Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்களிடம் படையினர் விசாரணை மாணவர்களிடையே அச்சம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வருகின்ற சோதனை நடவடிக்கைகள் காரணமாக பாடசாலைகளுக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் செல்வதற்கு மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

படையினர் மாணவர்களிடமும் படையினர் சோதனைகளை மேற்கொள்வதாலேயே இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் இராணுவத்தினர் பயன்படுத்துவதைப் போன்ற போலி இறப்பர் முத்திரை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் உயர்தரம் கல்வி கற்றும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இதன் தொடர்ச்சியாக நேற்று யாழ்ப்பாணம் - மானிப்பாயில் தனியார் கல்வி நிலையமொன்றுக்குச் சென்றுவிட்டு வந்துகொண்டிருந்த மாணவர்களை மறித்த படையினர் அவர்களிடம் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த மாணவர்கள் கொப்பிகளுக்கு நடுவே துண்டுப் பிரசுரங்களை வைத்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்தச் சோதனை இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரே மாணவர்களை மறித்து துண்டுப் பிரசுரங்கள் வைத்திருக்கிறீர்களா என்று விசாரணை நடத்தியதுடன் சோதனையும் மேற்கொண்டுள்ளனர். இதற்கு பதிலளித்த மாணவர்கள், எம்மிடம் பாடக்கொப்பிகள் தான் இருக்கின்றன பாருங்கள் என்று கூறியதை அடுத்து மாணவர்களிடம் சொறி என்று கூறிவிட்டு படையினர் சென்றிருக்கின்றனர்.

யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில் கடந்த 17 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 'தமிழீழம் மலரும்' என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒட்டிய குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (வயது 24), இணுவில் பகுதியினைச் சேர்ந்த மன்மதராசா வேணுகாந்தன் (வயது 24) ஆகிய இருவரும் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவர்கள் இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கபபட்டதன் பின்னர் அந்த இளைஞர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத்தொடர்ந்து, 'கணினி வலைப்பின்னல்' என்னும் நிலையத்தை நடத்திய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் யுத்தத்தில் கால் ஒன்றினை இழந்தவருமான கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இராஜரட்ணம் சுதர்சன் (வயது 30) என்பவர் கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மேற்படி சம்பவங்களை அடுத்து யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் படையினரதும் காவல்துறையினரதும் சோதனை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்நிலையிலேயே வீதியில் கொப்பிகளுடன் நின்றிருந்த மாணவர்களிடமும் படையினர் விசாரணைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
 

பாவம் ஆர்மிகாரனும் எவ்வளவு தான் தோட்டத்தில் முறிவது. இடைக்கிடை தமிழரையும் துன்புறுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.