Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நைஜீரியாவில் இடம் பெறும் மதப் பயங்கரவாதம் பல உயிர்களைத் தொடர்ந்து பலி கொள்கின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நைஜீரியாவில் இடம் பெறும் மதப் பயங்கரவாதம் பல உயிர்களைத் தொடர்ந்து பலி கொள்கின்றது

 

ஐரோப்பியசெய்தியாளர்

nigeria_CI.jpg

நைஜீரியாவில் இடம் பெறும் மதப் பயங்கரவாதம் பல உயிர்களைத் தொடர்ந்து பலிகொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவின் புறநகர்ப் பகுதிகளில் இடம் பெற்றுவரும் முரட்டுத்தனமான குண்டுத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முந்திய காலத்தில், தலை நகரின் புறநகர்ப்பகுதி ஒன்றில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில், 100 பேர் மட்டில் வஞ்சகமாகக் கொலை செய்யப்பட்டதற்குப் பின், கடந்த வெள்ளிக்கிழமை கைக்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 17 பேர் கொல்லப்பட்டும், பலர் காயமுற்றும் இருக்கலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத முஸ்லீம் இயக்கமான பொ(b)கோ க(h)றாம் சென்ற காலங்களில் நைஜீரியாவில் இடம் பெற்று வரும் குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கும், பாடசாலைப் பிள்ளைகளின் பயங்கரமான கொலைகளுக்கும் காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொ(b)கோ க(h)றாம் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள், அயல் நாடான கமறூனில் பதுங்கு இடங்களைக் கொண்டிருப்பதாகவும், இரு நாடுகளும் புரட்சிக் காரர்களின் வன்முறையைக் கட்டுக்குள் கொணர இணைந்து  தலைப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் ஜனாதிபதி குட்லக் ஜோநாதன், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக மேற் கொண்ட சகல வழிகளும் பயனற்றுப் போவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

பொ(b)கோ க(h)றாம் இயக்கம் வட நைஜீரியாவில், அரசியல் சட்டங்கள் கடவுள் விதித்தவை என்னும் கொள்கையுடைய மதக் குருமார்களின் ஆட்சிக்குட்பட்ட ராஜ்யத்தை அமைக்க முயன்று வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சகல பொலிஸ் நிலையங்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும், மேற்கு நாடுகளின் கல்வித் திட்டங்களைப் பின்பற்றும் சகல பாடசாலைகளும், மாணவர்கள் தங்கும் விடுதிகளும் தாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/106394/Default.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.