Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக் கதை அரசின் நாடகமே - விக்கிரமபாகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புலிக் கதை அரசின் நாடகமே - விக்கிரமபாகு news
download%20(49).jpg
இந்தியாவின் உதவி இல்லாமல், தமிழர் தரப்பால் இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு செல்ல முடியாது. இது அவர்களுக்கும் நன்கு தெரியும். 
 
எனவே, மீண்டும் புலி உருவாக்கம் என்று அரசு அச்சம் கொள்வதானது அரசியல் நோக்கங்களுக்காக அரங்கேற்றப்படும் நாடகமாகும் என்று கூறுகின்றார் நவசம சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண.
 
புலிகள் அமைப்புக்கு புத்துயிர் கொடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அரச தரப்பிலிருந்து கூறப்படுவது தொடர்பில் நேற்றுக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
 
இதுகுறித்து அவர் தொடர்ந்து கூறும்போது,
"புலிப்பூச்சாண்டி காட்டிதான் இந்த அரசு இதுவரைகாலமும் ஆட்சிபீடத்தில் இருந்து வந்தது. தற்போது புலி அச்சம் குறைந்துள்ள நிலையில், மோசடி அரசின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் குறைந்துவருகின்றது. நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தல் இதற்குச் சிறந்த சான்றாகும்.
 
எனவே, மீண்டும் புலிப் பீதியை கிளப்பிவிட்டு, சிங்கள, பெளத்த வாக்குகளை சூறையாடுவதுதான் அரசின் நோக்கமாகும். அதற்காகத்தான் இந்தப் புலி நாடகம். அடுத்த ஜனாதிபதித் தேர்தல்வரை இந்த நாடகம் ஓடும்.
 
மீண்டும் புலிகள் உருவாவதற்கான சாத்தியம் இல்லை. இந்தியாவின் ஆதரவு இருந்தால் மாத்திரமே தமிழர் தரப்பால் மீண்டுமொரு முறை ஆயுதப் போராட்டத்துக்குச் செல்லமுடியும். இது தமிழர்களுக்கும் நன்குதெரியும். கொழும்பு துதிப்பாடும் டில்லி இனியும் ஆயுதப்போராட்டத்தை அங்கீகரிக்காது. உலகமும் அதை ஏற்காது. எனவே அரசு புலிக்கதை கூறுவது அரசியல் நோக்கங்களுக்காகும். இதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
 
வடக்கு, கிழக்கு மக்கள் தமக்குரிய ஜனநாயக உரிமைகளையே கோருகின்றனர். இதை மஹிந்த அரசு நிச்சயம் வழங்கவேண்டும். இதை வழஙக மறுப்பதால்தான் இந்த நாட்டுக்கு நல்லிணக்கம் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கின்றது'' என்று அவர் தெரிவித்தார்.
 
19 ஏப்ரல் 2014, சனி 8:55 மு.ப
  • கருத்துக்கள உறவுகள்

புலிப் பூச்சாண்டி காட்டித் தான் பிழைப்பு நடத்துகிறது அரசாங்கம்! - கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன கூறுகிறார். 

[saturday, 2014-04-19 19:08:14]
wickramabahu-190414-150.jpg

இந்தியாவின் உதவி இல்லாமல், தமிழர் தரப்பால் இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு செல்ல முடியாது. எனவே, மீண்டும் புலி என்று அரசு அச்சம் கொள்வது அரசியல் நோக்கங்களுக்காக அரங்கேற்றப்படும் நாடகமே என்று என்று நவ சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். இதுகுறித்து அவர் தொடர்ந்து கூறும் போது, புலிப்பூச்சாண்டி காட்டிதான் இந்த அரசு இதுவரை காலமும் ஆட்சிப் பீடத்தில் இருந்து வந்தது. தற்போது புலி அச்சம் குறைந்துள்ள நிலையில், மோசடி அரசின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் குறைந்து வருகின்றது. நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தல் இதற்குச் சிறந்த சான்றாகும்.

  

எனவே, மீண்டும் புலிப் பீதியை கிளப்பிவிட்டு, சிங்கள, பெளத்த வாக்குகளை சூறையாடுவதுதான் அரசின் நோக்கமாகும். அதற்காகத்தான் இந்தப் புலி நாடகம். அடுத்த ஜனாதிபதித் தேர்தல்வரை இந்த நாடகம் ஓடும். மீண்டும் புலிகள் உருவாவதற்கான சாத்தியம் இல்லை. இந்தியாவின் ஆதரவு இருந்தால் மாத்திரமே தமிழர் தரப்பால் மீண்டுமொரு முறை ஆயுதப் போராட்டத்துக்குச் செல்ல முடியும். இது தமிழர்களுக்கும் நன்கு தெரியும்.கொழும்பு துதிபாடும் டில்லி இனியும் ஆயுதப் போராட்டத்தை அங்கீகரிக்காது. உலகமும் அதை ஏற்காது. எனவே அரசு புலிக்கதை கூறுவது அரசியல் நோக்கங்களுக்காகும். இதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் தமக்குரிய ஜனநாயக உரிமைகளையே கோருகின்றனர். இதை மஹிந்த அரசு நிச்சயம் வழங்க வேண்டும். இதை வழங்க மறுப்பதால் தான் இந்த நாட்டுக்கு நல்லிணக்கம் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

http://seithy.info/breifNews.php?newsID=107747&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.