Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகள் வீட்டில் சோதனை

Featured Replies

140315190237_pilot_house_464x261_ap.jpg

 

சோதனை நடந்த விமானி பரிக்கின் வீடு

 

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் வீடுகளில் மலேசியப் போலிசார் சோதனைகளை நடத்தியிருக்கின்றனர்.

கடத்தப்பட்டதாக அல்லது விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகளான, ஸஹாரி அஹ்மது ஷா (53) மற்றும் பரிக் அப்துல் ஹமித் (27) ஆகிய இருவரின் கோலாலம்பூர் வீடுகளிலும் மலேசியப் போலிசார் சனிக்கிழமை சோதனைகளை நடத்தினர்.

 

அந்த விமானிகளின் குடும்ப வாழ்க்கை மற்றும் மனோநிலை ஆகியவைகள் குறித்து ஆராய இந்த சோதனைகள் நடத்தப்பட்டன என்று கூறப்படுகிறது.

இந்தச் சோதனைகள் குறித்த புதிய விவரங்கள் எதையும் போலிசார் தரவில்லை.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தொடர்பு சாதனக் கருவிகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டதாக மலேசியப் பிரதமர் கூறியதை அடுத்து இந்த சோதனைகள் நடந்தன.

விமானம் இதன் பின்னர் நடுவழியில் தனது பாதையை திடீரென்று மாற்றிக்கொண்டது என்று நம்பப்படுகிறது.

இந்த போயிங் 777 ரக விமானம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற் கொண்டிருந்தபோது, பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் ராடார் தொடர்பை இழந்தது.

ஆனால் ராடார் தொடர்பை இழந்த பின்னரும் சுமார் ஏழு மணி நேரத்துக்கு இந்த விமானம் பறந்திருக்கலாம் என்று செய்கோள் ஆதாரங்கள் காட்டுவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரஜாக் கூறியிருந்தார்.

இந்த விமானம் கஜக்ஸ்தானிலிருந்து இந்தியப் பெருங்கடல் பரப்பு வரை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இது ஒரு விமானக் கடத்தல் முயற்சி என்று கூறுவதைத் தவிர்த்த மலேசியப் பிரதமர், ஆனால் தாங்கள் " எல்லா சாத்தியக்கூறுகளையும்" விசாரித்து வருவதாகக் கூறினார்.

140314165358_china_malaysia_plane7_624_t

விமானம் பறந்த பாதையைக் காட்டும் வரை படம்

தேடுதல் வேட்டையை இந்தியா நிறுத்தியது

இதனிடையே, அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகேயும், வங்காள விரிகுடாவிலும், இந்த விமானத்தைத் தேடும் வேலையை இந்தியா இடை நிறுத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது.

மலேசிய அதிகாரிகளின் வேண்டுகோளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அது கூறியிருக்கிறது.

தேடும் பணி குறித்து மலேசியாவிடமிருந்து மேலும் புதிய வேண்டுகோள்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்திய கடற்படையும், விமானப்படையும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதிகளிலும், வங்காள விரிகுடா பகுதியிலும் இந்தத் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுவந்தன.

மலேசியா இப்போது இந்த ஒட்டுமொத்த தேடுதல் நடவடிக்கையையே மீள் பரிசீலனை செய்து வருவதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

"முழு" விவரங்களைக் கோருகிறது சீனா

இந்த விமானத்தை தேடும் முயற்சிகள் பற்றி தனக்கு " சரியான மற்றும் முழுமையான" தகவல்களைத் தருமாறு, சீனா மலேசியாவைக் கோரியிருக்கிறது.

விமானத்தில் பயணம் செய்த 239 பேரில், 153 பேர் சீனப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் 38 மலேசியர்களும், அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், இந்தியா ,ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாட்டவர்களும் பயணம் செய்தனர்.

அனைத்துக் கோணங்களும் பரிசீலனை

இந்த விசாரணையில், பயங்கரவாதம், கடற்கொள்ளை, கூட்டுத் தற்கொலை என அனைத்து கோணங்களும் பரிசீலிக்கப்படுவதாக பிபிசியின் கோலாலம்பூர் செய்தியாளர் கூறுகிறார்.

தலைமை விமானி ஸஹாரீ மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்தார். அவர் மிக அனுபவம் மிக்க விமானியாகக் கருதப்படுகிறார்.

இணை விமானி, பரிக், சமீபத்தில்தான் போயிங் ரக விமானங்களை ஓட்டும் விமானியாக பணி உயர்வு தரப்பட்டார். அவர் திருமணம் செய்து கொள்வது குறித்து பரிசீலித்துக் கொண்டிருந்தார் என்று கருதப்படுகிறது.

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/03/140316_malaysianpilot.shtml

 

  • தொடங்கியவர்

விமானத்தின் சமிக்ஞைகள் செய்மதி கட்டமைப்புகளில் பதிவு, விமானி வீட்டில் பலத்த சோதனை, விமானத்தை இயக்குவதற்கான மாதிரி விமானி அறையும் கண்டுப்பிடிப்பு, விமானி மீதும் சந்தேகம்

Satellite-data-shows-hijacked-MH370.jpg
விமானத்தின் சமிக்ஞைகள் செய்மதி கட்டமைப்புகளில் பதிவு

காணாமல் போனதாகக் கூறப்படும் மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தமது செய்மதி கட்டமைப்புக்களில் பதிவாகியுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செய்மதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
எம் ஏச் 370 என்ற குறித்த விமானம் 239 பேருடன் கடந்த 8ஆம் திகதி காணாமல் போயிருந்தது.
 
இந்த விமானத்தை தேடும் பணிகள் சர்வதேச நாடுகளின் கப்பல்கள் மற்றும் விமானங்களின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Miyazaki-Airport-%28Japan%29F05f5f.jpg
இந்த நிலையிலேயே பிரித்தானியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த சமிக்ஞைகள், தேடுதல் நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவக்கூடும் எனவும் பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
 
இதேவேளை, குறித்த விமானம் தொடர்பிலான உண்மைத்தகவலை வெளியிடுமாறு சீனா, மலேசியாவைக் கோரியுள்ளது.
 
அத்துடன், தமது தொழிநுட்ப வல்லுனர்களை மலேசியாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் சீனா அறவித்துள்ளது.
 
விமானத்தின் தொலைத்தொடர்பு கட்டமைப்பு திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
 
article-2581817-1C5441ED00000578-457_964
 
விமானியின் வீட்டில் பலத்த சோதனை
 
காணாமல் போன ஆர் 370 விமானம் கடத்தப்பட்டிருக்கக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து அந்த விமானத்தின் விமானியான கேப்டன் சஹாரியின் வீட்டில்பொலிஸார் சோதனை நடத்தி உள்ளனர்.
 
காணாமல் போன ஆர் 370 விமானத்தின் பாதையைத் தெரிவிக்கும் டிரான்போன்டர்  கருவியை விமானத்தில் இருந்தவர்கள்தான் வேண்டுமென்றே நிறுத்தியிருக்கின்றார்கள் என்றும் அதனால் விமானம் கடத்தப்பட்டிருக்கும் சாத்தியம் அதிகரித்திருக்கின்றது என்றும் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள், விமானிகள், விமானப் பணியாளர்கள் என அனைவரும் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்பிற்கும், புலனாய்வுகளுக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள்.
 
விமானி சஹாரியின் வீடு மலேசியக் காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி படங்களோடு செய்திகள் வெளியிட்டிருக்கின்றது.
 
 
 
மாதிரி விமானி அறை கண்டுபிடிப்பு
 
இந்த விமானியின் வீட்டில் சிமுலேட்டர் (ளுiஅரடயவழச) எனப்படும் போயிங் 777 விமானத்தை இயக்குவதற்கான மாதிரி விமானி அறை போன்ற பகுதி நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காணாமல் போனதும் சஹாரி செலுத்திய போயிங் 777  விமானம்தான் என்ற நிலையில் ஏன் அவர் இப்படி ஒரு மாதிரி அறையை வீட்டில் நிர்மாணித்தார் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
 
சந்தேகம் 
 
விமானம் செலுத்துவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அந்த விமானி தனது பொழுது போக்கிற்காக இப்படி ஒரு மாதிரியை நிர்மாணித்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
 
மாதிரி விமானி அறையில் சஹாரி இருப்பது போன்ற புகைப்படம் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதால், அவர் இந்த நடவடிக்கையை இரகசியமாக செய்திருக்கவில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
pilot-zaharie-ahmad-shah-malaysia-airlin
அந்த புகைப்படத்தில், மாதிரி விமானி அறையோடு, மூன்று கணினிகள், கணினித் திரைகள், கம்பிகளுடன் கூடிய தொலைத் தொடர்புக் கருவிகளும் இணைக்கப்பட்டிருப்பது தெரிகின்றது.
 
ஷா ஆலாமில் வசிக்கும் 53 வயதான சஹாரி அகமட் ஷா மிகுந்த சமூக அக்கறை கொண்டவர் என்றும் அவரை நம்பி தாராளமாக விமானத்தில் ஏறலாம் என்றும் காரணம் விமானப் பயணிகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் தனது உயிரைப் பணயம் வைத்து செயலாற்றக் கூடிய மனோபலம் கொண்டவர் அவர் என அவரது பக்கத்து வீட்டார் கூறியதாகவும் சிஎன்என் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
நேற்று பிற்பகல் பிரதமர் நஜிப், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு சிறிது நேரத்திற்குப் பின்னர் உடனடியாக காவல்துறையினர் சஹாரியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
 
காணாமல் போன விமானம் பற்றி தகவல்கள் ஏதும் கிடைக்குமா எனத் துப்பு துலக்கவே காவல் துறையின் வீட்டை சோதனையிட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
 
பினாங்கில் பாலிக் புலாவில் உள்ள சஹாரியின் குடும்ப இல்லத்தைச் சோதனையிடுவதற்காக தங்களுக்கு இன்னும் ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் காவல் துறை தலைவரின் கட்டளைக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் பினாங்கு காவல் துறையின் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாஃபி தெரிவித்துள்ளார்.
 
 
9/11 போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தல்?
 
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதியன்று அமெரிக்கா பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி  தரைமட்டமாக்கப்பட்ட உலக வர்த்தக இரட்டை கோபுர கட்டிடங்கள்போன்று மாயமான மலேசிய விமானத்தை கடத்தி இந்தியாவை தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்று Top-10-Worst-Deadliest-Terrorist-Attacksசந்தேகிக்கப்படுகிறது.
 
மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு கடந்த சனிக்கிழமை கிளம்பிய விமானம் மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
 
சீனா 10 செயற்கைக்கோள்களை விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்தியாவும் தனது கடற்படையை தேடல் வேட்டையில் இறக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று இத்தனை நாட்கள் கூறப்பட்டது. ஆனால் தற்போது விமானம் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
 
இந்நிலையில் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளரும், முன்னாள் அமெரிக்க துணை செயலாளருமான ஸ்ட்ரோப் டால்பாட் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
 
9.11 தாக்குதல் போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
 
 
 
மலேசியா விமானத்தை தேடும் பணி சென்னை கடற்கரை வரை நீட்டிப்பு
 
காணாமல் போன மலேசியா விமானத்தை தேடும் பணி சென்னை கடலிலில் இருந்து சுமார் 300 கி.மீட்டர் தொலைவு வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்தியப்பெருங்கடல் பகுதியில்
இந்த நிலையில் மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் தேட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் அடிமட்டத்தில் அந்த விமானம் சிக்கி இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்தான், இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளதாக அமெரிக்க ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து துறை வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
 
அந்தமான் கடல் பகுதியில்
மலாக்கா ஜலசந்திக்கு மேற்கே அந்தமான் கடல் பகுதியில் இந்த விமானத்தை தேடும் பணியில், இந்தியாவுடன் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி-3சி ஆரியன் கண்காணிப்பு விமானம் ஈடுபட உள்ளது.
article-2581488-1C502A6A00000578-886_634
சென்னை கடற்கரை வரை
இந்த நிலையில், மலேசிய விமானத்தை தேடும் பணி சென்னை கடற்கரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மலேசியா அரசின் வேண்டுகோளை அடுத்து வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் தேடுதல் பணியை இந்தியா தொடங்கியுள்ளது.
 
வங்காள விரிகுடா பகுதியில்
மலேசிய அரசின் வேண்டுகோளை அடுத்து, இந்தியா 9,000 சதுர கிலோமீட்டர் வங்காள விரிகுடா கடல்பகுதியில் தேடும் பணியை விரிவுபடுத்தியுள்ளது. சென்னை கடலிலில் இருந்து சுமார் 300 கி மீட்டர் தொலைவு வரை தேடும் பணி விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
article-2581488-1C4D911B00000578-358_634
 
 
 

அப்பாடா கண்ண கட்டுது.

எப்ப இந்த டம்மி செய்தி ஓயுமோ?

http://www.youtube.com/watch?v=vi8DIaqBnW4

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல் பைலட் ஆர் ஆள் எண்டு நல்லவடிவாய் விசாரிச்சுப்போட்டுத்தான் பிளைட்டிலை ஏறோணும் போலை கிடக்கு...sad0141.gif

  • கருத்துக்கள உறவுகள்

காமெடி 1

காணாமற்போன நிலையில் தேடப்பட்டுவரும் மலேசிய எயார்லைன்ஸ் விமானம் இறுதியாக ரேடாரில் பதிவாகிய உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 4 மணி நேரம் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் பிஸினஸின்சைடர் என்னும் ஆங்கில இணையத்தளம் வெளியிட்ட தகவலின்படி,

இராணுவ ரேடார் தரவுகளின் அடிப்படையில் 239 பயணிகளுடன் இந்த ஜெட் விமானம் தீவிரவாதிகளால் அல்லது விமான குழுவினால் கடத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என தெரியவருகிறது.

பாரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமானம் எங்காவது தரையிறக்கப்பட்டிருக்கலாம் என தற்போது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

4 மணிநேரத்தில் இந்த விமானம் பல இடங்களை சென்றடைந்திருக்க முடியும். மேற்கு நோக்கில் பறந்து சென்றிருக்கலாம் என்று கருதினால் கூட 2 ஆயிரத்து 530 மைல்கள் வரை பயணம் செய்ய தேவையான எரிபொருள் விமானத்தில் இருந்துள்ளது.

அத்துடன் இந்த விமானம் பொது திசையில் திருப்பட்டு இந்தியா அல்லது பாகிஸ்தான் நோக்கி பயணித்திருக்க வேண்டும் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தமான் தீவுகளில் தரையிறக்க சாத்தியம் இருக்கலாம் என்பதால் அதிகாரிகள் தேடுதல் நடத்தி வருகின்றனர். இந்த தீவுகளில் பல தீவுகள் மக்கள் குடியேறாத அடர்ந்த காடுகளை கொண்டுள்ளன. அங்கு ஒரே ஒரு விமானம் நிலையம் மட்டுமே உள்ளது.

அழித்தொழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையில் உள்ள இலங்கையின் வடக்கில் இருக்கும் சிறிய மற்றும் ஒழுங்கற்ற விமான ஒடுத்தளத்தில் காணாமற்போன போயிங் 777 விமானம் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என வாசகர் யூகித்துள்ளதாகவும் பிஸினஸின்சைடர் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் குறிப்பிட்ட அந்த பகுதி மோதல்களுக்கு வல்லமை பெற்ற இடமாக காணப்பட்டது.

வடக்கில் உள்ள பெரும்பான்மை தமிழ் சமூகத்தின் பிரிவினைவாத அமைப்பான தமிழ்ப் புலிப் போராளிகளை இலங்கை இராணுவம் 2009 ஆம் ஆண்டு தோற்கடித்தது.

விடுதலைப் புலிகள், உலகில் உள்ள மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, செயலூக்கம் கொண்ட, பயங்கரமான தீவிரவாத அமைப்பு என 2009 ஆம் ஆண்டு டைம்ஸ் விபரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புலிகளின் தோல்விக்கு பிறகு இலங்கை இராணுவம் அந்த பகுதிகளை மீள கைப்பற்றியது.

காணாமற்போன விமானம் விபத்துக்கு உள்ளாகி இருந்தால் நிச்சயமாக அது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். ஆனால் விமானம் விபத்துக்கு உள்ளான இடம் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.

விமானம் தனது திட்டமிட்ட இலக்கை அடையும் முன்விழுந்து நொருங்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் தடயங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த விமானம் உள்நோக்கத்துடன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அல்லது எங்காவது உள்ள ஒரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்ற பற்பல யூகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என பிஸினஸின்சைடர் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.businessinsider.in/Could-This-Be-Where-The-Plane-Was-Headed/articleshow/32028673.cms

காமெடி 2:

மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் பிரபல சோதிடரான சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

மலேசிய எயார்லைன்ஸ் விமானம் விமானியினால் திட்டமிட்டு கடத்தப்பட்டுள்ளதாகவும் இன்னும் 14 நாட்களில் சகல தகவல்களும் வெளியாகும் எனவும் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

சனி பகவான் துலாராசியில் சஞ்சரித்து இறுதி கட்டத்திற்கு வரும் சந்திப்பத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பல வாயுக்களை கொண்டுள்ள துலா ராசியில் சஞ்சரிக்கும் போது இடம்பெற்ற இந்த சம்பவம் நிச்சயமாக விபத்தாக இருக்க முடியாது.

இது பிரதான விமானியின் முழுமையான உதவியுடன் மிகவும் சூட்சுமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் என்பது தெளிவானது.

இந்த விமானம் கடத்தப்பட்டது என்பதை தெளிவான அறிந்து கொள்ள குறைந்தது இரண்டு வாரங்களுக்கு மேலான காலம் செல்லும் என்பதை மிகவும் பொறுப்புடன் என்னால் கூற முடியும் என சோதிடர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கடத்தப்பட்டிருப்பின் அதன் பாதை  இந்திய நோக்கியதாக இருந்தது என்பது கூட ஒரு திசை திருப்பும் நடவடிக்கையாகவே இருந்திருக்கலாம். அதன் பாதை கிழக்கு நோக்கியதாக ஏன் அமைந்திருக்கக்கூடாது. இந்தோனேசியா முதல் அமெரிக்கா வர பல்லாயிரம் தீவுகள் உள்ளன. அவர் வசிக்கும் பல மக்கள் வெளியுலகத் தொடர்பு குறைந்தவர்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.