Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் ஆக்கிரமிப்பு போர்நிறுத்தத்தின் இறுதி அத்தியாயம்

Featured Replies

சம்பூர் ஆக்கிரமிப்பு போர்நிறுத்தத்தின் இறுதி அத்தியாயம்

-அருஸ் (வேல்ஸ்)-

போர் நிறுத்தத்தில் இருந்து அரசு வெளியேறப்போவதில்லை என்ற சொல்லை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு போரை முன்னெடுப்பது தான் அரசின் தற்போதைய தந்திரம். இந்த தந்திரத்திற்குள் தென்பகுதி சிங்கள மக்களை ஏமாற்றுவதற்குரிய கபடத்தனமும் ஒளிந்துள்ளது. சிங்கள மக்களை சிங்கள அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஏமாற்றுவது ஒன்றும் புதிது அல்ல. இது காலங் காலமாக நடைபெறுவது தான்.

1995 இன் இறுதியில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி சிங்கக்கொடியை ரத்வத்தை ஏற்றியதுடன், சிங்கக்கொடியை கட்டிக்கொண்டு ஆஐ-24 ரக தாக்குதல் உலங்குவானு}hர்தி நகரத்தை சுற்றி பறந்ததும் எல்லோரும் அறிந்ததே. அதன் பின்னர் 1996 இன் ஆரம்பத்தில் யாழ். குடாவை கைப்பற்றிய செய்தியை காலிமுகத்திடலால் அணிவகுத்து வந்து ரத்வத்தை சந்திரிக்காவிடம் பேழையில் வைத்து கொடுத்ததும், சந்திரிக்கா வாளும், ஜெனரல் பட்டமும் ரத்வத்தைக்கு கொடுத்ததும் சிங்கள தேசத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அந்த சிறிய மகிழ்ச்சிக்கு பின்னர் சிங்கள தேசம் செலுத்திய விலையும் அனுபவித்த வலிகளும் ஏராளம்.

4 வருடங்கள் சந்தித்த இழப்பில் சிங்கள தேசம் மட்டும் கண்ணீர் சிந்தவில்லை. அதன் அதிபர் சந்திரிக்காவும் 1999 இல் தொலைக்காட்சியில் கண்ணீர்விட்டு அழுதார். புலிகளின் தலைப்பகுதியை முடக்கிவிட்டால் அவர்களால் இயங்கமுடியாது என்றும், யாழ்ப்பாண வைத்தியசாலையை கைப்பற்றி விட்டால் காயமடையும் போராளிகளை புலிகளால் பெருமளவில் பராமரிக்க முடியாது போய்விடும்.

எனவே பெரிய அளவிலான தாக்குதல்களை புலிகள் மேற்கொள்ள முடியாது எனவும் அரசு கனவு கண்டது. ஆனால் நடந்தது எல்லாம் எதிர்மறையானவை தான். அதை விவரிக்க இந்த பத்தி போதாது. 1995 இல் சிங்கள மக்களுக்கு அதிர்ஸ்ட தேவதையாக மின்னிய சந்திரிக்கா 1999 இல் அருவருப்பான தலைவியானார்.

தென்பகுதி பத்திரிகைகளும் போதும் போதும் விட்டு விலகுங்கள் என பாட ஆரம்பித்து இருந்தன. அதாவது தமது குறுகிய கால அரசியல் நலன்களுக்காக தமது படைகளை மீளமுடியாத படுகுழியில் தள்ளுவது சிங்கள அரசுகளின் வழமை.

மகிந்தவும் சிங்கள மக்களை ஏமாற்றி தனது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற இனப்போரை தான் கையில் எடுத்துள்ளார். அதன் வெளிப்பாடாக தான் கடந்த 5 ஆம் நாள் டீஆஐஊர் இல் நடந்த தனது கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சம்பூரை இராணுவம் கைப்பற்றியதாக அவர் வெற்றிமுரசு கொட்டியுள்ளார். கடந்த சில மாதங்களாக நடந்து வரும் போரில் அரச தரப்பின் போர் முறைகளுக்கும் புலிகளின் போர் முறைகளுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன.

அரசு விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் என அழிப்புச் சமரையும், மாவிலாறு, சம்பூர் என ஆக்கிரமிப்புச் சமரையும் மேற்கொண்டுள்ளது. ஆனால் புலிகள் தற்காப்பு சமராக அழிப்புச்சமரை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே தான் மூதூர், அல்லைப்பிட்டி சமரை கூட முடித்துக்கொண்டு புலிகள் வெளியேறி இருந்தனர். அரசின் ஆக்கிரமிப்பு போர் வெளியில் இருந்து பார்க்கும் போது அரசு, புலிகளின் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்வது போலவே தெரியும். ஆனால் அதன் உண்மையான நோக்கம் ஆக்கிரமிப்புப் போர் என்ற போர்வையில் புலிகளை தனக்கு சாதகமான பகுதிக்கு ஒரு வலிந்த தாக்குதல் மூலம் இழுத்து அவர்களின் பலத்தை அழித்துவிடுவது தான். இது உலக நாடுகளின் போரியல் தந்திரங்களில் ஒன்று.

விமான குண்டுவீச்சுக்களால் மட்டும் புலிகளின் பலத்தையும் அவர்களின் ஆயுதத் தளபாடங்களின் பலத்தையும் குறைத்துவிடலாம் என்பது கற்பனை. இதற்கு சிறந்த உதாரணமாக கடந்த மாதம் நடைபெற்ற இஸ்ரேல்-லெபனான் போரை கூறலாம். மிக நவீன விமானங்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி கண்மூடித்தனமாக தொன் கணக்கில் லெபனான் மீது குண்டுகளை வீசியும் இஸ்ரேலினால் கிஸ்புல்லாக்களின் ஏவுகணை தாக்குதல்களை நிறுத்த முடியவில்லை. இதற்கு கிஸ்புல்லாக்களின் சிறந்த கனரக ஆயுத நகர்த்தல், பதுங்குகுழி அமைப்பு என்பன முக்கிய காரணம். இஸ்ரேலின் விமானப்படையின் பலம், தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது சிங்கள அரசின் பலம் மலைக்கும் மடுவுக்குமான ஓப்பீடு. எனவே தான் ஆக்கிரமிப்புப் போர் என்ற வலிந்த போரை போர்நிறுத்த காலத்தில் திணிக்க முயல்கிறது அரசு.

மேலும் ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையின் போதும் அரசு போர் நிறுத்தத்தில் இருந்து விலகப்போவதில்லை என அறிவிக்கவும் தவறுவதில்லை. ஏனெனில் போர் நிறுத்தம் அமுலில் உள்ளபோது ஒருவர் பிரதேசத்தை மறுதரப்பு ஆக்கிரமிக்க முடியாது. அப்படி ஆக்கிரமித்தாலும் போர்நிறுத்தத்தை தொடர வேண்டுமாயின் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்.

உதாரணமாக அரசின் நடவடிக்கைக்கு பதிலடியாக புலிகள் பல நு}று போராளிகளை இழந்து யாழ். குடாவின் சில பகுதிகளையோ அல்லது மன்னாரையோ கைப்பற்றி விட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். போர்நிறுத்தத்தை தொடருவோம் என்று கூறிக்கொண்டு அரசு மாவிலாறு, சம்பூர் பிரதேசங்களில் இருந்து வெளியேறினால் புலிகளும் வெளியேற வேண்டும்.

எனவே அரச பிரதேசங்களை கைப்பற்ற புலிகள் கொடுத்த விலை அரசு விரித்த வலையில் விழுந்து புலிகள் தங்கள் பலத்தை சிதைத்ததாகவே கொள்ளப்படும். அதனால் தான் புலிகள் பெருமளவில் போராளிகளை இழந்து அரச கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய பிரதேசத்தைக்கூட கைப்பற்றி தக்கவைக்க தற்போது முனையவில்லை.

ஆனால் அரசின் வலையில் சிக்கிப்போயிருப்பது நோர்வேயும் அதன் சமாதான முயற்சிகளும் தான். அதாவது நோர்வேயும் கண்காணிப்புக் குழுவும் ஒரு இறுதிமுடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். ஏனெனில் அரசுப்படைகள் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேறா விட்டால் அமைதி முயற்சிக்காக ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது அதையே அண்மையில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும் வலியுறுத்தி உள்ளார்.

ஐரோப்பிய ஓன்றியத் தடைக்குப் பின்னர் அந்த நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்புப் பணியை செய்யமுடியாது என்ற முடிவில் புலிகள் எவ்வளவு உறுதியாக நின்றார்கள் என்பது உலகறியும்.

அதே போலவே ஆக்கிரமித்த பகுதியில் இருந்து அரசுப்படைகள் வெளியேறி அரசு முழுமையாக போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தும் வரை அமைதி முயற்சி நகரப்போவதில்லை. தற்போதைய நிலையில் பந்து சர்வதேசத்தின் கையில் தான் உள்ளது.

எதிர்வரும் 12 ஆம் நாள் நடைபெற உள்ள சிங்கள அரசிற்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் அரசின் தற்போதைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படப்போகின்றன என்பது தான் முக்கியமானது.

னுயசகரச இல் நடந்த படுகொலைகளுக்காக சூடானிய நாட்டு அரச அதிகாரிகள், மந்திரிகள் மீது பயணத்தடை விதித்த சர்வதேசம் மூதூரில் அரசால் மேற்கொள்ளப்பட்ட யுஉவழைn யபயiளெவ ர்ரபெநச பணியாளர்களின் படுகொலைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? அரச படைகள் தான் படுகொலையை மேற்கொண்டுள்ளன என கண்காணிப்புக்குழு ஆணித்தரமாக கூறிய பின்னர் கூடப்போகும் இணைத்தலைமை நாடுகள் என்ன தீர்மானத்தை எடுக்கப்போகின்றன? நோர்வே அரசு சிங்கள அரசை அமைதி வழிக்கு வரவைக்க சர்வதேச சமூகத்தின் ஊடாக என்ன முயற்சி எடுக்கப் போகிறது?

அதாவது அமைதி முயற்சி தற்போது முழுக்க முழுக்க அரசினதும் சர்வதேசத்தினதும் கைகளிலேயே உள்ளதுடன் இறுதிக்கட்டத்திலும் உள்ளது. ஜே.வி.பி, கெல உறுமய போன்ற கட்சிகளின் சொற்களும், அரசின் செயலும் நோர்வேயை சமாதான முயற்சிகளில் இருந்து ஓரங்கட்டும் கடைசி நிலைக்கு கொண்டு வந்துள்ளன. நோர்வேயும் இன்று உள்ள போர்ச்சூழலில் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது.

அரச படைகளுக்கும் புலிகளிடம் ஒரு கால எல்லை உண்டு. அதாவது ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேறி நிபந்தனையற்ற முறையில் 2002 இல் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்க போகிறார்களா அல்லது முழு அளவிலான போரை எதிர்கொள்ளப்போகிறார்களா என்பது தான்.

புலிகளில் 7,000 பேரே உள்ளனர். அதிலும் 2,000 புலிகள் தான் போரிடும் வலு உள்ளவர்கள். மிகுதிப்பேர் அரசியல், நிர்வாக, துணைப்படையினர் என்ற இராணுவத்தளபதியின் கூற்றும் முகமாலையில் 800 புலிகளும், மூதூரில் 150 புலிகளும், பருத்தித்துறை கடலில் 100 புலிகளும் பலியாகி விட்டார்கள் என்ற இராணுவ பேச்சாளரின் தரவுகளும். சம்பூரை கைப்பற்றிவிட்டோம் என்ற மகிந்தவின் வெற்றிக்கூவலும் தென்பகுதிச் சிங்களவரை மகிழ்ச்சிப்படுத்தலாம். ஆனால் மகிந்தவும் சந்திரிக்காவின் வழியில் செல்வதை எத்தனை சதவிகித தென்பகுதி மக்கள் எண்ணிப்பார்த்துள்ளார்கள்? போர்நிறுத்தம் முற்றாக இல்லாது போகும் போது சிங்கள மக்களுக்கு இதற்கான விடைகள் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.

ஜேர்மனின் 6 இலட்சம் படைகள் ஸ்ரேலின்கிராட்டில் ஒழுங்கான விநியோக வழிகள் இன்றி சோவியத்தின் முற்றுகைக்குள் சிக்கியபோது ஹிட்லரின் இராணுவப் பேச்சாளர் கோயல்பஸ் தமது படைகள் ஒரு மில்லியன் சோவியத்துப் படைகளை கொன்று வெற்றிவாகை சூடியுள்ளதாகவும் சோவியத்தின் மிகப்பெரும் பொருளாதார நகரான கொக்கஸ்யை நோக்கி முன்னேறிக்கொண்டு வருவதாகவும் அள்ளிவிட்டுக்கொண்டு இருந்தார்.

ஆனால் தனது படைகள் ஒரு பேரழிவை சந்திக்கும் முற்றுகைக்குள் மாட்டுப்பட்டு உள்ளதை உணர்ந்த நாசிப்படை ஜெனரல் பாலோஸ் ஸ்ரேலின்கிராட்டில் இருந்து பின்வாங்க அனுமதிக்குமாறு கிட்லரிடம் மன்றாடினான். கிட்லரின் போர்வெறி அவரை விடவில்லை. மேலதிக துருப்புக்களை அனுப்புவதாக கூறியதுடன் ஜெனரல் பாலோஸை குநைடன அயசளாயட ஆக பதவி உயர்த்தினார். ஜேர்மன் வரலாற்றில் எந்த ஒரு குநைடன அயசளாயட உம் சரணடைவதில்லை. எனவே பாலோஸ் இறுதிவரை சண்டையிடுவார் என கிட்லர் நம்பினார்.

சோவியத் படைகள் நாசிப்படைகளின் விமானத்தளத்தையும், ஓடுபாதையையும் கைப்பற்றிக்கொண்டார்கள். நாசிப்படைகளின் இறுதி விநியோக வழியும் முற்றாக தடுக்கப்பட்ட நிலையில் சோவியத்தின் கடும் தாக்குதலில் சின்னாபின்னமாகிய படைகள் இறந்தவர்கள் போக மிகுதிப்பேர் சரணடைந்தார்கள்.

சரணடைந்தவர்களில் கிட்லரின் நம்பிக்கைக்குரிய தளபதி பாலோசும் அடக்கம். ஜேர்மன் சரித்திரம் மாற்றப்பட்டது. ஸ்ராலின்கிராட் சமரில் 4 லட்சம் நாசிப்படைகள் மாண்டுபோக 24 ஜெனரல்கள் உட்பட 110,000 வீரர்கள் சரணடைந்தார்கள். ஜேர்மனியின் ஒவ்வொரு கிராமத்திலும் மரண ஓலம் எழுந்தது. கிட்லரின் பேச்சாளர் கோயல்பஸ்சின் பொய்கள் எல்லாம் தவிடுபொடியாகின.

ஸ்ராலின்கிராடில் நாசிப்படைகள் சந்தித்த ஆயுத, ஆள் இழப்புக்கள் அதன் போரிடும் வலுவை உடைத்துவிட்டது. எனவே ஜேர்மன் நோக்கி முன்னேறி வரும் சோவியத் மற்றும் நேசப்படைகளை கூட தடுத்து நிறுத்த நாசிப்படையால் முடியவில்லை. ஜேர்மன் வீழ்ந்தது.

போர்நிறுத்த காலத்தில் நடக்கும் சிறு சிறு சம்பவங்கள் மகிந்தவுக்கும் தென்பகுதி மக்களுக்கும் இனிப்பாக இருக்கலாம். ஆனால் போர்நிறுத்தம் முற்றாக வலுவிழக்கும் போதான செய்தி இடியாகவே இறங்கும் என்பதுடன், சம்புர் ஆக்கிரமிப்பு போர்நிறுத்தத்தின் கடைசி அத்தியாயமும் ஆகும்.

- தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.