Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனைத் தப்பிச்செல்ல வழியேற்படுத்த முயன்றவர்கள் தேசப்பற்றாளர்களா? – சரத் போன்சேகா கேள்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
பிரபாகரனைத் தப்பிச்செல்ல வழியேற்படுத்த முயன்றவர்கள் தேசப்பற்றாளர்களா? – சரத் போன்சேகா கேள்வி. 
[Thursday, 2014-03-20 09:38:18]
sarath-fonseka-200314-150.jpg

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் செல்ல வழியேற்படுத்திக் கொடுக்க முயன்றவர்களை தேசப்பற்றாளர்கள் என கூற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா. காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இன்று தேசப்பற்றாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர், அன்று பிரபாகரன் தப்பிச் செல்ல வழியமைத்துக் கொடுத்தார்கள். இறுதிக் கட்ட போர் நடைபெற்று வந்த வேளையில் 48 மணித்தியால போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.இந்த போர் நிறுத்த அறிவிப்பானது பிரபாகரன் தப்பிச் செல்வதற்காகவேயாகும்.

  

குறிப்பிட்ட காலப்பகுதியில் நாம் நான்கு கிலோ மீற்றர் வரையில் பின்வாங்க நேரிட்டதுடன், 500 படைவீரர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்த போர்நிறுத்த அறிவிப்பிற்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். நாட்டுக்காக இரத்தம், சதை, உயிரை தியாகம் செய்தவர்களை தேசப்பற்றாளர் என்பதா அல்லது கொழும்பில் இருந்து கொண்டு பிரபாகரன் தப்பிச் செல்ல வழியமைத்தவர்களை தேசப்பற்றாளர் என்பதா? தேசப்பற்றாளர் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் சுனாமி நிவாரண நிதியின் பாரியளவு தொகையை கொள்ளையிட்டனர்.

2000 பாடசாலைகள், 2000 விஹாரைகள், 200 ஆடைக் கைத்தொழிற்சாலைகள், 500 கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.நாட்டு மக்கள் சந்தோசமாக வாழ முடியாவிட்டால் ஆசியாவின் ஆச்சரியத்தில் என்ன பயன்? பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் ஆதரவளிக்கின்றது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட முடியும். எனினும் எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தால் குற்றம் செய்யாவிட்டாலும் அவர்கள் குற்றவாளிகளே.

35 ஆண்டுகளாக அரச சேவையில் இணைந்து கொண்டு சேவையாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டது.தேசப்பற்றாளர் என அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் நாட்டை அழித்துள்ளனர். ஹிட்லர், இடிஅமீன் போன்றவர்கள் இவ்வாறு நாட்டை அழித்துள்ளனர். குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே மின்சார நாற்காலியில் தண்டனை அனுபவிக்க நேரிடும். எமது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை.எந்தவொரு நீதிமன்றிலும் படையிருக்காக குரல் கொடுக்க நான் தயார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=106060&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் தலைவர்  தப்பிவிட்டாரென்று ஐயா நெடுமாறனைப் போல இவரும் கூறுகிறாரா?

ஒரு இனவாதியில் அப்பட்டமான கூற்று...   அடுத்த ஜனாதிபதி தேர்தலிலையும் இவருக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.