடியாது என பதிலளித்ததாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.  

 

DSCF6483.jpg

 

DSCF6463.jpg

 

DSCF6466.jpg

 

DSCF6469.jpg

 

DSCF6478.jpg

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=159322735213174641

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் போருக்கு பின்னர் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேலும் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த உதவிகளை கனடா வழங்கும்

 

 

யாழ் தேவி என்ஜீன்  மொன்ட்ரியல் - கனடா இல் செய்து ...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.