Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் தேவைக்காக இராணுவத்தில் தமிழ் பெண்களை இணைக்கும் முகவராக கமலதாஸ்

Featured Replies

kamalathas-150x150.jpg

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலியல் பலாத்கார தேவைகளுக்காக இராணுவத்தில் தமிழ் பெண்களை சேர்க்கும் நடவடிக்களின் முகவராக அரசசார்பற்ற நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் செயற்படுவதாக மட்டக்களப்பில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்கட்டிச்சோலை பகுதியிலும் இதற்கான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தினக்கதிருக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜைகள் அமைப்பு என்ற பெயரில் சிலர் தமிழ் பெண்களை ஆசை வார்த்தைகூறி படையில் இணைப்பதற்கான சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தில் தமிழ் பெண்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் தமிழ்த் தேசியத்தில் பற்று வைத்துள்ள எமது மக்கள் அதனை புறக்கணித்து வருவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தில் இணைவதில் தமிழ் பெண்கள் பின்னடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்குள் சில புல்லுருவிகள் அமைப்புகளின் பெயரைக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவதாக கூறி இராணுவத்தினருக்கு இரகசிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் கீழ் பிரஜைகள் அமைப்பு என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒருவர் பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள பெண்கள் உள்ள வீடுகளுக்கு சென்று இராணுவத்தில் இணையுமாறு கூறிவருவது தொடர்பில் பெற்றோர் என்னிடம் தெரிவித்தனர்.

இவர் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு கோரி அவர்களை மூளைச்சலவை செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருவதாகவும் பெற்றோர் என்னிடம் தெரிவித்தனர்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இவர் தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இவர் மூலமாகவே அண்மையில் மட்டக்களப்பில் சிங்கள மக்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாக காட்டும் புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது.

இவ்வாறு எமது சமூகத்தின் மத்தியில் ஊடுருவியுள்ள இந்த புல்லூருவிகள் தொடர்பில் தமிழ் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இன்று சர்வதேச ரீதியில் தமிழ் மக்களுக்கான உரிமைக்குரல்கள் ஓங்கியொலிக்கும் இந்த வேளையில், இவ்வாறானவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை அரசசார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரிடம் தினக்கதிர் தொடர்பு கொண்டு கேட்ட போது இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்த்துக்கொடுக்கும் தரகராக கமலதாஸ் என்பவர் செயற்படுகின்றார் என வெளிப்படையாக தெரிவித்தார்.

கமலதாஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் அரசசார்பற்ற இணையத்தின் தலைவரும், தற்போதய சிவில் அமைப்பு பிரதிநிதி என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இராணுவ புலனாய்வு முகவராக செயற்படுகிறார் என அந்த அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதி தெரிவித்தார்.

இவர் காத்தான்குடி அமைச்சர் கிஷ்புல்லாவின் சகோதரியின் நிறுவனத்தில் கடமைபுரிகின்றார். கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பற்காக ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பான சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு 116வாக்குகள் பெற்று படுதோல்வி கண்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது பல பெண்களை இராணுவத்தில் இணைத்துக்கொடுப்பதற்காக கொக்கட்டிச்சோலைப்பகுதியில் ஊடுருவியுள்ளார் என்றும் ஒருபெண்ணை இராணுவத்தில் இணைத்துக்கொடுத்தால் இவருக்கு சன்மானமாக ரூபா பத்தாயிரம் கொமிசன் வழங்கப்படுவதாகவும் அவரின் சகாவான லிங்கம் என்பவர் தெரிவித்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

குறிப்பு

இது தொடர்பாக கமலதாஸ் தனது பக்க கருத்தை சொல்ல விரும்பினால் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அதனை பிரசுரிப்போம்- ஆசிரியர்

http://www.thinakkathir.com/?p=57545

கமல் மாமா.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=bxXCk8HOz2c&feature=youtu.be&noredirect=1

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை .... :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.