Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெதமுலன ராஜபக்ஸக்களின் இருப்பும் - தமிழ் வியாபாரிகளின் பிழைப்பும் - நெஞ்சு பொறுக்குதில்லையே -

Featured Replies

 

Gota-and-MR-smiling_CI.jpg

 விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்களாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்க்ப்பட்ட கோபி, தேவிகன், அப்பன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் இன்று (11.04.14) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும் 3 நாட்களுக்கு முன்பே (08.04.11) கோபி கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இந்தச் செய்திக்கு காரணம் பாதுகாப்பு தரப்பில் இருந்து கசியவிடப்பட்ட தகவல் எனத் தெரிய வருகிறது. உதயன் பத்திரிகைக்கு கிடைத்த இந்தச் செய்தியின் மூலம் என்ன? இதன் பின்னணி என்ன?

ஆயின் இந்தச்செய்தியின் அடிப்படையில், 3 நாட்களுக்கு முன் கைதான கோபி நேற்று  இரவு காட்டுக்குள் வைத்து (10.04.14) சுட்டுக் கொல்லப்பட்டதாக இன்று (11.04.14) அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் அல்லது நோக்கம் என்ன? இது பற்றி யாரும் கேள்வி கேட்க முடியுமா? அல்லது கேள்வி கேட்டார்களா? இல்லையே!

உண்மையில் ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட இருந்த தீர்மானத்தை  நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து அவை தோற்றுப் போகவே இந்த புலி நாடகத்தை தயாரிக்க தொடங்கியது.

இந்தப் புலி நாடகத்தை தயாரித்த போது இதன்மூலம் பல்வேறு தேவைகளையும்  ராஜபக்ஸக்கள் நிறைவுசெய்யக் காத்திருந்தனர். குறிப்பாக காணாமல் போனோர், சரணடைந்தோரைக் தேடி அவர்களின் உறவினர்களால் நடத்தப்பட்ட தொடர் போராட்டங்கள், உயர் பாதுகாப்பு வலையங்களுக்குள் சுவீகரிக்கப்பட்டுள்ள தமது வாழ்விடங்களை மீட்பதற்கான போராட்டங்கள், மக்கள் குடியிருப்புக்களை ஆக்கிரமித்துள்ள படையினரை வெளியேறும் போராட்டங்கள் என வடகிழக்கு எங்கிலும் அரசாங்கத்திற்கு எதிரான சாத்வீகப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியிருந்தன.

இந்தப் போராட்டங்களில் சர்வதேச தலைவர்கள், ராஜதந்திரிகள், ஐநாவின் விசேட பிரதிநிதிகளின் வடக்கு விஜயங்களின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும், சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருந்தன.

இவற்றின் உச்சமாக பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் இடம்பெற்ற பொது இலங்கைக்கு சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட்கமரோன் வடக்கிற்கு முக்கிய பயணத்தை மேற்கொண்டு இருந்தார். அதன்போது யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை சனல் 4 ஊடகம் முழுமையாக செய்தியிட்டமை, தனிப்பட்ட செவ்விகளை அந்த ஊடகம் பெற்றுக் கொண்டமை என்பன இலங்கை அரசாங்கத்தின்,  குறிப்பாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஸவின் அதி உச்ச  வெறுப்பை ஏற்படுத்தி இருந்தன.

மறுபக்கம் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை அமைப்புக்கள், போருக்குப் பின்னரான  இலங்கை அரசாங்கத்தின்  அடாவடித் தனங்களை பட்டியலிட்டு அறிக்கையிட்டுக் கொண்டிருந்தனர்.

எனவே இவையாவற்றையும் முழுமையான கட்டுப்பாட்டுள் கொண்டுவரவும், இனிவரும் காலங்களில் இவ்வகையான போராட்டங்களுக்கோ, அல்லது அறிக்கையிடல்களுக்கோ இலங்கையில் எவரும் துணியக் கூடாது எனபதற்கான பாடம் புகட்டலை மேற்கொள்ள சிறந்த வழி புலிப் பித்தலாட்டம் என்பதனை அரசாங்கம் விசேடமாக மெதமுலன ராஜபக்ஸக்கள் நன்றாகவே விளங்கி வைத்திருந்னர்.

இதற்கு 2 காரணங்கள் அவர்களுக்கு பட்டறிவில் கிடைக்கப்பெற்றவை.

1)  மே 19ல் புலிகளை அழித்து 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்கள் ராஜபக்ஸக்கள். அவர்கள் எல்லாளனை வெற்றிகொண்ட துட்டகைமுனுவுக்கு நிகரானவர்கள். என்ற வெற்றி மமதையில் சிங்கள மக்கள் இருக்கும் நிலையில், தாம் சொல்லும் புலிக்கதைகளை கேள்விக்கு இடம் இன்றி தமது மக்கள் நம்புவார்கள் என்பதனை ராஜபக்ஸக்கள் உணர்ந்திருந்தனர்.

2) 5ஆம் கட்டப் போர் வெடிக்கும், மீண்டும் சூரியோதையத்தைக் காணலாம் எனக்கனக் கனவுகண்டு கொண்டிருக்கும் தமிழர்கள் சிலரும், புலிக் கதை பேசியே தமது இருப்பைத் தக்க வைக்கும்  தமிழர்கள் சிலரும் இருக்கிறார்கள் என்பதனையும் ராஜபக்ஸக்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள். அதனால்  வன்னியில் ஒரு அப்பாவித் தமிழ் வாலிபரையோ, யுவதியையோ பிடித்து கையில் ஒரு குண்டையோ, துப்பாக்கியையை அல்லது ஒரு தமிழ்த் துண்டுப் பிரசுரத்தையோ கொடுத்து புலிபிடித்தோம் எனக் கதையை ஆரம்பித்து விட்டால் அதற்கு கை, கால் வைத்து மிகுதிக் கதை எழுதி மீண்டும் புலிகள் வந்து விட்டார்கள் தமிழீழப் போராட்டம் ஆரம்பமாகப் பொகிறது எனன்றோ, புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் மோதல் 3 புலிகள் மரணம் படைத்தரப்பிலும் பாரிய இழப்பென்று கதை எழுதி புள்காகிதமடைந்து, வியாபாரம் செய்யும் தமிழர்கள் சிலரும் இருக்கிறார்கள் என்பதனையும் ராஜபக்ஸக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

இந்த நிலையில் தெற்கில் புலம்பெயர் புலிபுராணம் பாடி, புலிகள் மீண்டும் மீள் இணைய முற்படுகிறார்கள் எனக் கூறும் கதைகளை நம்பும் பெரும்பான்மையான சிங்கள மக்கள் உண்மையை உணரும் வரை, வட கிழக்கின் இன்றைய இராணுவ மயமாக்கலில், இந்தியா உள்ளிட்ட சர்வதேசம், 83களில் இருந்த   சூழலைப் போல் இல்லை என்பதையும், புலிக் கதை பேசினால் சர்வதேசமும் தமிழ் மக்களுக்கு எதிராக திரளும் என்ற யதார்த்தத்தையும், அதற்கேற்ப போராட்ட வழிமுறைகளை கையில் எடுக்க வேண்டும் என்ற உண்மையையும் தமிழ் தரப்புக்கள் புரிந்துகொள்ளும் வரை தமது சாம்ராச்சியத்தை எவராலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது என்ற உறுதிப்பாட்டில் மெதமுலன ராஜபக்ஸக்கள் முன்னேறிச் செல்கிறார்கள். இதன் அடிப்படையில் திட்டமிட்ட நகர்வுகள் தான் இன்று முடிவுறுத்தப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிட்ட பன்முக தேவைகளில் ஐக்கியநாடுகள் மனித உரிமைச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட இருந்த நிலையில் அந்த தீர்மானத்தை கொண்டுவருவதற்கு உழைத்த போராட்டம் நடத்திய முக்கியமானவர்களில் பழிவாங்கக் கூடியவர்களை இலக்கு வைத்தார்கள்.

அவர்களுள் முதன்மையானவர்களாக வெளிப்படையான போராட்டங்கள், செவ்விகளை வழங்கியவர்களுள் 49 வயதுடைய பாலேந்திரன் ஜெயக்குமாரியும், 13 வயதுடைய பாலேந்திரன் விபூசிகாவும் முக்கியமானவர்கள் என்பதனை தெரிந்திருந்தார்கள்.

இவர்களில் விபூசிகா ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையை சந்தித்த சிறுமிகளில் ஒருவர்.

தாயார் ஜெயக்குமாரி பல முக்கிய சாட்சியங்களை வழங்கியதாக அரசாங்கத்தின் கடும் எரிச்சலுக்கு ஆளானவர். இந்த நிலையில் இந்தத் அப்பாவித் தாயையும் மகள் விபூசிகாவையும் கைது செய்வதற்கு புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற விடயத்தை சொல்வதைத் தவிர வேறு எதனையும் சொல்ல முடியாத நிலையில் பாதுகாப்பு தரப்பினரும் புலனாய்வாளர்களும் உள்ளாக்கப்பட்டு இருந்தனர்.
 

இதற்காக ஒரு கதையை அரசாங்கம் உருவாக்கியது.  அந்தக் கதைக்கு உரிய துண்டுப் பிரசுரம் ஒன்று வன்னியில் பரவலாக விநியோகிக்கப்பட்டது. இந்தத் துண்டுப் பிரசுரத்தை வழமைபோல் புலிகளளின் பாணியில் புலனாய்வுப் பிரிவினரே விநியோக்கித்தனர். இவ்வாறான துண்டுப்பிரசுரங்களை முன்பும் வடகிழக்கில் புலனாய்வாளர்கள் விநியோகித்துள்ளனர். இந்த துண்டுப்பிரசுர விநியோகம் குறித்து மார்ச் 6ல் வெளிவந்த செய்தியின் இணைப்பு இது... (பச்சை நிறத்தில்  வரும் எழுத்துக்கள் குறித்த திகதிகளில் வெளியாகிய செய்திகளின் இணைப்பு)

இணைப்பு 2- சுவரொட்டிகளை ஒட்டினார்கள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது:- இன்றைய காலம் சுதந்திரத்திற்கான போராட்ட பயணத்தில் அகிம்சைப் போராட்டத்திற்கான காலம்:- தமிழீழத்தின் காவலர்கள்:- வடக்கின் பல பாகங்களில் துண்டுப்பிரசுரங்கள்:-

06 மார்ச் 2014 -

வன்னியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத் தொடர்ந்தே புலிகளின் புதிய நாயகனாக கோபியை அரசாங்கம் அறிவித்தது.

துண்டுப் பிரசுரம் விநியோகித்ததன் பின் இருவர் கைதானதாக அறிவிக்கப்பட்டு 6 நாட்களின் பின் மார்ச் 12ல் புலிகளின் நாயகன் கோபி தேடப்படுவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் அறிவிப்பு வெளியானது. அது குறித்து வெளியான செய்தி இணைப்பு இது....

பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இவரைத் தேவையாம்:- கண்டால் ஒருக்கா சொல்லி விடுங்கோ...

12 மார்ச் 2014 -

இந்தச் செய்தியையும் அரசாங்கம் வெளியிட்ட முதலாவது படத்தினையும் மேற்குறித்த இணைப்பில் பார்வையிடுபவர்களுக்கு மற்றும் ஒரு உண்மை புரியப் போகிறது.. கோபி என அரசாங்கம் உருவாக்கிய நாயகனின் முதலாவது படத்திற்கும் இப்போ காட்டும் கோபியின் படத்திற்கும் உள்ள வித்தியாசங்களை ஒப்பிட்டு நோக்கினால் புலனாய்வுப் பிரிவு செயற்பாட்டின் ஓட்டைகள் நன்கு புரியும்.

இதுவே கோபி எனக் கூறப்படுபவரின் தற்போதைய படம்aa928.jpg

 பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக புகைப்படத்தில் இருக்கின்ற சந்தேக நபரை கைது செய்வதற்கு அவசியமாகவுள்ளதால் அவர் தொடர்பிலான தகவல்களை தந்துதவுமாறு மார்ச் 12ல் பொலிஸ் திணைக்களம் கோரியிருந்தது. மறுநாள் 13ஆம் திகதி பாலேந்திரன் ஜெயக்குமாரியின் வீடு சுற்றிவளைக்கப்பட்டு காலையில் இருந்து மாலைவரை எவரும் உட்புகமுடியாதவாறு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கு காரணம் பயங்கரவாத சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தது, பொலிசாரை நோக்கி து்பாக்கிப் பிரயோகம் செய்த நபர் அங்கிருந்த தப்பிச் சென்றது என அறிவிக்கப்பட்டது. இதற்குரிய செய்தி இணைப்பு இது.
காணாமல் போனோர் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வந்த தாயும் மகளும் கடத்தப்பட்டுள்ளனர் :- குளோபல்தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர்

13 மார்ச் 2014 -

முதல்நாள் சுற்றிவளைப்பு நடக்கிறது. அடுத்தநாள் மார் 14ல் பரந்தன் கிளிநொச்சி புகையிரத பாதை அருகே இராணுவ முகாமிற்கு எட்டிய தூரத்தில் அடையாளம் காணப்படாத முகம் உருக்குலைந்த சடலம் மீட்கப்படுகிறது. பரந்தன் - கிளிநொச்சிக்கு இடையில் அடையாள தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு :-குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி

14 மார்ச் 2014 -

வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவில் விபூசிகாவும் தாயாரும்? - விடுதலையாகினர் என மற்றும் ஒரு தகவல்:- உறுதிப்படுத்த முடியவில்லை:-

14 மார்ச் 2014 –

மார்ச் 14ல் மட்டக்களப்பிலும் புலிகளை தேடி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து சுவரொட்டிகளை ஒட்டியது அரசாங்கம். மட்டக்களப்பிலும் புலிதேடும் அரசாங்கம் கிழக்கையும் கிலிகொள்ள வைக்கிற்து- தகவலுக்கு 10 லட்சம்:-

மார்ச் 15ல் அரசாங்கம் தனது பிரதான இலக்கை எட்டியது. சர்வதேசத்தை உலுக்கிய போராட்டங்களில் முன்னணி வகித்த பாலேந்திரன் ஜெயக்குமாரி   3 மாத தடுப்பில் பூசாமுகாமிற்கு  அனுப்பப்பட்டார். விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Game Over - ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு - இணைப்பு 2:-

15 மார்ச் 2014 -

சட்டத்தின் அடிப்படையிலேயே ஜெயகுமாரி கைது செய்யப்பட்டார் - இராணுவம்:-

15 மார்ச் 2014 -

 சட்டவிரோத கைதுகளை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது:- தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்இணைந்து ஏற்பாடு செய்தன:-

15 மார்ச் 2014 -

வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் விபூசிகா ஒப்படைப்பு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கிளிநொச்சி:-

17 மார்ச் 2014 –

மார்ச் 17ல்  புலிகளைத் தேடும் சுவரொட்டிகள் மன்னாரிலும் ஒட்டப்பட்டன. கிட்த்தட்ட வடக்கு கிழக்கு என இயன்றவரை மக்களை கடுமையான உளவியல் தாக்கத்திற்கு படையினர் உட்படுத்தி விட்டனர்.

கிளிநொச்சி முல்லைத்தீவை கசக்கிப் பிழிந்த இலங்கைப் புலனாய்வுப் படை மன்னாரை இலக்கு வைப்பு:- மன்னாரில் இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள்- கண்டுபிடிக்க உதவுமாறும் கோரிக்கை! குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மன்னார்:-

17 மார்ச் 2014 –

மார்ச் 17ல் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை கைது செய்து தனது அடுத்த இலக்கையும் அரசாங்கம்  அடைந்துகொண்டது.  மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அருட் தந்தை பிரவீன் மற்றும் ருக்கிபெனான்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டனர்.  2ம்இணைப்பு - மனித உரிமை ஆர்வலர்கள் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் :- குளோபல்செய்தியாளர்

17 மார்ச் 2014 -

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் - அரசாங்கம்:-

19 மார்ச் 2014 -

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து வன்னியை இறுக்குகிறது இலங்கை இராணுவம்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

20 மார்ச் 2014 -

மாற்றுக் கருத்துக்களை முடக்கும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன - ரூகி பெர்னாண்டோ -

விசேடமொழியாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள்

20 மார்ச் 2014 -

ரூகி பெர்னாண்டோ - வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோரது கடவுச்சீட்டுகள் பறிமுதல் :- ஊடகங்களுடன் பேசத் தடை:-

21 மார்ச் 2014 -

கோபியை பற்றிய தகவல் வழங்குவோருக்கு பத்து லட்சம் பரிசு

22 மார்ச் 2014 -

வன்னியை பீடித்த சுற்றிவளைப்பு தேடுதல் காச்சல் யாழ்ப்பாணத்திற்கும் பரவியது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

22 மார்ச் 2014 –

மார்ச் 22ல் புலியைத்  தேடி யாழ் வட்டுக்கோட்டைக்கும் படைத்தரப்பு படை எடுத்தது. தர்மபுரத்தில் பாய்ந்த புலி வட்டுக் கோட்டையிலாம்... புலியைதேடி சுற்றி வளைப்பு தொடர்கிறதாம்.. ஐங்கரநேசனுக்கு படை கதையளப்பு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

22 மார்ச் 2014 -

அதே மார்ச் 22ல் மட்டக்களப்பிலும் புலிதேடும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. கிழக்கு இலங்கை அப்பாவித் தமிழர்களே தயாராகுங்கள் புலிவேசம் போடுவதற்கும் பூசாவுக்கு செல்வதற்கும்-

24 மார்ச் 2014 –

மார்ச் 24ல் கோபி அப்பனுடன் புலிகளின் தேவியனையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தமது தேடும் பட்டியலில் இணைத்தனர். புலிகளின் தேவியனையும் தேடுகிறார்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினர்- கண்ட இடத்தில் பிடித்துக் கொடுங்கள்:

24 மார்ச் 2014 –

மார்ச் 25ல் புதுக்குடியிருப்பில் இளைஞர் ஒருவர்கைதானார் அவர்பற்றிய தகவல்கள் பின் வெளியாகவில்லை. புதுக்குடியிருப்பில் இளைஞர் கைது.

25 மார்ச் 2014 -

13 வயதுச் சிறுமியான விபூஷிகாவும் சந்தேக நபரே

25 மார்ச் 2014 -

வவுனியாவில் கைது செய்யப்பட்ட கணவன் மனைவி மேலதிக விசாரணைக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளனா் - இரு பிள்ளைகளும் தாய் வழி பேத்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  வவுனியா

25 மார்ச் 2014 -

மன்னார் சின்னக்கருஸல் கிராமத்தில் இராணுவத்தினர் குடும்பப்பதிவுகளை மேற்கொள்கின்றனர் :- குளோபல்தமிழ்ச்செய்தியாளர் மன்னார்:-

26 மார்ச் 2014 -

புலிகள் மீள ஒருங்கிணைவது குறித்த உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன - அரசாங்கம்

27 மார்ச் 2014 -

கிளிநொச்சியில் அடையாள அட்டைகளை பறிக்கும் இராணுவத்தினர்:- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் - கிளிநொச்சி:-

28 மார்ச் 2014 -

மார்ச் 29ல் கோபியின் உதவியாளர் கைதாகி துப்பாக்கிரவைகள் மீட்கப்பட்டதாக படையினர் அறிவித்தனர். கோபியின் உதவியாளரே கைதாம் - துப்பாக்கி ரவைகளும் மீட்பாம்

29 மார்ச் 2014 -

புலிகளின் முன்னாள் கடற்புலிகள் தளபதி ஒருவருடைய வீடு மந்திகையில் படையினரால் சல்லடையிட்டு தேடுதல்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

30 மார்ச் 2014 -

கோத்தாபயவின் திரைக்கதை நாயகன் கோபி உள்ளிட்ட குழுவை கைது செய்ய மேலதிக பொலிஸ் குழு நியமிப்பு:-

01 ஏப்ரல் 2014 -

இணைப்பு2 -தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 16 அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதிப்பு:- இவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவர்:-

01 ஏப்ரல் 2014 -

ஒரு மில்லியன் ரூபாய் வேண்டுமா? இலங்கை புலனாய்வுப் பிரிவால் புலிப்பட்டம் சூட்டப்பட்ட இவர்களை பிடித்துக் கொடுங்கள:-

02 ஏப்ரல் 2014 -

யாழ்ப்பாணத்தில் குடும்ப விபரங்கள் வீடு வீடாகச் சென்று சேகரிப்பு: குளோபல் தமிழச் செய்தியாளர்:-

03 ஏப்ரல் 2014 –

ஏப்ரல் 3ல் தேடப்படுபவர்கள் பட்டியலில் பகீரதனும் இணைக்கப்பட்டார். அடுத்த புலி பகீரதன் தேவைப்படுகிறார்; - வடக்கில் சுவரொட்டிகள்

03 ஏப்ரல் 2014 -

வடக்கில் சத்தமின்றி தொடரும் கைதுகளால் மக்கள் கடும் அதிர்ச்சி- பொலிகண்டி கடல்பகுதியில் ஒரே நேரத்தில் ஐவர் கைது- பொலிகண்டியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-

05 ஏப்ரல் 2014 -

கிளிநொச்சி களியாட்ட நிகழ்வில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் கலந்து கொள்ளலாம்? ராணுவம் எச்சரிக்கை - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்.

08 ஏப்ரல் 2014 -

 இந்த வகையில் மார்ச் 6ல் ஆரம்பிக்கப்பட்ட புலிநாடகத் தொடர் ஏப்பரல் 8வரை தொடர்ந்து ஏப்ரல் 10ல் சுற்றிவளைப்பாக கூறப்பட்டு ஏப்ரல் 11ல் 3 கொலையுடன் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.

ஆயினும் கொல்லப்பட்ட மூவரது சடலங்களும் பதவியா அரசினர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரண விசாணை அனுராதபுரம் நீதவானிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இவையாவற்றிற்கும் பின்னாலுள்ள தந்திரமான அரசியலை புரிந்து கொள்ளதா அல்லது புரிந்தும் புரியாது இருக்கும் தமிழ் வியாபாரிகள் சிலரோ விட்டபாடில்லை. கோபி சாகவில்லை என்றொரு ஒலிநாடாவை இணையங்களில் உலாவ விட்டுள்ளனர். (சரி சாகாம இருந்துட்டுப் போகட்டுமே.) இன்னும் சில பெரு வியாபாரிகள் புலிகளுக்கும் படையினருக்குமான மோதல் என செய்தி வெளியிட்டு பரபரப்பில் காலத்தை ஓட்டுகின்றனர்.

ஆனால் மெதமுலன ராஜபக்ஸக்கள் அடுத்த தலைமுறையை  நாமலட ராஜபக்ஜவை  அரச கட்டிலில் ஏற்றும் வரை புலிகளுக்கு உயிரூட்டி்கொண்டே இருப்பர். நடந்து முடிந்த தேர்தல் அதனை அவர்களுக்கு வலியுறுத்திச் சென்றுள்ளது. அது  இறுதியாக நடந்த தேர்தல் வாக்குகளைவிட மக்களின் ஆதரவுகுறைவானது. அதனால் புலம்பெயர் புலிகளை சீண்டி அவர்களுக்கு உசுப்பேத்தும் அரசியலையும், உள்நாட்டில் சரணடைந்தோ கைதாகியோ பெயர்பட்டியலில் உள்ளடக்கப்படாது காணாமல் போனவர்களாகவே இருக்கும் முன்னாள் போராளிகளை புலிகள் மீள இணைகிறார்கள் எனக் குற்றம்சாட்டி தேடிக் கண்டு பிடிப்பது போல் பிடித்து பின்னர் காட்டில் மறைந்திருந்ததாக சுட்டுக் கொன்று, படையினரதும் அரசாங்கத்தினதும் மிகப்பெரிய சாதனைகளாக  தென்னிலங்கை மக்களுக்கு படம்காட்டிக் கொண்டு இருப்பர்.

இதனைப் புரியாத அல்லது புரிந்தும் புரியாத நித்திரையில் இருக்கும் தமிழர்கள் சிலர், களத்தில் சொல்லொனாத் துயரங்களைச் சுமந்து, சமூகப் பெறுமானங்களை இழந்து, அடிமைகளாக காலத்தை ஓட்டுகின்ற, மாற்று வளியின்றி தினமும்  மனதாரச் செத்துக் கொண்டு இருக்கும் முன்னாள் போராளிகள் அவர்களின் குடும்பங்கள் பற்றி கிஞ்சித்தேனும் சிந்திக்காது மூக்குமுட்ட உண்டு, குடித்து ஏப்பம் விட்டு வீராப்பு பேசி பிழைப்புவாதம் நடத்துகின்றனர். 

நெஞ்சு பொறுக்குதில்லையே....

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105508/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.