Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்புக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டவர் கொழும்பு மேல்நீதிமன்றினால் விடுதலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கொழும்புக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டவர் கொழும்பு மேல்நீதிமன்றினால் விடுதலை! 
[Friday, 2014-05-02 09:15:54]
 
கொழும்பில் 2007-2008ம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் இராணுவ அதிகாரிகளின் மரணத்திலும் தொடர்புடையவரென பொலிசாரினால் குற்றம்சாட்டப்பட்டு சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பத்மநாதன் ராஜீவ் என்பவர் மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பத்மநாதன் ராஜீவ் ஆறுவருட சிறைவாழ்க்கையிலிருந்து விடுதலையானார்.
 
புறக்கோட்டை, றெக்ளமேசன் வீதி, முதலாம் குறுக்குத் தெருவில் 24-05-2007ல் பஸ் வண்டியில் நடாத்திய குண்டு வெடிப்பில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டு 15 பொது மக்கள் படுகாயமடைந்தமை, 30/12/2007ல் கொம்பனித்தெரு குண்டுத் தாக்குதலில் ஒரு இராணுவீரர் கொல்லப்பட்டு 10 பொது மக்கள் படுகாயமடைந்தமை, 30/07/2008ல் கொழும்பு மோதரையில் புலிகளின் தற்கொலை குண்டுதாரியினால் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒரு பொலிசார் உட்பட ஜந்து பொதுமக்கள் படுகாயமடைந்தமை;ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, பொலிசாரினால் விசாரணைகள் நடாத்தப்பட்டன.
 
விசாரணையைத் தொடர்ந்து 07/04/2008ல் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் பத்மநாதன் ராஜீவ் என்பவர் கதிரேசன் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.இந்தக் கைதினைத் தொடர்ந்து சந்தேக நபரான பத்மநாதன் ராஜீவின் இல்லத்தில் தண்ணீர் தொட்டியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி -56 துப்பாக்கி, ரி-56 மகசின் நான்கும், குண்டுகள், 115, எஜ், எம், ஜி, லோன்ஜர் துப்பாக்கி ஒன்றும் அதன் குண்டுகள் 194ம், பற்றரிகள், சீ-4 மருந்து ஐந்து கிலோவையும் பொலிசார் கைப்பற்றினர்.
 
கைது செய்யப்பட்ட பத்மநாதன் ராஜீவ் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு பொலிசாரினால் விசாரணைகள் நடாத்தப்பட்டன. 30/12/2007ல் லெப்டினட் திசாநாயக முதியாசலாகே திசாநாயகாவிற்கு மரணத்தை ஏற்படுத்தியதாக கொழும்பு மேல் நீதிமன்றில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 2(1) பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் தண்டணை வழங்கக்கூடிய ஒரு குற்றச்சாட்டுப் பத்திரமும்.கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக பல இடங்களில் ஆயுதங்களையும் தற்கொலை அங்கிகளையும் மறைத்து வைத்ததுடன் புலிகள் இயக்கத்தை சார்ந்த ஆனந்த வர்மன், விஜயன் ஆகியோருக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக ஒரு குற்றச்சாட்டுப் பத்திரமுமாக இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இரண்டு வழக்குகள் சட்டமா அதிபரினால் பத்மநாதன் ராஜீவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
 
கைதியான பத்மநாதன் ராஜிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிரியின் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில்,முதலாவது வழக்கில் லெப்டினட் திசாநாயகாவிற்கு மரணத்தை ஏற்படுத்திய் குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்கு அரசதரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள ஒரே சான்று எதிரியினால் சுயவிருப்பில் வழங்கப்பட்டதென அரச தரப்பினால் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமேயாகும்.
 
ஆனால் எதிரியினால் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கொம்பனித் தெரு குண்டுத் தாக்ககுதலில் பங்குபற்றியதாகவோ அல்லது 30/12/2007ல் லெப்டினட் முதியாசலாகே திசாநாயகாவிற்கு மரணத்தை ஏற்படுத்தியதாகவோ எந்தவிடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை எதிரி தனது கையினாலேயே தமிழ் மொழியில் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் வாக்குமூலத்தின் இறுதியில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில் சில்வா, வாக்குமூலத்தை ஒப்புறுதிப்படுத்தி கையெழுத்திடவில்லை. ஒப்புறுதிப்படுத்தப்படாத ஒப்புதல் வாக்குமூலம் சட்டவலு அற்ற வாக்குமூலமாகும்.
 
மேலும் சட்டமா அதிபரினால் எந்தச் சான்றுகளும் அற்ற நிலையிலேயே இந்தக் குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கின் குற்றச்சாட்டை நிரூபிக்க அரச தரப்பால் வேறு எந்தவிதமான சான்றும் முன்வைக்கப்படவில்லை என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, கொலைக் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்ட முதலாவது வழக்கினை அரச சட்டத்தரணி மீளப் பெறப்பட்டதையடுத்து எதிரியான பத்மநாதன் ராஜீவ் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
 
இரண்டாவது வழக்கில் ஆயுதங்களை தமது வீட்டில் மறைத்து வைத்த சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிசாருக்கு வழங்கத் தவறிய குற்றச்சாட்டை எதிரி ஒத்துக்கொண்டதையடுத்து, சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி .தவராசா நீதிபதியிடம் தனது கட்சிக்காரர் வயதான தாயாருக்கு ஒரேயொரு ஆண்பிள்ளையாவதுடன், இருதயநோயால் பாதிக்கப்பட்ட 30வயது இளைஞராவார். எதிரி, சிறையில் கழித்த காலத்தை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்குமாறு நீதிமன்றத்தை வேண்டிக் கொண்டதையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி மொராயஸ் எதிரிக்கு ஒரு வருடத்திற்கான ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை வழங்கினார். இதனையடுத்து பத்மநாதன் ராஜீவ் ஆறுவருட சிறைவாழ்க்கையிலிருந்து விடுதலையானார்.

6 வருடம் அநியாயமாக சிறையில் கழித்த பதம்நாதன் விடுதலையாகியது மகிழ்ச்சியான விடயம்.

 

நீதிபதி மொராயஸ் இற்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குமூலத்தை நம்பி தண்டனை கொடுப்பது தெற்காசிய நாடுகளில் இன்னும் தொடர்கிறது. குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஒரு வாக்குமூலத்தை எப்படி வேண்டுமானாலும் வாங்கலாம். மேலை நாடுகளை இவற்றை சமர்ப்பிப்பதும் இல்லை; நான்தான் கொன்றேன் என்று குற்றம் சாட்டப்பட்டவரே நீதி மன்றத்தில் சொன்னாலும் ஏற்றுக்கொள்வதில்லை. பௌதீக ஆதாரங்கள் (physical evidence) இருந்தால் மட்டுமே குற்றங்களை நிரூபிக்க முடியும்.

 

கற்காலத்தில் இருக்கும் ஆசிய நாடுகளுக்கு இம்முறைகள் வர இன்னும் ஐம்பது ஆண்டுகள் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குமூலத்தை நம்பி தண்டனை கொடுப்பது தெற்காசிய நாடுகளில் இன்னும் தொடர்கிறது. குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஒரு வாக்குமூலத்தை எப்படி வேண்டுமானாலும் வாங்கலாம். மேலை நாடுகளை இவற்றை சமர்ப்பிப்பதும் இல்லை; நான்தான் கொன்றேன் என்று குற்றம் சாட்டப்பட்டவரே நீதி மன்றத்தில் சொன்னாலும் ஏற்றுக்கொள்வதில்லை. பௌதீக ஆதாரங்கள் (physical evidence) இருந்தால் மட்டுமே குற்றங்களை நிரூபிக்க முடியும்.

 

கற்காலத்தில் இருக்கும் ஆசிய நாடுகளுக்கு இம்முறைகள் வர இன்னும் ஐம்பது ஆண்டுகள் பிடிக்கும்.

 

சாதாரணச் சட்டங்களின் படி குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தினை தனித்த ஆதாரமாகக் கொள்ள முடியாது. ஆனால் பயங்கரவாத தடை சட்டத்தின் படி குற்றம்சாட்டப்பட்டவர்ன் வாக்குமூலத்தினை ஆதாரமாகக் கொள்ளலாம். இந்தியாவில் தடா சட்டம் நடைமுறையில் இருந்த காலத்திலும் இப்படியான ஒரு சரத்து இருந்தது.

 

இலங்கை அரசில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க விரும்பாது. நேற்று முந்தினம் ஐ.தே.க இச் சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று கோரியதே தவிர நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை.

 

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் கூட  இச் சட்டத்தினை நீக்குமாறு முன் நிபந்தனை விதிப்பதில்லை. ஆனால் தம்மை மனிதவுரிமைகளை மதிக்கும் நாடாக வெளியில் காட்டிக் கொள்வர்.

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.