Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வரின் சிறகை வெட்டியது சிறிலங்கா உயர்நீதிமன்றம் – விஜயலக்சுமி மூலம் சிங்களப் பேரினவாதம் சதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CM1.jpg

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நிர்வாக நிலையியல் வழிகாட்டு முறைகளுக்கு சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

வடக்கு மாகாண தலைமைச் செயலர் விஜயலக்சுமி சமர்ப்பித்த அடிப்படை உரிமைமீறல் மனு மீதான விசாரணையின் போதே, சிறிலங்கா உயர்நீதிமன்ற அமர்வு இந்த தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

தலைமை நீதியரசர் மொகான் பீரிஸ், மற்றும் நீதியரசர்கள் கே.சிறிபவன், சத்திய ஹெற்றிகே ஆகியோரைக் கொண்ட அமர்வே, இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நேற்று இந்த தடை உத்தரவை வழங்கியுள்ளது. 

தனது பணியில் வடக்கு மாகாண முதல்வர் குறுக்கிடுவதாகவும், தன்னைப் பதவியில் இருந்து அகற்ற முனைவதாகவும் குற்றம்சாட்டி, வடமாகாண தலைமைச்செயலர் விஜயலக்சுமி மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை வரும் ஜுலை 14ம் நாளுக்கு ஒத்திவைத்துள்ளது. 

இந்த வழக்கில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, வடக்கு மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். 

எனினும், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பில் சட்டவாளர்கள் எவரும் முன்னிலையாகவில்லை. 

அதேவேளை, விஜயலக்சுமி சார்பில், சட்டவாளர் கோமின் தயாசிறியும், வடக்கு மாகாண ஆளுனர் சார்பில் சட்டவாளர் பாலித கமகேயும், சிறிலங்கா அதிபரின் செயலர் சார்பில் நெரின் புள்ளேயும் முன்னிலையாகினர். 

இந்த இடைக்காலத் தடையுத்தரவினால், வடக்கு மாகாண முதல்வரின் அதிகாரங்கள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால், நிர்வாகப் பணிகளில் தேக்கம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறிலங்கா அரசாங்கமும், சிங்களப் பேரினவாத சிந்தனையாளர்களும் இணைந்து வடக்கு மாகாணசபையை முடக்குவதற்கு, மாகாண தலைமைச்செயலர் விஜயலக்சுமியை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. 

சிங்களப் பேரினவாதியான சட்டவாளர் கோமின் தயாசிறியே, விஜயலக்சுமி சார்பில் இந்த வழக்கை நடத்துகிறார். 

இவரே, வடக்கு,கிழக்கு மாகாண பிரிப்பு, சுனாமி நிர்வாகப் பொதுக்கட்டமைப்புக்கு தடைவிதிக்கப்பட்ட வழக்கு உள்ளிட்ட, பல வழக்குகளின் சூத்திரதாரியாக இருந்தவர். 

தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்து வரும் கோமின் தயாசிறி போன்றோர், விஜயலக்சுமியை பின்புலத்தில் இருந்து இயக்குவதாகவும், தமிழருக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு இவரைக் கொண்டே தடையுத்தரவு பெறுவதற்கு அவர்கள் முனைவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140325110203

இந்த வளக்கு போட்டதுக்கு நண்றி எண்று முதல்வர் முதலே சொல்லி இருக்கிறார்...

முதலமைச்சு தமிழர்களுக்கு தீர்வு எண்டு சொல்லும் ஆக்களுக்கான பதிலாக இதனை எடுத்துக்கொள்ளலாம் எண்டு நான் நினைக்கிறன்.. மற்றவை எப்பிடி...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.