Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் கோமாளிக் கூத்தை தமிழ் சிங்கள மக்கள் நம்பவில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் கோமாளிக் கூத்தை தமிழ் சிங்கள மக்கள் நம்பவில்லை! குளோபல் தமிழச் செய்தியாளர்கள்:-
 
11 ஏப்ரல் 2014
 Bookmark and Share
அரசாங்கத்தின் ஓர் நாடகமே மூவரின் கொலை - கே.சிவாஜிலிங்கம்:-
 
 
தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க முயன்ற கோபி உள்ளிட்ட மூவரை தேடுகிறோம் என்ற நாடகத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் கடந்த ஒரு மாதகாலமாக இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட கடுமையான சோதனை நடவடிக்கைகளும் கைதுகளும் எச்சரிக்கைளும் தமது இயல்பு வாழ்வை பாதிக்கவே மேற்கொள்ளப்பட்டன என வட கிழக்கு மக்கள் குறிப்பிடுகின்றனர்.
 
இராணுவத்தின் இன்றைய நடவடிக்கை குறித்து எமது செய்தியாளர்கள் பொதுமக்ளிடம் உரையாடினர். 'எமது பிள்ளைகள் துப்பாக்கிகளை மௌனித்து விட்டார்கள். அவர்கள் சிந்திய இரத்திற்திற்கு நீதி கேட்பதுதான் இனி எங்கள் போராட்டம். அதைக் குழப்பவே அரசு இந்த நாடகம் ஆடியது' என்று கிளிநொச்சி விசுவமடுவைச்  சேர்ந்த க.. இ..ம் தெரிவிக்கின்றார்.
 
மூன்று புலிகள் சுட்டுக்கொலை என்ற செய்தியை காவல்துறைப் பேச்சாளரும் இராணுவப்பேச்சாளரும் ஊடகங்களுக்கு அறிவித்தனர். கைத்தொலைபேசிகள் வாயிலாகவும் வானொலிகள் தொலைக்காட்சிகள் வாயிலாகவும் இந்த செய்திகள் மக்கள் மத்தியில் பரப்பபட்டன. எனினும் வடக்கு கிழக்கில் உள்ள பொதுமக்கள் இந்த செய்திமீது சற்றும் கவனம் செலுத்தவில்லை.
 
'அரசாங்கம் ஜெனீவாவை முன்னிடடு ஆரம்பித்த தன் புலிப் பூச்சாண்டி நாடகத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது' இவ்வாறு குறிப்பிடுகிறார் வவுனியா கோமரசங்குளத்தை சேர்ந்த எம். க....ன். இந்த செய்தியை மக்கள் நம்புவார்கள் என்று இராணுவத்தரப்பு எதிர்பார்த்திருந்தது. திட்டமிட்டு செய்திகளும் பரப்பட்டிருந்தது எனவும் அவர் சொல்கிறார்.
 
'சிங்கள அரசு எங்கள் போராளிகளை கொச்சைப்படுத்துகிறது. அதற்கு எங்கள் போராளியின் முகங்கள் தெரியாது. திரும்பவும் எப்ப வேண்டுமென்றாலும் எங்களுக்கு எதிரான புலி நாடகம் போடலாம்' இவ்வாறு தெரிவிப்பவர் கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த பெண் ம..ரி.
 
இதேவேளை இந்த செய்தி தெற்கிலும் எந்த விதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்று எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார். அரசாங்கம் புலிப் பூச்சாண்டி காட்டுகிறது என்பதை சிங்கள மக்கள் உணர்ந்தமையின் காரணமாக மக்கள் இது குறித்து எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.
 
 
தேடப்படுபவர்கள் என காட்டுபவர்களின் முகங்கள் புலிகளதல்ல என்பதை சிங்கள மக்கள் கருத்து தெரிவித்திருந்தாக முன்னர் ஒரு செய்திக் குறிப்பில் அவர் குறிப்பி;டார். மீண்டும் ஒரு வெற்றிவிழாவை கொழும்பில் நடத்தி இலங்கை சனாதிபதி மண்ணை முத்திட்டிருப்பார். ஆனால் அவ்வாறான அதிசயங்கள் எதுவும் நடைபெறாமல் ஊடகங்களின் செய்திகளிலேயே இந்தப் புலி பிடித்தல் நடைபெற்றுள்ளது. 
 
'நாங்கள் நம்ப மாட்டம். சிங்களச் சனத்திற்கும் தெரியும். ஆனால் எங்களுக்கு நாடகம் போடேல்ல அரசாங்கம். உலகம்பாக்கப் போட்ட நாடகம் இது. அவை இதை நம்பாட்டி சரி' என்று குறிப்பிடுகிறார் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த வி. ம....ன். இந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கை அரசாங்கத்திற்கு இந்த நாடகம் கடும் தோல்வியை கொடுத்திருப்பதாகவே தெரிகிறது. 
 
அரசாங்கத்தின் ஓர் நாடகமே மூவரின் கொலை - கே.சிவாஜிலிங்கம்:-
 
இலங்கை இராணுவத்தினால் முல்லைதீவு நெடுங்கேணி பகுதியில் விடுதலைப்புலிகள் மூவர் இன்று அதிகாலை மோதலொன்றில் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை ஓர் நாடகமே என வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் த்தெரிவித்துள்ளார்.
 
உயிரிழந்தவர்களது  சடலங்கள்; பதவியா அரசினர் வைத்தியசாலையில் படையினரால் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது.அருகாக முல்லைத்தீவு அரசினர் வைத்தியசாலையோ கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையோ இருக்கின்ற நிலையில் எதற்காக சடலங்களை பதவியாவிற்கு எடுத்து செல்ல வேண்டியிருந்ததெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
 
விடுதலைப் புலிகளிற்கு புத்துயிர் வழங்கி மீளக்கட்டமைக்க முற்படுவதாக தெரிவித்து இலங்கை அறிவித்திருந்த கோபி மற்றும் அப்பன் ஆகியோருடன் தேவியன் ஆகியோரே சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.
 
எனினும் சம்பவ இடத்திற்கு செல்ல பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட எவரும் அனுமதிக்கப்பட்டு இருக்கவில்லை. பிரேத பரிசோதனை சிங்கள சட்டவைத்திய அதிகாரிகளினாலேயே முன்னெடுக்கப்;பட்டு உள்ளது. நெடுங்கேணியில் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு மரணவிசாரணையினை அனுராதபுரம் நீதிபதி செய்யவுள்ளாராம்.
 
வடக்கில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதாக கூறிக்கொண்டிருக்கும் அரசு ஏன் சத்தமின்றி இவ்வாறு அனைத்தையும் மூடி மறைத்து செய்ய வேண்டியிருக்கின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். உண்மையில் சர்வதேசத்தை ஏமாற்ற மூடப்பட்ட படைமுகாம்களை மீள நிறுவ ஆடப்பட்ட நாடகமே இதுவெனவும் அவர் தெரிவித்தார்.
 
இதனிடையே ஏற்கனவே கைதான கோபி மற்றும் சகபாடிகள் விசாரணையின் பின்னராக திட்டமிட்டு நாடகமொன்றினை அரங்கேற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105509/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.