Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோனேசியா சிறையில் மயங்கிச் சரிந்தார்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத்து உறவுகள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியா சிறையில் மயங்கிச் சரிந்தார்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத்து உறவுகள்!!

 

 

16-300x225.jpgஇந்தோனேசியா சிறையில் மயங்கிச் சரிந்தார்கள் உண்ணாவிரதம் இருந்துவந்த ஈழத்து உறவுகள்!!

இந்தோனேசியாச் சிறையில் தமது விடுதலைக்காக ஏற்கனவே அறிவித்தபடி 21-04-2014 முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் ஒன்பது ஈழத்து உறவுகளில், ஏற்கனவே முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயப்பட்ட இருவர் மூன்றாவது நாளான நேற்று மயங்கிச் சரிந்தார்கள்

கடந்த வருடம் அகதிகளாகச் சென்ற தங்களை விடுதலை செய்து பிறிதொரு குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் கோரிக்கையினை முன் வைத்து கடந்த 21-04-2014 அன்று திங்கட்கிழமை முதல் இந்தோனேசியாச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 9 ஈழத்து உறவுகளும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து

வருகின்றார்கள்.

மூன்றாவது நாளான நேற்று , தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த உறவுகளான பிரசன்னா ரவீந்திரன் மற்றும் ரஞ்சித் அசோகராஜா ஆகிய இருவரும் மயக்க நிலைக்குச் சென்று மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைக்குச் சென்று விட்டனர்.

இவர்களின் உடனடி மயக்கத்திற்குக் காரணம், இவர்கள் இருவரும் ஏற்கனவே இலங்கையில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் மிகவும் மோசமாக படுகாயமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தங்களது உடல் நிலையினையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள்.

61-300x118.jpg

மேற்குறிப்பிட்ட இருவரின் உடல்நிலையானது தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதற்கு இடம் கொடுக்காததால் அவர்கள் மயக்க நிலையினை அடைந்து மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்று விட்டார்கள். இவர்களோடு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்ற 7 பேரது நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது. இவர்களும் இலங்கை முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

மூன்றாவது நாளான நேற்று (23-04-2014) எந்தவொரு அதிகாரிகளும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை! உலக மனித உரிமை அமைப்புகளும் மற்றும் தொண்டமைப்புக்களும் இவர்களின் பரிதாப நிலையினைக் அறிந்தும் கண்டும் காணாமல் கண்மூடியே தூங்கிக் கொண்டிருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட மயங்கிய இரு நபர்களையும் குடிவரவு அதிகாரிகள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று விட்டதாக இவர்களோடு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்ற பார்த்தீபன் தெரிவித்தார்.

பார்த்தீபன் தொடர்ந்து தெரிவிக்கையில் “இன்றுடன் தொடர்ந்து நான்காவது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றோம். எந்தவொரு அதிகாரிகளும் வந்து எமக்கு ஒரு நல்ல பதில் தரவில்லை! அவ்வாறு, ஒரு சில குடிவரவு அதிகாரிகள் வந்தாலும் உண்ணாவிரதத்தினை கைவிடும்படியும் நீங்கள் நினைப்பது எதுவும் நடக்காது” எனவும் மிரட்டும் தொணியில் கூறிச் சென்றதாகவும்… தொடர்ந்து மிகவும் சோர்வடைந்து பேசக்கூட முடியாமல், புலம் பெயர் தேசத்து ஈழ உறவுகளும், தமிழகத் தொப்புள் கொடி உறவுகளும் மற்றும் அரசியல் தலைவர்களும் தங்களது விடுதலைக்காக குரல் கொடுக்கும்படி கண்ணீர் மல்கி வேண்டிக் கொண்டார்

91-300x225.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://tamilleader.com/?p=32057

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.