Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா: ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணை என்பது நீதியை தேடும் நீண்ட பயணமாகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

FRANCES%20HARRISON.jpg

சிறிலங்கா மீதான ஐ.நா விசாரணையானது வலுமிக்கதாக இருக்காது. ஐ.நா தனது விசாரணையின் இறுதியில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிடம் தீர்வெட்டுமாறு கோரும் போது இந்த விசாரணையை ரஸ்யா மற்றும் சீனா மறுக்கும் என்பது நிச்சயமானதாகும். 

இவ்வாறு THE HUFFINGTON POST UK என்னும் இணையத்தில் பிபிசி முன்னாள் செய்தியாளர் Frances Harrison* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பாக சுயாதீன அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என சிறிலங்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது அதன் உறுப்பு நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தனர். 

இந்த விசாரணையானது ஐ.நா வால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் தாங்கள் இந்தப் பிரச்சினையிலிருந்து விலகிக் கொள்ள முடியும் என பல நாடுகளின் அரசாங்கங்கள் கருதுகின்றன. 

ஐ.நா விசாரணை இப்பொழுதுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது இன்னமும் முடியவில்லை. ஐ.நா விசாரணை என்பது நீதியை எட்டுவதற்கான நீண்டதொரு நகர்வாக இருக்கும். தற்போது சிறிலங்கா மீதான விசாரணை தொடர்பில் இந்த உலகம் தனது கவனத்தைச் செலுத்துவதை நிறுத்தினால் அது மிகவும் ஆபத்தான, அழிவுமிக்கதாக இருக்கும். 

செப்ரெம்பரில் இடம்பெறவுள்ள பேரவையின் அடுத்த கூட்டத் தொடரின் போது, சிறிலங்காவும் அதன் கூட்டணி நாடுகளும் சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை எதிர்த்து வேறொரு நடவடிக்கை எடுக்கலாம். சிறிலங்காவை ஆதரித்து 12 நாடுகளும் இத்தீர்மானத்திற்கான வாக்களிப்பைப் புறக்கணித்து 12 நாடுகளும் உள்ளன. இவை இரண்டையும் இணைத்துப் பார்த்தால் சிறிலங்காவை எதிர்த்து வாக்களித்த 23 நாடுகளை விட அதிகமானதாகும். 

சிறிலங்காவில் போர் முடிவடைந்த ஆரம்ப மாதங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது சிறிலங்கா தனது நாட்டில் நிலைத்திருந்த பயங்கரவாதத்தை அழித்து வெற்றியை நிலைநாட்டியதாக புகழாரம் சூட்டி அதனைப் பாராட்டியது தொடக்கம் நான் இந்த விவகாரத்தைக் கவனித்துவருகிறேன். பேரவையால் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளில் மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இது இருக்கும் என்பது நிச்சயமானதாகும். 

போரில் ஈடுபட்ட சிறிலங்காப் படைகள் போர்ச் சட்டங்களை மீறியுள்ளன என்பதையும் பல பத்தாயிரக்கணக்கான தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்களைப் படுகொலை செய்தன என்பதையும் தற்போது அனைத்துலகமும் பரவலாக ஏற்றுக்கொண்டுள்ளது. போரிலிருந்து மீண்டெழுந்த பலரை நேரில் கண்டு அவர்களிடம் அவர்கள் சந்தித்த அனுபவங்கள் தொடர்பாக கேட்டறிந்து நான் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தேன். இவர்கள் என்னிடம் தெரிவித்த சம்பவங்கள் என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தின. இதன்மூலம் பலர் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அராஜகங்கள் தொடர்பாக அறிந்தனர். 

போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளில் ஊடகவியலாளர்கள், சட்டவியலாளர்கள், ஐ.நா அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் சில பிரதமர்கள் போன்றோர் சிறிலங்காவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட குறுகிய கடற்கரையோரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்கின்ற பயங்கரமான சம்பவங்களை நன்றாகப் புரிந்துள்ளனர். ஆனால் சிறிலங்காவில் போர் இன்னமும் முடியவில்லை என்பதை இவர்கள் இன்னமும் முற்றாகப் புரிந்துகொள்ளவில்லை. 

சிறிலங்காவில் மிகப் பரந்தளவில் வெளிப்படையாக இடம்பெறும் அடக்குமுறைகள், இனப்படுகொலைகள் மற்றும் சித்திரவதைகளின் ஒரு பகுதியாக அண்மைய மாதங்களில் சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் ஆண்கள் மற்றும் பெண்களை நான் சந்தித்துள்ளேன். போரின் இறுதியில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது இந்த உலகம் இதற்கெதிராக எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. இதனால் மீறல்களைப் புரிந்த குற்றவாளிகள் மேலும் மேலும் குற்றங்களைப் புரிய முடியும் என்கின்ற நிலை தோன்றியுள்ளது. 

சிறிலங்கா மீதான ஐ.நா விசாரணையானது வலுமிக்கதாக இருக்காது. ஐ.நா தனது விசாரணையின் இறுதியில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிடம் தீர்வெட்டுமாறு கோரும் போது இந்த விசாரணையை ரஸ்யா மற்றும் சீனா மறுக்கும் என்பது நிச்சயமானதாகும். இது வடகொரியா மீதான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு போன்று முழுமையானதாக இருக்காது. 

சிறிலங்காவில் தொடரும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட மாட்டாது. போரின் இறுதி ஆண்டுகளை முதன்மைப்படுத்தியே இந்த விசாரணை மேற்கொள்ளப்படும். 

இந்தச் சிக்கலான மிகப் பெரிய விவகாரத்தை ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று 1.4 மில்லியன் டொலர்கள் செலவில் வெறும் பத்து மாதங்கள் மட்டுமே விசாரணை செய்யும். இந்தக் குழுவானது இவ்விசாரணையின் ஆரம்பத் திட்டமிடலுக்காக ஐரோப்பாவில் வெறும் ஏழு நாட்களும், ஆசியாவில் பத்து நாட்களும் வடஅமெரிக்காவில் பத்து நாட்களும் மட்டுமே செலவிடவுள்ளன. போர்ச் சாட்சியத்தை வெளிப்படுத்தும் ஒருவரது அறிக்கையின் மொழிபெயர்ப்பை விபரமாக ஆராய்வதற்கு பல நாட்கள் தேவைப்படும் நிலையில் பல நூறு பக்க அறிக்கையை வாசிக்க பல வாரங்கள் தேவைப்படும். 

பக்கச்சார்பு மற்றும் திரும்பத் திரும்ப ஒன்றையே செய்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக சிறிலங்கா மீதான விசாரணையில் புதிய குழுவொன்றை அமைக்க ஐ.நா விரும்புவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மிக முக்கிய சாட்சியங்கள் அடையாளங் காணப்பட்ட நிலையில் இப்புதிய குழு எவ்வாறு இதனை மேலும் ஆராய்ந்து கொள்ள முடியும்? 

2011 மார்ச் மாதத்தில், சிறிலங்கா மீதான மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வரையறையான சட்ட ஆராய்ச்சிகள் தேவை என ஐ.நா செயலாளர் நாயகத்திடம் வல்லுனர் குழு ஆலோசனை வழங்கியிருந்தது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டதற்கு அப்பால் இப்புதிய விசாரணையானது எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது தெளிவற்றதாகும். 

போர்க் குற்றவாளிகள் தற்போதும் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர் மட்டம், இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் சிறிலங்கா இராஜதந்திர உயர் பிரதிநிதிகளாக பணியாற்றுகின்றனர். இவர்கள் கட்டளைகளை வழங்கியவர்கள் என்ற வகையிலும் நாட்டின் உயர் மட்டத்திலுள்ளவர்கள் என்ற வகையில் இவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் தேவைப்பாடானது என பலரும் வாதிடுகின்றனர். இதற்கு அரசியல் பலம் மட்டுமன்றி, 2009ல் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் சிறிலங்காவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் நல்லதொரு தொடர்பாடல் போன்றனவும் முக்கியமானதாகும். 

சாட்சியங்களைப் பாதுகாப்பதென்பது மிக கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். சாட்சியங்களைப் பதிவு செய்பவர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் கூட இவர்களது அடையாளங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என அனுபவம் வாய்ந்த விசாரணையாளர்கள் கூறுகின்றனர். சிறிலங்காவில் வாழும் சாட்சியங்களை விசாரணைக் குழு பாதுகாக்கும் என்பது சாத்தியமற்றதாகும். ஏற்கனவே இவ்வாறு சாட்சியம் வழங்கிய குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். 

'முடிவுறாத யுத்தம்: 2009-2014 வரை சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள்' என்கின்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 40 சம்பவங்களில் ஒன்பது வரையானவர்களின் உறவுகள் அவ்வது குடும்ப உறுப்பினர்கள் இவர்கள் புலம்பெயர்ந்து சென்ற பின்னர் சிறிலங்காவில் கடத்தப்பட்டவர்களாக, காணாமற் போனவர்களாக அல்லது படுகொலை செய்யப்பட்டவர்களாக உள்ளனர். சிறிலங்காவிலுள்ள தமது உறவுகளிடம் தாம் பிரித்தானியாவில் இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டங்களின் போது பங்குபற்றிய ஒளிப்படங்களை சிறிலங்கா அரசாங்கம் காண்பித்து, விபரம் கேட்பதாகவும் சிலர் கூறுகின்றனர். புலம்பெயர் தமிழ் சமூகத்தைக் கூட சிறிலங்காவின் புலனாய்வாளர்கள் மிகவும் நெருக்கமாகக் கண்காணித்து வருகின்றனர். 

சிறிலங்காவில் போருக்குப் பின்னான சமாதானம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. கோபி என்பவரைத் தேடும் நடவடிக்கையில் சிறிலங்கா அதிகாரிகள் பத்துப் பெண்கள் உட்பட 60 பேர் வரை கைதுசெய்தனர். பின்னர் கோபி என்பவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோன்றுவதைத் தடுப்பதற்காக புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட தமிழர்களைத் தான் தடைசெய்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் திடீரென அறிவித்தது. புலம்பெயர் தமிழ் சமூகம் முற்றாக பயங்கரவாத நடவடிக்கையில் செயற்படுகின்றது என்பதையே சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை சுட்டிநிற்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட தமிழர்களில் இறந்தவர்களின் பெயர்கள் கூட உள்ளடங்கியுள்ளன. தமிழ் மக்கள் சார்பாக பேச்சுக்களில் கலந்து கொள்ளும் உலகத் தமிழர் பேரவையையும் சிறிலங்கா தடைசெய்துள்ளது. 

இவ்வாறு தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் கடந்த காலங்களில் தொடர்பைப் பேணிய தமிழர்கள் மீண்டும் சிறிலங்காவுக்குச் செல்வதில் தயக்கம் காண்பிக்கின்றனர். புலம்பெயர் சமூகத்தின் போர்ச் சாட்சியுங்கள் மற்றும் தகவல்களைப் பெறுவதைத் தடுப்பதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் தெளிவான முயற்சி இதுவாகும். ஐ.நா விசாரணைக்கு சாட்சியமளிக்கின்ற எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. 

இவ்வாறான சூழ்நிலையில், ஐ.நா தனது விசாரணையை மேற்கொள்வதென்பது கடினமான செயலாகும். புலம்பெயர் தமிழர்கள் இந்த விசாரணைக்கு தமது விருப்பத்தையும் ஆதரவையையும் தெரிவித்துள்ளபோதிலும், ஐ.நா விசாரணை சாதாரண செயலல்ல. சிறிலங்காவில் வாழும் சிங்கள மக்களிடம் இந்த விசாரணையின் தீர்வு நம்பகமானதும் பாரபட்சமற்றதும் என நம்பவைப்பது கடினமானதாகும். கடந்த காலச் சம்பவங்கள் மட்டும் விசாரணை செய்யப்படக் கூடாது. இதன் மூலம் தற்போது தொடரப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட மாட்டாது. 

சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பது வெறுமனே ஐ.நா விசாரணையின் மூலம் மட்டும் கிடைக்கமாட்டாது. பல்வேறு நாடுகளிலும் மீறல்களைப் புரிந்தவர்களுக்கு எவ்வாறான தண்டனை வழங்கப்பட்டனவோ அதேபோன்று சிறிலங்காவிலும் மீறல்கள் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு அரசியல் உறுதியும் பல ஆண்டுகால தெளிவான ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் போன்றன தேவைப்படுகின்றன. 

*Frances HarrisonEx-BBC Correspondent, Ex-Amnesty International, Journalist & Author of 'Still Counting the Dead' - book on Tamils who survived Sri Lanka's 2009 war

 

http://www.puthinappalakai.com/view.php?20140417110347

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை.. இலங்கை மீது குற்றம் தீர்க்கப்பட்டாலும், தண்டனை தர பல தடைகள் இருக்கும். அந்தத் தடைகளை நீக்கவேண்டிய தேவை வரும்.. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.