Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கூட்டமைப்பை தடைசெய்து சுரேஸ், சுமந்திரன், அனந்தியை கைது செய்ய வேண்டும்: ஹெல உறுமய மகிந்தவிடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்க் கூட்டமைப்பை தடைசெய்து சுரேஸ், சுமந்திரன், அனந்தியை கைது செய்ய வேண்டும்: ஹெல உறுமய மகிந்தவிடம் கோரிக்கை
ஏப் 11, 2014
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக இயங்கி வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக சிறிலங்காவில் தடை செய்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், சட்டத்தரணி சுமந்திரன், எழிலனின் மனைவி அனந்தி ஆகியோரைக் கைதுசெய்ய வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்திருக்கின்றது. உருத்திரகுமாரையும் நெடியவனையும் விநாயகத்தையும் அடேல் பாலசிங்கத்தையும் உயிருடனோ பிணமாகவோ சிறிலங்காவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் இந்தக் கட்சி அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
 
மகிந்த ராஜபக்ச அரசில் அங்கம் வகிக்கின்ற மேற்படி ஜாதிக ஹெல உறுமய கட்சி தொடர்ந்து இனவாதம் பேசி வருகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிந்த நிலையில் இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தக் கட்சி தமிழ் கூட்டமைப்பையும் புலம்பெயர் தமிழ் மக்களின் அமைப்புக்களையும் விமர்சித்துள்ளது.
 
வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா அரசுக்கு எதிராகச் செயற்படும் புலி ஆதரவாளர்களையும் உயிருடனோ அல்லது பிணமாகவோ நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க கருத்து தெரிவிக்கையில்,
 
பிரிவினைவாதம் என்ற மரத்தின் பிரதான கிளையை மட்டுமே நாம் வெட்டியுள்ளோம். அதன் ஏனைய பகுதிகள் அப்படியே இருக்கின்றன. அவற்றையும் வெட்டியெறிந்து மரத்தை வேருடன் சாய்க்க வேண்டும். அமெரிக்க நியூயோர்க்கிலிருந்து செயற்படும் உருத்திரகுமாரையும், நோர்வேயிலுள்ள நெடியவனையும், பிரான்ஸிலுள்ள விநாயகத்தையும், லண்டனிலுள்ள சுரேந்திரன், புலிகளின் ஆலோசகராகச் செயற்பட்ட பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம், உலகத் தமிழர் பேரவையின் வண.இம்மானுவேல் அடிகளார் ஆகியோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ இலங்கைக்குக் கொண்டுவரவேண்டும் என்பதை நாம் அரசிடம் வலியுறுத்திக் கூறுகிறோம்.
 
நந்தகோபன் எனப்படும் நெடியவனின் உதவியாளரை மலேசியாவில் வைத்துக் கைதுசெய்துள்ளோம். இதனூடாக சர்வதேச ரீதியில் செயற்படும் புலிகளின் வலையமைப்புக்கு சிவப்பு சமிக்ஞையைக் காட்டியுள்ளோம். தலைத்தூக்க முயற்சிக்கும் புலிகளின் வலையமைப்பை முற்றாக அழித்தொழிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, புலிகளின் அரசியல் பிரிவாக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும். அதற்குத் தேவையாயின் சர்வஜன வாக்கெடுப்பொன்றையும் நடத்த வேண்டும் - என்றார்.
 
ஜாதிக ஹெல உறுமய கட்சி தொடர்ந்து இனவாதம் பேசுகின்ற கட்சியாக இருக்கின்ற போதிலும் இதன் அண்மைக்காலச் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு எதிரான தீவிரப் போக்குடையதாக காணப்படுவதாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்து வருகின்றனர். இந்தக் கட்சி தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளைப் பிரயோகிக்கக்கூடிய அச்சம் நிலவுவதாகவும் மேற்படி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.