Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு புத்தி சொல்லத் தேவையில்லை-கோட்டாபய ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உள்நாட்டுப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமே தவிர வெளியார் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்பது நடக்க முடியாத காரியம் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
நேற்றைய தினம் மட்டகளப்புக்கான ஒரு நாள் பயணத்தை மேற்கொண்ட கோட்டாபய, சமூக, சமய மற்றும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உட்பட பலர் மத்தியில் தற்போதைய நிலவரம் தொடர்பாக உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
 
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றியதாவது,
 
அண்மையில் அமெரிக்க பிரஜை ஒருவர் என்னிடம் நாட்டை எவ்வாறு கொண்டு செல்கிறீர்கள் என கேட்ட போது எங்களுக்கு புத்தி சொல்லத் தேவையில்லை. எங்களது நாட்டில் புத்திஜீவிகள் இருக்கின்றனர். எங்களது பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்வோம் என கூறினேன்.
 
இதேவேளை, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவரிடம் சிலர் சில விடயங்களை சொல்கிறார்கள். நான் அவரிடம் எங்கள் பிரச்சினைகளை தீர்ப்பது உங்கள் வேலை அல்ல என கூறியுள்ளேன். ராஜதந்திரிகள் ராஜதந்திர வேலைகளை மட்டும் பார்க்காமல் வேறு வேலைகள் பார்க்கிறார்கள்.
 
45 வருட அரசியல் அனுபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குண்டு அதேபோன்று ராஜபக்ஷ குடும்பத்திற்கு 75 வருட அரசியல் ஈடுபாடு உண்டு.இந்த அனுபவங்களை கொண்டு இந்த நாட்டை கொண்டு செல்கின்றோம்.
 
எமது தூர நோக்கு சிந்தனை மஹிந்த சிந்தனையாகும். இந்த நாட்டின் கெளரவத்துக்கு கரிபூசி நாட்டிற்கு அபகீர்த்தியை கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர்.
 
இலங்கையில் முஸ்லிம்கள் தமது மத கடமைகளை செய்வதற்கு தடையுள்ளது என பிரசாரம் செய்யப்படுகின்றது.அண்மையில் இலங்கை வந்த வெளிநாட்டு முஸ்லிம் பிரமுகர் ஒருவர் அவர் தங்கியிருந்த போது தொழுகைக்கான பாங்கு சொல்லும் சப்தம் கேட்டுள்ளது.
 
அப்போது அவர் வெளிநாட்டில் இலங்கைக்கு எதிராக செய்யப்படும் பிரசாரம் பொய் என்பதையும் இங்கு அனைவருக்கும் பூரண மத சுதந்திரமுண்டு என்பதையும் அறிந்து அதை கூறினார். இங்கு அனைவரும் தமது மத கடமைகளை மேற்கொள்வதற்கான அனைத்து சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன.
 
கொழும்பிலிருந்து முஸ்லிம்களையோ, தமிழர்களையோ நாம் துரத்த வில்லை. கிழக்கு மாகாணத்தில் அனைத்து வளங்களுமுண்டு. இந்த கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை உட்பட அனைத்து அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
 
www.eelamwebsite.com
 
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு யார் புத்தி சொல்லுறது. இவர் ஒரு மனித இனத்துக்கு எதிரான மிக மோசமான குற்றங்களைப் புரிந்த ஒரு குற்றவாளி. இவருக்கு புத்திமதி சொல்லி யாரும் நேரத்தை வீணடிக்கப் போறதில்லை. இவருக்கு சரியான தண்டனையை உலக மானுட சமூகம் அளிக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இவரா பெரிசா கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கிறார். சிறீலங்கா என்னவோ.. பெரிய வல்லரசு என்ற நினைப்பில்..! :icon_idea:

இவரிடம் இன்னும் அமெரிக்காவின் கீரீன் கார்ட் இன்னும் அமெரிக்கா பறிக்காமல் இவர்குற்றங்களுக்கு இன்னும் உடந்தையாக இருக்கும் போது.. சீனா, இந்தியா தயவு இன்னும் இருக்கிறது... இதையெல்லாம் உடைக்கும் வரை இவரை என்ன இலங்கையின் ஒட்டு மொத்த பயங்கரவாத்தை எப்போதும் நிறுத்த முடியாது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.