Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகநூலில் ரசித்தவை

Featured Replies

என்னமா இப்பிடி பண்றீங்கலேமா..!! - லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் விளக்கம்

 

  • Replies 178
  • Views 29.3k
  • Created
  • Last Reply

அமெரிக்கா Vs இந்தியா பற்றிய ஒரு கலக்கலான விவாதம்...பாருங்கள்; சிரியுங்கள்; சிந்தியுங்கள்...!

 

https://www.facebook.com/1636325589927998/videos/1717211351839421/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11538169_10203320700898637_1669792754630

11254410_753293681450324_1536044851_o.jp

 

இந்தப்  படங்கள் டுபாயில் எடுக்கப்பட்டது. நம்பமுடியவில்லையா? பெரும் பணக்காரர் வசிக்கும் பகுதியில் இயற்கையை உருவாக்கியிருக்கிறார்கள்.உலகிலேயே கல்லில் நார் உரித்தவர்கள் இஸ்ரேலியரும் டுபாய்காரரும் தான்........  (This is AL BARARI - DUBAI. This is residential area for the multi millionaires. In side that artificial forest there is some luxury villas. few years ago it was empty land. I mean that's a deserts area. so now how is it. they spend billions of dollars to make a artificial forest on over there and some luxury villas. even it's not much far from the city center just a one hour drive from the city.)

dinakaran daily newspaper இன் புகைப்படம்.

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

  • தொடங்கியவர்

ஒரு ஒடுக்குகின்ற இனம் ஒடுக்கப்படும் இனத்திற்குள் இருந்து தான் விரும்பும் தலைமையைத் தூக்கிப் பிடிப்பது உலகம் எங்கனும் நடந்துள்ளது

"ஒரு ஒடுக்குகின்ற இனம் ஒடுக்கப்படும் இனத்திற்குள் இருந்து தான் விரும்பும் தலைமையைத் தூக்கிப் பிடிப்பது உலகம் எங்கனும் நடந்துள்ளது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன் வைப்பவர்களை 'தீவிரவாதிகள்' என்றும் தமது கருத்தோடு ஒத்துப் போபவர்களை 'மிதவாதிகள்' என்றும் 'தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள்' என்றும் தென்னிலங்கை அரசியல் வரையரறுப்பது இது முதல் தடவையல்ல"
-----------------------------------------------------
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய மங்கள சமரவீர தமிழ்த் தேசிய கூட்டமைப்பை 'மிதவாத குரல்களாக' அடையாளம் கண்டதோடு அவர்களே தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்றும் புகழாரம் வழங்கியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு வேலை செய்வதன் மூலமே தமிழ் மக்களின் மத்தியில் உள்ள 'தீவிரவாதம்' பேசும் சக்திகளை ஒதுக்க முடியும் என்று மங்கள தெரிவித்திருக்கிறார்:


"The moderate voices of Tamil politics, and the genuine representatives of the Tamil people, the TNA, are now strong advocates for a united undivided Sri Lanka – these are the individuals we should encourage to participate more fully within our democratic institutions, and with whom we must work closely to eradicate the radical elements within our society."
https://www.colombotelegraph.com/…/i-urge-leader-of-opposi…/


ஒரு ஒடுக்குகின்ற இனம் ஒடுக்கப்படும் இனத்திற்குள் இருந்து தான் விரும்பும் தலைமையைத் தூக்கிப் பிடிப்பது உலகம் எங்கனும் நடந்துள்ளது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன் வைப்பவர்களை 'தீவிரவாதிகள்' என்றும் தமது கருத்தோடு ஒத்துப் போபவர்களை 'மிதவாதிகள்' என்றும் 'தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள்' என்றும் தென்னிலங்கை அரசியல் வரையரறுப்பது இது முதல் தடவையல்ல. இந்த மிதவாதிகள் - தீவிரவாதிகள் என்ற பொய்யான முரணை கட்டுடைப்பதற்காகத் தான் மாமனிதர் சிவராம் போன்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

'மிதவாதிகள்' என சிங்கள் பௌத்த தேசத்தால் (குறிப்பாக சந்திரிக்கா அம்மையாரால்) கொண்டாடப்பட்ட சம்பந்தர், சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அரசாங்கத்தோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த முன்னை நாள் ஆயுதக் குழுக்களையும் தமது அரசியலுக்குள் கொண்டு வந்து இந்த மிதவாத- தீவிரவாத பொய் முரணை தமிழீழ விடுதலைப் புலிகள் உடைத்தனர் (தமிழீழ விடுதலைப் புலிகளே எமது பிரதிநிதிகள் என்று அன்று சொன்ன ஒரேயொரு அரசியல் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களே) . இன்று அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தத்திற்கு பின்னர் மீண்டும் 'சிங்களம் விரும்பும் மிதவாதிகளாக' மீண்டும் தம்மை உருமாற்றிக் கொண்டுள்ளமை தான் கொடுமையிலும் கொடுமை. தமிழ் மக்கள் கருத்தியலால் ஒற்றுமையானவர்கள் எனக் காட்டுவதே இன்றைய தேவை. தம்மை மிதவாதிகளாகக் காட்டி தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தீவிரவாதமாகக் காட்டும் போலி ஒற்றுமை தேவையில்லை. தயவு செய்து சிந்தியுங்கள். செயற்படுங்கள்.

-கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நண்பர்கள்-

  • தொடங்கியவர்

11666115_820277618080413_417815592689333

10369223_820277654747076_451199564567046

11695880_820277648080410_635022273545866

11062025_820277668080408_904778012482232

11701090_820277638080411_426486018386695

11703220_820277598080415_315445600479623

11695728_820277601413748_780128229133181

11692781_820277628080412_419082812697513

10984977_820277658080409_566045873546248

11052492_820277688080406_745361437648124

11666253_820277874747054_223306421739156

  • தொடங்கியவர்

some ideas

11393097_818556204908807_567629941562443

11392954_818556211575473_252923058614658

 

11391093_818556188242142_859583169350552

10502317_818556191575475_294951322512079

11239621_818556194908808_402886112799441

 

 

10356769_818556181575476_176312668178353

11377075_818556174908810_488275381644747

11350558_818556218242139_386913239523121

11391517_818556228242138_494849231926348

11392937_818556201575474_486976462242336

11229781_818556281575466_659641007573277

11164555_818556304908797_489736218341982

11147239_818556301575464_194331140593302

11329815_818556311575463_848878950807862

11391266_818556374908790_851553651347805

11350591_818556418242119_182434176647203

11351414_818556414908786_125239883848060

11107164_818556388242122_611622964014234

11214109_818556471575447_877853552599199

  • 2 weeks later...

 

Ippadi Panreengale Ma | 12/07/2015 | Puthuyugam TV

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஹலோ...என்னோட friends list ல இருக்கிறவங்களா?
உங்ககிட்ட இருந்து லைக் வர்றதில்ல..ஆனா game request அடிக்கடி வருது..அதையும் வராம பாத்துக்கங்க..

11826030_531350607015827_299838346332362

  • தொடங்கியவர்

1980களில் தென்னிந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்ட திரைப்பட விருது விழா..
மிக அபூர்வமான அரிய காணொளி

https://video-fra3-1.xx.fbcdn.net/hvideo-xpt1/v/t42.1790-2/11793066_903297103098390_722082083_n.mp4?efg=eyJybHIiOjU5NCwicmxhIjoxMTE2fQ%3D%3D&rl=594&vabr=330&oh=f3205f3d6f1c18b9c7d3742c80fb18d1&oe=55C85DA7

 

 

  • 2 months later...
  • தொடங்கியவர்

12088070_891435770905511_717288335836656

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி 
இடையே ஓரு ஓப்பந்தம்.....! 
இன்று யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்.. அன்றே கணவனுடைய_அம்மா_அப்பா_வந்தனர் இருவரும் அவர்கள் வருவதை பார்த்தனர்... இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.. கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை...! ஆனால் ,
அக்ரிமெண்ட் போட்டது நினைவுக்கு வந்தது... அதனால் கதவை திறக்க வில்லை அவன்.. அவர்கள் யாரும் இல்லை என்று நினைத்து போய் விட்டனர்.. கொஞ்ச நேரம் கழித்து மனைவியின் அம்மா அப்பா வந்தனர் கதவை தட்டினார்கள் இருவரும் ஓருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது. என்னால்_கதவை திறக்காமல்_இருக்கமுடியாது_என்று சொல்லி_கதவை_திறந்தாள் ஆனால் கணவன் ஒன்றும் சொல்ல வில்லை.. வருஷங்கள் உருண்டோடின....!

இரண்டு ஆண் குழந்தை பிறந்தது.. மூன்றாவதாக பெண்_குழந்தை பிறந்தது கணவன் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பெரிய அளவில் செலவு செய்து அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்.. அதற்கு மனைவி இரண்டு ஆண் குழந்தை பிறந்தப்ப இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை ஏன் பெண்_குழந்தை பிறந்தவுடன் இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்க என்று கேட்டாள் ... ! 
அதற்கு கணவன் ரொம்ப நிதானமாக ஏனெனில் பிற்காலத்தில் 
எனக்காக கதவை திறக்க ஓரு பெண் பிறந்துவிட்டாள்...!!
என்றான் கர்வத்துடன்....!!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

12115919_1013681691996714_13740679572761

  • தொடங்கியவர்

கண்டிப்பாக படிக்கவும்...
~~~~~~~~~~~~~~~

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.
அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்" உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று

பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....
இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்......
அதில் இப்படி எழுதியிருந்தது"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்" என்று......
இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் " மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்" என்று.

தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும நம்மாளும் எடிசன்களை உருவாக்கமுடியும்.....

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

12088070_891435770905511_717288335836656

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி 
இடையே ஓரு ஓப்பந்தம்.....! 
இன்று யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்.. அன்றே கணவனுடைய_அம்மா_அப்பா_வந்தனர் இருவரும் அவர்கள் வருவதை பார்த்தனர்... இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.. கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை...! ஆனால் ,
அக்ரிமெண்ட் போட்டது நினைவுக்கு வந்தது... அதனால் கதவை திறக்க வில்லை அவன்.. அவர்கள் யாரும் இல்லை என்று நினைத்து போய் விட்டனர்.. கொஞ்ச நேரம் கழித்து மனைவியின் அம்மா அப்பா வந்தனர் கதவை தட்டினார்கள் இருவரும் ஓருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது. என்னால்_கதவை திறக்காமல்_இருக்கமுடியாது_என்று சொல்லி_கதவை_திறந்தாள் ஆனால் கணவன் ஒன்றும் சொல்ல வில்லை.. வருஷங்கள் உருண்டோடின....!

இரண்டு ஆண் குழந்தை பிறந்தது.. மூன்றாவதாக பெண்_குழந்தை பிறந்தது கணவன் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பெரிய அளவில் செலவு செய்து அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்.. அதற்கு மனைவி இரண்டு ஆண் குழந்தை பிறந்தப்ப இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை ஏன் பெண்_குழந்தை பிறந்தவுடன் இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்க என்று கேட்டாள் ... ! 
அதற்கு கணவன் ரொம்ப நிதானமாக ஏனெனில் பிற்காலத்தில் 
எனக்காக கதவை திறக்க ஓரு பெண் பிறந்துவிட்டாள்...!!
என்றான் கர்வத்துடன்....!!!

mumu_zpsogvhmgvp.jpg

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

கணனிக்குள் அடக்கப்படும் வடிகால்கள்!

11947696_1677592199124063_67341616228016

ஒரு நகரப்பகுதியின் வடிகால் குழாய்கள் செயலிழந்து செல்கின்றது என்ற சந்தேகம் வரும் பொழுது முதலில் வடிகாலுக்குரிய ரிவி கமெராவால் குறிபு;பிட்ட அந்தப் பிரதேச குழாய்கள் படம் பிடிக்கப்படும்.
படம் பிடிப்பதற்கு முன் மிகவும் வேகமாக தண்ணீரைப் விசிறியடித்து இக்குழாய்கள் சுத்தம் செய்யப்படும். அதன் வேகம் ஒரு மனிதத் தலையை எடுத்துச் செல்லும் வேகம் கொண்டது.
அவ்வாறு சுத்தம் செய்யப்ட்ட பின்பும் ஒரு வடிகால் கிடங்கில் இருந்து மறுவடிகால் கிடங்குவரை படம் பிடிக்கப்படும்.
அது பட வடிவிலும் டாற்றாபேஸ் வடிவிலும் எமக்கு வரும்.
அதனை கணனியில் தரவிறக்கம் செய்யும் பொழுது 100வீதம் அந்தக் குழாயின் நிலை, பழுதுகள், எவை அவற்றை திருத்தம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விடலாம்.
அடுத்தது இன்று றோட்டைக் முழுதாக கிண்டாமலே நவீன சத்திர சிகிச்சை செய்வது போல திருத்த முடியும்.
அதுமட்டுமில்லாமல் வடிகால் குழாயின் அளவை பெரிதாக்க வேண்டுமென்றால் உதாரணமாக 250 செ.மீ. அளவு கொண்ட குழாயை 500 செ.மீ. அளவுள்ள குழாயாக மாற்ற வேண்டுமென்றால் ஏற்கனவே உள்ள குழாயிலுள் ஓர் இருப்பு தலைப்பகுதியை (இதன் அளவு 100ல் தொடங்கி 500 வரை கூராக இருக்கும்) வைத்து 250ஐ உடைத்து உடைத்து 500ஐ உள்செலுத்துவார்கள். 
இதனை கிறாக்கிங் (CRACKING) என்று சொல்வார்கள். ஒரு இரவுக்குள் இதனை செய்து முடித்து விடுவார்கள். முழு வீதியையும் அடைத்து மறித்து நாட்கணக்காக திருத்த வேண்டியதில்லை.
வடிகால்களின் அளவை மாற்றாமல் சில பல திருத்தங்கள் செய்ய வேண்டுமெனின் காலில்; போடும் சொக்ஸ்சை உருட்டி பின்னால் இழுப்பது போல் இராசயனமாற்றத்திற்கு உள்ளாக மாறக் கூடிய ஒரு துணியை வைத்து முழுக்குழாயையும் நிறைத்து பின் அதனை சுடுநீர் அல்லது சுடுகாற்று கொண்டு ஊதி இறுதியில் புதிய பி.வி.சி. குழாய் போல மாற்றி விடுவார்கள்.
நேற்றுக் குறிப்பிட்டது போன்று கழிவுநீரும் மழைநீரும் ஒடிக்கொண்டிருந்த பிரதேசம் எனில் ஒன்றை தொடர்ந்து மழைநீருக்காக வைத்துக் கொண்டு புதிதாக ஒன்றை றோட்டைக் கிண்டியே இறக்குவார்கள். அது தவிர்க்க முடியாதது.
ஆரம்பம் முதல் இறுதிவரை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்ற முழுத்திட்டமிடுதல் கணனி வழியே நடைபெற்று மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் மிகக் குறைந்த நேரத்தில் திருத்த வேலைகள் நடைபெறும்.
ஒவ்வோர் வருடமும் இந்த திருத்த வேலைகளுக்கு என்று மிகப்பெரிய தொகை ஒதுக்கப்படும். அதனை அந்த வருடத்தினுள் பாவித்தே ஆக வேண்டும்.
பி.கு: 
(1). இங்கு இலஞ்சம் இல்லாத காரணத்தால் இதற்குரிய தொகை முறையாக பாவிக்கப்படும். அதி கூடிய இலஞ்சம் என நான் கருதுவது கிறிஸ்மஸ காலங்களில் எமக்கு வெவ்வேறு கம்பனிகள் தரும் சொக்கிலேற் பெட்டிகளும் சிலவேளை ஒரு வைன் போத்தலும் தான். அதுவும் மிக விரைவில் தடைசெய்யப்படவுள்ளது.
(2). நான் இலங்கையில் இருந்திருந்தால் கோல்பேஸ் றோட்டில் ஒரு வீட்டை கொன்றாற்காரர்களே இந்த 25 வருடத்திற்கும் சேர்த்து தந்திருப்பார்கள்.
(3). நான் இந்தியாவில் இருந்திருந்தால் மாமல்லபுர வீதியில் ஒர் பங்களாவிற்கு சொந்தக்காரனாய் இருந்திருப்பேன்.
(4). இவ்வாறான சட்ட திட்டத்திற்கு அமைந்த வாழ்வினுள் பயணப்பட்டுக் கொண்டு இருப்பதால்தான் பல சமயங்களில் பொதுவாழ்வில் சமரசங்கள் செய்ய முடியாது முரண்படுகின்றேன் என்பதும் எனக்குத் தெரியும்.

12227582_1677592225790727_42931717346307

 

12243562_1677592229124060_49991069216460

 

12227771_1677593949123888_11531806998579

12208293_1677594485790501_42127153240143

12239521_1677594502457166_18305500893509

 

1010533_1440968102786475_2129107340_n.jp
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஓர் உளவாளியின்
வாழ்க்கையை யாராலும்
கற்பனை செய்ய முடியாது.
அவ்வளவு சவால்களையும்,
திகில்களையும் சந்திக்க
வேண்டியிருக்கும்.
இந்தியாவுக்காக
பாகிஸ்தான் சென்று
உளவுபார்த்த ஓர்
உளவாளியைப்பற்றி 'மிஷன்
டு பாகிஸ்தான்' என்ற
புத்தகத்தை எழுதினார்
கிருஷ்ணா தர் என்கிற
எழுத்தாளர். 'உண்மையில்
அந்த உளவாளி யார்?' என்று
புத்தகத்தில்
கிருஷ்ணா
சொல்லவே
இல்லை.
இவ்வளவு
நாளும் அது
மர்மமாகவே
இருந்தது.
'2002-ம் ஆண்டு
பாகிஸ்தான் ஜெயிலில்
நபி அஹமத் என்கிற பெயரில்
இறந்து போன ரவிந்திர
கௌஷிக் என்கிற
இந்தியர்தான் அந்த
உளவாளி' என்றுஇப் போது
பிரகடனப்படுத்தி
இருக்கிறது 'இந்துஸ்தான்
டைம்ஸ்' பத்திரிகை.
உள்வாளியின் வாழ்க்கை
எப்படி இருக்கும் என்பதற்கு
கௌஷிக்கின் வாழ்க்கை
ஒரு சாம்பிள்.
ராஜஸ்தானில் ஸ்ரீகங்கா
நகரைச் சேர்ந்தவர் கௌஷிக்.
படிக்கும்போதே அவர் ஒரு
மோனோ ஆக்டிங் நடிகர்.
1971-ம் ஆண்டு இந்திய-
பாகிஸ்தான் போர் மூண்ட
சமயம், அவர் தேசபக்தியை
வலியுறுத்தி நாடகங்கள்
நடத் தினார். நாடகத்தைப்
பார்க்க வந்த
ராணுவஅதிகாரி களுக்கு
கௌஷிக்கை ரொம்பவே
பிடித்துப்போனது.
காரணம், அதில் கௌஷிக்
ஏற்றிருந்த வேடம் - உயிரே
போனாலும் தேசத்தைக்
காட்டிக்கொடுக்காத ஓர்
உளவாளி!
உண்மையாகவே
உளவாளியாக ராணுவ அதி
காரிகள் வாய்ப்பு
கொடுத்தபோது உடனே
கௌஷிக்
ஏற்றுக்கொண்டார். டெல்லி,
அபுதாபி, துபாய் என்று
சுற்றி கடைசியாக
பாகிஸ்தான் வந்தார். நபி
அஹமத் என்கிற பெயரில்
சட்டக் கல்லூரியில்
சேர்ந்தார். ஒரு பாகிஸ்தான்
பெண்ணைத் திருமணம்
செய்துகொண்டார். பக்கா
பாகிஸ்தானியாகவாழ்ந்த
கௌஷிக், பாகிஸ்தான்
ராணுவத்தில்சேர்ந்தார்.
அங்கே இருந்து இந்திய
ராணுவத்துக்குப் பல
முக்கியமான தகவல்களை
அனுப்பிக்கொண்டுஇருந்
தார்.
ஒருமுறை இந்திய-
பாகிஸ்தான் எல்லையில்
இந்தியாவைச் சேர்ந்த
இன்னுமோர் உளவாளியை
பாகிஸ்தானைவிட்டுப்
பத்திரமாக வெளியேற்றி
வைக்க இந்திய
ராணுவத்தில் இருந்து
அவருக்கு அசைன்மென்ட்
கொடுக்கப்பட்டது.
எதிர்பாராத விதமாக அந்த
உளவாளி பாகிஸ்தான்
ராணுவத்திடம்
சிக்கிக்கொண்டார்.
சித்ரவதையைத் தாங்க
முடியாத அவர்,
கௌஷிக்பற்றிய
உண்மையைக் கொட்ட,
மாட்டிக்கொண்டார்
கௌஷிக். கொஞ்ச நஞ்ச
மல்ல... பாகிஸ்தானின்
முல்டான் சிறையில்18
ஆண்டுகள் சித்ரவதைக்கு
உள்ளானார் கௌஷிக்.
அவரைப்பற்றி இந்தியா
வாயைத் திறக்கவே இல்லை.
கடைசியாக தன் தாய்க்கு
எழுதிய கடிதத்தில், 'நான்
இதே வேலையை
அமெரிக்காவுக்காகச்
செய்து இருந்தால், கைது
செய்யப்பட்ட மூன்றே
நாட்களில் வெளியே
வந்திருப்பேன்' என்று மனம்
நொந்து அழுதிருந்தார்.
அதற்கடுத்த மூன்றாவது
நாளில் இறந்துவிட்டார்
கௌஷிக். நன்றி மறக்குமா
இந்தியா? மாதாமாதம்
கௌஷிக் கின் தாய்க்கு
செலவுத்தொகை
அனுப்பிவைக்கிறது.
எவ்வளவு தெரியுமா? 500 ரூபாய்.
ஊழல்வாதிகளுக்க மட்டுமே இந்த நாடு சொர்க்கம்.
ஜெய்ஹிந்த்!

https://www.facebook.com/ttpuram

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • 2 months later...
  • தொடங்கியவர்

13102617_10208023431757800_6419830784281

  • 2 months later...
  • தொடங்கியவர்

என்னை சிலர் தேடி வந்து அடிப்பார்கள் , ஆனால் பரவாயில்லை, உண்மையை சொல்லியே ஆகவேண்டும். நான் சொல்ல போவது கனடா பற்றி மட்டுமே. இதில் இலங்கை , இந்தியா , மற்ற நாடுகளை சொல்லவில்லை. தொப்பி அளவாக இருந்தால் போட்டுக் கொள்ளலாம். தப்பில்லை. டொரொன்றோ போனபோது , சில பான்சி பொருட்கள் வாங்க , பாசன் பேன்ஸி பொருட்கள் சில வாங்க போனேன். பெண் குழந்தைகளுக்கு வேண்டிய பொருட்களை வாங்க போன நான் ஒரு பேன்ஸி ஸ்டோரில் ஒன்றை வாங்கி விட்டு , வேறு பக்கத்தில் உள்ள பேன்ஸி ஸ்டோர்க்கு போனேன் காரணம், ஒரே மாதிரி வாங்காமல் ஆளுக்கு ஆள் வித்தியாசமாக வாங்க , . ஒரு நகை கடை இருந்தது , அத்தோடு சேர்ந்தால் போல் பேன்ஸி ஸ்டோர் ஒன்றும் இருந்தது , அது நகை கடைக்கு சொந்தமானது. நாங்கள் கொஞ்சம் வேலைக்கு போனதால் மினக்கெட வேண்டி வந்தது. சரி என்று மற்ற கடைகள் எல்லாம் திறந்து இருக்க ,நகை கடைக்கு பக்கத்தில் இருக்கும் கடைக்கு போனேன் . ஆனால் அவர்கள் யாரும் வந்து ஏன் என்று கேட்கவே இல்லை. நான் சைகையால் கேட்டேன் யாரும் இல்லையா என்று பதில் சொல்லாமல் பேயை பார்த்த மாதிரி பார்க்க என்னை நான் கண்ணாடியில் ஒரு முறை பார்த்தேன் . அந்தளவு மோசமாக இருக்கிறேன்.

பிறகு என்ன என் கணவர், தங்கை கொஞ்சம் தள்ளியே நின்றார்கள் ஏன் வம்பு என்பது போல. எனக்கு இந்த வாடிக்கையாளர்களை பண்பாக நடத்த தவறினால் பிடிக்காது. அதிலும் குறிப்பாக customer service , விஷயத்தில் தமிழர்களும், பஞ்சாபிகளும் படுமோசம். பொருட்களை வாங்க போனால் அவர்கள் ஒரு ஹாய் , ஹலோ, வாங்க எதுவுமே கிடையாது, அவர்கள் ஏதோ அலுவல் பார்த்துக் கொண்டு நிற்பார்கள். ஏன் வந்தீர்கள், எதுக்கு என்ற கேள்விக்கே இடம் இல்லை, இவர்கள் தான் வாடிக்கையாளரைகளை கவனித்து பொருட்களை விற்க போகிறவர்களா , இல்லை சம்பளத்துக்கு வேலை செய்பவர்களா தெரியாது. சுத்தம் , . ஒரு சிரிப்பு கிடையாது, ஏண்டா வந்தோம் என்ற மாதிரி ஒரு முறைப்பு.

சரி விஷயத்துக்கு வருகிறேன். நான் திறந்து இருந்த கடைக்குள் போனேன் ஏன் என்று கேட்க ஆளில்லை . திரும்பி ஓடி வெளியில் வந்து யாரும் இல்லை எதுக்கு கடையை திறந்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே வெளியில் வந்தேன்.அது அவர்கள் இடையில் உள்ள நகை கடையையும் பேன்ஸி கடையை இணைக்கும் வழியால் கேட்டு இருக்க வேண்டும். நான் வெளியில் போகும் போது கையை காட்டி கூப்பிட நான் கவனிக்க இல்லை. என் கணவர் சொன்னார் “உங்களை தான் கூப்பிடுகிறார்கள் போல “ என்று சொல்ல திரும்பி பார்த்தேன் உள்ளே வர சொல்லி கதவை திறக்க உள்ளே நான் மட்டுமே போனேன். நான் போனதும் கண்ணாடி கதவை பூட்டி விட்டு “என்னை மிரட்டுவது போல “ என்ன சொன்னீர்கள் என்றார்கள் “ , நான் சொன்னேன் கடையை திறந்து வைத்து விட்டு ஆளில்லை என்றேன், ஏன் என்றேன் , அதற்கு அவர்கள் சொன்னார்கள் money transfer மட்டும் தான் காலையில் , என்றார்கள் . நானும் “அது எனக்கு எப்படி தெரியும், அதில் எதுவும் எழுத்தில் போடவில்லை அப்ப எப்படி தெரியும்” , அப்படி என்றால் எழுத்தில் போடுங்கோ, என்றேன். உள்ளே மூன்று ஆண்கள் நின்ற படி , என்னை கேள்வி கேட்க எனக்கு கோபம் வந்தது. பணம் போட்ட முதலாளி கூட இப்படி கதைக்க மாட்டார்கள் , நீங்கள் என்ன இப்படி கதைக்கிறீங்க என்றார்கள் விறைப்பாக. “பணம் முதலாளி போட்டாலும் , பொருட்களை நாங்கள் தானே வாங்க வேண்டும். நாங்கள் இப்படி தான் பேசுவோம்., இப்ப நான் வெளியே போக வேண்டும் கதவை திறவுங்கோ “என்று திரும்பினேன். வந்து கதவை திறந்து விட்டார்கள். நான் வெளியே வர என் கணவர் தங்கை உள்ளே நடந்தது தெரியாமல் பேந்த பேந்த நின்றார்கள்.

ஒரு மரியாதை, பண்பு, எதுவும், தெரியாமல் வரும் வாடிக்கையாளர்களை எப்படி கவனிக்க முடியும் . வியாபாரம் செய்ய முதல் (customer service) வாடிக்கையாளர்களை வரவேற்க தெரியவேண்டும். அது தான் வியாபாரத்தின் முதல் படி. எல்லா வியாபாரிகளும் இல்லை . ஒரு சிலர் தான் அதுவும் எங்கள் ஆட்கள் என்பதை சொல்வதில் வெட்கப் படுகிறேன். இது குறை சொல்வதற்காக அல்ல , திருந்த முடிந்தால் திருந்தவே.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மன்னிக்கவும்.. இது கபாலி பட விமர்சனம் அல்ல..!

13686498_10207022943758368_2441321316194

மன்னிக்கவும்.. இது கபாலி பட விமர்சனம் அல்ல..!
---------------------------------------------------------------------------

``பறவையோட குணமே 
பறக்குறதுதான்டா..
அதை பறக்க விடு.. 
வாழ்வோ சாவோ 
அது பார்த்துக்கட்டும்.. 
உன் கருணை அதோட 
சாவை விட 
கொடுமையானது..”

கபாலி படத்தில் ரஜினி பேசும் இந்த பிரமாதமான வசனத்தை கேட்டபோதே முடிவு செய்தேன்.. இந்த பதிவை இந்த வசனத்திலிருந்துதான் துவங்க வேண்டும் என்று.

முதலிலே சொல்லிவிடுகிறேன்.. கபாலி படு மொக்கைப்படம் என்றோ ஆஹா ஓஹோ என்றோ சொல்ல முடியாது. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை பார்க்கலாம் என்ற வகையிலான ஒரு நல்ல படம் அவ்வளவே.

அறிவுக்கொழுந்துகள் பலரும் கபாலி கதையை துவைத்து தொங்கவிட்டுவிட்டதால் நான் இங்கு பட விமர்சனம் எழுதப்போவதில்லை. படத்தையொட்டி கிளம்பிய கிளப்பிவிடப்பட்ட முற்போக்கு மற்றும் பிற்போக்கு நுண்ணரசியல் குறித்து இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

பாராசூட்டில் குதித்து பறந்து பறந்து சண்டையெல்லாம் போடுவதுபோன்ற ரஜினியின் வழக்கத்திற்கு மாறான படம் கபாலி. ரஜினி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அதைக்கடந்து கேங்க்ஸ்டர் படங்களுக்கான மசாலா மிக்சும் படத்தில் கொட்டிக்கிடக்கிறது.

அந்த மசலாக்களை கடந்து, தன் மனைவி குழந்தையை தேடும் ஒரு தந்தையின் தவிப்பையும் உணர்வுகளையும் ரஜினியின் கண்கள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. படத்தில் எனக்கு மிகவும் பிடித்ததே அந்த பகுதிதான்.

அமிதாப் போன்று, தன் வயதுக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் இனி துணிந்து நடிக்கலாம் ரஜினி என்பதை ரஞ்சித் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். சமீபகாலங்களில் பிற எந்த இயக்குனரும் பயன்படுத்தாத அளவுக்கு ரஜினியை ரஞ்சித் நடிக்க வைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அதுவும் ஓவர் கோட்டிங் இல்லாமல் இயல்பான வயதுகேற்ற முகத்தோற்றத்துடன் நடிக்க வைத்திருக்கிறார்.

அதேப்போல் 25 ஆண்டுகளுக்குப்பின் ரஜினியை கண்டதும் மனைவியாக வரும் ராதிகா வெளிப்படுத்தும் உணர்வுகள் அப்படியே நம்மை உருக வைக்கின்றன.

மற்றபடி படம் முழுக்க வழக்கமான கேங்க்ஸ்டர் படங்களில் வரும் ``டுபிக்கோ.. டுபிக்கோ.. டுமில்’’ காமெடிகள்தான். திரைக்கதையில் ரஞ்சித் கொஞ்சம் கவனமாக இருந்து டிங்கிரி பிங்கிரி பண்ணியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கக்கூடும்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரஞ்சித்.
--------------

இனி முற்போக்கு மற்றும் பிற்போக்குகளின் முன்னரசியல் மற்றும் பிண்ணரசியல் குறித்து பார்க்கலாம்.

கலை மக்களுக்கானது என்பதை நம்பும் ஒருவன் தன் கலையை ஆயுதமாக பயன்படுத்துவான். அட்டக்கத்தி, மெட்ராஸ் என்ற தன்னுடைய இரண்டு படங்களிலும் மிக வெளிப்படையாகதான் தலித் அடையாள அரசியலை பயன்படுத்தியவர் ரஞ்சித்.

அப்படி ஒரு அரசியல் பேசும், வெறும் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய ரஞ்சித் ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் மீடியாக்கள் உட்பட எல்லோரின் கவனமும் அதில் குவிந்தது.

சேரியிலிருந்து ஒருவன் ஜீன்ஸ் பேண்டும் ஷூவும் போட்டுக்கொண்டு ஊர் வழியாக நடந்து செல்வதை விடுங்கள்.. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் செருப்பு போட்டுக்கொண்டு ஊருக்குள் நடந்து செல்வதையே ஜீரணிக்க முடியாத அளவுக்கு சமத்துவம் நிறைந்த சமூகம் நம்முடையது. ஆக வெளிப்படையாக தலித் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் ரஞ்சித்துக்கு மூன்றாவது படமே ரஜினி படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது சிலருக்கு தாங்க முடியாததாகவே இருந்திருக்கும்.

அவர் சார்ந்த அவரது வெற்றியை விரும்புபவர்கள் பலரும் அவரை வாழ்த்திக்கொண்டிருக்க அது சிலருக்கு பொசு பொசுவென்று எரியச்செய்தது. அதில் முற்போக்காளர் எனப்படுவோரும் உண்டு. சாதிவெறியர்களும் உண்டு.

இதை அம்பேத்கரின் வரலாற்றோடு இணைத்துப்பார்க்கலாம். அம்பேத்கர் பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வில் வெற்றிப்பெற்றதும் அவர் சார்ந்த சமூகம் அதை பெரும் விழாவாக எடுத்து கொண்டாடினார்களாம். ஏனெனில் முதல்முறையாக தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன் பள்ளிப்படிப்பை முடித்து மேல் படிப்புக்கு தேர்வாகியிருக்கிறான் என்ற மகிழ்ச்சி.

அதைப்பார்த்து சாதி இந்துக்கள் எரிச்சலானார்களாம்.. எள்ளி நகையாடி சிரித்தார்களாம். அவர்கள் தலைமுறையில் பலரும் அந்த தேர்வை சாதாரணமாக கடந்து சென்றிருக்கலாம். இதெல்லாம் ஒரு விசயமா என்று அவர்களுக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் அது ஒடுக்குமுறைக்குள்ளான அம்பேத்கர்களுக்கு அது அசாதரணமான வெற்றி.

ரஞ்சித்துக்கு ரஜினிபோன்ற உச்ச நடிகரின் படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததை அவரது நலம் விரும்பிகள் கொண்டாடியதை அம்பேத்கரின் வெற்றியை மஹர் இன மக்கள் கொண்டாடியதுபோல்தான் பார்க்க வேண்டும். அப்படியானால் ஒரு ரஜினி படத்தை இயக்குவதுதான் தலித் விடுதலையா என்று கேள்வி கேட்பது அபத்தமானது. அது ரஞ்சித்துக்கு தெரிந்த ஒரு கலை வடிவம்.

அடுத்து படத்திற்கு கொடுக்கப்பட்ட ஓவர் பில்டப். வழக்கமாக முதல்நாள் முதல் காட்சியில் தியேட்டரில் கொடி கட்டி விசில் அடித்து கொண்டாடி தீர்க்கும் ரசிகனை வெளியே நிற்க வைத்து கார்ப்பரேட்டுகளிடம் மொத்தமாக டிக்கெட் விற்றது என படத்தை விற்பதற்காக தயாரிப்பாளர் தாணு தரப்பு மற்றும் படத்தை வாங்கிய மன்னார்குடி கும்பலின் அட்ராஸிட்டி போன்றவை ஏகத்திற்கும் படத்திற்கு ஒரு நெகட்டிவ் இமேஜ் உருவாக காரணமாக அமைந்தது.

மூன்றாவதுதான் மிக முக்கியமானது. படத்தில் ரஜினியின் வெளிப்படையான அடையாள அரசியலும் ஒரு சில காட்சிகளில் வரும் வசனங்கள் தான் இங்கு பொது சமூகத்திற்குள் ஒரு எரிச்சலை உண்டு பண்ணியது.

இந்த பொது சமூகத்திற்குள் சாதிவெறியர்களும் இருக்கிறார்கள். முற்போக்கு சாதிவெறியர்களும் இருக்கிறார்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப இதை எதிர்க்க பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த வன்மத்தைத்தான் படம் வெளியானதிலிருந்து இங்கு பலருடைய பதிவுகளில் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.

அதே சமயம் அட்டக்கத்தியும், மெட்ராசும் வந்தபோது கொண்டாடியவர்கள் இன்று கபாலி சுமாரான படம் என்று சொன்னால் சாதிவெறியர்கள் என்று தலித் போராளிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் விமர்சிப்பதும் எரிச்சலானது. கண்டிக்கப்பட வேண்டியது.

உண்மை என்னவென்றால் இது முழுக்க ரஜினி படமாகவும் இல்லை.. ரஞ்சித் படமாகவும் இல்லை. இந்த எதார்த்தத்தை ரஞ்சித் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.

படத்தில் இன்னொரு குறிப்பிடும்படியான வசனம் இருக்கிறது. அது

``காந்தி சட்டையை கழட்டுனதுக்கும்.. 
அம்பேத்கர் கோட் போட்டதற்கும் 
பின்னாடி அரசியல் இருக்கிறது”

இந்த வசனமும் கபாலி மீதான வன்மத்திற்கு இன்னொரு கூடுதல் காரணம். ஆண்டப்பரம்பரை வசனம் படத்தில் கொஞ்சம் கூட ஒட்டாமல் திணிக்கப்பட்டது வெளிப்படையாக தெரிகிறது.

ஆனால் இந்த வசனங்கள் படத்தில் ரஜினியின் விருப்பமில்லாமல் இடம்பெற்றிருக்க முடியாது. ரஜினிக்கும் ரஞ்சித்துக்குமிடையில் ஒரு மெல்லிய புரிந்துணர்வு இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இதன் தாக்கம் என்னவென்று தெரியாமல் ரஜினி பேசியிருக்க மாட்டார்.

பொதுவாக எம்ஜிஆர் படஙக்ளில் கவனித்துப்பார்த்தால் தெரியும். அவர் சேரியில் வளர்ந்திருப்பார். ஏழைகளுக்காக போராடுவார். ஆனால் க்ளைமாக்ஸில் அவர் ஒரு பெரும் ஜமீன் வீட்டு பிள்ளையாக இருப்பதாக படம் முடியும். அதாவது, அவர் சேரியில் இருந்தாலும் அவர் பிறந்தது உயர் குலத்தில் தான் என்று காட்சி வைப்பார்கள். இது ஒரு அரசியல் தந்திரம்.

ஆனால் இப்படியான தந்திரம் எதுவுமில்லாமல், தன் இமேஜ் குறித்து கவலைப்படாமல் ரஜினி ஒரு தலித் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இது உண்மையிலே பாராட்டப்பட வேண்டியது.

பொதுவாக ஊடகத்தில் கவனித்துப்பார்த்தீர்கள் என்றால், சாதி ஒழிப்பு குறித்து பேச ஒரு ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவர்களைதான் பயன்படுத்துவார்கள். நம் ஊடக புலிகள் பயன்படுத்தும் தந்திரம் இது. அதாவது விடுதலை தேவைப்படுபவனை பேசவிடாமல், உனக்கான விடுதலையை நான் பேசுகிறேன்.. நீ அமைதியாக இரு.. என்று கூறும் தந்திரமது.

அப்புறம் கபாலி முழுமையாக தலித் மக்களின் வாழ்வியலை பேசிய படமா என்றால் நிச்சயமாக இல்லை. சாதி ஆதிக்கம் நிறைந்த திரைத்துறையில் ஒரு உச்ச நட்சத்திரத்தை வைத்து தன்னால் முடிந்த எதிர்ப்பரசியலை ரஞ்சித் பதிவு செய்திருக்கிறார்.

அதை ஆதரிக்கவில்லை என்றாலும் வன்மம் கொண்டு எதிர்க்க வேண்டியதில்லை. ரஞ்சித் அம்பேத்கர் சேகுவேராவை செட் பிராப்பர்ட்டியாக பயன்படுத்துவதாக போகிற போக்கில் நண்பர்கள் விமர்சித்துவிட்டு செல்கிறார்கள்.

நல்லது.. உங்களுக்கு திரைத்துறையில் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் சாதி எதிர்ப்பு அரசியல், தலித் மக்களின் விடுதலை அரசியலை ரஞ்சித்தை விட நீங்கள் சிறப்பாக முழுமையாக பேசுங்கள்.

ஆனால் அதற்கு முன் சென்னைப்போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில், நீங்கள் ஒரு தலித் என்று வெளிப்படையாக சொல்லி வாடகைக்கு வீடு வாங்கி அந்த வீட்டின் வரவேற்பரையில் நீங்கள் சொல்லும் செட் பிராப்பர்ட்டியான அம்பேத்கர் படம் ஒன்றை பெரிதாக மாட்டி வைத்து ஓராண்டு தலித்தாக வாழ்ந்துபாருங்கள்.. ரஞ்சித்துகளின் வலியும் கோபமும் புரியும்.

மீண்டும் இந்த வசனத்தை படித்துப்பாருங்கள்..

``பறவையோட குணமே 
பறக்குறதுதான்டா..
அதை பறக்க விடு.. 
வாழ்வோ சாவோ 
அது பார்த்துக்கட்டும்.. 
உன் கருணை அதோட 
சாவை விட 
கொடுமையானது..”

இந்த வரிகளுக்குள் இருக்கும் அரசியல் இப்போது புரியும்..

ஆக அந்த மக்களுக்கு தேவை உங்கள் கருணை அல்ல.. ஓங்கி ஒலிக்கும் அவர்களின் நியாயமான குரலை காது கொடுத்து கேளுங்கள்.. 
அது உங்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணினாலும் கூட..

மகிழ்ச்சி..!

-கார்ட்டூனிஸ்ட் பாலா
26-7-16

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தமிழேண்டா..

அந்த இளைஞன் அவுஸ்திரேலியாவில் குடியேறிய தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த தமிழ் அவுஸ்திரேலியன். இயற்கையாகவே கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய அவன் உள்ளூர் கழகத்தில் இணைக்கப்பட்டு பயிற்சி பெற்று மற்றய கழகங்களை எதிர்த்து ஆரம்பத்துடுப்பாட்ட வீரனாக Opening batsman ) சிறு வயதில் விளையாடத் தொடங்கினான். அவனுடன் சக ஆரம்பத்துடுப்பாட்ட வீரனாக ( சிறு பராயந்தொட்டு ) ஒன்றாக விளையாடிக்கொண்டிருந்த சக வீரன் ஒரு வெள்ளை அவுஸ்திரேலியன்.
இந்த இரு இளம் வீரர்களும் நல்ல புரிந்துணர்வுடன் வெற்றிகரமான ஜோடியாக ஆடிக்கொண்டிருந்தார்கள். நல்ல கிரிக்கெட் வீரனான இந்தத்தமிழ் இளைஞனானவன் கிரிக்கெட்டின் அடுத்த கட்டத்துக்குள் நுழைந்து மாநில அணிக்குள்ளும் அங்கிருந்து பின்னர் அவுஸ்திரேலிய அணிக்குள்ளும் நுழையும் தகுதியுள்ள வீரனாக பயிற்சியாளர்களால் கணிக்கப்பட்டிருந்தான்.
இவர்கள் இருவரும் மாநில அணிக்குள் நுழைந்து அதன்மூலம் First class cricket விளையாடும் தகுதியை அடைவதற்கு சில வருடங்களே இருந்தன. இந்த வேளையில், வழமையாக தமிழ்ப்பெற்றோர்கள் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் மனநிலைக்குள் தள்ளப்பட்ட அவனது பெற்றோர், அவனது படிப்பு கிரிக்கெட்டால் குழம்பிவிடும் எனக்காரணம் கூறி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தமது மகனை வலுக்கட்டாயமாக நிறுத்துகின்றனர்.அன்றிலிருந்து அந்தத் தமிழ் அவுஸ்திரேலிய இளைஞனிற்கு இயற்கை கொடுத்த கிரிக்கெட் திறமையும் அவனது கனவும் அழிக்கப்பட்டது.
மறுபுறத்தே அவனுடன் கூட விளையாடிக்கொண்டிருந்த சக இளம் வெள்ளையின இளைஞன், அவனது ஆடும் பாணியான இடது கை ஆட்டத்திலிருந்து வலது கை ஆட்டத்துக்கு மாறும்படி பயிற்சியாளரால் அறிவுறுத்தப்படுகிறான். ஆனால் அவனது தாயாரோ தனது மகன் இடது கை ஆட்டக்காரனாக இருந்தால்தான் அவனது முழுத்திறமையையும் வெளிக்கொணர்வான் எனத் திடமாகக் கூறி அவனை இடது கை ஆட்ட வீரனாகவே தொடர்ந்து ஆடச் செய்கிறாள். அந்தத் தாய் தனது மகனைப்பற்றிக்கணித்தது தவறவில்லை காலப்போக்கில் அவன் இடதுகை ஆட்டத்தில் அதிசிறந்து விளங்கியதால் First class cricket போட்டிகளில் விளையாடுமுன்னரேயே அவுஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் அணிக்குள் சேர்க்கப்படுகிறான். இதில் விஷேஷம் என்னவென்றால் 132 வருட வரலாற்றைக் கொண்ட அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணியில் அதுவரை முதல் தர கிரிக்கெட் ( First class cricket ) விளையாடாத எவரும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
தேசிய அணியில் இடம்பெற்றதும் கிடு கிடுவென வளரத் தொடங்கிய அந்த வீரன் உலக கிரிக்கெட் வரலாற்றில், இந்தியாவின் சுனில் கவாஸ்கர் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங்கிற்கு அடுத்து தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இனிங்சிலும் சதம் அடித்த மூன்றாவது வீரன் என்ற மிகப்பெரும் சாதனை உட்பட இன்னும் பல சாதனைகள் செய்யத்தொடங்கி, அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் கௌரவங்களில் ஒன்றான அந்த நாட்டின் கிரிக்கெட் அணியின் அடுத்த கப்டன் என்ற நிலைக்கு உயர்த்தப்படுகிறான். அப்படியாக தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப ஜோடியாக தமிழ் இளைஞனுடன் ஆரம்பித்து இன்று சாதித்து நிற்கும் வீரன்...
டேவிட் வார்னர். ( David Warner )
அவனுடன் சரிக்குச் சரியாக சின்ன வயதில் விளையாடிவந்த தமிழ் இளைஞன் இன்று ஒரு சராசரி மனிதனாக எங்கோ ஒரு வேலையைச் செய்தபடி மாதச் சம்பளத்தை எடுத்தபடி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறான். ஒருவேளை இந்தத்தமிழ் இளைஞனை அவனது பெற்றோர் தடுத்து நிறுத்தாது விட்டிருந்தால் அவன் இன்னொரு வார்னராக கிரிக்கெட் உலகில் சாதித்திருக்கக் கூடும். ஆனால் அப்படியான ஒரு வாய்ப்பு தடுக்கப்பட்டதற்குக் காரணம் அவனது பெற்றோர்.
அந்தத் தமிழ் இளைஞனின் தந்தையை நான் நன்கு அறிவேன். ஒருமுறை bluddy bugger Australians, எனது மகன் தொடர்ந்து விளையாடியிருந்தாலும் தேசிய அணியில் இடம் கொடுத்திருக்க மாட்டார்கள் காரணம் இவர்கள் Racist என்றார்.
இந்தப் பதிவை இன்று நான் எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது:
தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்குச் சென்றுள்ளது. அதனைப்பற்றி அளவளாவிய தமிழ் நண்பர் ஒருவர் இலங்கை அணியில் எத்தனை தமிழர்கள் உள்ளனர் எனக் கேட்டார். எனக்குத் தெரிந்தவரையில் அந்த அணியின் கப்டனான ஆஞ்சலோ மத்தியூசின் தந்தை ஒரு தமிழர் அவரைத் தவிர மற்றயோரைப்பற்றித் தெரியவில்லை என்றேன். தமிழர்களை தமிழர்கள் என்ற காரணத்துக்காகவே அந்த அணியில் சேர்க்க மாட்டார்கள் என்றார் வெறுப்புடன். அவரின் கூற்றில் உண்மை இல்லாமலில்லை இதே போன்றே இந்திய அணியிலும் தமிழர்கள் அதிகம் சேர்க்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் ஆதங்கமும் எம்மத்தியில் உண்டு, ஆனால் எத்தனை தமிழர்கள் தமது பிள்ளைகளின் திறமையை மதித்து அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கிரிக்கெட்டிலோ அல்லது வேறு அவர்களுக்கு விரும்பிய துறையிலோ தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க அனுமதிக்கிறார்கள் ? ஒரு சர்வதேசக் கிரிக்கெட் அணியில் நாட்டுக்காக விளையாடுவதென்பது லேசான விடயமல்ல, அதற்கு கடினமான உடல், உளப் பயிற்சிகளும் மிகுந்த அற்பணிப்புக்களும் செய்யவேண்டியிருக்கும் அதற்கு தமிழ் இளைஞர்களுக்கு குடும்பத்தாரிடமிருந்து ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்காதவிடத்து சாத்தியமில்லை.
எம்மில் பிற்போக்குத்தனங்களையும் பழமைவாதங்களையும் வைத்துக்கொண்டு எதற்கெடுத்தாலும் மற்றயோரைக் குறைக்கூறிக்கொண்டிருப்பதும் எம்மிடமிருக்கும் தனித்துவங்களில் ஒன்று.
பிற்குறிப்பு :
இந்த சவாலை விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல இசைக்கலைஞர்களும் அவர்களின் ஆரம்ப காலத்தில் எதிர்கொள்கிறார்கள். எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய வருமானத்துக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையில் இசையில் கொண்ட அளவற்ற காதலாலும், தன் திறமைமேல் கொண்ட தன்னம்பிக்கையாலும் சவால்களை எதிர்த்து நின்று தாம் சார்ந்த இசைக்கருவியில் ஒருவர் சாதிக்கிறார் என்றால் அது எத்துணை பெரிய விஷயம். அதனால் அவர்கள் மேல் அளவற்ற மரியாதையும் மதிப்பும் எனக்குண்டு. இசைக்கலைஞர்களைப்பற்றிய விரிவான பதிவுகளை நான் எழுதுவதற்கான காரணம் ஏன் என்று நட்புடன் வினவும் நட்புக்களுக்கான பதிலிது.

13731743_10210401295333222_7065030880077

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.