Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரப்புயர (விவசாயம்/கைத்தொழில் சார்ந்த பதிவுகள்)

Featured Replies

  • தொடங்கியவர்

ஆயுள் பயிர் கறிவேப்பிலை: ஆண்டு முழுவதும் வருமானம்

 

kariveppilai1_2392925g.jpg

 

kariveppilai_2392924g.jpg

 

 

கறிவேப்பிலை இல்லாமல் சமையல் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. சமையலுக்கு எப்போதும் தேடப்படும் கறிவேப்பிலையை ஒரு முறை மட்டும் நடவு செய்தால், தென்னையைப் போல் ஆயுள் முழுவதும் பயன்பெறலாம் என்கிறார் தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த விவசாயி கே.வீரமணி.
 
பார்வைக்கு நல்லது
 
நல்ல மணமும் மருத்துவக் குணமும் கொண்ட கறிவேப் பிலையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் உடலுக்குக் குளிர்ச்சி கிடைப் பதுடன், பார்வை குறைபாடு பிரச்சினை குறையும் என்பது மருத்துவர்கள் அறிவுரை. இதைத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துத் தலையில் தேய்த்துவந்தால் தலைமுடி கொட்டுவது நின்றுவிடுவதுடன், முடி கருகருவென நன்றாக வளரும் என்பது நீண்டகால நம்பிக்கை.
 
ஆயுள் பயிர்
 
சமையலிலும் மருத்து வத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் கறிவேப்பிலையை, தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடிசெய்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வருவாய் ஈட்டிவரும் விவசாயி கே. வீரமணி, அது குறித்துப் பகிர்ந்துகொண்டது:
 
கறிவேப்பிலையில் நாட்டு, மலைக்குழை என இரண்டு வகைகள் உள்ளன. நாட்டுக் கறிவேப்பிலை நல்ல வாசனையாக இருக்கும் மலைக்குழை என்று அழைக்கப்படும் வட்டக்குழை வட்ட வடிவமாகவும் சற்றுப் பெரிதாகவும் இருக்கும். இதில் வாசனை சற்றுக் குறைவாக இருக்கும்.
 
செலவு
 
தேனி மாவட்டத்தில் நாட்டுக் கறிவேப்பிலை மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கரிசல், செம்மண், வண்டல் என எந்த நிலத்திலும் கறிவேப்பிலை சாகுபடி செய்யலாம். முதன்முதலில் நடவு செய்யக் கண்டு (செடி), கூலி என மொத்தம் ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம்வரை செலவு ஏற்படும். அதன் பின் ஆண்டுக்கு ஒரு முறை இயற்கை உரம் வைக்கலாம். தேவைப்பட்டால் ஆண்டுக்கு மூன்று முறை ரசாயன உரம் வைக்கலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
 
ஓர் ஆண்டுக்குப் பின் கவாத்துக்கு (பறிப்பு) தயாராகிவிடும். அதன் பின் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கவாத்து செய்துகொண்டே இருக்கலாம். 50 ஆண்டுகளுக்கு மேலாக இதன் மூலம் பயன்பெறலாம். அதனால் இதை விவசாயிகள் ஆயுள் பயிர் என்று கூறுகின்றனர்.
 
நோய்க் கட்டுப்பாடு
 
மூன்று மீட்டர் ஆழத்துக்கு இதன் வேர்கள் தரையில் செல்வதால் கவாத்து செய்யாமல் விட்டால், பெரிய மரமாக வளர்ந்துவிடும். அதனால் தொடர்ந்து கவாத்து செய்துகொண்டே இருக்க வேண்டும். கறிவேப்பிலைத் தோட்டத்தில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மற்ற வேலைகளைச் செய்துவிட்டு இதைக் கவனிக்கலாம்.
 
பனி பொழியும் காலங்களில் இலைப்புள்ளி, கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் குறைவதுடன், இலையின் எடையும் குறைந்துவிடும். அந்த நேரத்தில் பூச்சி மருந்து தெளித்து நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
 
தேவை அதிகரிப்பு
 
ஆண்டு முழுவதும் இதன் தேவை அதிகரித்துவருவதால் சராசரியாக ஒரு கிலோ ரூ.12வரை விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. முகூர்த்தக் காலங்களில் இன்னமும் கூடுதலாக விலை போக வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கருக்கு ஒரு முறை 4 ஆயிரம் கிலோவரை கவாத்து செய்ய முடியும்.
 
வெளிநாடுகளில் நாட்டுக் கறிவேப்பிலைக்குக் கிராக்கி இருப்பதால் கவாத்து செய்யப்பட்டவுடன் குளிரூட்டப்பட்ட கண்டெய்னரில் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சில நிறுவனங்கள் இதை வாங்கிப் பொடி செய்து விற்பனை செய்து வருகின்றன என்கிறார்.
 
கே.வீரமணி தொடர்புக்கு: 90033 97420
 
  • 2 weeks later...
  • Replies 162
  • Views 93.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

புதுமையான இயற்கை விவசாயம்: ஆண்டு முழுவதும் திராட்சை அறுவடை

 

thiratchai_2415460f.jpg

 

இயற்கையின் எழில் கொஞ்சும் திண்டுக்கல் சிறுமலை அடிவாரம். அங்கே மூன்று ஏக்கரில் விரிந்து கிடக்கும் ஜானகிராமனின் திராட்சைத் தோட்டத்தில் ஆண்டு முழுவதும் திராட்சை கொத்துக்கொத்தாய் காய்த்துத் தொங்குகிறது. எல்லாம் இயற்கை விவசாயத்தில் விளைந்தவை.
 
எதையும் சந்திப்போம்
 
இயற்கை விவசாயத்தில் திராட்சையெல்லாம் சாத்தியமா?
 
’’மதுரையில் எங்களுக்கு ஜவுளி வியாபாரம். போதிய அளவுக்கு வருமானம் இருக்கு. எஞ்சிய காலத்துக்குச் சும்மா இருக்க வேண்டாமேன்னுதான் நண்பர் ஒருவரோட ஆலோசனைப்படி இந்தத் தோட்டத்த வாங்கினேன். ஏற்கெனவே, இங்கே ரசாயன உரம் பயன்படுத்தித் திராட்சை போட்டிருந்தாங்க. வருசத்துக்கு மூன்று தவணை மகசூல் எடுப்பாங்க.
 
இந்தத் தோட்டத்தின் முந்தைய உரிமையாளர் என்கிட்ட விக்கிறப்ப, “சார்... திராட்சை விவசாயத்துல முதல் தவணைக்கு ரூ. 43 ஆயிரம் செலவழிச்சேன். ரூ. 29 ஆயிரம்தான் வருமானம் கிடைச்சுது. அதனால, இந்த இடத்துல விவசாயம் பண்ண நினைச்சீங்கன்னா நட்டப்பட்டுப் போவீங்க.
 
பிளாட் போட்டு வித்தீங்கன்னா நல்ல லாபம் பாக்கலாம்’னு சொன்னார். ஆனா, நாங்க தோட்டத்த வாங்கினதுமே ஏக்கருக்கு லட்ச ரூபாய் தர்றோம். எங்களுக்குத் தோட்டத்த குத்தகைக்குக் குடுங்க’ன்னு சில பேரு வந்து கேட்டாங்க. ’லாபம் இல்லாமலா இப்படிக் கேப்பாங்க?’ன்னு உள்ளுக்குள்ள ஒரு யோசனை. என்ன வந்தாலும் வரட்டும்னு நாங்களே திராட்சை போட்டோம்’’ என்கிறார் ஜானகிராமன்.
 
பதினேழும் ஐம்பதும்
 
ரசாயன உரங்கள் பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்துடன் களத்தில் இறங்கிய ஜானகிராமன் திராட்சைக்கும் இயற்கை உரங்களையே பயன்படுத்தி இருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு அக்கம்பக்கத்துத் தோட்டக்காரர்கள், ‘இதெல்லாம் இங்க சரிப்பட்டு வராது. நல்லா வாங்குபடப் போறீங்க’ என்று எச்சரித்திருக்கிறார்கள்.
 
தோட்ட வேலைக்கு வந்தவர்கள்கூடக் கிண்டல் அடித்திருக்கிறார்கள். ‘காசு போனாலும் போகுது. நான் ரசாயன உரம் போடமாட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார் ஜானகிராமன். அவரது முயற்சிக்கு உரிய பலன் கிடைத்தபோது அருகிலுள்ள தோட்டத்துக்காரர்கள் மூக்கின் மீது விரலை வைத்தார்கள்.
 
“ரசாயன உரங்களைக் கொட்டி ஒரு தவணைக்கு அவர்கள் 7 டன் திராட்சை அறுவடை செய்தார்கள். அதே அளவு நிலத்தில் எந்த உரமும் போடாமல் நான் மூன்றரை டன் திராட்சை எடுத்தேன். அதிகமாய்ச் செலவு செய்து அவர்கள் உற்பத்தி செய்யும் திராட்சையைக் கிலோ 17 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஆனால், பெரிய அளவில் செலவில்லாமல், இயற்கை விவசாயத்தில் நாங்கள் விளைவிக்கும் திராட்சை கிலோ 50 ரூபாய்க்குப் போகிறது.
 
இது மருந்து
 
எங்களது திராட்சையை அப்படியே சென்னையிலுள்ள ஆர்கானிக் கடைகளுக்கு அனுப்பிவிடுவோம். இப்ப திராட்சைக்கு நடுவில் வல்லாரையை ஊடு பயிராகப் போட்டிருக்கோம். அதை கிலோ 200 ரூபாய்க்கு எடுக்கிறார்கள். திராட்சைக்கு ஒரு தடவை கவாத்து செய்தால், அடுத்த நாலாவது மாதத்தில் அறுவடை எடுக்கலாம். ஒட்டு மொத்தத் தோட்டத்தையும் ஒரே நேரத்தில் கவாத்து செய்தால், ஒரே நேரத்தில் மகசூல் கிடைத்துவிடும். இப்படி ஒரே நேரத்தில் மொத்தமாகத் திராட்சையை விளைவித்தால், அதை சந்தைப்படுத்துவது சிரமம்.
 
அதனால், தோட்டத்தில் எந்த நேரமும் திராட்சை இருப்பது போல் விளைவிக்கத் திட்டமிட்டோம். அதன்படி கவாத்து முறைகளை மாற்றியதால், இப்போது எங்கள் தோட்டத்தில் மாதா மாதம் திராட்சை அறுவடை செய்கிறோம். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கும் திராட்சைகள் கேன்சர் போன்ற நோய்களை உண்டாக்குவதாகச் சொல்கிறார்கள்.
 
ஆனால், இயற்கை விவசாயத்தில் நாங்கள் விளைவிக்கும் திராட்சைகள் கேன்சருக்கு மருந்தாகப் பயன்படுது. பணம் காசு கெடக்கட்டும். நாம விளைவிக்கிற பொருளால யாருக்கும் எந்தக் கெடுதலும் வரக் கூடாது, அதுதான் முக்கியம்’’ என ஆத்மார்த்தமாகப் பேசுகிறார் ஜானகிராமன்.
 
தொடர்புக்கு: 9150009998
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பூச்சிக்கொல்லி மருந்தை தவிர்க்கலாம் தக்காளியில் அறிமுகம்

 

Tamil_News_large_126838120150606045916.j

 

காந்திகிராமம்:தக்காளி சாகுபடியில் பூச்சிக்கொல்லி மருந்தை தவிர்க்கும் புதிய தொழில் நுட்பத்தை காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் அறிமுகப்படுத்தியது.திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு சாதாரண முறையில் 25 டன், இஸ்ரேல் தொழில்நுட்ப முறையில் 30 டன் சராசரியாக மகசூல் கிடைக்க வேண்டும். இதில் பூச்சித் தாக்குதலால் மகசூலில் 10 சதவீதம் வரை இழப்பு ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகள் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்துகின்றனர்.இதனால் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்தை தவிர்க்க, புதிய தொழில்நுட்பத்தை காந்திகிராம வேளாண் அறிவியல் மையம் அறிமுகப்படுத்தியது.
 
இதில் தக்காளி பயிர்களுக்கு இடையில் செண்டுமல்லியும், நிலத்தை சுற்றிலும் வயல் ஓரங்களில் மக்காளச்சோளமும் பயிரிட வேண்டும். செண்டு மல்லி காய்ப்புழுக்களையும், மக்காச்சோளம் சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். இதனால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க தேவையில்லை.அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் கூறியதாவது: புதிய தொழில்நுட்பத்தை பெங்களூரு தோடக்ககலை ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. தக்காளி சாகுபடியில் 16 பாத்திகளுக்கு, ஒரு பாத்தி செண்டு மல்லி நட வேண்டும். பூச்சிகளை தடுக்க செலவு குறைந்த பயிர்களை தேர்வு செய்ய வேண்டும். புதிய தொழில் நுட்பம் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ள எங்கள் பண்ணையில் செயல்விளக்க திடல் அமைத்துள்ளோம், என்றார்.
 
  • தொடங்கியவர்

இயற்கையை வியாபாரம் ஆக்காதீர்கள்! - ‘மண்புழு நண்பன்' சுல்தான் இஸ்மாயில் நேர்காணல்

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/158699-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

  • தொடங்கியவர்
 
தண்ணீருக்குத் தவம் கிடக்க வேண்டாம்: மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி
 
  • தொடங்கியவர்

பசுமைக்குடில் தொழில்நுட்பம்

E_1434451192.jpeg

இன்று எங்கு பார்த்தாலும் பசுமை குடில் மூலம் விவசாயம் நடக்கிறது. வருடம் முழுவதும் காய்கறிகள், காளான் வளர்ப்பு, நாற்று உற்பத்தி செய்து சம்பாதிக்கின்றனர். அது பற்றி அறிவோம்.
எதையும் உயர்த்திட, தரமான தொழில்நுட்பம் தேவை. கிணற்றில் நீர் இறைக்க மாட்டை பயன்படுத்தினர். மோட்டார் தொழில்நுட்பம் வந்து 300 அடிகளில் இருந்து கூட நீரை இறைத்து விவசாயம் செய்கின்றனர். அப்படிப்பட்ட தொழில்நுட்பம் தான் பசுமை கூடார விவசாயம் ஆகும்.
90 முதல் 95% பயிர்கள் வயல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் வருடம் முழுவதும் வளர்க்க முடியாது. ஆனால் பசுமைக் கூடாரம் அமைத்தால் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய இயலும். குளிர்பிரதேசங்களில் அதிகப்படியான குளிரில் இருந்து பயிர்களை தொடர்ந்து காப்பாற்றி, உயர் மதிப்புள்ள பயிர்களை வளர்க்க ""பசுமைக் கூடார தொழில்நுட்ப முறைகள்'' உருவாக்கப்பட்டன. காற்று, குளிர், மழை, அதிக சூரிய ஒளி, அதிக வெப்பம், பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பசுமைக் கூடாரம் என்பது ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போர்த்தப்பட்ட அமைப்பாகும்.


இதனுள் தேவையான தட்பவெப்ப நிலை உருவாவதுடன், இரவில் வெளியிடும் கரியமில வாயு உள்ளேயே தங்கி, ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. விளைச்சல் அதிகமாகிறது. ஈரப்பதம் குறையாது. அதிகநீர் தேவைப்படுவதில்லை.


பசுமைக் கூடார பயன்கள்: பூச்சி, எலி, பறவைகளின் தாக்குதல் இல்லை. வெப்பம், பெரும் மழை, காற்று தடுக்கப்படும். பூச்சி மருந்து / உரங்களின் சரியான பயன்பாடு சாத்தியமாகும். தட்பவெப்பம் கட்டுப்படுவதால் வருடம் முழுவதும் எந்த பயிரையும் பயிர் செய்யலாம். ஆண்டு முழுவதும் காய்கறிகள், கொய்மலர்கள் கிடைப்பதால் லாபம் அதிகமாகிறது.


இதனை அமைக்க சிறிது மேடான இடமாக இருக்க வேண்டும். தேவையான மின்சாரம் கிடைக்க வேண்டும். அருகில் மரம் / கட்டடம் இருக்க கூடாது. கிழக்கு - மேற்காக அமைக்க வேண்டும். வாய்க்கால் வடக்கு - தெற்காக அமைய வேண்டும்.


அமைக்கும் முறை : 4x2 மீ அளவில் செவ்வகமாக உருவாக்கலாம். 4 மூலைகளிலும் இரும்புக் குழாய்களை கான்கிரீட் மூலம் நிறுவ வேண்டும். பின் முடிவுச் சட்டத்தைப் பொருத்த வேண்டும். பக்கவாட்டு தாங்கிகளை பொருத்த வேண்டும். பின் தேவைப்படும் குழாய்களை நிறுவ வேண்டும். பின் கூடாரத்தின் மேல் பாலிதீன் தாள் கொண்டு மூட வேண்டும். காற்றோட்ட வசதி, சூடேற்றும் வசதி செய்ய வேண்டும். இதன் மூலம் கொய்மலர்கள், காளான், தரமான நல்ல விளைச்சல்களைப் பயிரிடலாம்.


கீழ்க்கண்ட வலைத்தளம் பாருங்கள். www.tnau.ac.in, www.icar.nic.in, www.tn.gov.inagriculture, www.agritech.ac.in.
- எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர்,
93807 55629

 

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25543&ncat=7

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வறண்ட பூமியை வளமாக்கிய வழக்கறிஞர்: நாள் மாதம் ஆண்டு என வருவாய்

gallerye_005633690_1289106.jpg

gallerye_005639262_1289106.jpg

சிவகங்கை: சிவகங்கையில் வறண்ட பூமியை வளமிக்க பூமியாக மாற்றி காட்டியுள்ளார் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞரான நவீன விவசாயி கிருஷ்ணன். இருபது ஏக்கர் நிலத்தில் சந்தனம் செம்மரம் தேக்கு மா பலா கொய்யா மல்பரி முல்லை என விளைவித்துள்ளார்.

சிவகங்கை அருகே கீழப்பூங்குடியை சேர்ந்த இவர் 20 ஆண்டுகளுக்கு முன் பிரவலுாரில் 20 ஏக்கர் நிலம் வாங்கினார். வறண்ட பூமியை செழிப்பான பூமியாக மாற்றுவதற்கான வழிமுறைகளை சிந்தித்தார்.'முயற்சித்தால் நடக்காதது எதுவும் இல்லை' என தீர்மானித்தார். நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டார். 20 ஆண்டுகள் கஷ்டப்பட்டதன் விளைவு பாளம் பாளமாக பிளந்து கிடந்த நிலம் இன்று மா பலா கொய்யா தேக்கு செம்மரம் சந்தன மரம் மல்பரிச்செடிகள் என பச்சை போர்வை போர்த்தியது போல் பசுமையாக காட்சியளிக்கிறது.

கிருஷ்ணன் கூறியதாவது:ஆரம்பத்தில் நெல் வாழை என பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்தேன். விவசாயத்தை லாபகரமாக மாற்ற வேண்டும் என தீர்மானித்தேன். நாள் வருமானம் மாத வருமானம் ஆண்டு வருமானம் என்ற கொள்கை அடிப்படையில் விவசாயம் செய்து வருகிறேன். முல்லைப்பூ வளர்ப்பு மூலம் நாள் வருமானம். பட்டுக்கூடு உற்பத்திக்காக மல்பரி செடி வளர்ப்பு மூலம் மாத வருமானம் செம்மரம் தேக்குமரம் சந்தன மரம் மூலம் ஆண்டு வருமானம்; இதுவே எனது விவசாய கொள்கை.விவசாயத்தில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அரசுப்பணியை துறந்தேன். இருபது ஏக்கர் நிலம் வாங்கி மூன்று கிணறுகள் வெட்டினேன். தண்ணீர் நன்றாக உள்ளது. சொட்டு நீர் பாசனம் மூலம் விளைவிக்கிறேன்.மல்பரி செடி வளர்ப்பு மூலம் மாதம் சராசரியாக ரூ.ஒரு லட்சம் கிடைக்கிறது. இந்த வருவாயை ஐந்து மடங்காக உயர்த்த ஏற்பாடு நடக்கிறது. ஒவ்வொரு இனங்கள் மூலம் தனித்தனி வருவாய் கிடைக்கிறது.
தற்போது மதுரையில் வசிக்கிறேன். சிவகங்கையில் விவசாயத்தை தினமும் நேரில் வந்து கவனிக்க இயலாது என்பதால் வீடியோ 'கான்ஸ்பரன்ஸ்' மூலம் பணிகளை கண்காணிக்க உள்ளேன் என்றார். 

gallerye_005645341_1289106.jpg

http://www.dinamalar.com/news_detail.asp?id=1289106

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

வண்ண மீன்கள் வளர்ப்பு தொழிலில் லாபம் ஈட்டி வரும் விஜயா: 

Tamil_News_large_1302671.jpg

காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்களத்துாரைச் சேர்ந்தவள் நான். 2020ல், எங்கள் பகுதி பெண்கள் ஒன்று சேர்ந்து, பவுர்ணமி மகளிர் சுய உதவிக் குழுவை ஆரம்பித்தோம்.
எங்கள் பகுதி விவசாயத் துறை அதிகாரிகள், 'நல்ல தொழில்களைத் தேர்ந்தெடுத்து செய்யுங்கள். நாங்கள் கடன் உதவி செய்கிறோம்' என ஊக்கப்படுத்தினர். வண்ண மீன் வளர்ப்பது குறித்து, விவசாயத் துறை அலுவலகத்தில், மூன்று நாட்கள் பயிற்சி எடுத்தோம். 
'புது பிசினசா இருக்கே... இதெல்லாம் நமக்கு சரி வருமா?' என, குழு பெண்கள் பலர் தயங்கினர். கண்டிப்பாக, இது வண்ண மயமான பிசினசா இருக்கும்னு நம்பி, 5,000 ரூபாய் முதலீடு போட்டு துணிச்சலுடன் இறங்கினேன்.வண்ண மீன்களை வளர்த்து விற்கும் மணிமங்கலத்தில் உள்ள பண்ணையிலிருந்து, 100 வண்ண மீன்களை வாங்கி வந்தேன். வளர்ப்பு குறித்து பயிற்சி இருந்ததால், மீன்களை வளர்ப்பதில் சிரமமில்லை. 
இரண்டு மாதத்தில், எல்லா மீன்களுமே நன்றாக வளர்ந்து, கொள்ளை அழகாக இருந்தது. மீன்கள் வளர்வதற்கான இடைப்பட்ட காலத்தில், 'விசிட்டிங் கார்டு' தயார் செய்து, அக்கம் பக்கத்தில் தெரிந்தவர்கள் அத்தனை பேருக்கும் தெரியப்படுத்தினேன்.

ஒரே ஒரு கண்ணாடித் தொட்டியோடு பிசினசை ஆரம்பித்தேன். ஆனால் இன்று, சொந்தமாக, 10 சிமென்ட் தொட்டிகள் கட்டி, ஆயிரக்கணக்கில் வண்ண மீன்களை வளர்க்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன்; மாதம், 30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
வண்ண மீன்கள், 500க்கும் மேற்பட்ட வகைகளில் இருந்தாலும், இனப்பெருக்கம் செய்யாத சார்க் இன மீன்கள், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பைட்டர் இன மீன்கள், குட்டிப் போடும், ரெட்மாலி - ஒயிட்மாலி என, மூன்று இன மீன்கள் தான் உள்ளன. 
இதில், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இன மீன்களிலிருந்து தான், கோல்டு பிஷ், ஏஞ்சல் பிஷ், ஆஸ்கார், ஜீப்ரா, டைகர் போன்ற பிரபலமான வண்ண மீன்கள் உருவாகின்றன. இது தான், பலரும் விரும்பக் கூடிய ஸ்டார் மீன்கள். ஆனால், இவற்றை முட்டையிட்டு குஞ்சு பொறிக்க வைத்து வளர்க்கும் முறை தான், கொஞ்சம் சவாலானது.
எனவே, புதிதாக வண்ண மீன்கள் வளர்க்கும் தொழிலில் ஈடுபட உள்ளோர், முதலில் குட்டி போடும் இன வண்ண மீன்களை வாங்கி வளர்ப்பது நல்லது. என்னிடம், 1 ரூபாயில் ஆரம்பித்து, 2,000 ரூபாய் வரை வண்ண மீன்கள் விற்பனைக்கு உள்ளன. 
பிசினஸ் துவங்கிய மூன்று மாதம் கழித்து, போட்ட முதலீட்டை விட அதிக லாபத்தை சம்பாதித்து விடலாம். வீட்டில் சும்மா இருக்கும் பெண்கள், இந்தத் தொழிலில் நம்பி இறங்கலாம்; அதற்கு நானே உதாரணம். தொடர்புக்கு: 98417 17364

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

 

பப்பாளி சாகுபடியில் விவசாயி சாதனை

Tamil_News_large_1302137.jpg

சேலம்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, 30 சென்ட் நிலத்தில், பப்பாளி சாகுபடி செய்து, ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுகிறார்.

30 சென்ட்டில்...:சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் மனைவி சித்ரா. இவர்களுக்கு சொந்தமாக, இளம்பிள்ளை சாலையில், விவசாய நிலம் உள்ளது.
நிலத்தின் ஒரு பகுதி யில், 30 சென்ட்டில், பப்பாளி பயிரிட்டு, பழங் களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.பப்பாளி மரங்களுக்கு, செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்து
களை முற்றிலும் தவிர்த்து, இயற்கை உரங்களை கொண்டு வளர்க்கின்றனர். தற்போது, அறுவடைக்கு தயாரான நிலையில், பழங்களை, மார்க்கெட்டுக்கு அனுப்பாமல், விவசாய நிலம் அருகில், கடை விரித்து, வியாபாரம் செய்து வருகின்றனர். வெளி மார்க்கெட்டில், பப்பாளி, கிலோ, 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கும் நிலையில், இங்கு, 20 ரூபாய்க்கு விற்கின்றனர்.

விவசாய தம்பதி ராஜேந் திரன், சித்ரா கூறியதாவது:தோட்டக்கலைத் துறையால் சிபாரிசு செய்யப்பட்ட, 'கிராஸ்' ரக பப்பாளியை, நாங்கள் சாகுபடி செய்துள்ளோம். இந்த பழம், நாட்டு பழத்தின் ருசியை தாண்டி விடுவதோடு, சத்து மிக்கதாகவும் உள்ளதால், அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.இந்த பப்பாளி மரங்கள், இரண்டு ஆண்டு வரை பலன் கொடுக்கிறது. மாதத்துக்கு, இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்பதோடு, பராமரிப்பு செலவுகளும் குறைவு.ஆறு மாதத்துக்கு ஒரு அறுவடை என்ற வகையில், ஆண்டுக்கு இரண்டு அறுவடையில், 1 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

நல்ல பலன்:

பப்பாளியை பழுக்க வைக்க, கல், நைட்ரஜன் திரவம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது இல்லை. மரத்தில் பழுத்த பழத்தை பறித்து, அப்படியே கொடுக்கிறோம்.பழத்தை வாங்குபவர் கண் முன்னே, மரத்தில் இருந்து பறித்துக் கொடுப்பதால், திருப்தியுடன் வாங்குகின்றனர். பிற விவசாய பயிர்களை விட, பப்பாளி நல்ல பலனை கொடுக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1302137

Edited by Athavan CH

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

மீன் கழிவிலிருந்து பூச்சிவிரட்டி, பழக் கழிவிலிருந்து இயற்கை உரம்

meen1_2511550f.jpg

கழிவாக வீசப்படும் மீன், பழங்களிலிருந்து பூச்சிவிரட்டி, இயற்கை உரம் தயாரித்திருக்கிறார் தேனி மாவட்ட விவசாயி.

தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம். விவசாயிகள் பலர் அதிக மகசூல் கிடைக்கும் என்பதற்காகச் செயற்கை உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். சில விவசாயிகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கிராமப் பஞ்சாயத்துகளில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

சில நேரம் இயற்கை உரத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு தேவாரத்தைச் சேர்ந்த ஆர். நவநிதி என்னும் பட்டதாரி விவசாயி, கழிவுநீர் ஓடை, குப்பையில் கொட்டப்படும் மீன்கழிவு மற்றும் அழுகிய பழங்களைக்கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக உரம் மற்றும் பூச்சிவிரட்டியைத் தானே தயாரித்துப் பயன்படுத்திவருகிறார்.

அதிக விளைச்சல்

இந்தப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்துவதன் மூலம் அவருடைய நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இதன்மூலம் லாபம் சம்பாதித்து, மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் நவநிதி.

தனது வீட்டு மொட்டை மாடியில் கீரைச் செடிகள், புதினா, கொத்தமல்லி, ஓமம் போன்ற மூலிகை செடிகளையும் இயற்கை விவசாய முறையில் வளர்த்து வருகிறார்.

meen_2_2511553a.jpg

கழிவிலிருந்து

இதுகுறித்து அவர் பகிர்ந்துகொண்டது: "படிக்கும் காலத்திலிருந்தே இயற்கை விவசாயத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. இதனால் செயற்கை உரங்களைத் தவிர்த்து, இயற்கையான உரங்களைத் தயாரிக்க முடிவு செய்தேன். எதற்கும் பயன்படாமல் குப்பை, சாக்கடையில் வீசப்படும் மீன்கழிவைச் சேகரித்து மீன் கரைசல் என்ற பூச்சிவிரட்டியைக் கண்டறிந்துள்ளேன். இந்தக் கரைசலைப் பயிர்கள் மீது தெளிக்கும்போது, பூச்சிகளுக்கு எந்தப் பயிர் என்று கண்டறிய முடியாமல் போகிறது.

இதனால் பயிர்களில் பூச்சி, புழுக்களால் ஏற்படும் நோய் தாக்குதல் குறைகிறது. இந்தப் பூச்சிவிரட்டியில் 60 சதவீதத்துக்கு மேல் தழைச்சத்து உள்ளது. இதனால் பயிர்கள் செழிப்பாக வளரும்.

இயற்கை உரம்

இதுதவிர அழுகிய பப்பாளி, பூசணி, வாழைப்பழத்தைக்கொண்டு உரம் தயாரித்துள்ளேன். இந்த உரத்தை இடுவதன் மூலம் நுண்ணுயிர்கள் பெருகி மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. என்னுடைய மூன்று ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மெட்டாஸ் மல்லி என்று அழைக்கப்படும் காக்கரட்டான் பூத் தோட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இயற்கை விவசாய முறையைப் பின்பற்றி வருகிறேன். ஏழு டன்வரை பூ வரத்து கிடைக்கிறது. செயற்கை உரத்தைப் பயன்படுத்தியிருந்தால் சராசரியாக ஐந்து டன் மட்டுமே வரத்து இருந்திருக்கும்.

கொய்யா, முருங்கைகளுக்கும் இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்து வருவதால், இதுவரை தோட்டத்தில் எந்தவொரு நோய்ப் பாதிப்பும் ஏற்படவில்லை. மற்ற விவசாயிகள் கேட்டுக்கொண்டால் நான் கண்டறிந்த பூச்சிவிரட்டி மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு குறித்து இலவசமாகப் பயிற்சி அளிக்கத் தயாராக உள்ளேன்" என்றார்.

விவசாயி ஆர். நவநிதி தொடர்புக்கு: 98659 41703.

http://tamil.thehindu.com/general/environment/மீன்-கழிவிலிருந்து-பூச்சிவிரட்டி-பழக்-கழிவிலிருந்து-இயற்கை-உரம்/article7544176.ece?widget-art=four-all#comments

 

  • 1 month later...
  • தொடங்கியவர்

மதிப்பு கூட்டலில் கிடைக்கும் மகத்தான லாபம்

ma_2572586f.jpg
 

புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் மதிப்புக் கூட்டுதல் எனும் மகத்தான கலை முக்கியமான பங்களிப்பை செய்து வருகிறது என்றால் மிகையில்லை. சாதாரண ஒரு விவசாயியின் வருமானத்தை, கனவை, ஆசையை மகத்தான ஒன்றாக மாற்றுகிறது மதிப்புக் கூட்டு தொழில்நுட்பம். மதிப்புக்கூட்டலைக் கற்றுக் கொண்டால் விவசாயி என்கிற நிலையிலிருந்து தொழில் முனைவர் என்கிற இடத்துக்கும் உயர்ந்து விடுகிறார்.

பொதுவாக சந்தைக்கு பொருட் களைக் கொண்டு செல்லும் விவசாயிகள் பெரும்பாலும் சந்தோஷமாக வீடு திரும்பியதாகச் சரித்திரம் இல்லை. அதே சமயம் கொஞ்சம் மாத்தி யோசித்தால் அந்த பொருட்களையே மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கின்றனர் தொழில் முன்னோடிகள்.

விவசாயி - தொழில்முனைவோர்

விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது உடனடியாக தீர்க்கக்கூடிய விஷயம் இல்லை என்பதை புரிந்து கொண்டு மாற்றுத்தீர்வுகளை யோசித்தால் மதிப்புக் கூட்டி விற்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

தென்னை விவசாயி தனது விளைச் சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று காத்திருப்பதைவிட, தென்னை யிலிருந்து கிடைக்கும் பொருட்களை பல்வேறு விதமாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்யலாம். தேங்காய், இளநீர், மட்டைகள் என அப்படியே விற்பனை செய்யாமல் அதை மதிப்புக் கூட்ட பழக வேண்டும். தேங்காய் பவுடர், தேங்காய் எண்ணெய் என உற்பத்தி செய்யலாம். தேங்காய் மட்டையை பதப்படுத்தி அதை பித் என்கிற வடிவில் கொண்டு வருகிறபோது அதற்கு ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது.

இளநீரை கார்விங் செய்து அழகாக பேக்கிங் செய்தால் ஷாப்பில் மால்களிலும் விற்பனை செய்ய முடியும். தேங்காய் கொட்டாங்குச்சிகளை எரி பொருளாக மட்டுமே பார்க்கக்கூடாது. இதை வெளிநாடுகளில் ஒரு முறை பயன்படுத்தும் கப்புகளாக பயன்படுத்து வதால் ஏற்றுமதி செய்யலாம்.

ஏற்றுமதி

கார்பன் தயாரிப்புக்கு பயன்படுத்துவதால் அதற்கான வாய்ப்புகளை தேட வேண்டும். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக யோசனை செய்தால் மகத்தான வருமானம் கிடைக்கும் என்பதுதான் உண்மை. பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு விவசாயி தேங்காய் பவுடரை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பவுடரை சாக்லெட், பிஸ்கட், கேக் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றன. வட இந்தியாவிலும் இதற்கு அதிக சந்தை உள்ளது.

தூக்கி எறியும் தேங்காய் மட்டையில் உள்ள நாரைப் பிரித்தெடுத்து அதை விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள் ஐரோப்பிய விவசாயிகள். அவர்களுக்குத் தேவையான நார்கள் தமிழ்நாட்டிலிருந்து செல்கிறது. மண் தொட்டியில் தேங்காய் நாரை வைத்து, பத்து லிட்டர் தண்ணீர்வரை ஊற்றினாலும் அப்படியே உறிஞ்சி தக்க வைத்துக் கொள்வதால் அதற்கு வரவேற்பு பலமாக உள்ளது. அந்த நாரில் பயிரை வைத்து வளர்க்கிறார்கள். போன்சாய் மரங்களை வளர்ப்பதற்கு இது சிறந்த முறையாக இருந்து வருகிறது.

தொழிற்சாலை தேவை இல்லை

அதுபோல பால் உற்பத்தியாளர்கள் உரிய விற்பனை விலை கிடைக்க வில்லை, கொள்முதல் இல்லை என பல சிக்கல்களை அனுபவிக்கின்றனர். பல நேரங்களில் கறந்த பாலை கீழே கொட்டியும் அரசின் கவனத்தை ஈர்க்கின்றனர். ஆனால் மதிப்புக் கூட்டல் முறையில் இதில் மகிழ்ச்சியான லாபம் பார்க்கலாம் என்பதுதான் உண்மை. மேலும் இந்த சிக்கல்களுக்கு மதிப்புக் கூட்டல் முறை இவர்களுக்கு தீர்வாக இருக்கும். முக்கியமாக பாலிலிருந்து பல நாட்கள் கெடாமல் இருக்கும் சீஸ் என்கிற பலாடைக் கட்டி தயாரிக்கலாம்.

சீஸ் தயாரிக்க பெரிய தொழிற்சாலை தான் தேவை என்றில்லை, சிறிய அளவில் வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம். பத்து லிட்டர் பாலை ஒரு லிட்டராக சுருக்கி எளிய முறையில் விற்பனை செய்ய முடியும். ஒரு லிட்டர் பாலில் 100 கிராம் சீஸ்தான் தயாரிக்கலாம். ஆனால், நூறு லிட்டர் பாலின் அடக்கவிலை அதிகபட்சம் 3,000 ரூபாய் என்றால் அதிலிருந்து செய்யப்படும் 10 கிலோ சீஸின் குறைந்தபட்ச விற்பனை விலை 4,000 வரை விற்பனை ஆகிறது. உற்பத்தியில் 90% சீஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கிறது. எவ்வளவு நாட்கள் என்றாலும் கெட்டுப் போகாது. சீஸின் நாட்கள் கூடக் கூட சுவையும் மணமும் அதிகரிக்குமாம்.

பல மடங்கு லாபம்

நெல்லிக்காய் உற்பத்தி செய்த ஒரு விவசாயி இன்று நெல்லி ஜூஸ் தயாரிப்பிலும் கலக்கி வருகிறார். அல்லும் பகலும் கஷ்டப்பட்டு நெல்லிக்காயை நெல்லிக்காயைப் பறித்துக்கொண்டு போனால் ஐந்துக்கும், பத்துக்கும் கேட்டதில் வெறுத்துப்போனவர்தான் ராஜேந்திரன். இன்று நெல்லிக்காயில் இருந்து ஜூஸ், ஜாம், சாக்லெட் போன்றவற்றைத் தயாரிக்கக் கற்றுக் கொண்டு தொழில்முனைவோராக நிற்கிறார். நெல்லி ஊறுகாய், நெல்லி சிப்ஸ், தொக்கு, நெல்லிப் பாக்கு சீவல், நெல்லி குளியல் பவுடர் என பல பொருட்களைத் தயாரிக்கிறார்.

நெல்லிக்காயை பறிச்சு விற்பனை செய்தால் ரூ.50,000 கிடைக்கும். அதையே மதிப்புக் கூட்டப்பட்ட பொரு ளாக விற்பனை செய்கிறபோது பல மடங்கு லாபம் கிடைக்கிறது என்கிறார் இவர். இதைபோல அதிக விளைச்சலால் விலை கிடைக்காமல் அவதிப்படும், தக்காளி விவசாயிகள் மாற்றி யோசிக்கலாம். ஜூஸ், ஜாம், ஊறுகாய், ரெடிமேட் மிக்ஸ் என அதிலிருந்து பல பொருட்களை தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொண்டால் வருமான இழப்பைத் தவிர்க்க முடியும்.

மதிப்புக் கூட்டு கலையால் தேங்காய் மட்டை போன்ற உபபொருட்களைக் கூட விற்கமுடிகிறது. சில மணி நேரங்களில் கெட்டுபோகும் பால் சீஸ், பன்னீர், பால் பவுடர், கிரீம், என்று மாறுகிறபோது நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்கிறது. இது போல ஒவ்வொரு தொழிலுலும் ஒன்றை பத்தாக மாற்றும் வித்தையை கற்றுக் கொள்வதே காலத்துக்கேற்ற மாற்றம்.

பொதுவாக பாரம்பரிய தொழில் நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பவர்கள் இந்த மதிப்புக் கூட்டலை நம்புவதில்லை. அடுத்த தலைமுறையினர் தொழிலை கையிலெடுக்கும் போதுதான் தொழில் நவீன வடிவம் பெறுகிறது. அதாவது விவசாயி என்ற நிலை மாறி தொழில் முனைவர் என்ற இடத்துக்கு உயர்த்திக்கொள்ளாதவரை விளைச் சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று பேசிக்கொண்டிருக்க வேண்டி யதுதான். அந்த நிலை மாற வேண்டும் என்றால் மதிப்புக்கூட்டல் என்கிற மகத்தான தொழில்வடிவத்தை கற்றுக் கொள்வதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.

maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/மதிப்பு-கூட்டலில்-கிடைக்கும்-மகத்தான-லாபம்/article7725978.ece?ref=sliderNews

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சுந்தரமூர்த்தி

சுந்தரமூர்த்தி

படங்கள்: எம். சாம்ராஜ்

 

அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் காளான் வளர்க்கும் ஆசிரியர், அதற்காகத் தேசிய விருதைப் பெற்றுள்ளார். அத்துடன் நின்றுவிடாமல், காளான் வளர்க்கும் வழிமுறைகளை இளைஞர்களுக்குக் கற்றுத்தந்துவருகிறார்.

கிராமம் தந்த விழிப்புணர்வு

புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், அறிவொளி இயக்கத்திலும் ஆர்வத்துடன் இயங்கியவர். பணிக் காலத்தில் காளான் வளர்ப்பு குறித்துக் கேட்டறிந்த அவர், அதில் முழுமையாகப் பயிற்சி பெற்று அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது கோனேரிக்குப்பம் கிராமத்தில் காளான் வளர்ப்பு மற்றும் விதை உற்பத்திப் பண்ணையை நடத்திவரும் இவர், ஏராளமான இளைஞர்களுக்குக் காளான் வளர்க்கப் பயிற்சியும், விற்பனை செய்வதற்குரிய வழிமுறைகளையும் அளித்து வழிகாட்டி வருகிறார். இது தொடர்பாக சுந்தரமூர்த்தி பகிர்ந்துகொண்டது:

அறிவொளி இயக்கத்தில் இருந்த காலத்தில், கிராமங்களுக்குச் செல்லும்போது வேளாண் திட்டங்களில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது காளான் வளர்ப்பு தொடர்பாகக் கற்றுக்கொண்டு,ஆர்வமுள்ள மற்றவர்களுக்குக் கற்றுத்தரத் தொடங்கினேன்.

தேசிய விருது

காளான் வளர்ப்பு ஆர்வம் அதிகரிக்க, 2007-ல் ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அப்போது எல்லோரும் விநோதமாகத்தான் பார்த்தார்கள். அரசு வேலையை நம்பியிருக்காமல் சுயதொழில் செய்து, முன்மாதிரியாக இருக்க விரும்பினேன். நம் நாட்டில் விவசாயம் சார்ந்த மாற்று உணவுப்பொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். உணவு காளானுக்கு நம்மூரில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், உணவுக் காளான்களைப் பற்றி முழுமையாக அறிந்தேன்.

அசைவ உணவைப் போன்று காளானிலிருந்து அதிகப் புரதம் கிடைக்கிறது. பல்வேறு நோய்களைத் தடுக்கும் உணவாகவும் காளான் உள்ளது. தொடர் முயற்சியாலும் பலருடைய உதவியாலும் பல்வேறு தொழில்நுணுக்கங்களைக் கற்றேன். பிறகு காளான் உற்பத்தியும், காளான் விதை உற்பத்தியும் செய்யத் தொடங்கினேன். அதற்காகச் சிறந்த காளான் மற்றும் விதை உற்பத்தியாளருக்கான தேசிய விருதை 2012-ல் பெற்றேன்.

கூரைக்குடில் சாகுபடி

இப்போது சிப்பிக் காளான், பால் காளான் ஆகியவற்றை உணவுக்காக உற்பத்தி செய்வதுடன், காளான் விதை உற்பத்தியும் செய்துவருகிறேன். இது மிகவும் லாபகரமான தொழில். காளான் சைவ உணவு. ரசாயனப் பொருளோ, பூச்சிக்கொல்லியோ இல்லாமல் விஞ்ஞானரீதியாகக் காளானை உற்பத்தி செய்யலாம். சிப்பிக் காளான் ருசி அதிகமுள்ளது. மசாலாப் பொருட்களை உறிஞ்சிக்கொள்ளும். மிருதுவாக இருக்கும்.

மற்ற காய்கறிகளை நிலத்தில் உழுவார்கள். காளானை மண்ணில் விதை போட்டு உற்பத்தி செய்வதில்லை. விவசாயக் கழிவுகளான வைக்கோல், கம்புத்தட்டை, கேழ்வரகுத் தட்டை, மணிலாக்கொடி, கரும்பு போன்ற தாவரங்களின் சருகு போன்ற பொருட்களை சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து, தொற்றுநீக்கம் செய்து,அவற்றில் காளான் விதையை இட்டு உற்பத்தி செய்ய வேண்டும்.

நாள் ஒன்றுக்கு 30 கிலோ

காளான் வளர்க்கக் கூரைக்குடில்களை அமைக்க வேண்டும். குடிலில் 400 படுக்கைகள் வரை வைக்கலாம். அவற்றில் காளானை விளைவித்து அறுவடை செய்கிறோம். ஒரு வாரத்தில் ஒரு குடில் நிரம்பிவிடும். ஒரே நாளில் அனைத்துப் படுக்கைகளையும் வெளியே எடுத்துக் காளானை எடுத்துவிட்டு, குடிலைத் தூய்மைப்படுத்திவிடுவோம். இதனால் குடிலில் பூச்சி இருக்காது. மறுபடியும் நல்ல மகசூல் கிடைக்கும். இம்முறையைப் பின்பற்றினால் காளான் உற்பத்தி லாபகரமாக அமையும்.

சிப்பிக் காளான் படுக்கையொன்றில் சுமார் ஒரு கிலோவரை உற்பத்தியாகும். நாள் ஒன்றுக்கு 30 கிலோ சிப்பிக் காளானை எளிதாக உற்பத்தி செய்யலாம். உற்பத்தியாகும் காளானைப் புதுச்சேரி உழவர் சந்தை, பெரிய மார்க்கெட், காளான் சூப் கடைகளுக்கு நானே சென்று விற்பனைக்குக் கொடுத்துவருகிறேன்.

வழிகாட்டி

காளான் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுவோர்க்குப் புதுச்சேரி அரசின் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் சிறப்பு மானியம் வழங்கப்படுகிறது. நிலையத்தின் விற்பனைக்கூடங்கள் மூலம் காளான் விற்பனை செய்யவும் உதவுகிறார்கள்.

ஆயிரக்கணக்கான இளைஞர் களுக்குக் காளான் வளர்ப்பு பற்றி கற்றுத்தந்துள்ளேன். ஒரு நாள் முழுக்கச் செலவிட்டால் காளான் வளர்ப்பைக் கற்றுக்கொள்ளலாம். படித்த இளைஞர்கள் சம்பளம் தரும் வேலையை மட்டும் நம்பி இருக்காமல், இத்தொழிலில் குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ. 20 ஆயிரம்வரை வருமானம் கிடைக்கும். சொந்தக்காலில் நிற்கலாம்.

காளான் வளர்ப்பு பற்றி பல இடங்களுக்கு நேரில் சென்றும் விளக்கம் தந்துவருகிறேன். காளான் வளர்ப்பு மூலம் கிராமப் பகுதிகளில் நிச்சயம் வறுமையை வெல்ல முடியும்.

- சுந்தரமூர்த்தி தொடர்புக்கு: 97879 81973

http://tamil.thehindu.com/general/environment/அரசுப்-பணி-துறந்து-காளான்-வளர்க்கும்-ஆசிரியர்-தேசிய-விருதுடன்-இளைஞர்களுக்கு-வழிகாட்டுகிறார்/article7773307.ece?widget-art=four-all

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

வெள்ளம்: பயிர்களை எப்படி காப்பாற்றுவது?

agriculture_2119275f.jpg
 

ஆண்டுதோறும் பெய்யும் மழையில் 40 சதவீதத்துக்கு மேல் கடலில் கலக்கும், 35 சதவீதம் வெயிலில் ஆவியாகும், 14 சதவீதம் மண்ணால் உறிஞ்சப்படும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்துக்கு உதவும் என்கின்றனர் நிபுணர்கள். கடந்த 2005-ம் ஆண்டு பெய்த மழையின் அளவைவிட, தற்போது பெய்திருக்கும் மழையின் அளவு குறைவாக இருந்தாலும் அன்றைக்கு ஆனதைவிட அதிக சேதத்தை பயிர்கள் சந்தித்து இருப்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

விவசாயிகள் எத்தகைய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன்மூலம் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்கலாம் என்று பகிர்ந்துகொண்டார் முன்னோடி இயற்கை விவசாயியும், புளியங்குடி விவசாய சேவா நிலைய செயலருமான கோமதிநாயகம்:

நீர் வழிப்பாதைகள் மீட்பு

ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பெய்ததைவிட அதிகமாக மழை பெய்திருக்கிறது. அப்போதெல்லாம் இதுபோன்ற பயிர்ச் சேதம் ஏற்பட்டதில்லை. அதற்குக் காரணம், அந்தக் காலத்தில் ஆறுகளை ஒட்டி நீர்வழிப் பாதைகள் (உபரிநீர் கால்வாய்கள்) இருந்தன. அவற்றின் வழியாக ஆற்று வெள்ளம் வடிந்துவிடும். ஆனால், இன்றைக்கு அத்தகைய நீர்வழிப் பாதைகளை காணமுடிவதில்லை. மறைந்துபோன நீர்வழிப் பாதைகளை, மீண்டும் ஆறுகளை ஒட்டி உண்டாக்க வேண்டும்.

மணல்வாரியின் பயன்

கரையை உடைக்காமல் தண்ணீரை வெளியேற்றும் வகையில், மதகைப் போன்று தண்ணீரைக் கட்டுப்படுத்தும் அமைப்பு மணல்வாரி. இதன் பயன்பாட்டை நாம் மறந்துவிட்டோம். இந்த மணல்வாரி, அணையின் கரையை உடைக்காமல் உபரி நீரை பாதுகாப்புடன் வெளியேற்றும் அமைப்பு. இவற்றை மீண்டும் உருவாக்க வேண்டும். அப்படிக் கொண்டுவந்தால், வெள்ளத்திலிருந்து பயிர்கள் கணிசமாகக் காப்பாற்றப்படும்.

விதைத் தேர்வு முக்கியம்

மாதம் மும்மாரி பெய்த காலத்தில் அதற்கேற்ப விதை நெல்லைத் தேர்ந்தெடுத்து விவசாயம் செய்தவர்கள் நம் முன்னோர். நம்முடைய பாரம்பரிய விதை நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்துக்கு சிறப்பான விளைச்சலை கொடுக்கக்கூடியவை. உதாரணத்துக்கு மடுமுழுங்கி எனப்படும் விதை நெல், வெள்ளத்தில் மூழ்கினாலும் விளைச்சலுக்குக் குறைவிருக்காது. புழுதிவிரட்டி என்னும் நெல் ரகம், கடும் வறட்சியிலும் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தைக் கொண்டே 40 நாட்களுக்கு சமாளித்து வளரும்.

இதுபோன்ற பல சிறப்புகள் நம்முடைய பாரம்பரிய விதை நெல்களுக்கே இருக்கின்றன. எனவே, விவசாயிகள் ஐ.ஆர். 8, ஐ.ஆர். 20 போன்ற இயற்கை இடர்களைச் சமாளிக்க முடியாத ரகங்களை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. எல்லா இடங்களிலும் பாரம்பரிய விதை வங்கிகளையும் உருவாக்க வேண்டும்.

மணல் பாதுகாப்பு அவசியம்

கடந்த 10 ஆண்டுகளில்தான் வெள்ளத்தால் பயிர்கள் சேதமாவது அதிகம் நடக்கிறது. ஆற்று மணலை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்ததும் இந்த காலகட்டத்தில்தான். வடிகட்டியாகவும், நீரை உறிஞ்சி சேமிக்கவும் என இரண்டு வழிகளில் நமக்கு பலன் அளிக்கும் மணலைப் பாதுகாப்பது அவசியம். மணலைப் பாதுகாக்காவிட்டால், சாதாரண மழையும் பெருவெள்ளச் சேதத்தை உண்டாக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. இது மிக முக்கியமானது.

 

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-

  • 4 months later...
  • தொடங்கியவர்

மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு

E_1460526015.jpeg

ரசாயன உரத்தால் புண்ணான மண்ணை தக்கைபூண்டு வளர்ப்பதின் மூலம் பொன்னாக்கும் வித்தையை கற்றுத் தருகிறார், சிவகாசி செல்லையநாயக்கன்பட்டி பகுதி விவசாயி திருவேங்கடராமானுஜம்.
அவர் கூறியது: இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மண்ணிலுள்ள தழைச்சத்தினை மக்காச்சோளம் அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. அடுத்து பயிர் செய்யும் போது விவசாயம் பொலிவிழந்து வருவாய் கிடைப்பதில்லை.
இதற்கு பயந்தே பலர் மக்காச்சோளம் பயிர்செய்த பின் 3 அல்லது 6 மாதம் நிலத்தை வெறுமென விட்டு விடுவார்கள். அந்நேரத்தில் நிலம் பயனற்றே கிடக்கும். மக்காச்சோளம் அறுவடை செய்த பின் அந்நிலத்தில் கழிவுகளை அகற்றாமல் தக்கைபூண்டு செடி விதைகளை துாவவேண்டும். மூன்று வாரத்திற்குள் இச்செடி 5 அடி வரை வளர்ந்து நிலத்தை காடு போல் மாற்றிவிடுகிறது. இதை கால்நடைகளுக்கு உணவாகவும் கொடுக்கலாம். ஒரு மாதத்திற்கு பின் செடியை அப்படியே உழுது மண்ணிற்கு அடிஉரமாக மாற்றிவிடலாம். அதன்பின் எந்த பயிரை நடவு செய்தாலும் விவசாயம் பொய்க்காது. மண்வளம் பெற்று விவசாயம் செழிக்க ஆரம்பிக்கும்.

வேளாண்துறை அதிகாரிகளின் அறிவுரைபடி தக்கை பூண்டு செடியை பயிரிட்டேன். இச்செடி நிலத்திற்கு வேண்டிய சத்துக்களை எடுத்து கொடுக்கிறது. உரமாகவும் பயன்படுகிறது. 
இதனால் மாற்று விவசாயத்திற்கு உரமிடும் செலவும் குறைகிறது. இது இயற்கை முறையில் நிலத்தை வளமாக்கும் எளியவழி என்றார். தொடர்புக்கு 96556 63232.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=30381&ncat=7

 

  • தொடங்கியவர்

"தாய்லாந்து' கொய்யாவில் தாராள லாபம்!

E_1458709017.jpeg

வெளிநாட்டு வேலை கிடைத்தும் விவசாய ஆர்வத்தால் தாய்நாட்டை பிரிய மனமின்றி நிலத்தை பண்படுத்தி, தாய்லாந்து கொய்யா நடவில் சாதிக்கிறார், திண்டுக்கல் முள்ளிப்பாடியை சேர்ந்த சிவக்குமார்.
காலங்கள் மாற மாற பல்வேறு தொழில்நுட்பங்கள் பெருகி வருகின்றன. விவசாயத்தில் குறுகிய முதலீட்டில் அதிக லாபம் தரும் தாய்லாந்து கொய்யா சாகுபடி குறித்து அவர் கூறியதாவது:
தாய்லாந்து கொய்யா கன்று ரூ.350 வீதம் வாங்கினேன். ஒரு ஏக்கரில் 2 அடிக்கு 2 அடி குழி தோண்டி 15அடிக்கு 15அடி இடைவெளியில் அடர் நடவு முறையில் 400 கன்றுகள் நடவு செய்தேன். 

கொய்யாவுடன் சேர்த்து வேறு ஊடுபயிர் விளைவிக்க நினைத்தால் ஒரு ஏக்கருக்கு 150 கன்றுகள் நடவு செய்தால் போதும். நீர் தட்டுப்பாடான பகுதியில் சொட்டுநீர் பாசனம் சிறந்தது. நடவு செய்து 4 அல்லது 5 மாதங்களில் பூக்கத் துவங்கிவிடும். மரத்திற்கு காயை தாங்கும் சக்தி கிடைக்கும் வரை இரண்டரை ஆண்டுகள் பூக்களை பறித்துவிட வேண்டும். மாதம் ஒரு முறை மண்புழு உரம், நுண்ணுயிர் உரம் வைத்து தினமும் தண்ணீர் ஊற்றினால் போதும்.
மரம் நன்கு வளர்ந்த பின் ஏப்ரல், மே தவிர்த்து மற்ற மாதங்களில் மகசூல் அதிகம் கிடைக்கும். இந்த வகை கொய்யா நாட்டு கொய்யாவை காட்டிலும் அளவில் பெரிதாக இருக்கும்; விதைகள் அதிகம் இருக்காது.

ஒரு கொய்யா முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ வரை எடை இருக்கும். ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கிறேன். ஆண்டுக்கு ரூ.1 லட்சம் லாபம் கிடைக்கும்.
எந்த நிலத்தை வறண்ட பூமியென்று சொல்லி தவிர்த்தனரோ அங்கு தாய்லாந்து கொய்யா மூலம் லாபம் பெறுகிறேன். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.ஒன்று முதல் ரூ.ஒன்றரை லட்சம் செலவு செய்தால் போதும். இரண்டே ஆண்டுகளில் செலவு தொகையை தாண்டி லாபம் பார்க்க ஆரம்பிக்கலாம், என்றார். இவரிடம் பேச : 90038 09797.
-ஆ. நல்லசிவன், திண்டுக்கல்.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=30003&ncat=7

 

Edited by Athavan CH

On 16/04/2016 at 0:37 PM, Athavan CH said:

மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு

E_1460526015.jpeg

ரசாயன உரத்தால் புண்ணான மண்ணை தக்கைபூண்டு வளர்ப்பதின் மூலம் பொன்னாக்கும் வித்தையை கற்றுத் தருகிறார், சிவகாசி செல்லையநாயக்கன்பட்டி பகுதி விவசாயி திருவேங்கடராமானுஜம்.
அவர் கூறியது: இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மண்ணிலுள்ள தழைச்சத்தினை மக்காச்சோளம் அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. அடுத்து பயிர் செய்யும் போது விவசாயம் பொலிவிழந்து வருவாய் கிடைப்பதில்லை.
இதற்கு பயந்தே பலர் மக்காச்சோளம் பயிர்செய்த பின் 3 அல்லது 6 மாதம் நிலத்தை வெறுமென விட்டு விடுவார்கள். அந்நேரத்தில் நிலம் பயனற்றே கிடக்கும். மக்காச்சோளம் அறுவடை செய்த பின் அந்நிலத்தில் கழிவுகளை அகற்றாமல் தக்கைபூண்டு செடி விதைகளை துாவவேண்டும். மூன்று வாரத்திற்குள் இச்செடி 5 அடி வரை வளர்ந்து நிலத்தை காடு போல் மாற்றிவிடுகிறது. இதை கால்நடைகளுக்கு உணவாகவும் கொடுக்கலாம். ஒரு மாதத்திற்கு பின் செடியை அப்படியே உழுது மண்ணிற்கு அடிஉரமாக மாற்றிவிடலாம். அதன்பின் எந்த பயிரை நடவு செய்தாலும் விவசாயம் பொய்க்காது. மண்வளம் பெற்று விவசாயம் செழிக்க ஆரம்பிக்கும்.

வேளாண்துறை அதிகாரிகளின் அறிவுரைபடி தக்கை பூண்டு செடியை பயிரிட்டேன். இச்செடி நிலத்திற்கு வேண்டிய சத்துக்களை எடுத்து கொடுக்கிறது. உரமாகவும் பயன்படுகிறது. 
இதனால் மாற்று விவசாயத்திற்கு உரமிடும் செலவும் குறைகிறது. இது இயற்கை முறையில் நிலத்தை வளமாக்கும் எளியவழி என்றார். தொடர்புக்கு 96556 63232.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=30381&ncat=7

 

முதலில் நன்றி ஆதவன் 

உங்கள் பதிவுகளையும் தவறாமல் படிப்பவன் நான். என்ன கொஞ்ச காலமா காணவில்லை - மறுபடி வந்தது சந்தோசமே.

இந்த செடி இலங்கையில் கிடைக்குமா
கிடைக்குமாயின் அதன் பெயர் தெரியுமா 
    

  • தொடங்கியவர்
5 hours ago, ஜீவன் சிவா said:

 

இந்த செடி இலங்கையில் கிடைக்குமா
கிடைக்குமாயின் அதன் பெயர் தெரியுமா 
    

தெரியவில்லை ஜீவன் , யாழ்ப்பாணத்தில் உள்ள கம நல சேவைகள் திணைக்களத்தில் விசாரித்துப் பார்க்கலாம். அல்லது "தக்கை பூண்டின்" botanical name தெரிந்தால் தேடிப் பார்க்கலாம்

5 hours ago, ஜீவன் சிவா said:

மூன்று வாரத்திற்குள் இச்செடி 5 அடி வரை வளர்ந்து நிலத்தை காடு போல் மாற்றிவிடுகிறது. இதை கால்நடைகளுக்கு உணவாகவும் கொடுக்கலாம்.

நன்றி நான் கேட்டது இதனால்தான்

  • தொடங்கியவர்

40 சென்ட்; 40நாள்; ரூ. 40 ஆயிரம்; வெண்டை சாகுபடியில் சாத்தியம்

சிவகங்கை போன்ற வறட்சியான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் கோடை என்றால் கேட்கவே வேண்டாம். இந்த காலத்தில் வெப்பத்தை தாங்கி வளரும் பயிர்களை சாகுபடி செய்தால் மட்டுமே விவசாயிகள் தப்பிக்க முடியும்.
கண்டிப்பட்டி விவசாயி கே.ரவி தனது 40 சென்ட் நிலத்தில் வெப்பத்தை தாங்கி வளரும் வெண்டையை சாகுபடி செய்துள்ளார்.

விதை, உரம் என, ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார். 'பம்பு செட்' மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறார். விதைத்த 40 நாட்களில் இருந்து வெண்டைக்காய் காய்க்க துவங்கியது. தினமும் 50 முதல் 60 கிலோ வரை பறித்து சிவகங்கை, காரைக்குடி, காளையார்கோவில் சந்தைகளில் விற்பனை செய்கிறார்.

அவர் கூறியதாவது: வெண்டை மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன் தொழு உரம் இட வேண்டும். 45 செ.மீ., இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும். 
விதைகளை 30 செ.மீ., இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ., ஆழத்தில் ஊன்ற வேண்டும். விதைகளை ஊன்றியவுடன் நீர்பாய்ச்ச வேண்டும். அதன்பின் வாரம் ஒருமுறை நீர்பாய்ச்சினால் போதும். அடியுரமாக தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்களை மண்ணுடன் கலந்து இட வேண்டும். நடவு செய்த 30 நாட்களில் மேலுரமாக தழைச்சத்து இட வேண்டும். அளவுக்கு அதிகமாக உரங்களை பயன்படுத்தினால் காய் முற்றிவிடும்.
வெண்டையை அதிகளவில் காய் துளைப்பான் தாக்கும். இதை கட்டுப்படுத்த வேப்பம் கொட்டை பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் போதும். விதைத்த 40 நாட்களில் காய்களை பறிக்கலாம். முற்ற விடாமல் தினமும் பறித்தால் நல்லது. தினமும் 50 முதல் 60 கிலோ வரை கிடைக்கிறது. ஒரு கிலோ ரூ.16 முதல் ரூ.20 வரை விற்கிறோம், என்றார். 80126 78458.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=30635&ncat=7

  • கருத்துக்கள உறவுகள்
On 22 April 2016 at 11:05 PM, ஜீவன் சிவா said:

நன்றி நான் கேட்டது இதனால்தான்

ஜீவன் இதனை தேடிப்பிடித்தீர்களா?

6 hours ago, MEERA said:

ஜீவன் இதனை தேடிப்பிடித்தீர்களா?

இல்லை - எனக்கு தெரிந்த ஒருவர் மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறார், அவருக்கு உதவுமே என்ற எண்ணம்தான் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இல்லை - எனக்கு தெரிந்த ஒருவர் மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறார், அவருக்கு உதவுமே என்ற எண்ணம்தான் 

இலங்கையில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை, இந்தியாவில் (சென்னை) சொல்லியிருக்கிறேன் பார்க்கலாம் கிடைக்கிறதா என்று. 

2 minutes ago, MEERA said:

இலங்கையில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை, இந்தியாவில் (சென்னை) சொல்லியிருக்கிறேன் பார்க்கலாம் கிடைக்கிறதா என்று. 

இந்தியாவிலிருந்து எப்படி இலங்கைக்கு எடுத்து வருவீர்கள். எந்த விதமான தாவரங்களையோ விதைகளையோ இங்கு கொண்டு வரமுடியாதே.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கிடைத்தால் அரைக்கிலோ வாங்குமாறு சொல்லியிருக்கிறேன், முதலில் நட்டுப்பார்ப்போம் என்ன செடி என்று, சிலவேளை இலங்கையில் வேறு பெயரில் அழைக்கிறார்களோ? 

கொழும்பில் அவ்வளவு கெடுபிடியா? 

(இந்தியா ---> பிரித்தானியா ---> இலங்கை) 

6 minutes ago, ஜீவன் சிவா said:

இந்தியாவிலிருந்து எப்படி இலங்கைக்கு எடுத்து வருவீர்கள். எந்த விதமான தாவரங்களையோ விதைகளையோ இங்கு கொண்டு வரமுடியாதே.

 

4 minutes ago, MEERA said:

கொழும்பில் அவ்வளவு கெடுபிடியா? 

ஆம் 

தாவரங்களுக்கும் விதைகளிற்கும் 

 

  • தொடங்கியவர்

நெல்லி சாகுபடியில் லாபம் அள்ளும் விவசாயி

திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் உள்ளது பூதிப்புரம். இங்குள்ள விவசாயி ராஜூவின் நெல்லித்தோட்டம் 2.5 ஏக்கரில் உள்ளது. இதில் ஒரு ஏக்கரில் 265 பெருநெல்லி மரங்களும், மூன்று சிவப்பு நெல்லி மரங்களும் நட்டுள்ளார்.

சிவப்பு நெல்லி (பி.எஸ்.ஆர்.1) மரங்களிலுள்ள பூக்களில் ஆண் மகரந்த தூள்கள் உள்ளன. அவை பெருநெல்லி மரங்களின் மகரந்த தூளுடன் சேர்ந்து மகசூலை அதிகரிக்கின்றன. இதனை முறையாக பயன்படுத்தி ஆட்டுச் சாணம், மக்கிய தொழு உரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நெல்லி சாகுபடியில் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் லாபம் பெற்று அசத்துகிறார் விவசாயி ராஜூ!
அவர் கூறியதாவது: நிலத்திற்கு ஏற்றாற்போல் நன்கு இடைவெளி விட்டு மரங்களை நட்டு, வளர்த்தோம். வளரும் பருவத்தில் ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கு தண்ணீர் விட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நீர் பாய்ச்ச சொட்டு நீர்ப்பாசனத்தை ரூ.58 ஆயிரம் செலவில் அமைத்தோம். 

இதற்கு தோட்டக்கலைத்துறை மூலம் மானியமாக ரூ.12 ஆயிரத்து 500 கிடைத்தது. பின் ஒன்றரை ஆண்டில் செழித்து வளர்ந்த மரங்கள் அடுத்த இரண்டரை ஆண்டில் பூத்து, காய்த்துக் குலுங்கின. நான்கரை ஆண்டுகளில் விளைச்சல் அதிகரித்தது. இடையில் அடிஉரம், தொழு உரம், ஆட்டுக் கழிவுகளின் இயற்கை உரங்களை இட்டதால் பூக்கள் விரைவாக பூக்கத் துவங்கின.
அதிக எடையுடன் நெல்லி மொத்தம் 265 பெருநெல்லி மரங்களில் மரத்திற்கு 100 கிலோ முதல் 150 கிலோ வரை விளைச்சல் இருந்தது. நன்கு விளைந்த ஒரு நெல்லிக்காயின் எடை 105 முதல் 110 கிராம் வரை இருந்தது. இதுதவிர இயற்கை முறையில் விளைந்த நெல்லி 
என்பதால் விற்பனை செய்வதும் சுலபமாக இருந்தது.

முதல் 4 ஆண்டுகளில் உள்ள விளைச்சலை விட தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு 10 டன் அளவில் விளைச்சல் கிடைக்கிறது. அவ்வப்போது கவாத்து எடுப்பதும் விளைச்சல் அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கிறது. நெல்லிக் காய்களின் அளவை பொறுத்து விலை கிலோ ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. ஏக்கருக்கு செலவு போக ஒரு லட்சம் கிடைக்கிறது, என்றார்.
அதிக மகசூலுக்காக தோட்டக்கலைத்துறையின் மூலம் ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரமும் பெற்றுள்ளார் விவசாயி ராஜூ. இவரை 99766 - 21067ல் தொடர்பு கொள்ளலாம்.
-வீ.ஜெ.சுரேஷ், திண்டுக்கல்.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29487&ncat=7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.